சென்னை மழை அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை மழை அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 டிசம்பர், 2015

ரெய்ன் ரெய்ன் கோ அவே..........


                                                        ரெய்ன் ரெய்ன் கோ அவே
                                                         ---------------------------------------


தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் மழை பற்றி நிமிடத்துக்கு ஒரு செய்தி தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கிறது பலரும் சென்னை நீரில் மிதக்கிறது என்று எழுதுகிறார்கள்எனக்கு என்னவோ மனம் ஆறவில்லை. நான் சில நாட்கள் தங்கி இருந்த சென்னை வேளச்சேரிஅடுக்குமாடிக் குடி இருப்பு இருக்கும்  100 அடி சாலையே நீரில் மூழ்கி இருப்பதாக என் மகன் கூறுகிறான் தனிப்பட்ட முறையில்  தினசரி அவர்கள் செய்யும் காரியங்களுக்கு பாதிப்பு ஏதும்இல்லாமல் இல்லை. மின்சாரம் கிடையு  டீசில் ஜெனெரேட்டர் ஓட்டுவில் சிரம் ொடர்பு சங்கள் இயக்குடியில்ல என்றாலும் சுற்றி நிகழும் சம்பவங்களில் மனம் செல்லாமல் இருக்க முடிவதில்லை. நாம் தொலைக்காட்சிகளில் காணும் விஷயங்கள் பொதுவான நிலையைக் கூறுவதாக இருக்கிறது. அடுக்கு மாடி குடியிருப்புகள் அல்லாமல் இருக்கும் தனி வீடுகளில் வசிப்போர் நிலைமை நினைத்துப் பார்க்கக் கூட முடிவதில்லை. இத்தனை அளவு மழை  இதுவரை பெய்திராத அளவு என்றெல்லாம் செய்திகள் வந்தாலும்  பொது மக்களின் நிலையை அவை எடுத்துக் கூறுவதாக இல்லை. ஏரிகளில் நிரம்பும் உபரி நீரை கூவத்திலும்  அடையாற்றிலும் வெளியேற்றுகிறார்கள். ஆற்றின் கரைகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குஅனுப்பப்பட்டு தங்க வைக்கப் படுகிறார்கள். ஒரு வகையில் அவர்கள் எதிர்பார்ப்பதும் இதுதான். நினைத்த மாத்திரத்தில்வேறு இடத்துக்குக் குடிபோகத் தயாராய் இருப்பவர்கள்பலரும் ஏழைமக்கள் . ஆனால் இந்த நடுத்தரமக்கள்  தனி வீடுகளில் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளம் வந்து அவதிப்படுபவர்கள் நிலை பரிதாபத்துக்கு  உரியது. ஒரு முறை தொலைக்காட்சி செய்தியில்பார்த்தேன்  அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர விரும்பாமல் எல்லா இன்னல்களையும் அனுபவிக்கத் தயாராய் இருந்தார்கள்(அப்பு வெள்ளிின் கொடுமை இத்தனை  இருக்கில்லை).
மனிதனுக்கு முக்கியமாக வேண்டியது காலைக் கடன்கள் கழிப்பது . வயிற்றுக்குப் பசி எடுக்கும் போது உண்ணுவது  வேலை செய்து நாளின் முடிவில் உடலைச் சாய்த்து உறங்குவது. இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் வெள்ளம் சூழ்ந்தும்  வீட்டுக்குளேயே வந்தும் இருந்தால்…………..நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பாதுகாப்பான இடத்துக்கு இவர்களைப் போக விடாமல் தடுப்பது எது.?.இவர்கள் ஆயுசுகாலம் சேமித்து வைத்த பொருட்களின் பாதுகாப்பு….? ஏனென்றால் எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்கும் மனிதர்களும் இருக்கிறார்களே  என் மனம் இவர்களுக்காக வேதனைப் படுகிறது. இந்தமாதிரியான நேரங்களில் வீட்டில் யாருக்காவது உடல் நலம் குன்றி விட்டால் இவர்கள் மனம் என்ன பாடுபடும் . இவர்களால்  என்ன செய்ய முடியும்?
தொலைகாட்சி செய்திகளில் பலரும் தங்களது ஆற்றாமையைக் கொட்டித்தீர்க்கிறார்கள் யாரும் வந்து எதையும் செய்வதில்லை என்று புலம்புகிறார்கள் யார் வந்து என்னதான் செய்ய முடியும்  உயிர் பாதுகாப்பாக முகாம்களுக்கு அனுப்பலாம். ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்  பலரையும் பாது காப்பான இடத்துக்குக் கூட்டிப் போக நாட்கள் ஆகிவிடும் அதுவரை சொல்லொணாத்துயரை அனுபவிக்க வேண்டியதுதானா.

என்னதான் சொன்னாலும் செய்தாலும் இயற்கையின் சீற்றத்துக்கு முன் மனிதன்  எம்மாத்திரம்?பூமி நடுங்கி பேரிடர் ஏற்பட்டபோதும்  பேரலைகளால் தாக்கப் பட்ட போதும் புயல் வீசி சேதங்கள் ஏற்பட்டபோதும்  மனிதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முடிந்தபின் மீண்டும் புனர்ப் பணிகளில்

ஈடுபடுவதை விட என்ன செய்ய முடியும்  இவற்றை வருமுன்  தடுக்க இயலாது
கணவனைத் தவிர வேறு தெய்வங்களைத் தொழாத பத்தினிப் பெண்டிர்  பெய் என்று சொன்னால் பெய்யும் மழை. என்பதெல்லாம் படிக்க இன்பம் பயக்கலாம்  அதே பெண்டிர் நில் எனச் சொன்னால் மழை நிற்குமா. நீரும் காற்றும் நெருப்பும் சீறத்தொடங்கினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது( சீறும் புயலும் மழையும் சேர்ந்தால் சின்னக் குடை தாங்காது. அதனால் துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாது பழைய பாட்டு நினைவுக்கு வருகிறது). கதைகளில் வேண்டுமானால் கண்ணன் மலையைத் தூக்கி மக்களை மழையிலிருந்து காக்கலாம்


நமது அனுபவங்களிலிருந்து நாம் கற்க வேண்டியது நிறையவே இருக்கிறது இயற்கையின் சீற்றம் மிகக் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுத்துமாறு செய்யலாம் . இதெல்லாம் தெரியாதவர்களா நாம். எல்லாவற்றுக்கும் பொதுவாக  விதி என்று சமாதானப் படுத்திக் கொண்டு  கிருஷ்ணா ராமா  என்று ஜபித்துக் கொண்டு சமாதான மடையலாம் ஆனால் அதை அனுபவிப்பவருக்குத்தானே அதன் கொடுமை புரியும்
( நமது வலை பதிவர்கள் பலரும் சென்னையில் வசிப்பவர்கள் அவர்கள் பொதுவாக சென்னை மிதக்கிறது என்று சொல்லிப் போவதை விட இடர்களை எப்படி சமாளிக்கிறார்கள் என்று எழுதலாமே நான் எழுதுவது நெருப்பு சுடும் என்பதைச் சொல்வது போல் இருக்கிறது.  உங்கள் அனுபவம் பற்றி எழுதுங்களேன்)
என் மகன் வீட்டில்  இருந்த என் மச்சினனை என் மகன்  நேற்று  ஆலந்தூர் வரைக் காரில் கொண்டு விட அவன் அங்கிருந்து கோயெம்பேடு சென்று ஹொசூர் வரை செல்லும் ஒரு பேரூந்தில் ஏறி அங்கிருந்து வேறு ஒரு பஸ்ஸில்  இன்று அதிகாலை பெங்களூரு வந்து சேர்ந்தான்  மழை சற்றே குறைந்திருக்கிறது சீக்கிரமே சகஜ நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்
ஒரு செய்தி. சென்னையில் இருந்து ஓசூர் வருவதற்கு தனியார் பேரூந்தில் தலைக்கு ரூ1500-/ வசூலித்தார்களாம் ஏடிஎம் பல இடங்களில் வேலைசெய்யாததால் பஸ் கட்டணத்தைப் பெரிய மனது பண்ணி தவணை முறையில் வசூலித்தார்களாம் ஆம்பூரில் ஏடிஎம்மில் பணம் எடுத்துப் பலரும் கட்டணம் செலுத்தினார்களாம் இதை நான் தட்டச்சு செய்யும்போது என் மகன் சென்னையில் மீண்டும் மழை என்று தொலைபேசினான்