Tuesday, February 27, 2018

வாசமில்லா மலரிது


                             வாசமில்லா மலரிது
                            ----------------------------------

ஆசிரியர்… ஜயந்தா இந்தியா கேட் என்பது என்ன
ஜயந்தன் ……சார் இந்தியா  கேட்  நல்ல தரமுள்ள பாசுமதி அரிசி
ஆசிரியர் ….சார்மினார் என்பது என்ன
ஜயந்தன்  சார் சார்மினார் ஒரு பெயர் பெற்ற சிகரெட் குறைந்தவிலையால்  யாரும்  உபயோகிக்கூடியது
ஆசிரியர் .. தாஜ்மஹல் என்பது என்ன
ஜயந்தன்  தாஜ்மஹல் பாக்கெட் தேயிலைத்தூள்
ஆசிரியர்… இந்த மாதிரி முட்டாள் தனமான பதில் தர உனக்கு என்னதைரியம் தேசியப் பொக்கிஷங்களின்   பெயரைக் கெடுக்கிறாய்  நாளை  உன்னை வகுப்பில் அனுமதிக்க மாட்டேன் வரும்போது உன் தந்தையின் சிக்னேசரோடு வா
ஜயந்தன் ..சரி சார்

அடுத்த நாள்

 ஆசிரியர் ..ஜயந்த்த்த்த்த்தா என்ன தைரியம் இருந்தா விஸ்கி பாட்டிலை  வகுப்புக்கு  கொண்டு வருவாய்
 ஜயந்தன் சார் இது ரொம்பமோசம்  நீங்கள் தானே தந்தையின்  சிக்னேசரைக் கொண்டு வரச்சொன்னீர்கள் சொன்னபடி செய்ததற்கு கோபம்கொள்கிறீர்களே  இது நியாயமில்லை சார்                       =====================
LOL IS OLD THNG  NEW THING IS LLRC IT MEANS LAUGH  LIKE RENUKA CHAUDHRI
              =================
ஒரு மாற்றத்துக்கு  எங்கள் பெரிய பேரன் தங்லீஷில் எழுதிய கவிதை தமிழாக்கி தருகிறேன்
 -------------------------------------------------------------------------------------------------------------------இருவரையும் பார்த்தால் கமல் ஸ்ரீதேவி போல இருக்கு
நடிப்பில் அல்ல. .
ஆனால் அவ்வளவு காதல் பொருத்தம் தெரியுது.
அவ்வளவு ப்ரேம், இஷ்டம், காதல், லவ், ப்யார்
எல்லாமே ஒரே அர்த்தம்தானே
இவர்கள் காதல் பற்றிச் சொல்ல நான் படிக்கணும் Phd; 
இருவர் காதலிலும் உண்மை இருக்கிறது
அக்குவா கார்ட் தண்ணி போல ப்யூரா இருக்கும்.
இவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமை
ஏன் என்றால் என்னைப் பார்த்து என் பேரன் இப்படிச் சொல்வானா?
சான்ஸே இல்லை, ஏன் என்றால் நான் இன்னும் காதலிக்வே
இல்லையே.!
இவர்கள் சண்டையைப் பார்த்தால் ஒரே போர்தான்.
நோ எண்டர்டைன்மெண்ட். அங்கேயும் லவ் தான் தெரிகிறது
சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு உண்மை தெரியுமா.?
எங்க வீட்டு சிங்கத்தை குட்டிப் பாப்பா 
மாதிரியாக்கிய பெருமை எங்க பாட்டிக்குத்தான் சேரும்.
இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ்
ஆச்சரியம் இல்லை

