தடம் மாறிய வாழ்க்கையா....?
------------------------------------------
( என் பதிவுகளை யாரோ ஆர்வக் கோளாறால் என் விருப்பம் இல்லாமலேயே தமிழ் மணத்தில் இணைக்கிறார்கள். வேண்டாமே. என் பதிவுகளை தக்க நேரத்தில் நானேதமிழ் மணத்தில் இணைத்துக் கொள்கிறேனே)
. கே. பாலசந்ததரின் மறைவுச்செய்தி என்னை என்னென்னவோ எண்ணச் செய்து விட்டது. ஒரு வேளை எங்களின் சிந்தனைகள் பலவற்றிலும் ஏதோ ஒற்றுமை இருந்திருக்கலாம். அதுவே என் எண்ணப்போக்குக்குக் காரணமாய் இருந்திருக்கலாம். கே. பாலசந்தர் ஏஜீஸ் ஆஃபீசில் பணியிலிருந்தபோது அமெச்சூர் நாடகங்களில் ஈடுபாடு கொண்டு 1963-ம் வருடம் மேஜர் சந்திரகாந்த் என்னும் நாடகத்தை அரங்கேற்றினார் என்று படித்த நினைவு. நான் பெங்களூருவில் HAL AERO ENGINE DIVISION-ல் பணியில் இருந்தபோது பெங்களூரு TOWN HALL-ல் 1963-ம் வருடம் ஃபெப்ருவரி மாதம் 13-ம் தேதி வாழ்ந்தே தீருவேன் என்ற பெயரில் ஒரு நாடகம் எழுதி இயக்கி நடித்தும் இருந்தேன் அதில் ஒரு வசனம் எனக்கு சில பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அப்போதே என் சிந்தனைகள் வித்தியாசமாய் இருந்திருக்கிறது. ““ ஒருகாலத்தில் நாட்டை அரசன் ஆண்டான்;
பின்
அந்தணன் ஆண்டான், பிறகு பெருந்தனக்காரன் ஆண்டான்
இன்னும்
ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும்
நான்கு
சாதியினரில் மூவரின் காலம் தழைத்திருந்தாகி விட்டது.
இதுவரை.
இப்போது, இது, எங்கள்
காலம், ஏழைத்தொழிலாளரின்
காலம்,நிறம் மாறும் பச்சோந்திப் பணமூட்டைகளுக்கு சாவு மணி
அடிக்கும்
எங்கள் காலம். பாட்டாளிகளின் பொற்காலம். மாறி
வரும்
காலத்தின் மதிப்பு மாற்றங்களை புரிந்து கொள்ளாமல்
கொடுப்பவன்
நான் என்று மமதையில் கொக்கரிக்காதே. ONE
HAS
TO GIVE FIRST TO TAKE.!"
என்று
எழுதியிருந்தேன்.இது பற்றி ‘நான் போட்ட நாடகங்கள்’என்னும் பதிவில்
குறிப்பிடிருந்தேன் அதற்குப் பின்னூட்டமாக
//நடிக்க வந்தவர்
மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.//
//ONE HAS TO GIVE FIRST TO TAKE.!- என்று எழுதியிருந்தேன்..//
1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.
சிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் "Those days were gone Mr.Raju! TO DAY ALL FOR EACH AND EACH FOR ALL" என்று முடியும்!
ஆக, சினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள், போலிருக்கு!”
மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.//
//ONE HAS TO GIVE FIRST TO TAKE.!- என்று எழுதியிருந்தேன்..//
1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.
சிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் "Those days were gone Mr.Raju! TO DAY ALL FOR EACH AND EACH FOR ALL" என்று முடியும்!
ஆக, சினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள், போலிருக்கு!”
அந்த நாடகத்தில் மையக் கருத்தாக தொழிலாளி முதலாளிக் கருவுடன் குடும்பத்தில்
தத்தெடுக்கப்பட்ட அண்ணன் உறவையே கொச்சைப் படுத்தும் கணவன் என்று வித்தியாசமாகக்
கதை அமைத்திருந்தேன். ஒரு வேளை கே. பாலசந்தர் இது பற்றி அறிந்திருந்தால் என்ன
நினைத்திருப்பாரோ என்றும் இப்போது எண்ணத் தோன்றுகிறது.
