தீபாவளியும் வந்து போயாச்சு
-----------------------------------------------
ஒரு
வழியாய் இந்த ஆண்டு தீபாவளியும்வந்துபோயாச் எங்கே மழை வந்து கிடைக்க
இருக்கும் மகிழ்ச்சியையும்கெடுத்து விடுமோ
என்னும்பயம் அர்த்தமிலாது போயிற்று தீபாவளி திருநாளில் மட்டுமே நான் கலந்துகொள்வதுவழக்கம்என்மக்கள்
இதுவரை எப்படியாவது தீபாவளிக்கு
வீட்டுக்கு வந்து விடுவார்கள் அன்று என்
சக்திக்கு ஏற்றபடிபுதுத்துணிகள் எல்லோருக்கும்வாங்கி விடுவேன் என் குடும்ப உறவுகள்
என்றுசொல்லிக் கொள்ள சுமார் ஒருடஜன் உருப்படிகள் தேறும் என்மகன்கள்
அவர்களதுமனைவிமார்கள் அவர்களதுகுழந்தைகள் என் மைத்துனன் மனைவியுடன்
இந்த ஆண்டு என்பேரனும் அவன்
மனைவியும்எதிர்பார்த்தேன் என்
மூத்தமகனின் மாமியார் அவனுடன் தற்சமயம்
சென்னையில் இருப்பதால் அவர்களும்வருவார்கள்
என்று நினைத்தேன் அவர்களால் பயணப்பட
முடியாததால் என் மூத்தமருமகளும் வர
இயலவில்லை ஆனால் எனிளையமகன் அவனது செல்ல நாயுடன் ஆஜர்
சம்பிரதாய தீபாவளி எல்லாம் இல்லை எண்ணைக் குளியல் போன்றவை
நாங்கள்திருச்சியில் இருந்தபோது
விடியற்காலை சுமார் நான்கரை மணிக்கு
முதலில் ஒருலக்ஷ்மி வெடி கொளுத்தி தீபாவளி தொடங்கும் இந்த ஆண்டு பட்டாசே
இல்லை யாருக்கும் ஈடுபாடில்லை
பலகாரங்களில் குலாப் ஜாமூன்மாத்திரம்
மனைவி செய்தாள் மற்றபடி என் மகன்கள் தேன் குழல் மனோஹரம் நாடா பக்கோடா
லட்டு என்று வாங்கி வந்திருந்தனர்
எனக்கு
இம்முறை கார்டுராய் பாண்ட்இரண்டு வாங்கினேன் எல்லோருக்கும்புடவை சர்ட் எல்லாம்
வாங்கினேன்இதெல்லாவற்றையும் விட
எல்லோரும்கூடி இருந்ததே மகிழ்ச்சி அதை புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்து கொண்டோம் என் இரண்டாம் மகனின் செல்லதையும்
அழைத்து வந்திருந்தான்அது ஆளைக்கண்ட
சமுத்திரம்போல் அங்கும் இங்கு ஓடியது
எல்லோர் கவனமும் அதன் மேலேயே இருந்தது
 |
மைத்துனன் நான்மகன் |
 |
பேத்தி |
 |
என் இரு மகன்கள் |
 |
என் இரண்டாம் மகனின் குடும்பம் |
 |
இண்டாம்மகன் நான் மைத்துனன் மூத்தமகன் |
 |
பேரன் மருமகப் பேத்தியுடன் |
 |
எங்கள் குடும்பம் |