நினைவடுக்குகளில் இருந்த ஒரு பயணம்
----------------------------------------------------------------------
1985 என்று நினைக்கிறேன் திருச்சி பி எச் இ எல் லில் பணியிலிருந்தேன் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை
குடும்பத்துடன் பயணிக்க நிறுவனமே பயணப் போக்கு வரத்துச் செலவை ஏற்றுக்
கொள்ளும் நாங்கள் ஒரு சுற்றுப்பயணத்துக்குத் திட்டமிட்டோம்
திருச்சி கோவை உதகை மைசூர் மூகாம்பிகா பேளூர் ஹளேபீட் பெங்களூர் திருச்சி என்று திட்டமிட்டோம்
அப்போது எங்கள் வீட்டில் எங்கள் செல்லம்
செல்லியும் (பார்க்க சுட்டி) இருந்தது சுமார் ஒரு வாரகாலம் அதை தனியே விட்டுச் செல்ல
முடியாது என்பதால் அதையும் கூட்டிச்செல்லத் திட்டமிட்டோம் ஆனால் ஹோட்டல்களில் அதை அனுமதிப்பார்களா என்று சந்தேகம் இருந்தது. அப்படியானால் எங்களில் ஒருவர்
காரிலேயே செல்லியுடன் தங்கிக்
கொள்கிறோம் என்று மகன்கள்சொல்ல
செல்லியையும் கூட்டிப்போக முடிவெடுத்தோம்
முதலில் திருச்சியிலிருந்து கோவை சென்றோம் கோவையில் என் நண்பரின் மகளும்
மருமகனும் இருந்தனர். நண்பரின்
மருமகனுக்கு நாய் என்றாலேயே ஒரு பயம்
அலர்ஜி. அன்று மாலை சேர்ந்தோம் இரவு தங்கி காலையில் புற்ப்படத்திட்டம் செல்லியைநன்கு கட்டிப் போட்டு அவருடைய பயத்தை
ஓரளவு குறைத்தோம் மறு நாள் விடிகாலையிலேயே
நீலகிரி நோக்கிப் பயணம் பள்ளியில்
நான் படிக்கும் போது அப்பர் கூனூரில்
இருந்தோம் என்மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நாங்கள் தங்கி இருந்த சுற்றுப்
புறத்தை காட்ட முதலில் கூனூர் போனோம்
அங்கே சிம்ஸ் பார்க் அருகே வீடு
ஆனால் வீடுஇருந்த சுவடே இல்லை
ஆனால் தோராயமாக நாங்கள் இருந்த இடத்தை
எதிரே தெரிந்த மலை முகட்டை வைத்து அடையாளம் காட்டினேன் அந்த மலை முகட்டுக்குப் பெயர் டானரிஃப் நாங்கள் குடி இருந்த வீட்டிற்கு டானரிஃப் வியூ என்று பெயர் கூனூரில்
நான் முதன் முதலில் பணியிலிருந்த மைசூர் லாட்ஜ்
என்னும் இடமும் கூனூர் ரயில்
நிலையத்துக்கு மேல் முகட்டில் இருந்தது
அதையும் என் பிள்ளகளுக்குக் காட்டி ஊட்டி சென்றோம் அங்கே பொடானிகல் கார்டன்
இடத்தில் சிறி து உட்கார்ந்து பயணத்தைத் தொடர்ந்தோம் எப்படியும்
மாலைக்குள் மைசூர் செல்லத் திட்டம்
போகும் வழி முதுமலைக் காட்டுக்குள் போய் ஆக வேண்டும் போகும் வழியில் சாலை நடுவே ஒரு காட்டு யானை
நின்றிருந்தது காரை சற்று
தூரத்தில்நிறுத்தினார் ட்ரைவர் எங்களுக்கு
செல்லி அசம்பாவிதமாகக் குரைத்து யானையின் கவனத்தை
ஈர்ப்பாளோ என்ற பயம் ஆனால் செல்லி எங்கள் கால்களுக்கடியே நல்ல தூக்கத்தில்
இருந்தது முதன் முதலில் இம்மாதிரிப் பயணம்
அதற்கும் புதிது ஒரு மாதிரி அனீசியாகவே இருந்தது மைசூர் போகும் வழியில் நஞ்சன்கோடு இருந்தது கோவிலை வெளியே
இருந்தே பார்த்துபயணம் தொடர்ந்தோம் மைசூர்
சென்று ஒரு ஹோட்டலில் அறை எடுத்தோம்
செல்லி இருப்பதைச் சொல்லவில்லை
