Tuesday, February 13, 2018

நம்பிக்கை சில கருத்துகள்


                                                நம்பிக்கை சில கருத்துகள்
                                               ------------------------------------------
                                                      சிவராத்திரி ஸ்பெஷல் 
                                                      ------------------------------------


வசந்த் தொலைக்காட்சியில் நம்பிக்கை என்றொரு  தொடர் மறு ஒளிபரப்பாகிறது அதில் வரும் முகப்புப் பாடல் நம்பிக்கைபற்றியது  அதுவே எனக்கு நம்பிக்கைகள் எனும் இப்பதிவை  எழுதத் தூண்டியது
கோவிலுக்குப் போகிறோம்   நம் துயரங்களைச் சொல்லி வேண்டுகிறோம்  அது வரை சரிதான் ஆனால் என் துயரங்களைத் தீர்த்திடு உனக்கு நானிது செய்கிறேன்  அது செய்கிறேன்  என்றுவேண்டுவதுநமது கணிப்பில் கடவுளிடம் ஒப்பந்தம்போடுவதுபோல் இருக்கிறதே இதை ஏதோ நம்பிக்கை என்று கூறுதல் சரியா பெரும்பாலோர்  கணிப்பில் கடவுள் என்பவர் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்கிற அடிமுட்டாளாக இருப்பவரா . இதற்குப் பெயர் பக்தியல்ல, ஏமாற்று வேலை.

பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறீர்களென்றால் அது உளவியல் ரீதியாக வேண்டுமானால் ஆறுதல் தரலாம். ஆனால், இதை நம்பிக்கையென்று சொல்லாதீர்கள்
விசுவாசம் அடிமைகளுக்கும்  முட்டாள்களுக்கும் உரிமையானது
சற்றும் அசையாத கவனக்குவிப்பை வழங்குவதுதான் நம்பிக்கை.    இதற்கு இரு கதைகள்
ஒருவன் மல உச்சிக்குப் போகிறான்  கால் தவறி கீழே விழும் நிலையில் இருக்கிறான்  விழும்போது ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொள்கிறான் கடவுளே என்னை காப்பாற்று என வேண்டுகிறான் அப்போதுஒரு அசரீரியின் குரல் கேட்டது
அசரீரி : ‘நீ என்னை நம்ப மாட்டாய்!.
மனிதன் : கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.
அசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ தான் காப்பாற்ற வேண்டும்.
அசரீரி : சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.
மனிதன் : வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன்பின் வானத்தில் இருந்து எந்தக் குரலும்கேட்கவில்லை
முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன்  மாமன்மகள் என்று நினைக்கிறேன்  ஜெமினி கணேசன்  நடித்தது அதில் அவர் மிகவும் கோழையாக சித்தரிக்கப்பட்டிருந்தார் அவருக்கு வீர உணர்வு ஊட்ட அவரது பாட்டி ஒரு தாயத்து கொடுத்து அது அவரது தாத்தாவுடையது என்றும்  அதை அணிந்தால் வீரனாகி விடலாம் என்றும் கூறு வார் ஜெமினி கணேசனும் அதை அணியும் போது மிகவும்வீர உணர்ச்சி வருவதுபோல் தோன்றி எதிரிகளை துவம்சம் செய்துவிடுவார்  ஒரு முறை சண்டையிடும்போதுதாயத்து தவறி கீழே விழவும் அவரது வீரமும்  போய்விட்டு நன்கு உதைபடுவார்   நம்பிக்கைக்கு ஒருகதை இது
 அவரிடம்  உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும்.  அவரது  நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.

ஒரு ஊரில் மழையே பெய்யாமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்களாம் மழை வேண்டி ஒரு யாகம் செய்தால்மழைவரும் என்றார்கள்பலரும்  யாகம்காண வந்திருந்தார்களாம் யாக முடிவில் மழை பெய்தது  எல்லோரும் மழைக்குப்பயந்து ஓடினார்களாம் ஒரே ஒருவன் மட்டும்தான்  கொண்டு வந்திருந்த குடையை விரித்து நின்றானாம் யாகத்தில் இருந்த நம்பிக்கை குடைகொண்டு வரச் செய்தது
  
