சனி, 10 பிப்ரவரி, 2018

புரிந்து கொள்ளவும் செயல் படவும் (Transactional analysis )


                                   புரிந்து கொள்ளவும்  செயல் படவும்(Transactional  analysis )
                                   -------------------------------------------------------
(ஒரு எச்சரிக்கை . பதிவு நீளம்  கருதி  தாண்டிப் போனால் ஒரு ஆய்வு பற்றிய விஷயங்கள் தெரியாமலேயே போகலாம் )

ஒரு பதிவு எழுதும் முன் நிறையவே ஹோம்  வர்க் செய்ய வேண்டி இருக்கிறது   இருந்தும் முயற்சிக்கிறேன் வாழ்வியல் பரிமாற்றங்கள் என்னும் தலைப்பில் முன்பே ஒரு பதிவு எழுதி இருந்தேன்  அது ஆங்கிலத்தில்Thomas . A .Harris  அவர்கள் எழுதி இருந்த I AM OK YOU ARE OK என்னும் நூலைத் தழுவி இருந்தது
மனோதத்துவ நிபுணர்களால் ஆராயப்பட்ட முடிவுகள் தெளிவுகள் எல்லாம்  புத்தகத்தில் விரவிக் கிடக்கின்றன அதில் காணப்பட்டுள்ள விஷயங்களை சுருக்கமாகத் தொகுத்து இப்பதிவில் வெளி இடுகிறேன்  

 MY BASIC IDEA WAS TO JUST NARRATE HOW WHY TRANSACTIONS WE COME ACROSS TAKE PLACE. I HAVE KEFT IT TO THE READERS TO DWELVE ON THAT AND MAKE THEIR OWN CONCLUSIONS. IF YOUNG PROSPECTIVE PARENTS UNDERSTAND THIS THIS MIGHT HELP THEM BRING UP THEIR CHILDREN. ADULT -ADULT TRANSACTION IS DIFFICULT FOR WHICH YOU NEED TWO PEOPLE. THAT IS ASKING FOR THE MOON ,I FEEL. HOWEVER ADULT TRANSACTION FROM OUR SIDE WILL HELP BETTER UNDERSTANDING


        
விவசாயப் பட்டதாரி ஒருவன் விவசாயம் பற்றிய விவரங்கள்  அடங்கிய புத்தகம் ஒன்றை  அவர் வாங்குவாரா என்று விசாரித்தான் . அதற்கு அவர் படிப்பதை  எல்லாம்செயல்படுத்துதல் இயலாதது  “தம்பி எனக்கு விவசாயம் பற்றித் தெரிந்ததில் பாதி விவரங்களைக் கூட என்னால் சரியாக உபயோகிக்க முடிவதில்லை புத்தகம் பற்றி அறிந்தா  இனி” என்றாராம்  இதை எழுதுவதன் நோக்கமும் ஏன் மக்களுக்கு நல்லது அல்லாதது  என்று தெரிந்த விஷயங்கள் அடிப்படையில் அவர்களின்  வாழ்க்கை  சிறப்பாக அமைவது இல்லை என்பதை   தெரியப் படுதவும் தான்
   
 வாழ்க்கைமுறை  அமைவது அவரவர் குணாதிசயங்களைப் பொறுத்தது. இந்த குணாதிசயங்கள்  அமைவதன்  காரணம் என்ன. இந்த குணாதிசயங்கள்தான் என்ன அதை மாற்றமுடியுமா எனப் பல கேள்விகள் எழுகின்றன வலுனர்களின்  ஆராய்ச்சிகளின்  முடிவின் படி மனிதன் அவனது வாழ்வியல் பரிமாற்றங்களை (TRANSACTIONS) நான்கு  விதமாக வெளிப்படுத்திக் கொள்கிறான்  பரிமாற்றம் (transaction ) எனப்படுவது ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் போது உபயோகிக்கும் வார்த்தைகள் மற்றும்  செய்கைகள் மூலம் புரிந்துகொள்வதாகும்  இந்த நான்கு வித வெளிப்பாடுகளை 1) நான் சரியில்லை –நீ சரி (IAM NOT OK –YOU ARE OK 2)நான்  சரி இல்லை –நீசரி இல்லை (I AM NOT OK – YOU ARE NOT OK 3)நான் சரி –நீ சரி இல்லை (I AM OK  YOU ARE NOT OK ) 4) நான் சரி –நீ சரி (I am ok  you are ok ) என்ற விதமாக உளக்கூறு நிபுணர்கள் பிரித்து இருக்கிறார்கள் 