நாடகங்களில் ஈடுபாடு இருந்தது.முரசொலி சொர்ணம் அவர்களின் ”விடை கொடு தாயே “ என்னும்
நாடகத்தை பெங்களூரு GUBBI THEATRE –ல் மேடையேற்றினேன் திரு கண்ணன் அவர்களின் ”முப்பது நாட்கள்” என்னும் நாடகத்தையும் இயக்கி
மேடையேற்றினேன். இருந்தாலும் நானே எழுதி இயக்க பெங்களூருவில் சந்தர்ப்பம்
ஏற்படவில்லை. நான் என் பணியை 1965-ல் விட்டு சென்னைக்கு வந்தேன். அங்கிருந்து
1966-ல் திருச்சியில் பணியில் அமர்ந்தேன். நாடகம் எழுதி மேடையேற்ற
சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த வேளை பி.எச்இஎல்-ல் கம்யூனிடி செண்டரில் ஒரு
நாடகப் போட்டி நடத்தினார்கள். அதில் ஏற்கனவே பெங்களூருவில் அரங்கேற்றி இருந்த
‘வாழ்ந்தே தீருவேன்’ நாடகத்தை மீண்டும் சில நகாசு
வேலைகளுடன் அரங்கேற்றினேன். நான் நடிக்கவில்லை. அந்த நாடகம் எனக்குப்பரிசு
பெற்றுத் தந்தது.தொடர்ந்து ’ஆராமுது அசடா’ என்னும் நாடகத்தை கிருஷ்ண கான சபாவுக்காக இயக்கி மேடை
ஏற்றினேன் அதையே ஸ்ரீரங்கத்திலும் மேடையேற்ற அழைப்பு வந்து அரங்கேற்றினேன்.
இருந்தாலும் நானே கதை எழுதி இயக்க ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். நான்
எழுதி வைத்திருந்த சிறுகதை “மனசாட்சி”
யை சில உபரிக்
கதாபாத்திரங்களுடன் நாடக வடிவுக்குக் கொண்டு வந்தேன். ஆனால் அதன் கதாநாயகன் ஒரு
ஆண்மை அற்றவன் என்று எழுதி இருந்ததால் அந்தப் பாத்திரத்தில் நடிக்க நண்பர்கள்
தயங்கினர். எனக்கு மிகவும் பிடித்த கதை அது. மனப் போராட்டங்களை வெகுவாக
வெளிப்படுத்தும் கரு. ஒரு ஆண் தன்னை உலகுக்கு ஆண்மை சக்தி உள்ளவனாகக் காண்பிக்க
எந்த அளவுக்குப் போவான் என்பதையும்
தாம்பத்திய சுகம் கிடைக்கப் பெறாவிட்டால் ஒரு பெண் எதையும் செய்வாள்
என்பதையும் மனசாட்சியைத் துணைக்கழைத்து சமாதானப் படுத்திக் கொள்வார்கள் என்றும்
எழுதி இருந்தேன். இருந்தாலும் அதே மனசாட்சி எப்படி உறுத்தும் என்பதையும் காட்டி
இருந்தேன். கதாமாந்தர்கள் வளர்ந்து வரும் மத்திய தரத்தினர் என்றும் நம் சமுதாயக்
கட்டுக் கோப்புகளை முற்றும் விட முடியாதவர் என்றும் காட்டி முடிவை அமைத்திருந்தேன் கத்தி முனையில் நடப்பது
போன்றிருந்தது. இதையேஎன் வலைப்பூவில் வெளியிட்டபோது அந்தக் காலத்தில் எப்படி சில
காட்சிகளைக் காட்டினேன் என்று கேட்டு திரு.ஜீவி பின்னூட்டமிட்டிருந்தார்..விளக்கி
மறுமொழி எழுதினேன். மனதுக்கும் இதமாக இருந்தது.
இப்போது எண்ணிப் பார்க்கும் போது இதே கருவை கே.
பாலசந்தர் எப்படிக் கையாண்டிருப்பார் எனவும் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால்
இம்மாதிரி வித்தியாசமான கதைக் களன்களை அமைத்து வெற்றி பெற்றவர் அல்லவா. வாய்ப்பும்
வசதியும் இருந்திருந்தால் நானும் ஒரு வேளை கே. பாலசந்தர் போல் புகழ்
பெற்றிருக்கலாம். தடம் மாறிப் போய்
எஞ்சினீரிங் லைனில் வாழ்ந்து குப்பை கொட்டியாகி விட்டதோ? There are lots of ifs and
buts in life என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்...!