சனி, 19 செப்டம்பர், 2020

விழியாலே மொழிபேசி

 

இதுஎன் நண்பனின்  மச்சினன்  கதை  வீட்டுக்கு மூத்த பிள்ளை தந்தை இறந்து விட பொறுப்பு எல்லாம்  இவன் தலையில் ரயில்வேயில்  பணி வீட்டின்  முன்புறம்   ஒரு பெட்டிக்கடைஎப்படியோ ஜீவனம் கழிந்தது தங்கை இரண்டு தம்பிகளும் இருந்தனர். .திருமணம் நன்றாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு நண்பனும் அவன் மனைவியும் அவனுடைய அக்கா ஸ்பான்ஸர் செய்ய அமெரிக்கா சென்று விட்டனர்.பின் சில வருடங்களில் ஒருவர் பின் ஒருவராக அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தனர்..எஞ்சி நின்றது நண்ப்னின் மாமியாரும் பெரிய மச்சினனும் தான். அவனுக்கு இதற்குள் வயது நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது திருமண ஆசையும் வந்துவிட்டது. அவனும் அமெரிக்கா சென்று ஒரு பணியில் அமர்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது. சென்னை தவிர எந்த ஊரும் பார்த்திராத தாயாரும் அவனும் அமெரிக்கா சென்றனர். அவர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை பிடிக்க வில்லை. ஊர் திரும்பி விட்டனர். திருமண முயற்சிகள் தோல்வியில்  முடிந்தன

 
இந்த நேரத்தில் அந்த சம்பவம் நடந்தது. ஒரு நாள் அவன் பணியில் இருக்கும்போது திடீரென கீழே சாய்ந்து விழுந்து விட்டான். உறவுகள் எல்லாம் அமெரிக்காவில். இங்கோ உலகம் தெரியாத கதவுக்குப்பின்னால் இருந்து மட்டுமே பேசும்தாய் . விவரம் அறிந்து என் நண்பன் ஓடி வந்தான். வீட்டின் மூத்த மாப்பிள்ளை அல்லவா.? மருத்துவ மனையில் சேர்த்தான். உடலின் எல்லா அசையும் உறுப்புகளும் செயலிழந்து விட்டன. அவனது கண்கள் மட்டும் அசையும். சுற்றிலும் நடப்பவை எல்லாம் தெரியும். ஆனால் எதுவும் சொல்லமுடியாது அறிந்தவரைக்கண்டால்  அடையாளம் தெரியும் எதுவும் செய்ய இயலாத நிலையில் அழுகை மட்டும்வரும் ஆனால் வீட்டு நிலவரங்கள் தெரிந்தஒரே நபர்இவர்மட்டும்தான்   இவர்தான்வீட்டுப்பத்திரமிருக்குமிடம் இவருக்கு மட்டுமே தெரியும் ஆனால் பேச இயலாது   மருத்துவ மனையில் அவனுக்கு விழிமொழி கற்பித்தனர். அதன் மூலம் ஒரு COMMUNICATION  LINK ஏற்படுத்தப் பட்டது. ஒருசார்ட்டில் ஆங்கில எழுத்துக்கள் 26-ம் எழுதப் பட்டிருக்கும்.அவன் படுத்திருக்கும் கட்டிலுக்கு நேர் திரே அதனை மாட்டியிருந்தனர். தொடர்பு கொள்ளும் மருத்துவ உதவியாளர் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு கோலை வைப்பார். இவன் சொல்ல விரும்பும் வார்த்தையின் எழுத்து வரும்போது இரண்டு முறை கண் சிமிட்டுவார். இப்படியே வார்த்தைகள் வாக்கியங்களாக மாறும்..அவர்கள் இருந்த வீடு குறித்த தாஸ்தாவேஜ்கள் இருக்குமிடம் உட்பட எல்லாம் அறியப் பட்டது. கூடவே துணை தேடி இணையாதது  நன்மைக்கே  என்பதையும்   தெரியப்படுத்தினான்

இவ்வாறு நான்கு ஆண்டுகள் கழிந்தன  அவன் இறந்து விட்டான் மாதம் ஒருலட்ச ரூபாய் மருத்துவ செலவுக்குஆனது எங்களுக்கெல்லாம்   அவன்  இறந்ததே சரி என்றுபட்டது    

    

 

 

16 கருத்துகள்:

  1. வேதனைதான். சிலருக்கு மட்டும் வாழ்க்கையில் எந்த சுகமும் கிடைக்காமல் போய்விடுகிறது. கர்மவினை என்பது இதான்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் சில சமயங்களில் இழப்பே கூட நல்லதாகப்படுவது நிஜம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் எதற்கும் பிறர் உதவி தேவைப்பட்டால் இல்லாமலிருப்பதேநல்லது

      நீக்கு
  3. சிலர் தியாகம் செய்யவே படைக்கப்பட்டவர்கள் அதில் இவரும் ஒருவர்.
    மனம் நெருடலாகிறது...

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொருவருக்கும் தலையெழுத்து இப்படி அமைந்துவிடுகிறது. ஐம்பது லட்சம் செலவு, அதைவிட பலருக்கு மனவேதனை, தனக்கும் கடுமையான கடைசி காலம் என அமைந்தது சோகம்.

    என நண்பன் வெளிநாட்டில் நல்லா சம்பாதித்து, வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே கிட்னி ஃபெயிலியருக்காக சென்னை திரும்பி ஆறு மாதங்கள் வாரம் இரண்டு முறை டயாலிசிஸ் செய்துகொண்டு அனைத்துக்கும் மனைவி துணை வேண்டும் என்றாகி, சம்பாதித்ததை தன் மருத்துவத்துக்குச் செலவழித்து இழக்க சகியாமல் (அவனுக்கு ப்ளட் ஷுகர் 20 வருடங்களுக்கும் அதிகமாக உண்டு) டயாலிசிஸ் செய்துகொள்ளாமல் மூன்று வாரங்களில் மறைந்தான்.

    விதி ஏன் இப்படி அமைகிறது பலருக்கு என்பதற்கு விடையில்லை. Accept the unacceptable வேற வழி இல்லாத்தால் என ஆகிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி கர்மவினை என்று எதையாவது சொல்லி தேற்றிக் கொள்வதே ஆறுதல் தரலாம்

      நீக்கு
  5. பதில்கள்
    1. அவருக்கும் அவரை பராமரிப்பவருக்கும் வேதனைதான்

      நீக்கு
  6. இப்படி எத்த்னை பேர் எப்படியெப்படி எல்லாம் துன்புறூகிறார்களோ ?

    பதிலளிநீக்கு
  7. மனம் மிகவும் வேதனையானது.. யாருக்கும் இப்படியான கஷ்டங்கள் நேரக்கூடாது..

    பதிலளிநீக்கு
  8. படிக்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. சிலவற்றை அனுபவிக்காமலே புரியும்

    பதிலளிநீக்கு