      இந்த மாதிரி பரிமாற்ற வெளிப்பாடுகள்ஒருவனின் குணாதிசயத்தைப் பொறுத்தே அமைகிறது இந்த குணாதிசயங்களொருவனது மூன்று வயது பிராயத்துக்குள்ளேயேஅவனதுமூளையிலும் ஆழ்மனதிலும்பதிவாகி விடுகின்றன இந்த்(parent)வளர்ந்தவன் (adult)என்ற முறையில் பதிவாகி வெளிப்படுகிறது இந்த  குணாதிசயங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்குழந்தை (child )பெற்றோன்  (parent)வளர்ந்தவன் (adult)என்ற முறையில் பதிவாகி வெளிப்படுகிறது


 குழந்தை பிறந்தவுடன் அதன் உயிருக்கும் ,உடலுக்கும்வாழ்வுக்கும் அது பிறருடைய உதவியையே நம்பி இருக்கிறது பெற்றோருடையவும்  மற்றோருடையவும்  அணைப்பு பாசம் ஊக்கம்கண்டிப்பு பரிசு தண்டனை எல்லாமே குழந்தையின் மூளையில் பதிவாகி விடுகிறது இந்தப் பிராயத்தில்பதிவாகும் அனுபவங்களை  வார்த்தைகளால் விவரிக்க இயலாதுவெறும் உணர்வுகளாகத்தான் (feelings) இருக்கும் உணர்வுகளாகப் பதிவாகும் விவரங்கள்பிற்காலத்தில் காணப்படும்  குணாதிசயங்களுள் முக்கிய பங்கு வகிக்கும்  எதையுமே தன்னால் செய்ய முடியாத குழந்தையிடம் . உணர்வுகளால் உந்தப்பட்டு நான் சரியில்லை (I am not ok )என்ற உணர்வே மேலோங்கி நிற்கும் இந்த குணாதிசயத்தின் வெளிப்பாடுபிற்பாடு வளர்ந்த வாழ்விலும் அவர்களிடம் குழந்தயாக(child) தலை காட்டும்

        
மூன்று வயதுக்குள் பதிவாகும் உணர்வுகளால் நான் சரி  இல்லை என்று எண்ணும் குழந்தை தன்னைச் சுற்றி இருப்பவர் பற்றிய அனுபவங்களையும் மூளையில் பதிவாக்கிக் கொள்கிறது இப்படிப்பதிவாகும் உணர்வுகள் சுற்றி இருப்பவர்களின் மொழி செய்கை முதலியவற்றால் உணரப்படுகிறது குழந்தையை அரவணைப்பவர்கள்  அதன் ஆதாரத் தேவையான உணவு உடை போன்றவற்றைக் கொடுப்பதும் கொஞ்சுதல் பரிவு கண்டிப்பு பரிசு தண்டனை போன்றவற்றின் வெளிப்பாடுகள் அவர்களது எதிர்பார்ப்புகளைத் தெரியப்படுத்துவது எல்லாம் அவர்களைப்பற்றிய உணர்வுகளாக குழந்தையின் மூளையில் பெற்றோரின் (parent) அம்சமாக பதிவாகிறது     

      குழந்தைகள்பிறந்துவாழ்க்கையில்சிலகாரியங்களை தானாகச் செய்யத் துவங்குகின்றன மல்லாக்கப் படுக்க வைத்த குழந்தைகள் உருளவும் தவிழவும் எழவும்  நடக்கவும் செய்யத் தொடங்கும் போது தன்னால் முடியும்  என்ற உணர்வு குழந்தையிடம் பதிவாகும்  கண்ணில் கண்ட பொருட்களை எடுத்தும்  பிடித்தும் சுவைத்தும் தானாகவே சில முடிவுகளை எடுக்கும் உணர்வுகளும் குழந்தை யிடம்  பதிவாகும் இந்தகுணதிசயம் வளர்ந்தவன்(adult) என்று அறியப்படும்    

பிறந்து வளர்ந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தை பெற்றோன்  வளர்ந்தவன்
(child parent adult )என்ற எல்லோருடைய குணாதிசயங்களும் இருக்கும்  இந்த உணர்வுகள் பெற்றோரால் கற்பிக்கப்பட்டதும் குழந்தையாக உணரப் பட்டதும்   அல்லாமல் தானாகவே அறிந்து கொண்டதுமாகும்   உதாரணமாகதொடாதே சுடுமென்பதை தொட்டுப்பார்த்து  சுட்டுக் கொள்வது போலவும் விழுவாய்  என்பதை போய் விழுந்து அறிந்து கொள்வது போலுமாகும் 



        
பெரும்பாலும் புற உலகத் தொடர்பாக குழந்தைகள் வார்த்தைகளாக இல்லாமல் செய்கைகளாலேயே  தெரிவிக்கின்றன பிற்கால வாழ்வியல் பரிமாற்றங்களில் ஒரு குழந்தையாக வெளிப்படுவதுகண்ணீர் . உதடுகள் துடிப்பது  முகம் கோணுவது  திடீர்க் கோபம் காட்டுவது. கண்களை உருட்டுவது, கீழ்நோக்கிப் பார்ப்பது கேலி செய்வது நகம் கடிப்பதுசிரிப்பது போன்ற உணர்வுகளே வார்த்தைகளாக வெளிப்படுவது எனக்குத் தெரியாது நான் நினைக்கிறேன்   எனக்குக் கவலை இல்லை நான் செய்யப் போகிறேன் போன்றவையே


        குழந்தைகளின் உணர்வுகளில் பெரியவர்களின் குணங்களாக நெரித்த புருவம் கடித்த உதடு .சுட்டிக் காட்டும் விரல், தலை ஆட்டல் கோபக் கண்கள்  இடுப்பில் கை, மார்பில் கட்டிய கைகள் பெருமூச்சுவிடல் , சப்புக் கொட்டுதல் போன்றவை சைகைகளாகப் பதிவாகி இருக்கும்குழந்தைகளின்  உணர்வுகளில் பெற்றோரின் குணங்களாக அவர்கள் உபயோகிக்கும்  வார்த்தைகளில் முக்கியமாக முட்டாள் . போக்கிரி, உபயோகமில்லாதவன்சோம்பேறி ஐயோ பாவம் , எத்தனை முறை கூறுவது. என்ன தைரியம்  ஒரேயடியாய்நிறுத்துவேன்   கட்டாயம் போன்றவைகளும்  பதிவாகி இருக்கும்     

      மேற்கூறிய குழந்தை  மற்றும் பெற்றோர்  குணாதிசயங்கள் வாழ்வியல் பரிமாற்றங்களில்  நான்  சரியில்லை நீ சரி நான் சரியில்லை  நீ சரியில்லை  என்ற முறையில் வெளிப்படுகிறது 

 
       வாழ்வியலின் மூன்றாவது பரிமாற்ற நிலையான நான் சரி-நீ சரியில்லை  (I AM OK . YOU ARE NOT OK) என்பதற்கான உணர்வு மூன்றுவயதுக்குள்ளேயே எப்படிப் பதிவாகி இருக்க முடியும்பொதுவாக இந்தப்பதிவு குழந்தைகளை எடுப்பதுகொஞ்சுவதுதட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்துவது குறைந்து அடி உதை தண்டனை கண்டிப்பு போன்று குழந்தைகளலைக்கழிக்கப் படும்போது அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் படும்போதும் , அந்தத் துன்பங்களில் இருந்து மீளும்போதும் நான் சரி . என்னை விடு நீ சரி இல்லை என்ற உணர்வைப்பெறு கிறார்கள். இந்த நிலையில் இருந்தவன்  பிற்காலத்தில் எல்லோருமே சரியில்லாதவர்கள் என்ற நிலையில் நீடிக்கவே  விரும்புகிறான் அவனுள் பதிவாகி இருக்கும்  பெற்றோர் பற்றிய உணர்வு அவனுடைய செயல்களுக்கு  அனுமதி அளிப்பது போல் இருக்கும் 

