செவ்வாய், 15 செப்டம்பர், 2020

ஜாக்கி மணி


 என்பதிவுகளில் ஒரு வகை பின்னூட்டமிருக்கும் நினவுகள்  சுகமானவை என்று  நான் எழுதுவது பெரும்பாலும்  என் நினைவுகளைத் தாங்கி இருக்கும் நினைவுகள் என்றால் சுகமானவை மட்டு மல்ல  சில நினை வுகள்சுமையானவை  சுமையான நினவுகளைத்தாங்கிவரும் பதிவுக்கு  அது தெரியாமல் இருக்க கொடுத்த தலைப்பே ஜாக்கி  மணி
      மணிக்கு ஜாக்கி மணி என்று பெயர் கொடுத்தபோது, அவரது குடும்பப் பின்புலம்
தெரியாது. குதிரைப் பந்தயத்தில் குதிரை மீதமர்ந்து விரட்டும் ஜாக்கிகளைப் பார்த்தீர்களானால் ஒரு ஒற்றுமை புலப்படும்.அநேகமாக அனைவரும் குள்ளமாக இருப்பார்கள். மெலிந்திருப்பார்கள். அவர்களது எடை குதிரையின் வேகத்தைக் குறைக்கக் கூடாது என்ற அக்கறையே அம்மாதிரியான ஆட்களைக் பந்தயத்தில் குதிரை ஓட்டிகளாக பங்கேற்க வைக்கக் காரணம். ஆனால் ஜாக்கி மணி குதிரை ஓட்டுபவரல்ல. இவனோடு சேர்ந்து பணியாற்றியவர்.எப்பொழுதும் (புன்)நகை முகம். வாழ்க்கையை முழுதும் அனுபவிப்பவர் போல ஒரு தோற்றம். இவன் வீட்டுக்கு வருவார். நன்றாகப் பேசுவார். கலகலப்பாக இருப்பார். ஆனால் மறந்தும் கூட அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேச மாட்டார். ஒரு நாள் இவன் கேட்டே விட்டான்.
      என்ன மணி, ஒரு முறை என்னை உன் வீட்டுக்குக் கூப்பிட்டு ஒரு வாய் காப்பி தர மாட்டாயா.?

      “ தந்தால் போச்சு.ஒரு முறை கூப்பிட்டால் மறு முறை கூப்பிடுவதையோ, வருவதையோ எதிர் பார்க்க மாட்டாயே என்றுதான் யோசிக்கிறேன்.”-மணி பேசும்போது சற்றே கண் கலங்கின மாதிரி இருந்தது. இவனுக்கு மணியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம். “ ஒரு முறைக் கூப்பிட்டால் மறுமுறை கூப்பிடாமலேயே வருவேனாக்கும்.என்றான்.

        ஒன்றிரண்டு முறை இவன் வற்புறுத்தல் தாங்காமல் மணி இவனை வீட்டுக்கு அழைத்தார்.” மணி, நான் இதுவரை உன் பர்சனல் லைஃப் பற்றிக் கேட்டதுமில்லை. நீயும் சொன்னதும் இல்லை. இன்று கேட்கிறேன். சொல்லேன். “

       “ நீதான் வந்து பார்க்கப் போகிறாயே.எல்லாம் ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மணி
.

      அலுவல் முடிந்ததும் ஒரு நாள் இவன் மணியுடன் அவர் வீட்டுக்குச் சென்றான். வெளியில் இருந்து பார்க்க சுமாராக இருந்தது வீடு. வீட்டில் போனதும் ஒரு வெராந்தா. தாண்டி நுழைந்தால் ஓரளவு பெரிய ஹால். ஹாலின் இரண்டு பக்கத்திலும் அறைகள்.. ஹாலை ஒட்டி உட்புறம் நடைவழியின் ஒரு புறம் சமையல் அறையும் மறுபுறம் குளியல் , டாய்லெட் அறை. ஹாலில் ஒரு திவான் இருந்தது. படுக்கையாகவும் உபயோகிப்பது போலிருந்தது. மற்றபடி மினிமம் தேவையான மேசை நாற்காலி இத்தியாதிப் பொருட்கள் தென்பட்டன. இவன் வீட்டுக்குள் நுழைந்ததும் இவனை எதிர்கொண்ட மாது, மணியின் மனைவி போல் தோன்றவில்லை. எதிர் பாராத ஒரு புது முகம் கண்ட திகைப்பு முகத்தில் தெரிந்தது.

      “ என் நண்பன். ஒரு காப்பி போட்டுத் தர முடியுமா.?என்று பவ்யமாகக் கேட்டார் மணி. கொஞ்சம் இருப்பா. எல்லோரையும் அறிமுகப் படுத்துகிறேன் “ என்றார்.

      சற்று நேரத்தில் காப்பி வந்தது. குடித்து முடிக்கும் வரை ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்த மணி, முடித்தவுடன் ஒரு FLOURISH-உடன், வேகத்துடன்.ப்ளீஸ் மீட் மை ப்ரின்ஸ் சார்மிங் நம்பர் ஒன்.” என்று கூறி இடப்புறம் இருந்த அறைக் கதவைத் திறந்து, இவனை அழைத்தார். இவன் அங்கே கண்ட காட்சி இவனை விக்கித்து விட்டது.படுக்க வைத்த நெடுமரம் போல் ஒரு வாலிபன்,விழித்துக் கொண்டு படுத்துக் கிடந்தான். எந்தக் குறையும் காண முடியாத உடல் ஆரோக்கியம். ஆனால் உணர்ச்சியற்ற முகத்தில் கண்கள் மட்டும் இமைத்துக் கொண்டு இருந்தது. தவிர வேறு எந்த சலனமுமில்லை.

      இவன் கையைப் பிடித்துக்கொண்டு, வலப் புற அறைக்குக் கூட்டிச் சென்ற மணி,
“ஹியர் ஈஸ் மை ப்ரின்ஸ் சார்மிங் நம்பர் டூ” என்று காட்டினார். இவனுக்குக் கண்கள் குளமாகி விட்டது. அந்த அறையிலும் இன்னொரு வாலிபன் முன்னவனைப் போலவே படுத்துக் கிடந்தான். இவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.” என்ன மணி.? எப்படி இது.? உன்னால் எப்படி இப்படி இருக்க முடிகிறது.?” என்றெல்லாம் கேட்கத் தோன்றி, ஒன்றுமே கேட்க முடியாமல் வாயடைத்து நின்றான்.

    மை டியர் ஃப்ரெண்ட், இவர்கள் இரண்டு பேரும், ஆண்டவன் எனக்குக் கொடுத்த சொத்து. இரட்டையர்கள். ஒரேபோல் தோற்றம் மட்டுமல்ல, குறைபாடுகளும் ஒரே மாதிரிதான். இருபத்திரண்டு வயதாகிறது. இவர்களை ஐந்து வருடங்கள் வரை வளர்த்த என் மனைவி துக்கம் தாங்காமல் போய்விட்டாள். வீட்டோடு இருக்கும் இந்த அம்மாதான் ஒத்தாசையாய் இருக்கிறார். வேளா வேளைக்கு இவர்களுக்கு சமைத்து உணவு கொடுப்பது, இவரது வேலை. மற்ற தேவைகளை நான் காலையிலும், மாலையிலும் வந்து கவனித்துக் கொள்வேன். நீ எதற்கு கலங்குகிறாய்.? எனக்கு இது பழகி விட்டது. தெரிந்தோ தெரியாமலோ, இரண்டு உயிர்களுக்கு நான் பொறுப்பு. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம் தவிர்க்கப் பட முடியாதவை அனுபவிக்கப் பட்டே ஆகவேண்டும் “
இன்னொரு சுமையான  நினைவு பிறிதொருபதிவில்









19 கருத்துகள்:

  1. விக்கித்து விடும் அனுபவம். யாரால் தாங்க முடிகிறதோ அவர்களுக்குத்தான் கடவுள் துன்பம் கொடுப்பார் போலிருக்கு

    நான் சேலத்தில் வேலைபார்க்க ஆரம்பித்த புதிது. சிஏ படித்த பையன் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தவன் பெங்களூரில் எம்பிஏ படிக்க வாய்ப்பு வந்தது என வேலையை விட்டுவிட்டு படிக்கச் சென்றான். ஹாஸ்டல் முதல்மாடி சுற்றுச் சுவரில் உட்கார்ந்து நண்பர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது பின்பக்கமாகத் தவறி விழுந்து கழுத்துக்குக் கீழே அனைத்தும் செயல் இழந்துவிட்ட பரிதாப சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது

    பதிலளிநீக்கு
  2. மிகவும் இயல்பாகக் காணப்படும் பலரின் வாழ்க்கைச்சூழல் இவ்வாறாக இருப்பதுண்டு. அதைத் தாங்கும் அளவு இறைவன் உரிய பலத்தைத் தந்துவிடுவானோ?

    பதிலளிநீக்கு
  3. இப்படி ஒரு பாடல் யாருக்கும் அமையக்கூடாது...

    ம்...

    எதையும் தாங்கும் இதயம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவிர்க்க முடியதவை அனுபவிக்கப்பட்டே ஆகவேண்டும்

      நீக்கு
  4. மனம் கனக்க வைத்தது ஐயா.
    மணியைப்போல தியாக உள்ளங்கள் பலர் உண்டு வெளியுலகம் அறியாமல்....

    பதிலளிநீக்கு
  5. மனம் கனத்துத்தான் போய்விட்டது
    வெளியில் அதிக மகிழ்ச்சியாகக் காணப்படும் சிலரின் தனிப்பட்ட வாழ்வு வேதனை நிரம்பியதாக இருப்பதுண்டு

    பதிலளிநீக்கு
  6. கல்க வைக்கிறது. இது மாதிரி சிலரை நானும் அறிவேன். அவர்கள் டெடிகேஷனும், பாசமும் வியக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவிர்க்க முடியாதவை அனுபவிக்கப்பட்டே ஆக்வேண்டும்

      நீக்கு
  7. துயரம் மிக்க வாழ்க்கை எத்தனையோ பேருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையில் துயரம் அல்ல துயரமே வாழ்க்கைசிலருக்கு

      நீக்கு
  8. அதைத் தான் லேபலில் குறித்துள்ளேன்

    பதிலளிநீக்கு
  9. உள்ளத்தைத் தொட்ட பகிர்விது
    கடவுள் ஏனிப்படிச் சோதிக்கிறார்?

    பதிலளிநீக்கு