அரசியலும் அடங்கு ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியலும் அடங்கு ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 டிசம்பர், 2019

அலை பாயுதே


                                                   அலை பாயுதே                                     --------------------------------
நானொரு மிகச்சாதாரணன்   எல்லாம் தெரிந்தது போல் நினைப்பதில்லை பலராலும் உண்மை என்றே நம்பப்படும் பெர்செப்சன்  எனக்கு இல்லைபெர்செப்ஷன் இல்லை என்றில்லை ஆனல் அதுவே உண்மை என்று நம்புவதில்லை  எனக்குத் தெரியாத விஷயங்களைத் தெரியாது  என்று சொல்வதில்வெட்கம் இல்லை  அது போகட்டும் அண்மைக்காலத்தில் அதிகமாகபேசப்படும் என்ஆர்சி எனப்படும் நேஷனல் சிடிஜன்ஸ் ரெஜிஸ்டர் எனப்படுவது குறித்து அநேக  சந்தேகங்கள் இந்த ரெஜிஸ்டரில் பெயரை யார் பதிவு செய்கிறார்கள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு குடிமகனும்  பதிவு  செய்ய வேண்டுமா இல்லாவிட்டால் நாம்  இந்தியக் குடிமகனாகக் கருதப்பட மாட்டோமா  ஏதும் செய்யாமல் இருந்தால் ஒருவேளை நாம் இந்தியக் குடிமகந்தான்   என்பது இல்லாமல் போய் விடுமோ சரி இதை நிர்ணயிப்பது யார் கட்சிகளுக்கு அடிவருடும் அதிகாரிகளால் தொந்தரவு ஏற்பட்டு நாமே ப்ரூவ் செய்ய வேண்டுமோஇது எனக்கு மலையைக் கெல்லி  எலி பிடிப்பது போல் தோன்றுகிறது இதற்குஅவசியம்தான் என்ன    
முக்கியமாக வேறு மாநிலங்களில்வேலை நிமித்தம்  வாழ்பவர்கள்பாடு  சிரமமாகுமா
இப்போதுதான் மொழி இனம் போன்றவற்றால் பிரிக்கப்படுவது சாதாரணமாய் இருக் கிறதே
 மொத்தத்தில் இது நல்லதற்கல்ல என்றே தோன்றுகிறது  பிடிக்காதவரை துன்புருத்தல் சாத்தியமாகும்
 இது தவிர இதில் சட்ட திருத்தம் வேறு ஒன்னுமே புரியலை

சரி அரசியலை விடுவோம்  என் விட்டு மாமரத்தில் அநேக அணில்கள்  இருக்கின்றன  அவற்றுக்காக கூடுகள் எங்கும் பார்க்க வில்லை  அவை இரவில் எங்கு செல்கின்றனதெரிய வில்லை சாமி
என்னைப்போல் வயதானவனுக்குபொழுது போக்கே   சின்னத்திரையில் சீரியல்கள் பார்ப்பது தான் அதிலும் சந்தேகங்கள் நிறைய உண்டு வாழ்க்கையில் நடப்பது சீரியலில்  காட்டப்படுகிறதா அல்லது சீரியலில் வருவதை வாழ்வில் கடைப்பிடிக்கிறார்களா இதற்கு பதில் தருபவர்களும்  பிரிந்து  இருக்கலாம்   இப்போது சீரியல்களில் பெரும்பாலான வற்றில் ஜோசியம் பார்க்கிறார்கள் அநேகமாக ஜோசியர் சொல்படிதான் நடப்பதாக காட்டப்படுகிறது  கடவுள் சக்தி வாய்ந்தவர் என்றால்   இந்த ஜோசியர்கள் அவரைப் போலவேசக்தி மிகுந்தவர்களாகவே  காட்டப்படுகிறார்கள்    எந்தக் குறையையும்   பரிகாரம் மூலம் சரி செய்து விடுகிறார்கள் நம்மில் நமக்கே நம்பிக்கை  இல்லாமல் போய் விடுகிறது மூட நம்பிக்கை என்றால்  வாசகர்கள்  பொங்குவார்கள்

.நம் வலைத்தளத்துக்கு  வருகைபுரிபவர்  எண்ணிக்கை  தெரிகிறது  அதேபோல் நாம்வெளியிட்டுள்ள  மின்புத்தகங்களை எத்தனை பேர்வாசித்தார்களென்று தெரிவது எப்படி நம்பதிவுகள் அதுவும் பழைய பதிவுகள்   அதிகம்  வாசிக்கப்படுகின்றன வெறும் மூன்றே பேர் கருத்திட்ட ஒரு பதிவு ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர்ல்களால்  வாசிக்கபட்டு இருப்பது ஆச்சரியம் தருகிறது  
ஒன்று மட்டும் புரிகிறது 
நம்மைத்தெரிந்தவர்களை  விடதெரியாதவரே அதிகம்பேர் வாசிக்கிறார்கள்  இத்தனைக்கும்  தமிழ்மணம் வேறுமுடங்கி உள்ளது