 இப்போ நான் டீயாரு
இவங்க ரெண்டு பேரும் செம பெயரு
எனக்குத் தராங்க டூ மச் கேரு
அதைப் பெற்றால் கிடைக்கும் கிக்கு 
அப்புறம் எதுக்கடா பாரு?
ஹாய் ண்டணக்கா டணக்குணக்கா.
டண்டணக்கா, டணக்குணக்கா. !
                                                          ========================
அயல்நாடு ஒன்றில் ஒருவர் தன் காரில் பயணித்துக் கொண்டிருந்தாராம்  திடீரென அவருக்கு உடல் நலமில்லாமல் போகவே ஹரிஓம்  ஹரி ஓம் என்று பிரர்த்தனை செய்தாராம்  சற்று நெரத்தில் அவரதுவீட்டுக்கு வந்த ட்ரைவரிடம்  ஏன் இங்கேயே கொண்டு வந்தாய் என்று கேட்டாராம்  அதற்கு ட்ரைவர்  நீங்கள்தானே ஹரி ஹோம் என்றீர்கள் என்றானாம்....!பனிரெண்டு நாட்கள் பதிவுகள் ஏதும்  எழுதாமல் (எழுத முடியாமல் ) இருந்தேன் நேற்றிரவு யதாஸ்தானத்துக்கு  வந்ததும்   சில பதிவுகளை மேய்ந்தேன் எங்கள் ப்ளாகில் நௌஷட் எம் எஸ் வி பற்றிய பதிவு படித்ததும் ஆச்சரியப்பட்டேன்  ஒரு முகம் காட்ட விரும்பாதவரின்  பதிவில் முகவரியும்  முகமும் காட்டாத ஒருவரின்  படம்தான் என்னை ஆச்சரியப்பட  வைத்தது  திருமதி அதிராவுக்கு பெலேட்டெட்  பிறந்த நாள் வாழ்த்துகள் அவரது புகைப்படத்தை சுட்டு இங்கு பதிவிடுகிறேன் தவறு இல்லை என்று நினைக்கிறேன் ஒருமுறை வெளியான படம்தானே அதுவும் ஒரு பொதுபதிவில் வெளியானது சும்மா சொல்லக் கூடாது கன கம்பீரமாக இருக்கிறார் 

பலரும்பதிவுகள் எழுதி ஷெட்யூல் செய்து வெளியிடுவதாக அறிகிறேன் ஆனால் நான் ஷெட்யூல் செய்வது  பப்லிஷ் ஆக மாட்டேன்  என்கிறது  ஏதாவது சூஷ்மம் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தலாமே 

 முன்பொரு முறை நான் கற்பனையாக எழுதி இருந்த எதுவும் நிகழவில்லை நான் எழுதாததை ஒரு இருவர் தவிர யாரும் கண்டு கொள்ள வில்லை  எல்லாம் நன்மைக்கே     


62 comments:

 1. ஜோக்கையும், கவிதையையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. எந்த ஜோக் என்று சொல்லி இருக்கலாமோ என்பெரனுக்கு தமிழ் எழுதத் தெரியாது தங்கிலீஷில் எழுத்யதை தமிழில் மாற்றினேன்

   Delete
 2. அதிராவுக்கு மறுபடியும் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் எழுதிய கதைக்கு அவர் அனுப்பி வைத்த படத்தைதான் நான் வெளியிட்டேன். இந்தப் படத்தையும் எங்கள் தளத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னரே வெளியிட்டிருந்தேன்!

  :))

  ReplyDelete
  Replies
  1. 14 வயசுப் பெண்ணின் புகைப்படத்தை அவர் அனுமதியுடந்தான் வெளியிட்டீர்களா ஸ்ரீராம்? (16 - 2)

   Delete
  2. //அவர் அனுமதியுடந்தான் வெளியிட்டீர்களா ஸ்ரீராம்?//

   ஹா ஹா ஹா கர்:) டவுட் இருக்கட்டும்.. முதல்ல மீயை வாழ்த்துங்கோ:)..

   ஸ்ரீராமுக்குத்தான் ரொம்ப மறதி ஆச்சே:).. அது வெளிவந்தது 21/02/2017 இல்:)...

   Delete
  3. @ஸ்ரீராம் முகநூலில் திரு ரிஷபன் அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் மாதங்கி மாலியின்படமும்முகநூலில் இருக்கிறது இப்போது அதிராவின் படம்காலம் மாறுகிறது உங்கள் படமும் பொது வெளிக்கு வரலாமே

   Delete
  4. @நெத இது அதிராவின் படம் என்று நினைக்கிறேன் அவரது மகளது அல்ல/ ( 14 வயசு .?)

   Delete
  5. @ அதிரா அதுதானே முதலில் வாழ்த்திவிட்டு கதைக்கலாம் அல்லோ

   Delete
  6. //ஸ்ரீராமுக்குத்தான் ரொம்ப மறதி ஆச்சே:).. அது வெளிவந்தது 21/02/2017 இல்:)...//

   அப்படி இல்லை, சரியான திகதி நினைவில்லை என்றேன்.

