இலக்கியமா
------------------------
அறிந்த கருத்துக்களையும் உணர்ந்த உணர்ச்சிகளையும் பிறருக்கு எடுத்துக்கூற உதவுகின்ற ஒரு கருவி மொழியாகும். அம்மொழியைப் பேசுகின்ற மக்களது கொள்கைகளையும் குறிக்கோள்களையும் எடுத்தியம்புவது இலக்கியமாகும்.

இது இலக்கியத்தின் ஒருபுரிதல் எனக்கு நான் எழுதுவது
இலக்கியத்தில் சாருமாஎனும் ஐயப்பாடு உண்டு
நிச்சயமாக இப்போதைய என் எழுத்துகள்
அந்த கட்டுக்குள் வருமா தெரியவில்லை
என்பழையபதிவுகளொரு வேளை வரலாம்
வாசகர்கள் தீர்மானிக்கலாம்
நட்பும் உறவுமான ஒருவரை அவர் உயிருடன் இருக்கும்போதே
சந்திக்க வேண்டும் என்றே எண்ணி இருந்தேன்.. நினைத்தபடி
நானும் செல்ல அனுமதி இல்லை, என் வயசே காரணம்.
வரிசையில் காத்திருக்கிறோம் யார் எங்கு என்றே அறியாமல்.
என்னை முந்தியவனைப் பிரிந்தவருக்கு ஆறுதல் கூறல்
அவசியம் என்ற என்னோடு உற்ற உறவினர் தொடரச்
சென்றிருந்தேன். சென்ற இடத்தில் சேதி ஒன்று வந்தது
அடுத்த வீட்டு அம்மணி உறக்கம் எழாமல் உயிர் நீத்தார் என்று.
அடுத்தடுத்த இழவுச் செய்திகள் அலைக்கழிக்கின்றன.
காலையில் எழுந்தவுடன் மூச்சிருக்கிறதா என
எனக்கு நானே சோதிக்கும் அறியாப்பேதைமை. !
உறக்கத்தில் உயிர் விட்ட சேதி கேட்டு,
உறங்காமல் பரிதவிக்கும் பாமரத்தனம். !
உண்ணும்போது உயிர் விட்டான் தந்தை என
உண்ணாமலேயே உயிர் வாழ நினைத்த தனயன்.!
அடுத்துறங்கும் மனைவியை அர்த்த ராத்திரியில்
அசைத்துப் பார்க்கும் அவலத்திலும்,
பாரதிதாசன் பாட்டொன்று இதழ்களில் முறுவல் சேர்க்கிறது.
” கிளையினில் பாம்பு தொங்க ,
விழுதென்று குரங்கு தொட்டு,
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப் போல்,
கிளை தோறும் குதித்துத் தாவி,
கீழுள்ள விழுதையெல்லாம்,
ஒளிப் பாம்பாய் எண்ணி எண்ணி,
உச்சி போய் தன் வால் பார்க்கும்.”