கிரகணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரகணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 டிசம்பர், 2019

கிரகணமும் சில நம்பிக்கைகளும்



                               கிரகணங்களும்  சில நம்பிக்கைகளும்
                               ------------------------------------------------------------
கிரகணம் 
கிரகணம் பற்றி  பல செய்திகள்  இருக்கின்றன  பூமியின் நிழல் சந்திரனில் படுவதைசந்திர  கிரகணம்  என்றும்   சந்திரனின்  நிழல்சூரியன் மேல் விழுவதை  சூரியக்கிரகணம் என்றும்   கூறப்படுகிறது        

நம்புராணக்கதைகளில்  அசுரர்கள் சந்திரனையோ சூரியனையோ  விழுங்குவதே கிரகணம் என்றும் சொல்லக் கேள்வி  எதையும்  கேள்வி கேட்காத வயதில் புரிந்து கொள்வதே சொற்பம் அதில் தவறுகளும் இருக்கலாம்   கிரகணம் பற்றிய சூப்பர்ஸ்டிஷன்களில் கிரகண  நிகழ்வின் போது கர்ப்பிணிப்பெண்கள்மேல்   கிரகண கிரணங்கள்  அவர்கள்  மேல் படக்கூடாது என்பதும்   அந்நேரத்தில் உணவு உட்கொள்ளக் கூடாதுஎன்பது இன்றும்  சில இடங்களில் பின் பற்றப்படுகிறது
நாங்கள் விஜயவாடாவில் இருந்தபோது  இம்மாதிரியான எண்ணங்கள் சரி அல்ல என்பதை நிரூபிக்கவே அங்கிருந்த ஒரு டாக்டர் (பெயர் சமரம்  என்பது )அன்று எல்லோருக்கும் நல்ல இலவச ஊண் படைப்பார்
அண்மையில் எனக்கு ஒரு வாட்ஸாப்  காணொளி வந்திருந்தது வாசகர்கள் அவரவர் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே  கிரகணம்   என்னும் நிகழ்வின் பொது கோவில்களில்  நடை சாத்தப்படுகிறது  ஏன் என்று தெரிந்தவர்கள் கூறலாமே