வாழ்க்கை எட்டெட்டாக தொடர்கிறது
--------------------------------------------------------
மூன்றாவது எட்டு(1954-1962)
நான் என் தந்தையை இழந்தகாலம் எனக்கு
பயிற்சியுடன் கூடிய ஒரு உத்தியோகம் கிடைத்ததும் என்னால் வாழ்க்கையை எதிர்
நோக்க முடியும் என்னும் தன்னம்பிக்கையை
நான் வளர்த்துக் கொண்ட காலம் என் பொறுப்புகளை
நான் நிறைவேற்றத் துவங்கி இருந்த காலம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மணவினைக்கு
வித்தாக காதல் அரும்பிய காலம்
வாழ்க்கையில்
மேடு பள்ளங்களை நான் எதிர் கொண்ட காலம்
எதையும் செய்ய முடியும் என்னும்
திண்ணமும் நம்பிக்கையும் வளர்த்துக் கொண்ட
காலம்சில பல நிகழ்வுகளை நான் பதிவாக்கி இருக்கிறேன்
நான்காவது எட்டு( 1962—1970)
-பல
சவால்களை சந்திக்க நேர்ந்த காலம்நிறைய படிப்பினைகளையும் கற்றுக் கொண்ட காலம் ஏமாற்றங்களின் வலி உணர்ந்த காலம் பணியில் என்னை
நான் செலுத்தி அதன் மூலம் என்னைச் செதுக்கிக் கொண்ட காலம் நான் என்
ஏமாற்றங்களை அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை. மகிழ்ச்சிகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து
கொண்ட அளவு ஏமாற்றங்களைப் பகிராத காலம்
ஐந்தாவது எட்டு
1970 முதல் 1978 வரையிலான சமயம் முற்றிலும்
எதிர்பார்க்காமல் என்னை பவர் ஸ்டேஷன் நிர்மாண வேலைக்கு அனுப்பப்பட்ட காலம் ஒரு
சமயம் என் பிள்ளைகளின் படிப்பும் எதிர்காலமும்
கருதி வேலையைக் கடாசிவிட்டு ஒரு பெட்டிக்கடை
வைத்துப் பிழைக்கலாம் என்று தீவிரமாக
நினைத்த காலம் பதவியில் மேம்பாட்டை எதிர் நோக்கி
அது வெகு தாமதமாக வந்தநேரம்விஜயவாடா அனல் மின் நிலையம் நிர்மாணப்
பணியில் எனக்காக ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்ட காலம்வாழ்க்கையில்
எந்த சவாலையும் சமாளிக்கும் திறமையையும்
தைரியத்தையும் வளர்த்துக் கொண்ட காலம்
என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்த காலம் என் அனுபவங்கள் சிலவற்றைப் பதிவுகளாக்கிக்
இருக்கிறேன்
ஆறாவது எட்டு (1978—1986)
உடல் உபாதை காரணமாக 1980ல் மீண்டு திருச்சி
கனமின் கொதிகலத் தொழிற்சாலைக்கு வந்தகாலம் தொழிற்சாலையில் எனக்கென்று ஒரு இடமும் பேரும்
இருந்ததுஎன்னதான் அழுத்தி வைத்தாலும் மேல் நோக்கி வரும் சக்தியை உணர்ந்தேன் நான்
எனக்குச் சொந்தமாக பெங்களூரில் ஒரு வீடு
கட்டிக் கொண்டேன் கார் ஒன்று வாங்கினேன் தொழிற்சாலை வாயிலாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டேன் பதவி உயர்வும்
கிடைத்தது பதவி காலத்தின் ஆரம்பகால இழப்புகள் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தத்
துவங்கியது நான் எங்கோ இருந்திருக்க வேண்டியவன் அது பற்றி ஏதும் வேண்டாமே
ஏழாவது எட்டு (1986-1994)
என்
மகன்கள் படிப்பை முடித்து பணியில் அமரத் துவங்கி இருந்த காலம் என் மூத்தமகனின்
திருமணமும் நடந்தது அவனுக்கு பெங்களூரில் வேலை என்றானதும் என் மனதில் வேறு
சிந்தனைகள் உருவாயிற்று இத்தனை காலமும்
என்னைப் பெற்றவருக்காகவும் நான் பெற்றதுகளுக்காகவும் உழைத்தாயிற்று நான் எனக்காக வாழ்வதுதான் எப்போது என்னும்
சிந்தனை அதிகரிக்க என் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன் 53 வயதுக்குள் ஓய்வா
என்று எல்லோரும் கேட்டார்கள் பைத்தியக் காரன் என்றார்கள் நான் என்றைக்குமே
பணத்தின் பின் சென்றது கிடையாது உயிர்
வாழத் தேவையான பணம் போதும் என்றே நினைத்தேன் . என் முடிவில் என் மனைவிக்கு அவ்வளவு
விருப்பம் இல்லையென்றாலும் என் முடிவுக்கு
