கை கடிகாரம்
---------------------
அண்மையில் திரு மதி கோமதி
அரசு அப்பாவின் வாட்ச்
பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தார்கள் எனக்கும் கடிகார நினைவுகள் என்னுமொரு பதிவு எழுதிய நினைவு
அம்பர்நாத்தில் நான் பயிற்சியில் இருந்தபோது
என் நண்பன் ஒருவன் ரோலெக்ஸ் வாட்ச் அணிந்திருந்தான் உலகிலேயே சிறந்த கைகடிகாரம் ரோலெக்ஸ்தான் என்பான் அந்த வயதில் ஒரு தீர்மானம்
எடுத்தேன் நானாக வாட்ச் வாங்கினால் ரோலெக்ஸ் வாட்ச் தான் என்றும் இல்லா விட்டால் நான் வாங்கி
வாட்ச் அணியமாட்டேனென்றும் தீர்மானித்தேன் ஆனால் எனக்கு ரோலெக்ஸ் வாட்ச் வாங்கும் நிலையே
எட்ட வில்லை முடவன் கொம்புதேனுக்கு ஆசை பட்டதுபோல் இருந்தது
நனாக காசுகொடுத்து வாட்ச்வாங்கியதில்லை என் நண்பன் 1970ல் என்று நினைக்கிறேன் ஒரு வாட்ச் அன்பளிப்பாக்கொடுத்தான் அது
நான்விலை கொடுத்து வாங்கியதல்ல என்பதாலும் வாட்சின் அவசியம் கருதியும் அதை ஏற்று கொண்டேன் அது ஒரு சீக்கோ வாட்ச் வைப்ரேஷனில் இயங்கியது பாட்டெரி கிடையாது சாவி
கொடுக்கவேண்டாம் கையில் கட்டி இருந்தால்
போதும் அது தொடர்ந்து ஓடும் தேதியும்
இருக்கும் அப்போதெல்லாம் அதை டெலிவிஷன்
டைப் என்பார்கள் சதுர்மாக இருக்கும் இந்த வாட்ச் இன்னும் நல்ல ஓடும் நிலையிலேயெ இருக்கிது
என்னிடம்வந்தே 45 ஆண்டுகளுக்கும்
மேலாகிறது ஒரு முறை கூட
ரிப்பேர் என்று போனதில்லை
அதன் பின் என் மூத்தமகன் அவன் சம்பளத்தில் ஒரு டைடன் வாட்ச் வாங்கிக்
கொடுத்தான் என்பேரன் அவனது முதல் சம்பளத்தில்ஒரு வாட்ச் அதுவும்
டைடான் தான்வாங்கிக் கொடுத்து அதைத்தான் அணிய வேண்டும்
என்று ஆர்டர் போட்டு இருக்கிறான்
நான் ஜப்பான் போய்
இருந்தபோது நண்பர்களுக்கு பரிசாக
மூன்று சோலார் வாட்சுகள்வாங்கி வந்தேன்
அவற்றின் ஆயுட்காலம் எத்தனை நாட்களோ தெரிய வில்லை
![]() |
| சீக்கோ கை கடிகாரம் |
![]() |
| மூத்தமகன் கொடுத்தவாட்ச் |

