டிமானிடைசேஷன் சில கருத்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டிமானிடைசேஷன் சில கருத்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 நவம்பர், 2016

பிரதமரே இதையும் கொஞ்சம் கேளுங்கள்


                            பிரதமரே இதையும் கொஞ்சம் கேளுங்கள்
                              ---------------------------------------------------------

பிரதமர் நரேந்திர மோடி ( நன்றி கூகிள்)
(நன்றி த ஹிந்து)




அன்புமிகு பிரதமர் மோடிக்கு ஒரு சாதாரணனின்  கருத்துகள் செவிக்கு எட்டாது என்றாலும் தெரிவிக்க வேண்டிய ஒரு நப்பாசையால் எழுதுவது. முதலில் என்  வாழ்த்துகள் யார் எப்படிப் போனாலும் என்ன நடந்தாலும்   நினைத்ததை முடிக்கும்   பெரும்பான்மை இருப்பதால் நீங்கள் செய்திருக்கும் இமாலய சாதனை பாராட்டப்பட வேண்டியதே 56 அங்குல மார்பு என்று பெருமைப்படும்  நீங்கள் அதைத் தட்டிக்கொள்ளலாம் யார் கேட்கமுடியும்   ஒருவரைப் பற்றிய  ஒரு பெர்செப்ஷனைச் சார்ந்தே கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.  கருப்புப் பணமும் கள்ளப்[ பணமும் நாட்டின் நிலையை மிகவும் பாதிக்கிறது என்பது சரியே ஆனால் அதை ஒழிக்க நீங்கள் எடுத்திருக்கும் வழிமுறைதான் கேள்விக்குரியது உங்கள் முடிவைப் பலரும்பாராட்டலாம் ஏன்  என்றால்  எல்லோருக்கும்  கருப்புப் பணத்தையும்   கள்ளப் பணத்தையும்  ஒழிக்க வேண்டும் என்னும்  ஆவல்தான் ஆனால் இந்த வழிமுறைகளில்  சந்தேகம்  எழுகிறது
நாட்டில் உலவும் பணப்புழக்கத்தில் சுமார் 86% வங்கிகளில் செலுத்தப்பட்டு ஈடாக புது பணம் பெற்றுக் கொள்ள வேண்டும்  கள்ளப் பணம்  வைத்திருப்போர் வாங்கிகளில் செலுத்தத் தயங்குவார்கள் கேள்விகள் எழலாம்  ஆனால் கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் ஜகஜ்ஜாலக் கில்லாடிகள்  நீங்கள் கோலத்தில் போனால் அவர்கள் தடுக்கில் போவார்கள் இல்லாமலா கோடிக்கணக்கில் அயல் நாட்டு வங்கிகளில்  வைத்திருப்பார்கள் முதலில் அதை வெளிக்கொணர நீங்கள்  முயற்சி செய்திருக்க வேண்டும்  உள்ளூரில் வைத்திருப்பவர்களுக்குத் தெரியும்  கருப்பை வெள்ளையாக்கும் வித்தை இந்த நடவடிக்கையால் சங்கடப்படுவது கீழ்த்தட்டு மக்களே  அவர்களிடம் பணமில்லாப் பரிவர்த்தனை என்று சொன்னால் சரியா.  இந்தியாவில் எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள் சுமார் 74 % என்கிறார்கள் கவனிக்கவும் எழுதப் படிக்கத்தெரிந்தவர்கள் என்றுதான்  சொல்கிறேன்  இவர்களிடம் போய் பணமில்லாப் பரிவர்த்தனை செய்யுங்கள் என்று  எல்லோரது கஷ்டங்களையும் கேட்டுப் பார்த்தபின் சொல்வது சரியில்லை என் என்றால்  இந்த நுட்பங்கள் படித்தவர்களுக்கே தெரிவது பிரச்சனை எல்லோருக்கும்  வங்கிகள் மூலம்  பணம்  பெற முடியுமா சிந்தியுங்கள்  எல்லோரும் அவரவர் ஊரில் இருந்தால் வங்கிக்கணக்கைத் திறக்க முடியலாம் ஆனால் இடம் பெயர்ந்து வேலை செய்பவர்கள் வங்கிக் கணக்குத் திறக்க எத்தனையோ கட்டுப் பாடுகள் ப்ரூஃப் ஆஃப் அட்ரெஸ்  இல்லாமல் கணக்குத் திறக்க முடியுமா வங்கிகள் செய்யுமா.  அப்படியே யார் யாரையோ பிடித்து கணக்குத் திறந்தால்  அவரவர் சம்பளம் அதில் போகும்   ஆனால் எதற்கும்  காசு வேண்டுமே எல்லா செலவுகளையும் பணமில்லப் பரிவர்த்தனை செய்ய முடியுமா
 பிரதமர் அவரது ஹை பெடஸ்டலில் இருந்து கொஞ்சம் கீழிறங்கவேண்டும்
பிரதமர் நாட்டு மக்களிடம்  சில கேள்விகள் கேட்டு பதிலை எதிர்பார்க்கிறார் ஆனால் இவற்றுக்கெல்லாம்  பதில் சொல்ல அவரதுகட்சி சார்ந்தவர்களும்  சமூக வலைத்தளங்களில் உலவி வரும் சிலரால் மட்டுமே முடியும்   கேள்விகள்தான்  என்ன  கருப்புப் பணம் ஒழிய வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதா என்பது போன்றவை  எல்லோருக்கும்  அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விருப்பம் இருக்கும்  வாக்காளர்களில்  சுமார் முப்பது சதவீதம் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்களுக்கு எதிராக எழுபது சதவீதம்  பேர் வாக்களித்திருக்கிறார்கள்  என்பதையும் சிந்திக்க வேண்டும் நிதி நிலைமை குறித்த வல்லுனர்கள் எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டாமா. ஐயா ஐநூறு ஆயிரம்  ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும்போதே  மாற்று பணமும் கிடைக்கும்  வழி செய்திருக்க வேண்டாமா இருக்கும்  ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுப்பணம் வாங்கி கொள்ளச் சொல்கிறார்கள் பொதுவாகவே ாருக்க பணப்பரிவர்த்தனை  நூறு அதற்கும்  குறைவான தொகையிலுமே நடக்கிறது  ஐநூறு ஆயிரம்  என்று இருந்தாலும்  பணக்காரர்கள் தவிர மற்றவர் புழங்குவது நூறுக்கும்  குறைவான பணத்தில்தான்  பெருந்தொகை நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும்  போதே  அதற்கு ஈடாக மக்கள் புழங்கும் பணத்துக்கும்  ஏற்பாடு செய்ய வேண்டாமா  மக்களின்  கஷ்டங்களைப் பார்த்தபின்தான் தானியங்கி மெஷின்களை இப்போது வெளியாகி இருக்கும்   பணத்தை ஹாண்டில் செய்ய வில்லை என்னும்  ஞானோதயமே  வந்திருக்கிறது வங்கிகளில்  பணம்  எடுக்கப் போனால் அங்கும்  இரண்டாயிரம்  ரூபாய் நோட்டுகளே கொடுக்கப் படுகின்றன அதை வாங்கி நம்மால் எளிதில் மாற்றிப் புழங்க முடிகிறதா  வங்கிகளிலேயே நூறு ஐநூறு ரூபாய்த் தட்டுப்பாடு அதனால்தானோ என்னவோ  பணமில்லாப் பரிவர்த்தனை என்று சொல்கிறீர்களோ தெரியவில்லை
சிறுவியாபாரிகள் சிறு தொழிற்சாலை நடத்துபவர்கள் அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் தொழிலாளிகள் சொந்த ஊருக்கே திரும்புகிறார்கள் என்னும்  செய்தி கவலை தருகிறது இப்பு வங்கிகிலேயே சாளிக்கப்ிய ம் இல்லை என்று  கேள்விப்புகிறேன் ஐம்பது நாட்கள் கேட்டிருக்கிறீர்கள் இந்த ஐம்பது நாட்களில் நிலைமை சீரடைய பலரும்  நம்பும் அந்த ஆண்டவன்தான்  அருளவேண்டும் எல்லா விஷயங்களையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் சமூக வலையாளிகளின்  கருத்துகள் உண்மையானவை அல்ல சமூக வலைத் தளங்கள் பொழுது போக்க உதவுபவையே தவிர செய்திகள் சரியாகப் பறிமாரும் இடம் அல்ல.  அங்கெல்லாம் வள்ளுவரையே  பலரும்  நினைக்கிறார்கள் இடுக்கண் வருங்கால் நகுக. என்று கருப்புப் பணம் ஒழிகிறதோ இல்லையோ சிறிது காலத்துக்கு  கள்ளப் பணம் புழங்குவது குறையலாம்
 சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் ஆனால் சிரித்துக் கொண்டே அழும் கலை நன்கு தெரிந்த பிரதமரே  ஒன்று சொல்லிக் கொண்டு முடிக்கிறேன்   தவிர்க்கப்பட முடியாதவை அனுபவித்தே தீரவேண்டும் உங்களது உத்தரவை திரும்பப் பெறுவதில் இதைவிட சங்கடங்கள் இருக்கலாம் ஆகவே எல்லா வங்கிகளிலும் மக்கள் புழங்கும்  பணம் கிடைக்க வழி செய்யுங்கள்
 உங்களது கொள்கைகள் அணுகு முறை தெரியாமல் மக்கள் உங்களை அரசு கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் அந்த நம்பிக்கை பொய்க்காமல் இருக்கும்  வகையில் ஆட்சி நடத்துங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் ஒரு கட்சியின்பிரதமர் அல்ல. மக்களின் பிரதமர் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .    




 .