\     இனி  வாழ்வியல் பரிமாற்றத்தில் (TRANSACTION)நான்காவது  நான் சரி –நீசரி(IAMOK YOU ARE OK )என்ற நிலைக்கு வருவோம் இந்த நிலை மற்ற மூன்று நிலைகளில் இருந்து மாறு பட்டது மற்ற மூன்று நிலைகளும் அறியாப் பருவத்தில் அறியாமலேயே ஊன்றப்பட்டது பெரும்பாலோர் குணம் முதல் நிலையையே நான் சரி இல்லை  நீ சரி என்பதை ஒத்தே இருக்கிறதுபெரும்பாலும் மாறுவதில்லை துரதிர்ஷ்டவசமாக சிலர் இரண்டாம் நிலைக்கும்  மூன்றாம் நிலைக்கும்  மாறுகிறார்களிந்த வாழ்க்கையின்  பரிமாற்ற நிலைகள் மூன்றாவது வயதுக்குள்ளாகவே தீர்மானிக்கப்படுவதாக வல்லுனர்கள் கருதுகிறார்கள்



       இந்த நிலைகள் குழந்தையில் உள்ள வளர்ந்தவன் (ADULT) வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள எடுக்கும்  முயற்சியின் முடிவைத் தீர்மானிக்கிறது முதல் மூன்று நிலைகளும் உணர்வுகளால் தீர்மானிக்கப் படுகிறது நான்காவது நிலை எண்ணம் நம்பிக்கை செயல்கள் மூலம் உருவாகிறது முதல் மூன்று நிலைகள் ஏன் என்பதன் விடையாக இருக்கும்  நான்காம் நிலை ஏன்  கூடாது என்பதை செயல்படுத்துவதில் இருக்கும்  ஆரம்பகட்டத்தில் அவர்கள் சரி என்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டு , அதை அவர்கள் காண்பிக்க வழிமுறைகளும் கொடுக்கப்பட்டு
வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள எடுக்கும் முயற்சியின் முடிவைத் தீர்மானிக்கிறது முதல் மூன்றுநிலைகளும் உணர்வுகளால்  தீர்மானிக்கப் படுகிறது
 நான்காவது நிலை எண்ணம் நம்பிக்கை செயல்கள்மூலம்  உருவாகிறதுமுதல் மூன்று நிலைகள் ஏன்  என்பதன் விடையாக இருக்கும்  நான்காம் நிலை ஏன் கூடாதுஎன்பதை செயல் படுத்துவதில் இருக்கும் ஆரம்பகட்டத்தில் அவர்கள் சரிஎன்ற உட்படுத்தப்பட்டு , அதை அவர்கள் காண்பிக்க வ்ழிமுறைகளும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும்  குழந்தைகள் அதிர்ஷ்ட சாலிகளே

நான்  சரி –நீசரி என்றநிலை உணர்வுகளால் ஏற்படுவதுஅல்ல எண்ணங்களினாலும் சோதனைகளாலும் எடுக்கப் படுவது

 பரிமாற்றங்களில்  குழந்தை  (CHILD) குணாதிசயம் ,பெற்றோர் (PARENT)குணாதிசயம்
வெளிப்படும்போது சாதாரணமாகத் தெரிய வரும்  செய்கைகளையும்  வார்த்தைகளையும்  ஏற்கனவே பார்த்தோம்  அதுபோல் வளர்ந்தவன் (ADULT) குணாதிசயம் அவன் கண்களிலும்  காணலாம் ஆழ்ந்த தீர்க்கமான படபடப்பில்லாத
நேரான பார்வை . வார்த்தைகளில் ஏன் என்ன எங்கு எதற்கு யார் எப்படி போன்றவற்ற்ன் வெளிப்பாடாகவும் உண்மை பொய், தவறு தெரியாது நான் நினைக்கிறேன் என்பனவற்றின் மூலமும் வெளிப்படுத்தப் படுகிறது ஏற்கனவே பெற்றோனில் (PARENT )பதிவாகி இருக்கும்  விவரங்களின் (DATA)அடிப்படையில் வளர்ந்தவன் (ADULT ) பிரித்து எடுக்கிறான் 

      மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் கடந்து வந்திருந்தாலும்  நம்மில் பலர் சரியில்லைஎன்ற நிலைப்பாட்டுடன் கூடியஏதுமே செய்ய இயலாத குழந்தையின் நிலையிலேயே  வாழ்க்கையைக்  கழிக்கிறோம் உணர்வுகளால் பாதிக்கப்பட்ட நிலை பாடுகளில்   நான்  சரியில்லை என்ற குழந்தையின் 
(CH ILD)  அணுகு முறையை   ஏற்பவர்கள் நான் சரி  என்ற நிலைப்பாடுடைய வளர்ந்தவனின்  (ADULT)பரிமாற்றத்தை  சாதாரணமாகத்   தவிர்க்கிறார்கள்
   
      பரிமாற்ற அலசலில் மனிதர்களின் குணாதிசயங்களின் காரணங்கள் தெரிய வரும்போது புரிதலும்  அதிகரிக்கும்
 
இப்படியும்  ஒரு பின்னூட்டம்  மனதில் பட்டதைச் சொல்லலாம் என்று காண்பிக்க
இங்கும் ஒரு கேள்விப்ப‌ட்ட‌ செய்தி. அண்ண‌ன் மிக நல்ல‌வ‌ன் எந்த கெட்ட‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளும் இல்லாத‌ பெர்பெக்ட் ஜென்டில்மேன். த‌ம்பியோ த‌லைகீழ் ப‌கை, புகை, ம‌து, மாது, சூது என் அன‌த்தும் அணைப்ப‌வ‌ர். இருவ‌ருக்குமே ரோல் மாட‌ல் அவ‌ர்க‌ள‌து த‌ந்தைதான். அவ‌ரும் த‌ம்பியைப் போன்று எல்ல‌ ப‌ழக்க‌மும் வ‌ழ‌க்க‌மாய் கொண்ட‌வர். தம்பி அவ‌ர் வ‌ழியிலும், அண்ண‌ன் எதிர் வ‌ழியிலும் வாழ்வதாய் முடியும்.

ன்ன‌ளவில் ஒவ்வொருக்குள்ளும் இந்த‌ நான்கு (1.நான் சரியில்லை-நீ சரி (I AM NOT OK. -
YOU ARE OK.) 2. நான் சரியில்லை- நீ சரியில்லை (I AM NOT OK -
YOU ARE NOT OK.) 3.நான் சரி- நீ சரியில்லை.(I AM OK. -YOU ARE 
NOT OK) 4.நான் சரி- நீ சரி (I AM OK YOU ARE ஓக் )) இருந்து ச‌ம‌ய சூழ‌லுக்கு ஏற்ப‌ ஒரு குறிப்பிட்ட‌ க‌லவையில் அல்ல‌து த‌னித்து வெளிப்படுகிற‌து என்ப‌தே இந்த‌ச் சூழ‌லில் என் வெளிப்பாடு. உங்க‌ளைப் போன்ற‌வ‌ர் ப‌திவில் தான் ம‌ன‌ம் திற‌ந்து எழுத‌ முடியும், ரெம்ப‌ உறுத்தான‌வ‌ர் வீடுக‌ளில்  வெறும் சார‌த்துட‌ன் இருத்த‌ல் போல.




















    

   





      

22 கருத்துகள்:

  1. கடைசி நான்கு பத்திகள் எழுத்து ரொம்பவே சின்னதாக இருப்பதால் படிப்பது கஷ்டமாக இருந்தது. ரொம்பவே நீளமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தான்முதலிலேயே கூறி இருந்தேனேகஷ்டப்பட்டு படிக்காமல் போய் விட்டீர்கள் என்று தெரிகிறது

      நீக்கு
  2. //வாழ்க்கைமுறை அமைவது அவரவர் குணாதிசயங்களைப் பொறுத்தது//

    நீங்கள் சொல்வது போல் தான் " எண்ணம் போல் வாழ்க்கை "என்றார்கள் நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள்.


