துதிப்பாடல் நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துதிப்பாடல் நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

நவராத்திரி துதி



                                                 நவராத்திரி துதி
                                                --------------------------

சமயபுரம் மாரியம்மன் தஞ்சாவூர் ஓவியம் 



ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்

இயக்கும் சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை என்ன சொல்லிப் போற்றுவேன்
.மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-

புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை-
ஜெய மடந்தை என்பேனா-சர்வசக்தி பொருந்திய
சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்அவலத்தில்
அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்

முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- என்னுள்
இருப்போனும் ஏனையோர் துதிக்கும் எல்லா
நாமங்களும் கொண்டவளு(னு)ம் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்

காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் எல்லாமே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே

உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,

எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே

உன்னை வணங்குகிறேன்
( அண்மையில்  நவராத்திரி பதிவுகளாக திருமதி கீதா சாம்பசிவம் நவராத்திரியின் போது வழிபடும் தேவியர்களின் பெயர்களை ஒவ்வோரு நாளுக்கொன்றாகக்  கூறி எழுதி வந்தார். எனக்கு ஒரே கன்ஃப்யூஷன்  நான் ஒரு துதிப்பாடல் எழுத முயற்சித்தேன்  அதன் விளைவே மேல் கண்ட பதிவு) 

      
மூன்றாண்டுகளுக்கு முந்தைய கொலு