   Delete
  7. / ஸ்ரீராம் முகநூலில் திரு ரிஷபன் அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் மாதங்கி மாலியின்படமும்முகநூலில் இருக்கிறது///....   இருக்கலாம். அது அவரவர் விருப்பம் ஸார். ரிஷபன் சாரே கூட தனது முடிவை மாற்றிக்கொண்டு விட்டார்.

   Delete
  8. நெத இது அதிராவின் படம் என்று நினைக்கிறேன் அவரது மகளது அல்ல/ ( 14 வயசு .?)//

   ஹா ஹா ஹா சார் அது அதிராவைக் கலாய்க்கறதுக்காகச் சொல்றது...அவங்க வயது 80 ஹா ஹா ஹா ஹா..அதிரா மீ எஸ்கேப்...நான் உங்கட தேம்ஸ்ல ஒளிஞ்சுக்க போறேன்...உங்களால கண்டுபிடிக்க முடியாதே...

   கீதா

   Delete
  9. ஸார் நீங்கதான் நேர்லயே ஸ்ரீராமைப் பார்த்துட்டீங்களே!!! அப்புறம் எதுக்கு புகைப்படம்....

   கீதா

   Delete
  10. ஸ்ரீராம் புகைப்படத்தோடு எங்கள் பிளாக்குக்கு ஒரு ரெசிப்பி எழுதியிருக்கிறேன். அவர் எப்போ வெளியிடுவார் என்று தெரியாது.

   அதிரா எப்போதும் ஸ்வீட் 16 என்று சொல்வதால், கலாய்த்தேன். இங்கும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்குச் சேர்த்தே சொல்லிவிடுகிறேன்.

   Delete
  11. ஸ்ரீராமின் எங்கள் ப்ளாக் கொடுத்து வைத்த தளம்

   Delete
  12. @ கீதா நான்பெற்ற இன்பம் எல்லோரும்பெற விரும்புகிறேன் அவ்வளவுதான்

   Delete
 3. இரசிக்க வைத்த கதம்பம் ஜயா.

  ஐயா செட்யூல்ட் தேதி, நேர்ம் சரி செய்த பிறகு பப்ளிஷ் பட்டனை க்ளிக் செய்து வைத்தீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. முயற்சி செய்து பார்க்க வேண்டும் ஜி

   Delete
 4. ஜோக்குகளை ரசித்தேன். கவிதையை ருசித்தேன்.
  அதிராவுக்கு என் வாழ்த்துகள்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்

   Delete
 5. முதல் நகைச்சுவை ரொம்பவே ரசித்தேன்! பேரனின் கவிதையும் சிறப்பு! ப்ளாக் பக்கம் முன்பு போல நேரம் ஒதுக்க முடியவில்லை! வார இதழ்களில் வரும் என் படைப்புக்களை அவ்வப்போது பதிவேற்றுவதோடு சரி! இந்த வருடம் நிலைமை சீராகும் என்று நினைக்கிறேன்! வாழ்த்துக்கள் சார்!நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எங்கே காணோமே என்றுதான் தகவல் அனுப்பி இருந்தேன் கை மேல் பலன் நன்றி சார்

   Delete
 6. "இருவரையும் பார்த்தால் கமல் ஸ்ரீதேவி போல இருக்கு
  நடிப்பில் அல்ல - ஆனால்
  அவ்வளவு காதல் பொருத்தம் தெரியுது." என
  அழகாகத் தான் அளந்து அடியெடுத்து
  பா புனைந்தவரைப் பாராட்டுவோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்கிலீஷில் இருந்ததை தமிழாக்கினேன் வருகைக்கு நன்றி சார்

   Delete
 7. ஹா ஹா ஹா கோபமாக கொஞ்ச நாளைக்கு இருக்கலாம் என நினைச்சால்:) அதை உடைச்சது போல ஆக்கிட்டார் ஜி எம் பி ஐயா:)... மிக்க நன்றி வாழ்த்துக்கு...

  இங்கு வாழ்த்திய:) இனி வாழ்த்தப்போகும் அனைவருக்கும் மிக்க நன்றி.. தனித் தனியே நன்றி சொல்ல ஒரே ஷை ஷையா வருது எனக்கு:)..