    //பரிமாற்ற அலசலில் மனிதர்களின் குணாதிசயங்களின் காரணங்கள் தெரிய வரும்போது புரிதலும் அதிகரிக்கும்//

    பரிமாற்றம் இல்லாமல்தானே நிறைய உறவுகள் பிரிகிறது.
    பரிமாற்றம் வேண்டும் உணமையான புரிதல் இருந்தால்
    நட்போ, உறவு முறையோ விட்டு போவது இல்லை.


    வாழ்வியல் சிந்த்னை மிகுந்த பதிவு.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த குணாதிசயங்கள் நம்சிறு வயதிலேயே விதைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  3. நிறைய சிந்திக்கத்தக்க விடயங்கள் ஐயா.

    // எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
    மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர்
    ஆவதும் தீயவர் ஆவதும்
    அன்னை வளர்ப்பதிலே...//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதுமன்னையின் வளர்ப்பில் மட்டுமல்ல நான் புரிந்துகொண்டபடி நூலில் உள்ளபடி வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  4. நீண்ட பதிவுதான் ஐயா
    ஆயினும் அருமையான பதிவு
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. நீண்ட heavy subject. 3-4 வயதுக்குள்ளேயே குழந்தையை வளர்க்கும் விதம், அதனுடைய எதிர்கால குணாதிசியங்களைக் கட்டமைப்பதாக ஆகிவிடுகிறது போலிருக்கு.

    நீங்கள் சொன்ன உதாரணமும், இருவரின் வளர்ப்பு விதம் மாறுபட்டதாலாகத்தான் இருக்கவேண்டும்.

    உபயோகமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனமான பதிவுதான் இருந்தாலும் ஆழமான இன்சைட் உள்ளது வருகைக்கு நன்றி சார் கனமான பதிவுகளுக்கு அத்தனை வரவேற்பு இல்லை நகைச்சுவையாக ஏதாவதுமொக்கையாக எழுதினால் வாசிக்கப்படுகிறது

      நீக்கு
  6. // தம்பி அவ‌ர் வ‌ழியிலும், அண்ண‌ன் எதிர் வ‌ழியிலும் வாழ்வதாய் முடியும்.// குழந்தைகள் “தானாகவே” தன் வழியில் வளர்கிறார்கள்; நாம் அதில் மாற்றங்களைக் கொண்டு வருவது வாழ்வியலில் நாம் செய்யும் முயற்சிகள். பலன் இருக்கலாம் .. இல்லாமலும் போகலாம். இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தருமி சார்... இதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகத்தான் இருக்கு. ஒரே பெற்றோர்ட்ட வளருகிறவங்ககிட்ட ரொம்ப வித்தியாசம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இதெல்லாம் ஜீன் பெர்முடேஷன் காம்பினேஷனோ?

      நீக்கு
    2. @ தருமி நீங்கள் கூறி உள்ளது என்பதிவுக்கு வந்த பின்னூட்டத்தில் கண்டதுஇந்தப் பதிவின்முக்கிய நோக்கமே மக்களிடம் ஒருவித அடல்ட் ட்ரான்சாக்‌ஷனைக் கொண்டுவர வைக்க வேண்டும் அதில்தானிருப்பதை இருப்பதுபோல் ஏற்றுக் கொள்ளும் மனநிலை வரும் பெரும்பாலான குடும்பங்களில் அதிக கட்டுப்பாடுகள் உள்ள குழந்தைகள் , ஏன் பெரும்பாலான குழந்தைகள் ஒருசைல்ட் ட்ரான்சாக்‌ஷனையே you are ok Iam not ok வெளிப்படுத்துகிறார்கள் உளவியல் கூறுகளின் படி அடல்ட் ட்ரான்சாக்‌ஷனே சிறந்தது அதை அறிவதற்காகவே இதை எழுதினேன் இதில் கண்டவை எல்லாம் I AM OK YOU ARE OK என்னும் நூலில் கண்ட கருத்துகளே வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
    3. @ நெ த இதில் கூறப்பட்டவை எல்லாம் உளவியல் பொறுத்தது உடற்கூறுபற்றியதல்ல மனதில் பட்டதைக் கூறுவதும் அதை ஏற்பதும் ஐ ஆம் ஓக்கே யூ ஆர் ஓக்கே என்னும் ட்ரான்சாக்‌ஷனில் வரும் என்று நினைக்கிறேன்

