நினைவுகள் புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

அரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்


                                          அரிய படங்கள் நினைவுப்பெட்டகங்கள்
                                           -------------------------------------------------------------
சில பதிவுகளுக்குப் புகைப்படமிட வேண்டும் என்றால்  நிகழ்வுகள் டிஜிடல் புகைப்படங்களுக்கு நான் பழக்கப் படும்முன் நடந்தவை இருந்தாலும்  ஃபில்ம் சுருளிலும்  காணொளியிலும்  இருப்பவை  அம்மாதிரி படங்களுக்காக  தேடியபோது வந்து சிக்கின பல புகைப்படங்கள்  அதன் பின்னணி அந்தப படம்   எடுத்த நிகழ்வுகளையும்  கொண்டு வந்தது  அம்மாதிரியான சில அரிய புகைப்படங்களைப்  பதிவிட்டுப் பகிர்கிறேன் 

இந்தப் புகைப்படம்  1970 வாக்கில் எடுத்தது  திருப்பதிக்கு நாங்கள்  நடந்தே சென்றோம்  ஏறத்தாழ அதுவே எனது முதல் திருப்பதிப் பயணம் நான் என் மனைவி இருமகன்கள் ( குழந்தைகள் ) என்  மச்சினன்  என் நண்பன் அவனது சகோதரன்   ஆகியோர் சென்று வந்தோம் முதல் காரணம் என்  இளைய மகனுக்கு ஒன்றரை வயதிருக்கும்   மொட்டை அடிப்பதே முக்கிய நோக்கம் ஆனால் மனைவி தவிர எல்லோரும்  மொட்டை அடித்துக் கொண்டோம் என் மூத்த மகனுக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. ஆனால் அவனையும்  மீறி அவனுக்கும்மொட்டை அடித்தோம்  அடித்து முடித்து மற்றவர்களுக்கும்  மொட்டைஅடிக்கும்போது இவன் கோபித்துக் கொண்டு போய் விட்டான் குழந்தையை காணவில்லையே எறு தேடியபோது ஒரு மூலையில் அழுதுகொண்டிருந்தான் என்  நண்பன அவனை க்ளிக் செய்த போது வந்தபடம் 




அந்த முறை திருப்பதி போனபோது அங்கிருந்த புஷ்கரணியில் எல்லோரும் குளித்தோம் அதன் பின்  பல முறை போயிருந்தாலும்  புஷ்கரணியில் குளிக்கவில்லை. இப்போதெல்லாம் அனுமதி உண்டா தெரியவில்லை  இதோ நானும் என்  மனைவியும்  புஷ்கரணியில்               .



திருப்பதியில் மொட்டைகள் 




எங்களுக்கு ஒரு மகன் பிறந்த பின்  ஒரு மகளுக்கு ஆசைப்பட்டோம்   ஆனால் ஆசைகளெல்லாம் நிறைவேறுகிறதா என்ன  . இரண்டாம் குழந்தையும் ஆணாகப் பிறந்தது அப்போதுஅவனுக்குப் பெண் உடை உடுத்தி அழகு பார்த்தோம்  என் இரண்டாம் மகன் பெண்குழந்தை உடையில்



  திரு வெங்கட நாகராஜ்  அரக்கு வாலி  பயணம் பற்றி எழுதி வருகிறார்  நாங்கள் சோனாபேடாவில் (கோராபுட்)  என்  நண்பன் ( சகலை) வீட்டுக்குச் சென்றிருந்தோம்  அவன்  எங்களை அரக்கு வாலிக்கு அழைத்துச் சென்றான்  நாகராஜ் விவரிக்கும் எந்தகாட்சியும்  என் நினைவில் இல்லை. ஒரு பிக்னிக் போலப் போய் வந்தோம்   அங்கே இருந்த ட்ரைபல் பெண்கள் எங்களைக் கவர்ந்தார்கள் என்  மனைவிக்கு அவர்கள் உதவியுடன் உடை அணிவித்து ப் பார்த்தோம்   அது இதோ கீழே (1977) 





மூவாறு வயதில்  பாவாடை தாவணியில் பார்த்த உருவம் (1963) 
அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்தபோது  நான் ட்யூஷன் எடுத்த  குழந்தைகளுடன் (1957)
சென்ற பதிவில் படகுப் பயணத்தில் விடுபட்ட புகைப்படங்கள்


ஹொகனேகலில்  பரிசலில்
மலை உச்சியில் இருந்து சிறார் குதிக்கத் தயார்