தர்க்கமா குதர்க்கமா
--------------------------------
கேள்வி:- இரண்டுபேர்
சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக
இருக்கிறதுமற்றவருடைய முகம் அழுக்காக இருக்கிறது. இருவரில் யார் முகத்தை
கழுவுவார்கள். ?
பதில்:- அழுக்கான
முகத்தோடு இருப்பவரே கழுவுவார்,
தவறு,! தூய்மையான
முகத்தை உடையவரே கழுவுவார். யோசித்துப்பார். அழுக்கான முகத்துடன் இருப்பவர்
சுத்தமான முகத்துடன் இருப்பவரைப்பார்த்து தன் முகமும் அதேபோல் இருப்பதாக
நினைத்துக் கொள்வார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து தன்
முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக்
கொள்வார்.எனவே சுத்தமான முகம் உடையவரே முகத்தைக் கழுவுவார்...!
மிகவும்
சாமர்த்தியமான பதில்தான் இன்னொரு கேள்வி கேளுங்கள்...
கேள்வி:- இரண்டுபேர்
சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறதுமற்றவரது
முகம் அழுக்காக இருக்கிறது யார் முகத்தைக் கழுவுவார்.?
பதில்:- மீண்டும்
அதே கேள்வியா?இதற்கான பதில் தெரிந்ததுதானே. தூய்மையான முகத்துடன் இருப்பவர்தான்
கழுவுவார்.
தவறு, .! இருவருமே
தங்கள் முகத்தைக் கழுவுவார்கள். ஒரு சின்ன லாஜிக்கை நினைத்துப் பார். அழுக்கு
முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்ப்பார். எனவே தனது
முகமும் சுத்தமாக இருப்பதாக நினைப்பார். சுத்தமான முகத்தை உடையவர் ச்ழுக்கான
முகமுடையவரைப் பார்த்து தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக்
தன் முகத்தை கழுவுவார். அதைப் பார்த்து அழுக்கான
முகமுடையவரும் தன் முகத்தைக் கழுவுவார்.எனவே இருவருமே தங்கள் முகத்தைக்
கழுவுவார்கள்.
நான் இதை
யோசித்துப்பார்க்கவில்லை. எனது தர்க்கத்தில் இப்படிஒரு தவறா.?
மீண்டும் கேள்வி
கேளுங்கள்
கேள்வி:- இரண்டு
பேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள்.ஒருவர்
முகம் சுத்தமாக
இருக்கிறது. மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தை கழுவுவார்.?
பதில்:- மீண்டும்
அதே கேள்வி....! இருவருமே முகத்தைக் கழுவுவார்கள்.
தவறு. இருவருமே கழுவ
மாட்டார்கள். அழுக்கான முகமுடையவர் சுத்தமான முகம் இருப்பவரைப்பார்த்துத் தன்
முகமும் சுத்தமாக இருப்பதாகநினைத்துக் கொள்வார். சுத்தமான முகமுடையவர் மற்றவரைப்
பார்த்துத் தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வார். ஆனால் அழுக்கான
முகமுடையவர் தன் முகத்தைக் கழுவாதது பார்த்துத் தானும் கழுவமாட்டார். எனவே
இருவருமே கழுவ மாட்டார்கள்.
தயவு செய்து இன்னொரு
முறை தேர்வு வையுங்கள்
கேள்வி:- இரண்டுபேர்
சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவர் முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவர்
முகம் அழுக்காக இருக்கிறதுயார் முகத்தைக் கழுவுவார்கள்.?
பதில்:- இருவருமே
கழுவ மாட்டார்கள்....!
தவறு.இரண்டுபேர்
சிம்னியிலிருந்து கீழே வரும்போது ஒருவர் மட்டும் தூய்மையான முகத்துடனும் மற்றவர்
அழுக்கான முகத்துடனும் எப்படி இருக்க முடியும் .எனவே கேள்வியே முட்டாள்தனமானது.
முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயன்றால் விடைகளும்
முட்டாள்தனமாகத்தான் இருக்கும்.
யூத மதத்தைச்
சார்ந்த ராபி ஷ்வார்ட்ஸிடம் ஸீன் கோல்ட்ஸ்டீன்
என்ற 20 வயது இளைஞன் தான் தத்துவத்தில்
பட்டம் பெற்றிருப்பதாகவும் சாக்ரடீஸின் தர்க்கத்திலும் டாக்டர் பட்டம்
பெற்றிருப்பதாகவும் கூறி தால்மத் பற்றிப் படிக்கக் கருதுவதாகவும் தெரிவித்தான்
அதற்கு ராபி
வைக்கும் பரிசோதனையில் வெற்றி பெற்றால் அதைச் சொல்லித் தருவதாகக் கூறி வைத்த
பரீட்சையே மேலே படித்தது.
உண்மையைத்
தேடுவதுதான் முக்கியமே தவிர
விடையைக்கண்டுபிடிப்பது முக்கியமல்ல. அண்மையில் இறையன்பு அவர்கள் எழுதி
இருந்ததைப் படித்ததில் இருந்து
இன்னொரு பகுதி
காலை நேரத்தில்
ஒருவர் புத்தரிடம் வந்து ”கடவுள் இருக்கிறார் அல்லவா
“ என்று கேட்டார்.
புத்தர் ” இல்லை” என்றார்
மதியம் ஒருவர் வந்து
கேட்டார்” கடவுள் இல்லைதானே”
புத்தர் “
இருக்கிறார் “ என்று கூறினார்.
மாலையில் ஒருவர்
வந்து “ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை “ என்றார்.
உடனே புத்தர் “ நீ
சரியான கேள்வியைக் கேட்கிறாய்” என்றார்.
புத்தருக்கு அருகில்
இருந்தவருக்கு குழப்பமாகி விட்டது. “ நீங்கள் ஒரே கேள்விக்கு மூன்று விதமான
பதில்களைச்சொல்கிறீர்களே ஏன் “ என்று கேட்டார்.
கேள்வி
கேட்டவர்களுக்கு ஏற்ற மாதிரி பதில் இருந்தது “என்றார் புத்தர்.
“காலையில் வந்தவர்
கடவுள் இருக்கிறார் என்று ஏற்கனவே முடிவு செய்து கொண்டு வந்து என்னிடம் அந்தக்
கேள்வியைக் கேட்டார். நான்’ இல்லை’ என்று சொன்னேன். அதனால் அவர் சுயமாகத் தேடத்
துவங்குவார். மதியம் வந்தவர் ‘கடவுளில்லை’ என்று முடிவு செய்துவிட்டு என்னிடம்வந்து கேட்டார்..அவரிடம் இருக்கிறார் என்று
சொன்னால்தான் தானாகத் தேடலைத் தொடங்குவார். மூன்றாம் நபரோ ஏற்கனவே
தேடிக்கொண்டிருக்கிறாரெனவே அவர் பார்வை சரியானது என்று விளக்கினேன். கேள்விகளுக்கு
நான் பதில் அளிப்பதில்லை.கேள்வி கேட்பவரைப் பொறுத்தே பதில் அளிக்கிறேன் “ என்றார்.
.
.