      நீக்கு
  7. I am OK, You are OK புத்தகத்தை நான் பட்டம் பெற்ற புதிதில் என்னுடைய ஆசிரியர் ஒருவர் பரிந்துரைத்ததன் பெயரில் படித்தேன். அப்போது எனக்கு புரியவில்லை. புத்தகம் இன்னும் என்னிடம் இருக்கிறது. படித்துப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. ஆர்வம் இருந்தால் மட்டுமே முழுமையாகப் படிக்க முடியும்

    பதிலளிநீக்கு
  9. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். நீளமான பதிவாயினும், அதிகமான செய்திகளைக் கொண்டுள்ள பதிவு. I am ok You are ok நூலைப் படிக்க ஆசை வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  10. பதிவின் நீளம் பார்த்து தாண்டிப் போவோருக்கிடையே அதில் இருக்கும் செய்திகளின் முக்கியத்துவம்தெரிந்துபடிக்க வருவது மகிழ்ச்சி தருகிறது

    பதிலளிநீக்கு
  11. Transactional Analysis பற்றிய புரிதல் ஏற்பட நான் பணியாற்றிய காலத்து தொலைபேசி இலாகாவின் பயிற்சி கேந்திரங்களில் வகுப்புகள் எடுக்கப் பட்டன. அந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். உங்களின் பழைய இதே பதிவில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூடம் நினைவிருக்கிறது உங்களுக்கும் நல்ல நினைவாற்றல் நன்றி சார்

      நீக்கு
  12. பதிவு பெரிது என்பதை விட மிக அழுத்தமான ஆழமான கருத்துக்களை உடைய பதிவு சார். நுண்ணிய பார்வை வேண்டும். எப்படி ஆழமான நீரில் நீந்துவதற்கு தண்ணீரின் அழுத்தத்தை மீறி கவனமாக நீந்த வேண்டுமோ அது போன்று..ஏனென்றால் உளவியல்...மனம் என்பதே ஆழமானது தானே. அதாவது அதுவும் மூளையின் ஒரு பகுதிதான் என்றாலும்....மூளையைப் பற்றி அதன் செயல்பாடுகள் பற்றி முழுமையான ஆய்வு செய்ய முடியாது அது மிகவும் பெரியது என்று நரம்பியல் ராமமூர்த்தியும் சொல்லியிருப்பது நினைவு..

    இதில் 3, 4 வயது என்று சொல்லப்பட்டாலும் நாமும் 5 ல் வளையாதது 50 ல் வளையாது என்று சொல்லுவது போல் என்றும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா ஸார். பெற்றோர் உட்கார்த்தி வைத்து அட்வைஸ் என்று செய்வதை விட பெற்றோர் சிறந்த உதரணமாக இருந்தாலே போதும்..ஒரு குழந்தைக்குப் போதிப்பது அதன் மனதில் பதிந்தாலும் அதை விட சுற்று நோக்கிக் கற்பதுதான் தான் நிறைய பதிகிறது. இருந்தாலும் வளரும் சூழல் பொருத்துக் அனுபவங்களில் கற்பதால் அதுவும் மாறக் கூடும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலபுரிதல்கள் சொல்லிக் கொடுத்து வருவதல்லகுழந்தைகளின் ஆழ்மனதில் அவர்கள் காண்பதும் கேட்பதும் பதிவாகலாம்IAM OK YOU ARE OK நூலில் நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது எல்லாவற்றையும் பதிவில் சொல்ல முடியவில்லை இதைச் சொல்லும்போதே பதிவின் நீளம் குறித்த சிந்தனைகளே அதிகம் எழுகிறது வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு