தொடர் பயணம் இராமேஸ்வரம் -3
---------------------------------------------------- இராமேஸ்வரத்தில் மூன்றாம் நாள் வெகுவாக ஒரு
சுற்றுலாவாகவே இருந்தது காலையிலேயே கிளம்பி இராமநாதபுரத்தில் இருந்ததேவிப்பட்டினம்
திருப்புல்லாணி உத்தரகோச மங்கை ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டம் இட்டிருந்தோம் போகும்
வழியே இந்திராகாந்தி பாலம் மேல் என்பதாலும் அதன் ஊடாகவே தெரியும் பாம்பன் பாலத்தையும்
காணவண்டி நிறுத்தப்பட்டது
பாம்பன் பாலம்
இந்திராகாந்தி பாலத்தில் இருந்து பாம்பன் பாலம் ஒரு பார்வை
பம்பன் பாலத்தூண்களில் அமர்ந்து மீன் பிடிப்பவர்கள்
பாலத்தைக் கடந்தபின் காலை உணவுக்காக ஒரு
ஹோட்டலில் இறங்கினோம் சுவையான காலை உணவாகவே இருந்தது அங்கு சுவற்றில் ஒரு
அறிவிப்பு கண்டேன் சுலை மானி என்று ஏதோ எழுதி இருந்தது. அப்படி என்றால் என்ன என்று
கேட்டபோது அங்கு வளைகுடா நாடுகளில் இருந்து பலரும் வருவார்கள் என்றும் அது
கறுப்புத் தேனீரைக் குறிக்கும் அரபிச் சொல் என்று சொன்னார்கள் கில்லர்ஜி கவனிக்க.
மேலும் நம்மூர் சுக்குக் காஃபியும்
இருந்தது எங்களில் பலர் அதைச் சுவைத்தனர் அதன் சுவையை எங்களுள் ஒருத்தி ருசிப்பது
காணொளியில் காணலாம்
காலை உணவு
சுக்குக்காப்பியின் சுவை காணொளியில் தெரிகிறதா.?
அங்கிருந்து நேராக தேவிப்பட்டினம் போனோம்அங்கு
ராமர் பிரதிஷ்டை செய்த நவபாஷாண நவக்
கிரகங்கள் நீரில் இருக்கின்றன. கடந்தமுறை நாங்கள் வந்திருந்தபோது படகில்
கடலுக்குள் சென்று கடல் தர்ப்பை கொண்டு வந்து
பூசை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் இம்முறை கடல் தர்ப்பை பற்றிய பேச்சே
காணோம் இம்முறை நவபாஷாண நவக்கிரகங்களில் சில நீரில் மூழ்கி இருந்தன.
நவபாஷாணக் கோவில் பற்றிய அறிவிப்பு
நவ பாஷாணக் கோவில் காணொளி
நவபாஷாணக் குளம்
அங்கிருந்து உத்தரகோசமங்கையில் இருக்கும் மரகத
நடராஜர் கோவிலுக்குச் சென்றோம்இதை
ஆதிசிதம்பரத்தோடு ஒப்பிடுகிறார்கள் ஐந்தரை அடி உயர மரகதச் சிலைநடராஜர் ஆடும் இடம் இரத்தினசபை எனப்படுகிறது மார்கழி மாதம்திருவாதிரையின் போது மட்டும்மேனி எங்கும் பூசியுள்ள சந்தணக்காப்புஅகற்றப்பட்டு அபிஷேகம் நடை பெறும் இறைவன்
பெயர் மங்களேசுவரன்அம்பிகை மங்களேசுவரி சிவாலயங்களில்
உபயோகப்படுத்தப் படாத பகிஷ்கரிக்கப்படும் தாழம்பூ இங்கு இறைவனுக்கு அணிவிக்கப் படுகிறது தாழம்பூ பெற்ற
சாபமிங்கு நிவர்த்தி யானதாகக் கதைஇறைவன் பார்வதி தேவிக்கு வேதாகமங்களின் ரகசியத்தை
உபதேசித்ததால் இப்பெயர் பெற்றது என்கிறார்கள் உத்தரம் என்றால் உபதேசம் கோசம்
என்றால் ரகசியம்மங்கை தேவி பார்வதியைக்
குறிக்கும்.
உத்தரகோசமங்கை திருக் கோபுரம்
கோவில் பற்றிய அறிவிப்புப் பலகைகள்
தரிசனம்முடித்தபின் திருப்புல்லாணிக்குப் புறப்பட்டோம்அங்கு ஆதிஜகன்னாத பெருமாளைக்
காணச் சென்றோம் இராமேசுவர வழிபாட்டுக்குப் பின்யாத்திரிகர்கள் திருப்புல்லாணி அல்லது தர்ப்பசயனத்துக்கு (ஆதிசேது)
போகவேண்டும் என்பது ஐதீகம்இது ஆழ்வார்களால் மங்களாசாசனம்செய்யப்பட்ட திவ்ய தேசங்களுள் ஒன்று. இந்த இடத்தில்
இராமபிரான் தர்ப்பைப்புல் மேல் சயனித்திருந்ததாகவும்கடலரசன் வர தாமதித்ததால் அவன் மேல் கோபம்
கொண்டுஅவன் கர்வத்தை அடக்கி பிறகு அவன்
உதவியுடன் சேது அணையைக் கட்டினார் என்று கதை உண்டு.
ஆதிஜெகன்னாதர் ஆலயம் திருப்புல்லாணி
. அங்கிருந்து வில்லூண்டி தீர்த்தம்
என்னும்இடத்துக்குப் போனோம்இதுவரை நான் போகாத இடம் இது. சீதையின்
தாகத்தைத் தீர்க்க இராமபிரான் கடலின் ஓரத்தில் தன் வில்லை ஊன்றி நீர் வரவழைத்ததால்
இப்பெயர் என்கிறது அங்குள்ள அறிவிப்புப் பலகை. கடலின் ஆழத்தில் இருந்து வரும் நீர்
குடிக்க ஏதுவாக உப்புக்கரிப்பு இல்லாமல் இருக்கிறது
கடலோரம் வில்லுண்டி தீர்த்தம்
வில்லூண்டி தீர்த்தம் பற்றிய அறிவிப்புப் பலகை.
வில்லூண்டி தீர்த்த நீர்
.
இராமேசுவரம் திரும்பும் வழியில் திரு அப்துல்
கலாமுக்கான சமாதி இடத்துக்கும் போனோம்
திரு அப்துல் கலாம் சமாதிவேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன
சமாதி அருகே நிறுவப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு
இவ்வாறு இராமேஸ்வரத்தில் மூன்று நாட்கள் கழிந்தோடின. அடுத்த நாள் நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டோம் மாலையில் நாகர் கோவிலுக்கு ரயில் டிக்கெட் முன் பதிவாகி இருந்தது. நாகர் கோவிலில் அதிகாலை மூன்று மணி அளவில் ரயில் போய்ச் சேரும் என்றும் ரயில் நிலையத்திலேயே ஆறுமணிவரை இருந்து பின் தங்கும் இடத்துக்குப் போவோம் என்று மச்சினன் கூறினான் ( தொடரும் )