நாயும் பவ்யமாக இருந்து இருப்பைக் காட்டிக் கொள்ளவில்லை அறைக்குச் சென்ற்தும் எல்லா மூலைகளையும் மோப்பம் பார்த்து வந்துஓரிடத்தைல்
செட்டில் ஆகியது மறு நாள் ஹோட்டலைக் காலி செய்து பயணம் புறப்பட்டோம் நாங்கள்சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச்
சென்றோம் செல்லி காரிலேயே என் மகன்
ஒருவனுடனிருந்தது பிறகு மைசூரின் பிரதான
இடமாகிய பேலசுக்குச்சென்றோம் வெளியில்
இருந்தே பார்த்து கிளம்பினோம் அங்கிருந்து மூகாம்பிகை கோவிலுக்குப்போனோம் அங்கும்
விடுதியில் செல்லியை யாரும் கண்டு கொள்ள வில்லை
,
அப்போதெல்லாம் ஒரு இடத்துக்குச்சென்றால்
ஈடுபாடு எதுவும் இருந்ததில்லை எதையும் கவனித்துப்பார்த்ததுமில்லை கோவில் என்பதே
போவது ஒரு மாற்றத்துக்காகத்தான் என்
மனைவிக்காகத்தான் அன்கிருந்து பேளூர் ஹளேபேட்
என்னும் இடத்துக்கும் சென்றோம் மழை
பெய்ஹு கொண்டிருந்த நினைவு இரவு வேளை சாலையில் எங்கள் கார் தவிர வேறேது
மில்லை. திடீரென்று ட்ரைவர் ப்ரேக்
போட்டுக்காரை நிறுத்தினார் ஏன் என்று கேட்டதற்கு வழியில் ரோடில் ஒரு பாம்பு
சென்றதாகவும் அதன் மேல் காரை ஏற்றாமல்
இருக்க நிறுத்தியதாகவும் கூறினார் கார்
பாம்பி மேல் ஏறினால் ட்ரைவருக்கு ஆபத்து என்னும் எண்ணத்துடன் இருந்தார் சாலையில் பாம்பு ஏதுமில்லை என்று உறுதி செய்து கொண்டபின் பயணம் தொடர்ந்தது இதன் நடுவே என் இளைய மகனுக்கு நல்ல சுரம் இருந்தது விந்திய கிரி என்னும் இடத்தில் கோமடேஸ்வரரின்
மிகப்பெரிய சிலை இருந்தது. நானும் என்
மூத்தமகனும் மலை ஏறிப் போனோம் கீழே என் மனைவி என் இளையமகன் கார் ட்ரைவர் மற்றும் செல்லி இருந்தனர் சிலையைப் பார்த்துவரும்போது எங்கள்காரைச்
சுற்றி ஒரே கூட்டம் என்னவென்று வந்து பார்த்தால் பலரும் எங்கள் நாய்
செல்லியைப்பார்க்கக் கூடி இருந்தனர் பலருக்கும் அது நாயா கரடியா என்னும்
சந்தேகம் நாய் என்று சொன்னாலும் நம்பாமல்
அதை குரைக்கச்சொல்லிக் கேட்டனர் ஒரு வழியாக அவர்களிடம் இருந்துதப்பித்துப் போனோம் பேளூர் ஹளேபேட் போன்ற இடங்களில் சிற்பக்
கலையின் உச்சத்தைக் கண்டோம் இன்றுபோல் இருந்திருந்தால் எத்தனையோ செய்திகள் சேகரித்து இருப்பேன் பிறகு அங்கிருந்து நேராகபெங்களூரில் என்
மாமியார் வீட்டுக்குப் பயணித்தோம்பெங்களூரில் நல்ல வரவேற்பு முடிந்து மறு படியும் திருச்சி நோக்கிப்
பயணம் பயணம் முடிந்து போகும் போது ட்ரைவர் செல்லியின் கால் நகங்களால் காரின்
கதவுப் பகுதியில் நிறையவே ஸ்க்ராட்ச் ஆகி யிருப்பதை காட்டினார் ஒரு வழியாக அவரை சமாதானப் படுத்தி அனுப்பி
வைத்தோம் வெறும் நிகழ்வுகளை நினைவில் இருந்து மீட்டெடுத்தபதிவு இது எனக்கே ஏதோ
டாகுமெண்டரி படம்பார்த்துச் சொன்னது போல் இருக்கிறது பழைய படங்களை டிஜிடைஸ் செய்து
பதிவிட்டிருக்கிறேன்
,
![]() |
எங்கள் செல்லம் செல்லி |
![]() |
அப்பர் குனூரில் டானெரிஃப் மலை பின்னணியில் |
![]() |
குனூரில் நான் பணியில் இருந்த இடமருகே |
![]() |
உதகை பொடானிகல் கார்டெனில் |
![]() |
மைசூர் பாலஸ் முன்னால் |
![]() |
மூகாம்பிகை கோவில் முன் |
,
.