குணாதிசயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குணாதிசயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 நவம்பர், 2015

இவன் இப்படித்தான்


                                       இவன் இப்படித்தான்
                                       --------------------------------

இவன் ஏன் இப்படி என்று அடிக்கடி எழும் கேள்வி. மனதில் பட்டதைச் சொல்பவன்  எந்த உள் நோக்கமும் இல்லாதவன் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப் படுபவன் இதுவே இவனது பலமும் பலவீனமும்  என்றும் தெரிந்தவன்  இருந்தாலும் இந்த குணத்துக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா.
ஒரு முறை இவன் திருச்சியில் இருந்தபோது ஒரு நகைக்கடையில் அமர்ந்து ஒரு சிறிய மோதிரம் வாங்கும் பணியில் ஈடு பட்டிருந்தான்  இவனுக்கு அருகில் ஒரு வசதி மிக்கவர் போல் தோன்றிய தம்பதியினர் பல நெக்லசுகளைப்பார்த்து ஒன்றைத் தேர்வு செய்திருந்தனர்  அகஸ்மாத்தாக அந்த நெக்லசைப் (மூன்று வரி கற்கள் பதித்தது) பார்த்தவனுக்கு அதில் ஏதோ குறை இருப்பது போல் பட்டது.  சிறிது நேரத்தில் அது என்ன என்றும் தெரிந்து விட்டது. அந்தத் தம்பதியினர் அதை விலை கொடுத்துப் பெறும் முன்னே இவன் அவர்களிடம்  அது வேண்டாம் என்று கூறினான்  கடைக்காரருக்குக் கோபம் வந்தது தம்பதியினர் ஏன் என்னும் குறிப்பில் இவனைப் பார்த்தனர்.  பிறகு கேட்கவும்  செய்தனர். நெக்லசில் கற்களின் வரிசையில் ஒன்றிரண்டு கற்கள் காண வில்லை என்றான்  இவன் சொன்னபின்னும்  அவர்களால் அந்தக் குறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  இவன் சுட்டிக்காட்டியபின்
அவர்களும் கற்கள் சில இல்லாதிருப்பதைக் கண்டனர்  பின் நகை ஏதும் வாங்காமல் சென்றனர்  கடைக்காரருக்கு அனாவசியமாக இவன் மேல் கோபம் வந்தது சாதாரணமாகக் காணக் கிடைக்காத குறை இவன் கண்ணில் எப்படிப்பட்டது என்றால் அது இவன் செய்யும் தொழில் சார்ந்தது என்று புரியும் இவன்  தொழிற்சாலையில்  தரக்கட்டுப்பாட்டுத்துறையில் இருந்தான் பொழுது விடிந்து பொழுது போகும்  வரை உற்பத்தியாகும் பொருட்களின் தரத்துக்கு  இவனே பொறுப்பாளியாகக் கருதப்பட்டான் சாதாரணமாக பிறர் கண்களில் தென்படாத குறை இவனுக்குத் தெரிந்து விடும் அதுபோல்தான் நகைக்கடையிலும் நேர்ந்திருக்கவேண்டும்  இவன் அந்தக் குறையைச் சுட்டிக் காட்டும்போது  எந்த உள் நோக்கமும்  இல்லாதுதான் சொன்னான் குறை கண்ணில் பட்டது சொல்லி விட்டான்  வேறு யார் கண்களிலும் பட்டிருந்தாலும் நமக்கேன் வம்பு என்று பேசாமல் இருப்போரே அதிகம்
இவன் வலைப் பதிவுகள் எழுதும் போதும்  பிற நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் போதும் இதுதான் நடக்கிறது மனதில் பட்டால்  தோன்றியதைச் சொல்வதும்   இல்லை என்றால் நாசுக்காகக் குறைகளைக் கூறுவதும் இவன் குணமாகி விட்டது  இவன் கூறிய குறைகளை இல்லை என்று யாரும் கூறுவதில்லை.  ஏன்  குறை காண்கிறான் என்பதே பேச்சாக இருக்கிறது எல்லோரையும் போல் நமக்கேன் வம்பு என்று இருக்க இவன் இன்னும் பழகவில்லை இத்தனை வயதுக்குப் பிறகும்  எல்லோர் போலும் இருக்கும்  குணத்தை இவன் பெற வில்லையா என்ன. ? அப்படிஅல்ல இந்தக் குணம் குறையுடையது என்று இவனுக்கு இன்னும்  தெரியவில்லை.  ஏன் என்றால் இதுவே இவனது பலமும் பலவீனமும் குறைகள் என்று இவன் குறிப்பிட்டதில் தவறு ஏதும் இருப்பதாக இவனுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு சின்ன விஷயமும்  ஒரு பெரிய விஷயத்தின் அங்கமே என்று நினைக்கிறான் இவன் இவன் இப்படித்தான் ஆனால் எந்தவிதமான கருத்தும் கூறாமல் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடுபவர்கள் இவனுக்குப் புரியாத புதிர்தான் ஒரு முக்கியமான பதிவெழுதி கருத்துக் கூற அழைத்தாலும்  ஒதுங்கி விடுகிறார்கள் 
( இந்த ஆண்டு தீபாவளி இம்மாதம் 10ம் தேதி வருகிறது அதற்கு அடுத்த நாள் அடியேனின் பிறந்த நாள் கம் மண நாள். ஆக நான் வலை உலகில் இருந்து சில நாட்கள் விலகி இருப்பேன்  11-ம் தேதி என் மகன் என்னை சென்னைக்குக் கூட்டிப்போவதாகக் கூறி உள்ளான் சென்னை நண்பர்களுக்கு இது ஒரு தகவல் மட்டுமே.  வழக்கம் போல் நண்பர்களைச் சந்திக்க விருப்பம் )