புதன், 9 செப்டம்பர், 2020

இலக்கியமா

                                   இலக்கியமா
                                ------------------------


 
அறிந்த கருத்துக்களையும் உணர்ந்த உணர்ச்சிகளையும் பிறருக்கு எடுத்துக்கூற உதவுகின்ற ஒரு கருவி மொழியாகும். அம்மொழியைப் பேசுகின்ற மக்களது கொள்கைகளையும் குறிக்கோள்களையும் எடுத்தியம்புவது இலக்கியமாகும்.

இது இலக்கியத்தின் ஒருபுரிதல் எனக்கு நான் எழுதுவது இலக்கியத்தில் சாருமாஎனும் ஐயப்பாடு உண்டு  நிச்சயமாக இப்போதைய என் எழுத்துகள்  அந்த கட்டுக்குள் வருமா தெரியவில்லை  என்பழையபதிவுகளொரு வேளை வரலாம்   வாசகர்கள் தீர்மானிக்கலாம்

நட்பும் உறவுமான ஒருவரை அவர் உயிருடன் இருக்கும்போதே
சந்திக்க வேண்டும் என்றே எண்ணி இருந்தேன்.. நினைத்தபடி
நானும் செல்ல அனுமதி இல்லை, என் வயசே காரணம்.
வரிசையில் காத்திருக்கிறோம் யார் எங்கு என்றே அறியாமல்.

என்னை முந்தியவனைப் பிரிந்தவருக்கு ஆறுதல் கூறல்
அவசியம் என்ற என்னோடு உற்ற உறவினர் தொடரச்
சென்றிருந்தேன். சென்ற இடத்தில் சேதி ஒன்று வந்தது
அடுத்த வீட்டு அம்மணி உறக்கம் எழாமல் உயிர் நீத்தார் என்று.

அடுத்தடுத்த இழவுச் செய்திகள் அலைக்கழிக்கின்றன.
காலையில் எழுந்தவுடன் மூச்சிருக்கிறதா என
எனக்கு நானே சோதிக்கும் அறியாப்பேதைமை. !
உறக்கத்தில் உயிர் விட்ட சேதி கேட்டு,
உறங்காமல் பரிதவிக்கும் பாமரத்தனம். !
உண்ணும்போது உயிர் விட்டான் தந்தை என
உண்ணாமலேயே உயிர் வாழ நினைத்த தனயன்.!
அடுத்துறங்கும் மனைவியை அர்த்த ராத்திரியில்
அசைத்துப் பார்க்கும் அவலத்திலும்,
பாரதிதாசன் பாட்டொன்று இதழ்களில் முறுவல் சேர்க்கிறது.

” கிளையினில் பாம்பு தொங்க ,
விழுதென்று குரங்கு தொட்டு,
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப் போல்,
கிளை தோறும் குதித்துத் தாவி,
கீழுள்ள விழுதையெல்லாம்,
ஒளிப் பாம்பாய் எண்ணி எண்ணி,
உச்சி போய் தன் வால் பார்க்கும்.”


  

18 கருத்துகள்:

  1. உங்கள் எழுத்துக்கு ஒரு இலக்கிருக்கிறது. இலக்குள்ளவை எல்லாம் இலக்கியமே அந்தவகையில் நிச்சயமாக தங்கள் பதிவுகள் எல்லாம் இலக்கியமே...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி என்றால் என் எழுத்டுகள் இலக்கியமா நன்றி

      நீக்கு
  2. எழுதுவது எல்லாமே இலக்கியம்தான்.

    அதில் கால வெள்ளத்தை மிஞ்சி நீந்துபவைகளே காலத்திற்கும் நிற்கும்.

    இதுதான் எனது புரிதல். உங்களின் சில கவிதைகள் மிக ரசிக்கும்படி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு புது கோணம் நீங்கள் ரசித்த கவிதைகள் சில வற்றை குரிப்பிட்டிருந்தால் எனக்க நன்மை பயக்கலாம் நன்றி சார்

      நீக்கு
  3. ரசிக்கும்படியாகவும், சிந்திக்கும்படியாகவும் உள்ளன ஐயா. நீங்கள் சொல்லுகின்ற கட்டுப்பாட்டுக்குள் அவை வருகின்றனவா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்களின் எழுத்துகள் எங்களை ஈர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா திரு ரமணி சொல்வது போலெனெழுத்க்ஹுகளுக்கு ஒரு இலக்கை நிர்ணயிப்ப்து என்பாணி

      நீக்கு
  4. இலக்கியம் படைக்க விழையும் சட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமலே இருந்தால் போதும்; தன்னாலே இலக்கியம் படைக்கப்பட்டு விடும்.

    'அட! நன்றாக எழுதியிருக்கிறோமே' என்ற சுயதிருப்தி அதற்கான முதல் படி. நமக்கு நமக்கேவான விமரிசனங்கள் தான் நம்மை உயர்த்தும் படிக்கட்டுகள். எதிலும் நம்மை நாமே கறாக கணிப்பது தான் நமக்கு நெருக்கமாகவும் உண்மையாகவும் இருக்கிறது. இதை அனுபவபூர்வமாக உணர்தல் தான் நமக்கு எந்த நிலையிலும் வழிகாட்டி வழி நடத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில்இலக்கியம் என்றால் என்ன என்று தெரியாத நாஇலக்கியம் படைக்க விழைகிறேனா இல்லைஆனால் எழுதியவை ஏதாவ்து அந்த கட்டுக்குள் வருமா என்றே தெரியவில்லை என்னை நானே கணிதுக் கொள்ளு வழக்கம் உண்டு

      நீக்கு
  5. உங்களின் வித்தியாசமான சிந்தனை எப்போதும் பிடிக்கும்...

    சந்தேகங்களும் அவ்வாறே... அதனாலும் பதிவுகள் பகிர்ந்தது, தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. அதனாலும் பதிவுகள் பகிர்ந்தது, தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்...இப்போதெல்லாம் எஎங்கே எப்போதுஎன்பதை அறியமுடிவதில்லை விளக்கி சொல்லலாமே

    பதிலளிநீக்கு
  7. இலக்கியம் என்பதற்கு அளவு கோலெல்லாம் இல்லை என்றே நினைக்கிறேன். படைக்கும் எதுவும் இலக்கியம் தான்.

    பதிலளிநீக்கு
  8. அப்போ நாமெழுதுவது எல்லாம் இலக்கியமா

    பதிலளிநீக்கு
  9. இலக்கியம் இதுதான் என்பதை திண்ணமாக வரையறுப்பது கடினம். ஒருவர் இலக்கியம் என்று சொல்வதை இன்னொருவர் இலக்கியம் அல்ல என்று மறுக்கிறார். எழுதுபவரைத் தவிர்த்து வேறு ஒருவருக்குப் பிடித்தாலும் அது இலக்கியம்தான்.

    பதிலளிநீக்கு
  10. ஐயா! தாங்கள் மன வலிமை உள்ளவர். வேறு சிந்தனையில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியான நினைவுக்ளை அசை போடுங்கள். தத்துவ விளக்கங்களும் ஆராய்ச்சிகளிலும் கவனம் செலுத்த வேண்டாம்

    பதிலளிநீக்கு
  11. எண்ணம் அதுபாட்டுக்கு வருகிறது மனமொரு குரங்கு என்பார்கள்

    பதிலளிநீக்கு
  12. எழுதுவதெல்லாம் இலக்கியமாகிவிடாது .நாளேடுகளில் விரிவான விளம்பரங்கள் வருகின்றன ; அவை இலக்கியமா ? சிறந்த கருத்துகளை மனம் கவரும் விதத்தில் எழுதுவதே இலக்கியம் .இப்படிப் பார்த்தால் உங்கள் எழுத்துகளில் இலக்கியமும் உண்டு

    பதிலளிநீக்கு