ஹை நான்
இறக்க வில்லை111111
அனுபவ உபாதைகளை
விளக்குவதன் காரணமே பலருக்கும் ஒரு விழிப்புண்ர்வு ஊட்டவும் மனம் தைரியத்துடன் இருக்கவும்தான் 2010 ம் ஆண்டு எனக்கு ஒரு
மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்து இதயத்தில் ஒரு குழாய் நோய் வாய்ப்பட்டு இருந்ததால் எனக்கு ஆஞ்சியோப்லாஸ்டி செய்தார்கள் என்று எழுதி இருக்கிறேன்
நான் நலமுடன் தொடர பல மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள்
அதில் ஒன்று asa என்று சொல்லப்படும் ஒரு மாத்திரையும் அடக்கம் ஆனால் அந்த மாத்திரை எங்கும் கிடைக்க வில்லை நான் அதில்லாமலேயே இருந்தாலும் பாதகமில்லை என்று கூறிவந்தேன் ஆனால்
மருத்துவர் சொன்ன ,மாத்திரையை சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்பதில் என்மனைவியும்
மகன்களும் குறியாய் இருந்தனர் எனக்கு சிகிச்சை செய்த கார்டியாலஜிஸ்டிடம்
அப்பாயின்ட் மென்ட் கிடைப்பதுகஷ்டமாக இருந்ததால் அதே மருத்துவ மனையில்
இருந்த வேறு கார்டியாலஜிஸ்டிடம் விஷயத்தை கூறினேன் அவர் கொடுத்த மாற்று மருந்து டோசேஜ் அதிகமாய் இருக்கவே அதை தெரிவித்துஅதன் பக்க விளைவுகள் பற்றியும் அவரிடம் கூறினேன் அவர் கொடுத்த மருந்தை உட்கொள்ளவும் தொந்தரவு ஏற்பட்டால் அவரை மீண்டும் பார்க்கவும் கூறினார் அந்தபதில்
எனக்கு உடன் பாடில்லாமல் இருந்தது என் மக்களுக்கு நான் மருந்து உட்கொள்ளவேண்டும் என்னும் கட்டாயவிருப்பம்
இருந்தது எப்படியோ எனக்கு முதலில் சிகிச்சை கொடுத்த அதே மருத்துவரிடம் எப்படியோ
அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார்கள் நானும் சென்று பார்த்து விளக்கினேன் அவருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் சுமார் பத்து வித மாத்திரைகளை குறைத்து மூன்றே மாத்திரைகள் போதும்
என்றார் அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்து பின் கூறி
விட்டேன் என் தொப்புழ் பக்கம் சிறிய
வலி என்றும் சற்று வித்தியாசமாக தெரிகிறதென்றும் கூறிக் காண்பித்தேன்
அதைப் பார்த்ததும் அவர் என்னை அங்கிருந்த ஒரு சர்ஜனை பார்க்கக் கூறி அவருடன் தொடர்பு கொண்டு பார்க்கவும் ஏற்பாடு
செய்தார் அப்போதே அவரிடம்சொன்னேன் சர்ஜன் என்றால் உடனே அறுவைதானே என்று
அந்த அறுவைச் சிகிச்சை
நிபுணர் நான் எதிர்பார்த்தபடி உடனேயே ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றார் IRREDUCIBLE obstructive UMBLICAL HERNIA என்றும் உடனே ஆப்பரேஷன் செய்யாவிட்டால் அது சிறு குடலை strangulate செய்யும்
வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார்
அறுவை சிகிச்சைக்கு முன்பாக பல டெஸ்டுகள் எடுத்தார்கள் ஒரு வழியாய் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு
சென்றார்கள் ஆப்பரேஷ்ன் மேஜர மைனரா என்று கேட்டென் இந்த வயதில் எல்லா ஆப்பரேஷனு ம் மேஜர்தான் என்றனர் மனதில் இன்னும் எல்லோரையும் பார்ப்போமா
என்று இருந்தது நிஜம். அப்படியே ஏதாவது ஆனாலும் கவலைப்பட்டு
பிரயோசனம் இல்லை என்று தோன்றியதுசிகிச்சை முடிய சுமார் ஒன்றரை மணிநேரம் ஆயிற்று பிறகு போஸ்ட் ஆப்பரேடிவ் வார்டில் எனக்கு நினைவு வரும்வரை
கிடத்தி இருக்கிறார்கள் மெள்ள எனக்கு தெளிவு ஏற்பட்ட போது கண்களை சுழல
விட்டு இருக்கும் இடம் இதுதான் என்று உறுதிப் படுத்திக் கொண்டேன் முதலில் நினைவு வந்து தோன்றிய எண்ணமெ நான் பிழைத்து விட்டேன் இறக்க வில்லை என்பதுதான் தெளிவு வந்ததும் என் மக்களையும் மனைவியையும் பார்க்க
வேண்டும் என்றேன்