பந்தையக்குதிரை
இப்போது
எழுதுவது ஒரு பெண் பற்றி . ஜாக்கி
மணிக்கு ஒரு பெயர் காரணம் இருந்ததுபோல் இந்தப் பெண்ணை கண்டதும் , இவன் வழக்கம்போல் ஒரு பெயர்
சூட்டிவிட்டான். =பார்ப்பதற்கு மதமதவென்று இருந்தவளைக் கண்டதும் நினைவுக்கு வந்தது
பந்தயக் குதிரையே. அதையே அடையாளப் பெயராகச் சூட்டிவிட்டான்.ஆனால் பின்னர்
அறிமுகமாகி,அவள் கதையைக் கேட்டதும்,இவன் வாய்க் கொழுப்பிற்காக இவனையே கடிந்து
கொண்டான்.பெயர் சூட்டுவதில் எந்த OFFENCE-ம் இருக்கவில்லை.சட்டென்று மனதில்
தோன்றுவதுதான். இதில் இன்னொரு அட்வாண்டேஜ். இவர்களது உண்மை ஐடெண்டிடி காக்கப்
படும். ஆனாலும் அப்படியே அழைப்பதற்கு மனம் இடங்கொடுக்காததால்,இனி அவளைப் பெண்
என்றே இவன் குறிப்பிட முடிவெடுத்து விட்டான்.
முதன்முதலில் காணும் யாரும் அந்தப்
பெண்ணின் பின்னணியில் அப்படி ஒரு சோகம் இருக்கும் என்று நம்ப முடியாது. எப்போதும்
சிரித்த முகம். எங்கு போவதானாலும் கூடவே ஒரு பையனும். அவள்து மகன்தான். அவனுக்கு
இருபதிலிருந்து இருபத்திரண்டு வயதிருக்கும். பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம், ஏதோ
ஒரு குறை இருக்கிறதென்று.. பேச்சு வராது. கண் பார்வை தீர்க்கமாய்த் தெரியாது.
அவ்வப்போது வலிப்பு வந்து விடுமாம். தாயைப் பிரிந்து இருக்க மாட்டானாம். இவனுக்கு
ஒரு அண்ணன். அவனும் குறைபாடு உள்ளவன்.பார்த்தால் எந்தக் குறையும் இருப்பது
தெரியாது. அவனுக்கும் பேச்சு வராது. தம்பியைப் போல் நடக்கவும் முடியாது. சுற்றி
நடப்பதைப் புரிந்து கொள்வானாம். இருவரும் ஒரு வித அமானுஷ்யக் குரல் எழுப்புவார்கள்.அந்தப்
பெண்ணின் கணவர், வாரத்தில் ஒரு முறை வீட்டுக்கு வருவார்.ஞாயிறு காலை வந்தால்,
மாலையில் திரும்பி விடுவார். வீட்டில் தங்குவதே கிடையாதாம். ஏதோ பிசினஸ்
செய்கிறார். பணி செய்யும் இடத்திலேயே இருந்து விடுவாராம். அந்தப் பெண்தான் வீடு
குறித்த எல்லா வேலைகளுக்கும் பொறுப்பு. உடல் வளர்ச்சி உள்ள, ஆனால் மனம் வளராத, பேச
முடியாத , நடக்க முடியாத பிள்ளைகள்.
எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாகக் காணும் அந்தப் பெண், ஒரு நாள் கண்ணீருடன் நின்றாள். விசாரித்தால், கணவனுக்கு ஒரு புறம் வசமில்லையாம். ஸ்ட்ரோக் என்று சொல்கிறார்களாம். இதைத்தான் பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்கிறார்களோ. ! வாழ்க்கை உறங்கிக் கனாக் காணும்போது, இன்ப மயமாகத் தெரிகிறது. விழித்து உணர்ந்தால் கடமைக் கடலாகத் தோன்றுகிறது.. இவனுக்கு அண்மையில் இதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்க முடியுமா என்ற அறியாமையில் பிறந்த ஆர்வமும் அச்சமும் எழுகிறது. யாரைக் குறை கூற முடியும். பதில் அறிய முடியாத கேள்விகள். இம்மாதிரி நிகழ்வுகளுக்கு உறவில் மணமுடிப்பது ஒரு காரணம் என்று கூறப் படுகிறது. ஆனால் நம் சமூகத்தில் காலங்காலமாக நடந்து வருவதுதானே இது..எல்லோரும் குறைபாட்டுடனா பிறக்கிறார்கள்.?
அன்று ஜாக்கி மணி கூறியது இவனுக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது. தவிர்க்கப் பட முடியாதவைகள் ,அனுபவிக்கப்பட்டே தீர வேண்டும். இருந்தாலும் கூடவே ஒரு சமாதானம். இதுவும் கடந்து போகும். எதுவும் கடந்து போகும். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்.
அவரின் நிலை பரிதாபம் ஐயா. நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்ற நிலையில்தான் எதையும் எதிர்கொள்ள முடியும்.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் பலருக்கு நம்பிக்கையே வாழ்வில் ஆதாரம்
நீக்குசிலருக்கு ஏனோ இப்படி...ஆயினும் அவர்கள் எப்படியோ எல்லாம் இருந்தும் சலித்துத் திரிபவர்களை விட தைரியமாக வாழ்ந்து வருவதே அவர்களின் ஆளுமை..
பதிலளிநீக்குசலித்து திரிவது நமக்கு தெரிவதில்லையோ ஏனோ
பதிலளிநீக்குஎல்லாம் சரியாக வேண்டுதல் செய்வது தவிர வேறொன்றும் தோன்றவில்லை. நலமாகும்.
பதிலளிநீக்குஅவளதுகணவரும் இறந்து விட்டார் ஸ்ட்ரோக்கில் கைகால் விளங்காதவர் மாண் டதும் நன்மைக்கே இதுவும்வேண்டுதலின் பயனோ
நீக்குஉறவில் மணமுடிப்பது இப்போது மிக மிக குறைவே...
பதிலளிநீக்குஇது போல் குறைகள் யாருக்கும் அமையவே கூடாது...
அதுவுமொரு காரணமாக சொல்லப்பட்டதால் பதிவாக்கினேன்
நீக்குநம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்...
பதிலளிநீக்குநம்பிக்கை மன தைரியம் தந்தால்நன்றே
நீக்குசிலரது வாழ்வு சோகமாகித்தான் போகிறது
பதிலளிநீக்குநம்பிக்கையே காக்கும்
நம்புவோம்
நீக்குதாங்க முடிந்தவர்களுக்குத்தான் சோகம் வரும் என்று சொல்லலாமென்றால் கொஞ்சம் சோகம் வந்தாலே தாங்கமுடிவதில்லையே.
பதிலளிநீக்குபாவம் அந்தப் பெண்.
இயக்குனர் ஸ்ரீதருக்கு அவர் படுத்த படுக்கையாகக் கிடந்தபோது கிட்டத்தட்ட 16 வருடங்கள் அவர் மனைவி தேவசேனா பணிவிடை செய்ததைப் படித்த நினைவு வருகிறது.
When the going gets tough the tough get going
நீக்குசோதனை மேல் சோதனைதான். எவ்வளவுதான் தாங்குவார் அந்தப் பெண்...
பதிலளிநீக்குதவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப்பட வேண்டும்
பதிலளிநீக்குஇந்த மாதிரிப் பிள்ளைகளுக்குக் கருணைகொலை அனுமதிக்கப்படவேண்டும் .
பதிலளிநீக்குஅது எனக்கு உடனாடில்லை எந்த மோசமான நிளையில்இருப்ப்வ்ரும் உயிர் வாழவே விரும்புகின்றனர் மேலும்க்ருணை கொலையை டர் அப்னுமதிப்பதுஅனுதிமதிகிடைத்தால் எதிர்பாராத எதிர் வினைகள் ஏற்ப்டலாம்
பதிலளிநீக்கு