  பேரனின் கவிதை மிக அழகு.

  ReplyDelete
  Replies
  1. யார் மீதுகோபம் எதற்கு கோபம் என் மகளிடம் என் கருத்தை சொல்ல க் கூடாதா இன்று போல் என்றும் வாழ்க

   Delete
  2. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் நான் தன்யனாகிட்டேன்ன்ன்ன்ன்ன்:)) ஹையோ இதைப் பார்த்தால் ஸ்ரீராம் அடிக்கக் கலைக்கப்போறாரே:).. மீ தேம்ஸ்ல ஜம்ப் பண்றேன்ன்ன்ன்ன்:))

   Delete
 8. ஜோக்குகளும் உங்கள் பேரனின் கவிதையும் சூப்பர்ப் ஸார் .
  உங்க க்ராண்ட்ஸன் உங்கள் இருவரையும் எத்தனை ரசித்து கவனித்திருக்கிறார் என்பது அழகாய் விளங்குது .
  மியாவ் அதிராவுக்கு இங்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. அதிராவுக்கு வாழ்த்துகளின் குவியல்தான்

   Delete
 9. கொஞ்ச நாட்களாக காணவில்லையே உடம்பு சரியில்லையோ என கொஞ்சம் கவலையாகி விட்டது.
  ஜோக்,புகைப்படம், பேரனின் கவிதை எல்லாமே பிரமாதம்.

  ReplyDelete
  Replies
  1. உடல் நலம் முன்புபோல் இல்லையே வருகைக்கு நன்றி மேம்

   Delete
 10. ரயில் என்ஜின் வேகமெடுப்பதற்கு முன்னான நகரல் போலிருந்தது. வழக்கமான பதிவுகளின் சாயல் தென்பட்டாலே வேகமெடுத்து விடும்.

  ReplyDelete
  Replies
  1. அது சரி உங்களுக்குத் தெரியாததா இனி வேகமாக ஓடும் என்று நம்புகிறேன்

   Delete
 11. கதம்பத்தை ரசித்தேன் ஜி.எம்.பி சார்.

  ரெகுலரா (வாரத்துக்கு ஓரிரு முறையாவது) பதிவு வெளியிடம்போது, இடைவெளி இருந்தால், என்ன ஆச்சு என்று கேட்கத்தோணும். திரும்ப பெங்களூர் வந்ததும் பதிவு வந்துடுச்சு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஊருக்குப் போகுமுன்பே எழுதியது கடைசி இரண்டு மூன்று பாராக்கள் தவிர

   Delete
 12. Replies
  1. வார்த்தைக்சளில் சிக்கனம்கடை பிடிக்கிறீர்களோ நன்றி சார்

   Delete
 13. >>> ஹரி ஓம்.. ஹரி ஓம்..<<<

  தேன்.. ரசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. என் மனைவி சொன்ன ஜோக் அது வருகைக்கு நன்றி சார்

   Delete
 14. தங்களுடைய பேரனின் கவிதை அருமை..

  வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி சார் அவனுக்குத் தெரியாது நான்பதிவிடுகிறேன் என்று

   Delete
 15. அழகிய கவிதை ஐயா...மிக அருமை...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி மேம்

   Delete
 16. பதிவுகள் வரவில்லை என்றவுடன் ஊருக்கு போய் இருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

  கதம்பம் அருமை.

  ஒரு காலத்தில் சக்கைப் போடு போட்ட பாட்டின் வரிகள் தலைப்பு அருமை.

  படங்கள் நன்றாக இருக்கிறது.
  எந்த ஊர் கடற்கரை ?நீங்கள் இருவரும் நிற்கும் கடகற்கரை?

  ReplyDelete
  Replies
  1. துபாய் கடற்கரை என்று நினைக்கிறேன் 2008 ல் எடுத்தது

   Delete
 17. பேரன் கவிதை, ஜோக், அன்பு அதிரா அனைத்தும் அருமை அருமை பேஷ் பேஷ் :)

  ReplyDelete
  Replies
  1. இடைவெளி விட்டு வந்தாலும் மகிழ்ச்சியே நன்றி மேம்

   Delete
 18. ஜோக்குகள் அருமை ரசித்தோம் சார்!!