மரக்கிளையில் அமரும் #பறவை #கிளை உடைந்துவிடும் என அஞ்சுவதில்லை ஏனெனில் அதன் #நம்பிக்கை கிளையில் இல்லை அதன் #சிறகுகளில் உள்ளது உன்னில் #நம்பிக்கை வை #வெற்றி உன்னை தேடி வரும்
எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் #நம்பிக்கை தவிர!
நம்பிக்கை குறித்து நிறைய எழுதி இருக்கிறேன்  நம்பிக்கை  வெறும் எண்ணங்க்களினால் ஏற்படுவதுஅல்ல நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும்
 என்  நம்பிக்கை நான் எழுதுவதைப் பலரும் படிப்பார்கள் என்பதில் இருக்கிறதுதொடர்ந்து எழுதுவேன் என்பதிலும் இருக்கிறது பெரும்பாலும் நம்பிக்கைகள் பக்தி சார்ந்ததாக நினைக்கப் படுகிறது அதில் மாறுபட்டு எழுதியதுஇது
  நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை

மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை 
 பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை
 பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை
நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை  நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை
நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,
 தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை.
  


35 comments:

 1. நல்ல பதிவு! நன்றி.

  ReplyDelete
 2. ஆம், உண்மைதான். அந்த நம்பிக்கைகள் இந்த கலிகாலத்தில் வருவதில்லை!

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கைகள் எக்காலத்திலுமுண்டு பக்தி சார்ந்த நம்பிக்கைகள் தவறான புரிதல்கள் என்றுதோன்றுவதுண்டு

   Delete
 3. //பெரும்பாலும் நம்பிக்கைகள் பக்தி சார்ந்ததாக நினைக்கப் படுகிறது அதில் மாறுபட்டு எழுதியதுஇது//

  உண்மை. முற்றிலும் புதிய கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள். வாசித்து மகிழ்ந்தேன்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார் உங்கள் தளத்தையும் பார்த்தேன்

   Delete
 4. நம்பிக்கை அருமையான பதிவு.
  யானையின் பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை.
  என்றும் நம்பிக்கையுடன் இருக்க தூண்டும் பதிவு, நன்றி.
  வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கைகள் மூடமாக இருக்கக் கூடாது என்பதே என்கட்சி

   Delete
 5. நம்பிக்கை நம்பிக்கயானதொரு பகிர்வு.
  அருமை ஐயா...

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கையான பதிவு என்பதைவிட நம்பிக்கை பற்றிய பல கருத்துகள் அடங்கிய பதிவு எனலாம் வருகைக்கு நன்றி சார்

   Delete
 6. பெயர் பக்தியல்ல, ஏமாற்று வேலை - நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். ஆனால், சின்னக் குழந்தை, 'நான் இப்போ 1/2 மணி நேரம் படிப்பேன். அப்புறம் என்னை 2 மணி நேரம் டிவி பார்க்க விடணும்' என்று அப்பாவிடம் கேட்கிறதே.. அதுபோல தன் தந்தையாகிய இறைவனிடம் சிறுவன் கேட்பதில், கடவுள் என்ன தவறு காணப்போகிறார்? 'எவன் எதைச் செய்தாலும் அவன் அதை அறிவான். அந்த எண்ணத்தின் தரம் கொண்டு பலன் பெறுவான்' என்றுதான் நான் நம்புகிறேன். God என்பது பரமபிதா. அவர்கிட்ட சின்னஞ்சிறியவர்கள் நாம் என்ன கேட்டால் என்ன, எப்படிக் கேட்டால் என்ன? It is between him and his FATHER. Who are we to comment என்பது என் எண்ணம் (while understanding your concerns).

  'நம்பிக்கை' - 'எண்ணம்' நிச்சயம் பலன் தரும். இதைப் பற்றி பலர் எழுதியிருக்கின்றனர் (starting from M S UDAYAMOORTHY). நீங்கள் எழுதியிருப்பது சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லும் அனாலஜி சரியா . வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

   Delete
 7. பாடலைப் பற்றிச் சொல்லலையே. இளையராஜாவின் திறமைக்குச் சான்றுகூறும் பாடல். என்ன மாதிரியான இசை இந்தப் பாடலுக்கும், அதே படத்தின், 'பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்' பாடலுக்கும். பெரிய திறமைசாலி அவர். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பாடலைப் ப்;அற்றி சொல்லி இருக்கிறேனே அது சிவராத்திரி ஸ்பெஷல்

   Delete
 8. பதிவு மன நம்பிக்கையை வலுப்படுத்தியது ஐயா.

