சின்ன கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சின்ன கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 மார்ச், 2022

இரு சிறு கதைகள்

 கதை  1


இரண்டு சுட்டிப் பையன்கள்.குறும்பும் துடுக்கும் நிறைந்தவர்கள். அவர்கள்மேல் வரும் புகார்கள் அவர்களது தாயைக் கவலைப்பட வைத்தது. ஊரிலொரு பெரிய மனிதர்.கம்பீரமான உருவம் கணீர்க் குரல். அவரிடம் தாய் சென்று முறையிட்டாள். அவரும் குழந்தைகளைத் திருத்த ஒப்புக்கொண்டார். ஒருவருக்குப் பின் ஒருவரை அனுப்பச் சொன்னார். முதலில் இளையவனை அனுப்பினாள். பெரிய மனிதர் அந்தச் சிறுவனை நல் வழிப்படுத்த வேண்டி அவனிடம் “கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா.?என்று கேட்டார். சிறுவன் மிரள மிரள விழித்தான். . அவர் சற்றே குரலை உயர்த்தி “ கடவுள் எங்கே.?” என்று கேட்டார். சிறுவன் முகம் வெளிறி பதில் ஏதும் கூறாமல் விழித்தான்.ஊர்ப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்தது. பதில் ஏதும் தராத சிறுவனை நோக்கி “கடவுள் எங்கே சொல்.? ” என்று சத்தம் போட்டார். சிறுவன் பயந்து போய் ஓடி தன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனது அண்ணன் அவனிடம் வந்து நடந்தது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் “கடவுளைக் காணோமாம் நாம்தான்மறைத்து வைத்துவிளையாடுகிறோம் என்று சந்தேகப் படுகிறார்கள் என்றான்

கதை 2 

ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரைப் பார்க்கும் போதும் கணவன் “எனக்கு அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது “ என்பான் .மனைவி “ எனக்குப் புரியுதுங்க. இருந்தாலும் அதில் ஏறிச் சுற்றிப் பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு ரூபாய் என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா “ என்று கூறி அவன் வாயை அடைப்பாள். ஒருமுறை ஒரு திருவிழாத்திடலில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றிக் கொண்டு போவதும் மீண்டும் வந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு போவதுமாய் இருந்தது. கணவன் மனைவியிடம் “ எனக்கு எண்பது வயதாகிறது. இப்போது என்னால் பயணம் செய்ய முடியாமல் போனால் ஒருவேளை எப்போதும் முடியாமல் போகலாம்” என்று குறைபட்டுக்கொண்டான். அப்போதும் மனைவி “ஹெலிகாப்டரில் ஏறிச் சுற்றிப்பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.?என்றாள். இவர்களுடைய சம்பாஷணையை ஹெலிகாப்டர் பைலட் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இவர்களிடம் “ நான் உங்கள் இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றி சுற்றிக் காட்டுகிறேன்.ஒரு பைசா தரவேண்டாம்.  ஆனால் ஒரு கண்டிஷன். பறக்கும்போது இருவரும் ஏதும் பேசக் கூடாது. மீறி ஏதாவது பேசினால் ஆளுக்கு  ஐநூறு ரூபாய். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.” என்றார். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டு ஹெலிகாப்டரில் ஏறினார்கள். பைலட் ஹெலிகாப்டரை செலுத்தும்போது மிக வேகமாகவும்
திடீரென்று மேலே ஏறியும் அதேபோல் திடீரென்று கீழே இறக்கியும் பல சாகசங்களை நிகழ்த்தினார். கணவன் மனைவி இருவரும் ” மூச் “ ஒரு வார்த்தை பேசவில்லை. பைலட் கீழே ஹெலிகாப்டரை இறக்கியதும் கணவனிடம் நான் என்னென்னவோ சாகசங்கள் செய்தும் நீங்கள் அலறி சப்தம் செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ.... I AM IMPRESSED ஒரு சப்தமும் எழுப்பவில்லை” என்றார். கணவன் “ உண்மையைச் சொல்வதென்றால் என் மனைவி கீழே விழுந்ததும் நான் உரக்கக் கூச்சல் போட நினைத்தேன்.ஆனால்.... ஐநூறு என்றால் ஐநூறு ரூய் அல்லவா.”என்றார்.




















 சந்தேகப் படுகிறார்கள் என்றான்....!

புதன், 17 பிப்ரவரி, 2021

குட்டிகுட்டி கதைகள்

 


வாழ்வின் பல கால கட்டங்களில் கதைகள் பல கேட்கிறோம். கதைகள் மூலம் படிப்பினைகள் கிடைக்கின்றன. என் பேரக் குழந்தைகளுக்கு நானும் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன். கதைகள் சொல்லும்போது படிப்பினைகள் தானாகவே உணரப் படும்.  இப்பதிவில் நான் கேட்ட கதைகள் சிலவற்றை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பலரும் அறிந்த கதைகள் என்றாலும் அதை சுருக்கமாகக் கவிதை ( ? ) வடிவில்  வடித்திருக்கிறேன்.


(  இந்தக் கதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்குச் சொன்னதாகப் படித்தது. )

  
பத்தும் நிறம்பாத,பால் மணம் மாறாப்

பிள்ளை சந்நியாசி பிட்சை கேட்டு வந்தவன்.,

அன்னமிட வந்தவள் முட்டும் முலை கண்டு,

கட்டி ஏதோ வந்துளதோ என்றே வினாவினான்

ஏதுமறியாப் பாலகன் அவன்.

 


சுற்றி இருந்தோர் விளக்கம் கூறினர்.

 

“ பருவம் வந்திருக்கும் மங்கை இவள்,

மணம் புரிந்து பிள்ளைகள் பெற்றால் ,

பாலூட்ட ஏதுவாய் வந்த தனங்கள் இவை. “

 

“ உதிக்க இருக்கும் உயிருக்கும் உணவு படைக்க,

உற்ற ஏற்பாடு செய்திருக்கும் இறைவன்,

எனக்கும் ஏதாவது வழி வகுத்திருப்பான்.

உண்டி வேண்டி இனி எங்கும் ,நான் செல்லேன்

 

மனம் தெளிந்து சென்றானா அப்பாலகன்.?

 

( தலை எழுத்து ,விதி போன்றவற்றை நம்பாதவன் நான். இருந்தாலும் சில நிகழ்வுகளுக்கு தகுந்த காரணங்கள் கணிக்க முடிவதில்லை. கதையைப் படியுங்களேன் )

 

 


              விதிப்படி....

                ----------

பக்தனொருவன் படும் பாடு கண்ட பார்வதி தேவி,

உற்ற உதவி அவனுக்குச் செய்ய சிவனை வேண்டினாள்.

அவன் விதி அது. பாடுபட்டே ஆகவேண்டும்.

  பரமன் நான். என்னாலும் ஏதும் செய்ய இயலாது

என்றவரை விடாது வேண்டினாள் அன்னை.

 

தனிவழியே சென்றவன் முன் சற்றே

தொலைவில் அவன் கண் படும்படி

பாதையில் ,ஒரு கிழிப் பொன் வைத்தார்.

 

நடந்து சென்றவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.

பாதை தெரிந்து நடக்கும் எனக்கே இந்தக்

கரடு முரடுப் பாதை தரும் எண்ணிலா இன்னல்கள்.

பார்வை அற்றவன் பாடு உணர்ந்தால்தான் தெரியும்

 

கண்மூடி நடக்கத் துவங்கினான். பரமசிவன்

பார்த்திருக்க ,பார்வதி பதை பதைக்கப் அப்பாவியிவன்

பொற்கிழி காணாதே கடந்து சென்றான்.

 

எது பக்தி.?

                 ---------  

  

அவரவர் பணிகளை கர்ம சிரத்தையுடன் செய்வதே சிறந்த பக்தியாகும் ) 

 

நாளும் பொழுதும் நாராயணன் நாமம்

நாவிலே வைத்திருக்கும் நாரதனுக்கு

தன்னிலும் சிறந்த பக்தன் இல்லை என்ற அகந்தை.

பரந்தாமனிடமே சவால் விட்டான்.

 

நல்லதோர் பாடம் புகட்ட ” சோதனை ஒன்று

வைப்பேன். தேர முடியுமா உன்னால்எதிர்

சவால் இட்ட ஸ்வாமியிடம் தயார் என்றான் நாரதன்.

 

கிண்ணத்தில் எண்ணை ஊற்றி, திரியிட்டு

  விளக்கேற்றி , அது அணையாமல் பூவுலகு

  வலம் வரவேண்டும்.முடியுமா உன்னால்.?”

 

இதோ இக்கணமே சிரமேற்கொண்டேன்,”

  என்றவனும் எண்ணங்கள் எல்லாம் ஒருங்கிணைத்து

  ஒரு கையில் விளக்கை வைத்து , மறுகையால்

  அதனைக் காத்து , கணமேனும் கருத்தினைச்

  சிதறவிடாதுவிளக்கை அணைய விடாமல்

  பூவுலகை சுற்றி வந்தான் பரந்தாமன் பாராட்டு

  கிடைக்கும் என்றே மகிழ்ந்தவன் ,பள்ளி கொண்டான்

  மதிவதனம் இறுகி இருப்பது கண்டு அயர்ந்தான்.

 

நாரதா, உன் நினைவெல்லாம் என்றும் நானல்லவா.?”

 

சந்தேகம் ஏன் பிரபோ.?” எனவே வினவிய நாரதன்

  ஐயன் முகம் நோக்கி அச்சம் அடைந்தான்.

 

”   விளக்கெடுத்து பூவுலகை வலம் வரும்போதும் என்

  திருநாமம் விடாமல் உச்சரித்து வந்தாயா நாரதா.?”

 

பொய் சொல்ல மாட்டான் இந்த நாரதன். விளக்கு

  அணையாமல் காப்பதில் கவனம் இருந்ததால் பிரபோ,

  நாராயணன் நாமம் நாவில் இருக்கவில்லை.அதனாலென்ன

  ஐயனேஎன் பக்தியில் குறைபாடு ஏதுமில்லை,உணர்வீர்.”

 

 ” நாரதா,நாளும் பொழுதும் வாழ்வின் அவலங்களில்

  சிக்கி உழலும் ஒருவன் உடலைக் கிடத்துமுன்

  எனை எண்ணி ஒருதரம் அழைப்பினும்,வாழ்வின்

  பாடறியா நீ என்னை அனவரதம் அழைப்பதிலும்

  சிறந்தது என்று நீ அறிந்து கொள்.”

பக்தி உள்ளவர்கள் ரசிக்கலாம்   


 

                  

 

 

 

 

    

  .