மனைவியை நேசிப்பவர்கள்
--------------------------------------------------
இந்த
மாதம் ஆறாம் தேதி என் வீட்டில்
மீண்டும் மகளிர் சக்தியைக் கண்டேன்
மூன்றாம் முறையாக என்வீட்டில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடை பெற்றது பலருக்கும்
இது கேள்விக்குறி எழுப்பலாம் மனைவியை நேசிப்பவன் நான் அவள் விருப்பத்துக்கு
எதிர்ப்பு தெரிவிக்க இயலுமா. ?என் வழியிலேயே சிந்தித்துப் பார்த்தேன் என்
மனைவிக்கு என்ற தேவைகள் மிகச் சொற்பமே
எனக்கும் அம்மாதிரியே ஊருக்கு உபதேசம் உன்
வீட்டில் மட்டும் ஏன் இப்படி?ஒரே பதில் மனைவியை நேசிப்பவர்களுக்கு ………
இதனால் உண்டாகும் சாதக
பாதகங்களைப்பட்டியல் இடுகிறேன் முதலில்
சாதகங்கள் என் மனைவிக்கு சோஷியல் நட்புகளை வளர்க்க உதவுகிறது உரக்கச் சொல்லும் போது அதுவே ஒருபயிற்சியாகிறது ஒரு நிகழ்ச்சியை
ஆர்கனைஸ் செய்யும் பலத்தையும் பெருமையையும்
தருகிறது என்றாவது வீட்டுக்கு வரும் உறவுகளை ஒருகாரணம் கொண்டு வரவேற்க உதவுகிறது நட்புகள் மத்தியில் தன்னைப் பறை
சாற்றிக் கொள்ள உதவுகிறதுஎன்னையும்
பலருக்குத் தெரிவிக்க உதவுகிறது
பாதகங்களாக….
வரவே இல்லாதவனுக்குச் செலவுகள் கூடுகிறது (என் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்
என்று மனைவி சொல்லுவாள்)
இவர்கள்
பாராயணம் செய்யும் போது சுமார் மூன்று மணிநேரம் எனக்கு ஹவுஸ் அரெஸ்ட் இவளது
நட்புகள் என்னையும் பங்கு கொள்ளச் சொல்லி
வற்புறுத்துவார்கள் இல்லாவிட்டால் நான்
என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் அது
மனைவிக்கு விருப்பமில்லாதது நான் மனைவியை
நேசிப்பவன் ………………முடிந்தவரை என் கருத்துகளை என்மனைவிக்குச் சொல்வேன் அவளும்
என்னை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது
| வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் கூடவே பதினொரு ரூபாய்பணம் அதென்ன பதினொன்று |
| இரு இனிப்புகள் ஒரு காரம் கூடவே ஒரு ஸ்டீல் டப்பா |
| மகளிர் சக்தியினர் சிலர் |
| இன்னொரு படம் |
| பாரா யணத்துக்கு ரெடி மேலே பாராயணக் காணொளிகள் கீழே மனதை ஒருமுகப்படுத்த ஒரு காணொளி |