  பாடல் ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வருகை மகிழ்ச்சி தருகிறது ஜி

   Delete
 9. நம்பிக்கைதான் எல்லாமும்
  அருமையான பதிவு ஐயா

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே நம்பிக்கைதான் என்பதை ஏற்க முடியவில்லை நம்பிக்கை அறிவு சார்ந்ததாகைருக்க வேண்டும்

   Delete
 10. எந்த நம்பிக்கையில் இந்தப் பதிவை எழுதினீர்கள் என்று கேட்கப் போவதில்லை.

  இந்தப் பதிவை எழுதுவதற்கும் ஏதாவது நம்பிக்கை இருந்திருக்க வேண்டும், அல்லவா? அது என்ன?

  ReplyDelete
 11. / என் நம்பிக்கை நான் எழுதுவதைப் பலரும் படிப்பார்கள் என்பதில் இருக்கிறதுதொடர்ந்து எழுதுவேன் என்பதிலும் /எழுதிய இதுதான் என்று சொல்ல மாட்டேன் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 12. மனது திடமாக இருந்தால்தான் நம்பிக்கைகள் உருவாகும். யாவற்றிற்கும் அவசியமானது நம்பிக்கைதான். உங்களின் பதிவு அருமையாக உள்ளது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. எனக்கு என்னவோ மனதிடம் இல்லாதவர்களுக்கே நம்பிக்கை அதிகம் தேவைப்படுகிறது என்று தோன்று கிறது பாராட்டுக்கு நன்றி மேம்

   Delete
 13. சூழல் முழுவதும் நமக்கு எதிராக திரும்ப, ஆதரவு என்பதே இல்லாமல் போகும் பொழுது வருவதுதான் நிஜமான நம்பிக்கை என்று நினைக்கிறேன். அது இறை நம்பிக்கையாகக்கூட இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொருவித நம்பிக்கைக்கும் ஒவ்வொரு உதாரணம் கொடுத்திருக்கிறேனே வருகைக்கு நன்றி

   Delete
 14. சுவாரஸ்யமான பதிவு. நம்பிக்கைதான் வாழ்க்கை.

  (திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் அண்மையில் எழுதிய பதிவை இப்போது படித்தேன்; உடனே உங்கள் பதிவுகளில், நீங்கள் முன்பு ஒருமுறை எழுதிய, இந்து தர்மம் பற்றிய பழைய பதிவை, படிப்பதற்காகத் தேடினேன்; சட்டென்று கண்டு பிடிக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்து தேட வேண்டும் போலிருக்கிறது. உங்கள் வலைத்தளத்தின் Dashboard Layout இல் Add a Gadget இல் All Labels செட்டிங்ஸை வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். )

  ReplyDelete
  Replies
  1. லேபெல்ஸ் கொண்டு தேடினால் கிடைக்காது என்று ர்தோன்று கிறதுபாதிவின் தலைப்பு தெரிந்தால் கூகிள் உதவலாம் இந்து தர்மம்பற்றி நான் ஓரிரு பதிவுகள் எழுதிய நினைவு அதில் ஒன்று நானொரு ஹிந்து எனும்பதிவு சுட்டி தருகிறேன் இதுவா நீங்கள் தேடியது என்று பாருங்கள் http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_21.html

   Delete
 15. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு!

  நம்பினால்தான் கடவுளே!

  என்ன ஒன்னு.... தில்லுமுல்லுலே கடவுளையும் பார்ட்னராச் சேர்த்துக்கு ஒரு கூட்டம். வேறென்ன சொல்ல......

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கை என்பதில் கடவுள் சார்ந்ததும் ஒன்று என்றே தோன்று கிறது

   Delete
 16. தாங்கள் உடல் நலமாக இருக்கிறீர்கள் தானே? பல நாட்களாக உங்களைக் காண முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. உடல் நலமே மேம் நான் சென்னை பொவது குறித்து ஒரு சிலருக்கு அஞ்சல் அனுப்பி இருந்தேன் தில்லையகத்து கீதா ஸ்ரீ ராம் செல்லப்பா போன்றோர் சென்னையில் இருப்பவர்கள்

   Delete
 17. ஐயா என்ன பதிவுகள் எழுதாமல் இருக்கின்றீர்கள் வெளியூர் பயணமா ?

  ReplyDelete
  Replies
  1. அதுதான் வந்து விட்டேனே இனி என் அறுவை தொடரும்

   Delete