ஒத்துழைத்தாள் நான் என் மகனுடன் பெங்களூருக்கே வேலையை விட்டு விட்டு வந்து
விட்டேன் சுத்தியல் பிடித்தவன் கை சும்மா இருக்குமாஇரு வருடங்கள் ஒரு சில கம்பனிகளுக்கு தர ஆலோசகனாக இருந்தேன்
எட்டாம் எட்டு (1994-2002)
நான் எடுத்த முடிவு தவறல்ல என்று என்னை நினைக்க
வைத்த வருடங்கள் என் இரண்டாம் மகனின் திடுமணமும் நிகழ்ந்தது என்னுடைய சஷ்டியப்த
பூர்த்தி விழா திருக்கடையூரில் என் மகன்களாலும் என் சின்ன மச்சினனாலும் எளிதாக
மிகக் குறைவான பேருக்கே தெரியப்படுத்தி
நடந்தது தாத்தா பாட்டிக்குக் கல்யாணம் என்று என் பேரக் குழந்தைகள்
மகிழ்ந்தது கண்டு மனம் நிறைவடைந்தது. உடல் நலமும் நன்றாய் இருந்தது பேரன்
பேத்தியுடன் எந்தக் கவலையும் இல்லாமல் செலவழித்த காலம் சுருங்கச் சொன்னால் என்
வாழ்நாளில் நான் மிக்க மகிழ்வுடன் இருந்த பீரியட் எனக்குப் பிடித்த சில
பயணங்களையும் மேற்கொண்டேன்
ஒன்பதாம்
எட்டு(2002-2010)
-------------------------------------------
என்
மக்கள் அவரவர் பணி நிமித்தம் தனியே
வெளியூர்ப் போக நேர்ந்து நானும் என் மனைவியும் தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை
என் சுபாவத்துக்கு நான் தனியே இருப்பதே நல்லது என்று தெரிந்ததுஅவ்வப்போது மகன்களிடம்
போய் இருந்து வருவோம் 2010 ஆண்டு முடிவில் எனக்கு ஒரு மைல்ட் இருதய அட்டாக் வந்தது. மருத்துவமனையில் ஸ்டெண்ட் பொறுத்தப்
பட்டது என் தனிமையைத் தவிர்க்க ஒரு வலைப்
பூவைத் தொடங்கிக் கொடுத்தான் என் பேரன்
என்னுடைய இன்னொரு பரிமாணமாகிய எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன் என்
உடல் என் கட்டுக்குள் இருப்பதற்குப் பதில் அதன் கட்டுக்குள் இருக்க
வலியுறுத்தப்பட்டேன்
பத்தாவது
எட்டு ( 2010—இன்றுவரை )
----------------------------------------------------------------
உடல் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று தெரிய
ஆரம்பித்தது அப்போது சில எழுத்துகள் நான் எழுதியது எனக்கே பலமும் பெருமை தருவது
மாக இருந்தது கண்கள் இரண்டிலும் அறுவை
சிகிச்சை செய்யப்பட்டது காது கேளாமை அதிகரித்து நான் கூட்டுக்குள் முடங்கி
விடுவேனோ என்னும் அச்சமும் எழுந்தது எத்தனையோ மேடு பள்ளங்களைக் கண்ட நான் மனம்
தளராமல் ஹியரிங் எய்ட் வாங்கிப் பொருத்திக் கொண்டேன் வயதாவது செய்யாத
குற்றத்துக்குத் தண்டனையா என்னும் கேள்வி எழ
அது தவறு என்று நினைத்து முதுமையின் வரம் என்றும் எழுதினேன் இப்போது நானும்
என் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக
எங்கள் நாட்களைத் தள்ளிக் கொண்டு இருக்கிறோம் நான் எழுதிய சிறுகதைகளின்
தொகுப்பைப் புத்தக வடிவில் கொண்டு வந்தேன் கூட்டுக் குடும்பம் என்பது தற்கால
நிலைக்குச் சரிப்பட்டு வராது என் மக்களுக்கும் அவரவர் வாழ்வில் முன்னேறவும் அவரவர்
குடும்பத்தைப் போஷிக்கவும் வேண்டிய கடமை இருக்கிறதே மனதில் தோன்றுவதை எழுத்தில்
வடித்து வடிகாலாக்கிக் கொள்கிறேன்
இப்போது என் பத்தாவது எட்டில் நான்காண்டுகள் ஆகிவிட்டன. காலனைக் காலால் ஒரு முறை எட்டி உதைத்ததும் இந்தக்
காலத்தில்தான். பிள்ளைகள் அவரவர் பணி நிமித்தமும் அவரவர் கடமை நிமித்தமும் ஓடிக்
கொண்டிருக்க தனிமையை உணரத் துவங்கிய காலம். நினைவுகளே துணையாய் நடந்தவற்றை எடைபோட்டு
நாளும் INTROSPECTION –ல் பொழுதைக் கழிக்கும் காலம்.
உலகின் பல மூலைகளில் இருப்பவர் அறிய என்னையும் என் எண்ணங்களையும் யாரும்
கேட்காமலேயே, வேண்டாமையிலேயே அள்ளி அள்ளித் தருகிறேன் இணையத்தில் இணைந்து என்
வலைத் தளம் மூலம்