  எல்லா ஜோக்குகளும்...பேரனின் கவிதை ரொம்ப அருமை...அனைத்தும் நல்லாருக்கு சார்..

  அதிரா அவர்களுக்கு மீண்டும் பி நா வாழ்த்துகள்! (கீதா: எல்லா நாளும் பிறந்தநாள்தானே..ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறோம் என்று நான் அடிக்கடி சொல்லுவது வழக்கம்!!)

  துளசிதரன், கீதா

  கீதா: ஸார் எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் பேரனின் கவிதை. அதுவும் உங்கள் இருவரையும் அத்தனை ரசித்து எழுதியிருக்கிறார். அதிலும் ரொம்பப் பிடித்த வரிகள்
  //சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு உண்மை தெரியுமா.?
  எங்க வீட்டு சிங்கத்தை குட்டிப் பாப்பா
  மாதிரியாக்கிய பெருமை எங்க பாட்டிக்குத்தான் சேரும்.
  இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ்//

  செமை சார். பேரனுக்கு வாழ்த்துகள்!!!

  ReplyDelete
  Replies
  1. என் ஜீன்ஸ் அவனிலும் இருக்கும் தானே சின்னப் பேரனும் எழுதுகிறான் வருகைக்கு நன்ற் சார் /மேம்

   Delete
 19. சும்மா சொல்லக் கூடாது கன கம்பீரமாக இருக்கிறார் //

  ஹா ஹா ஹா ஹா இல்லை சார்...."கன" கம்பீரமா இல்லை ஸார்...."ஃபிட்டாக" கம்பீரமா இருக்கார். பின்னே ஒரு நாளைக்கு 10000 ஸ்ட்ரெப்ஸ் நடக்கிறாரே!!! ஹா ஹா ஹா...இது அவங்க குளிருக்கு திக் ஸ்வெட்டர் போட்டு எடுத்திருக்கார்...அவங்க தளத்துல பாருங்க வேற ஃபோட்டோ இருக்கு பதிவுல...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //////இது அவங்க குளிருக்கு திக் ஸ்வெட்டர் போட்டு எடுத்திருக்கார்.//

   ஹா ஹா ஹா அதே அதே மொத்தமான ஜக்கெட்[கோட்]:) ஹையோ ஹையோ:)

   Delete
  2. இன்னொன்று கீதா, ஜி எம் பி ஐயா சொன்ன “கன” என்பதன் அர்த்தம்.. “நல்ல” என வரும்:).

   Delete
  3. கீதா அதிராவின் இன்னொரு படமா இன்னும் நான்பார்க்கவில்லை கன கம்பீரம் என்பதும் சொல்வழக்குதான்

   Delete
  4. @ அதிரா பெண்களுக்கே உரித்தான முறையில் கீதா கவனிக்கிறார்

   Delete
  5. @அதிரா சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்

   Delete
 20. தந்தையின் சிக்னேச்சர் ஒரு புறம் யதார்த்தத்தையும் மறுபுறம் உண்மையான அவலத்தையும் எடுத்துரைத்தது.

  ReplyDelete
  Replies
  1. சும்மா ஜோக்க்காக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்

   Delete
 21. தந்தையின் சிக்னேச்சரும், ஹரி ஓம் ஏற்கெனவே படிச்சேன். உங்க பேரன் நன்றாகக் கவனித்து எழுதி இருக்கார். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் படிக்காததே இருக்காதோ வருகை மகிழ்வு தருகிறது மேம்

   Delete
 22. //..ஒரு முகம் காட்ட விரும்பாதவரின் பதிவில் ..//\

  பலமுகம் காட்டுகிறவராயிற்றே ! ஒரு முகம் காட்டி ஏன் போரடிக்கவேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. முகம் என்பதை காட்ட திறமையைப் பற்றி கூறுகிறீர்கள் நான் அவரது ஃபிசிகல் முகம் பற்றி எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியுமென்று எனக்கும் தெரியும்

   Delete
 23. இந்த ஆசிரியர் மாணவன் ஜோக் எனக்கு whatsappல் வந்தது. பேரனின் கவிதை அருமை.

  என் வலை தளம் http://onlinethinnai.blogspot.com

  ReplyDelete