நம்பிக்கை ஒரு அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கை ஒரு அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

நம்பிக்கை சில கருத்துகள்


                                                நம்பிக்கை சில கருத்துகள்
                                               ------------------------------------------
                                                      சிவராத்திரி ஸ்பெஷல் 
                                                      ------------------------------------


வசந்த் தொலைக்காட்சியில் நம்பிக்கை என்றொரு  தொடர் மறு ஒளிபரப்பாகிறது அதில் வரும் முகப்புப் பாடல் நம்பிக்கைபற்றியது  அதுவே எனக்கு நம்பிக்கைகள் எனும் இப்பதிவை  எழுதத் தூண்டியது
கோவிலுக்குப் போகிறோம்   நம் துயரங்களைச் சொல்லி வேண்டுகிறோம்  அது வரை சரிதான் ஆனால் என் துயரங்களைத் தீர்த்திடு உனக்கு நானிது செய்கிறேன்  அது செய்கிறேன்  என்றுவேண்டுவதுநமது கணிப்பில் கடவுளிடம் ஒப்பந்தம்போடுவதுபோல் இருக்கிறதே இதை ஏதோ நம்பிக்கை என்று கூறுதல் சரியா பெரும்பாலோர்  கணிப்பில் கடவுள் என்பவர் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்கிற அடிமுட்டாளாக இருப்பவரா . இதற்குப் பெயர் பக்தியல்ல, ஏமாற்று வேலை.

பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறீர்களென்றால் அது உளவியல் ரீதியாக வேண்டுமானால் ஆறுதல் தரலாம். ஆனால், இதை நம்பிக்கையென்று சொல்லாதீர்கள்
விசுவாசம் அடிமைகளுக்கும்  முட்டாள்களுக்கும் உரிமையானது
சற்றும் அசையாத கவனக்குவிப்பை வழங்குவதுதான் நம்பிக்கை.    இதற்கு இரு கதைகள்
ஒருவன் மல உச்சிக்குப் போகிறான்  கால் தவறி கீழே விழும் நிலையில் இருக்கிறான்  விழும்போது ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொள்கிறான் கடவுளே என்னை காப்பாற்று என வேண்டுகிறான் அப்போதுஒரு அசரீரியின் குரல் கேட்டது
அசரீரி : ‘நீ என்னை நம்ப மாட்டாய்!.
மனிதன் : கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.
அசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ தான் காப்பாற்ற வேண்டும்.
அசரீரி : சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.
மனிதன் : வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன்பின் வானத்தில் இருந்து எந்தக் குரலும்கேட்கவில்லை
முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன்  மாமன்மகள் என்று நினைக்கிறேன்  ஜெமினி கணேசன்  நடித்தது அதில் அவர் மிகவும் கோழையாக சித்தரிக்கப்பட்டிருந்தார் அவருக்கு வீர உணர்வு ஊட்ட அவரது பாட்டி ஒரு தாயத்து கொடுத்து அது அவரது தாத்தாவுடையது என்றும்  அதை அணிந்தால் வீரனாகி விடலாம் என்றும் கூறு வார் ஜெமினி கணேசனும் அதை அணியும் போது மிகவும்வீர உணர்ச்சி வருவதுபோல் தோன்றி எதிரிகளை துவம்சம் செய்துவிடுவார்  ஒரு முறை சண்டையிடும்போதுதாயத்து தவறி கீழே விழவும் அவரது வீரமும்  போய்விட்டு நன்கு உதைபடுவார்   நம்பிக்கைக்கு ஒருகதை இது
 அவரிடம்  உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும்.  அவரது  நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.





ஒரு ஊரில் மழையே பெய்யாமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்களாம் மழை வேண்டி ஒரு யாகம் செய்தால்மழைவரும் என்றார்கள்பலரும்  யாகம்காண வந்திருந்தார்களாம் யாக முடிவில் மழை பெய்தது  எல்லோரும் மழைக்குப்பயந்து ஓடினார்களாம் ஒரே ஒருவன் மட்டும்தான்  கொண்டு வந்திருந்த குடையை விரித்து நின்றானாம் யாகத்தில் இருந்த நம்பிக்கை குடைகொண்டு வரச் செய்தது
  
மரக்கிளையில் அமரும் #பறவை #கிளை உடைந்துவிடும் என அஞ்சுவதில்லை ஏனெனில் அதன் #நம்பிக்கை கிளையில் இல்லை அதன் #சிறகுகளில் உள்ளது உன்னில் #நம்பிக்கை வை #வெற்றி உன்னை தேடி வரும்
எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் #நம்பிக்கை தவிர!
நம்பிக்கை குறித்து நிறைய எழுதி இருக்கிறேன்  நம்பிக்கை  வெறும் எண்ணங்க்களினால் ஏற்படுவதுஅல்ல நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும்
 என்  நம்பிக்கை நான் எழுதுவதைப் பலரும் படிப்பார்கள் என்பதில் இருக்கிறதுதொடர்ந்து எழுதுவேன் என்பதிலும் இருக்கிறது பெரும்பாலும் நம்பிக்கைகள் பக்தி சார்ந்ததாக நினைக்கப் படுகிறது அதில் மாறுபட்டு எழுதியதுஇது
  நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை

மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை 
 பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை
 பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை
நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை  நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை
.  நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,
 தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை.