பதிவர் விழா-எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் விழா-எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

புதுகை வலைப்பதிவர் விழா- என் சில எண்ணங்கள்


                                       புதுகை வலைப் பதிவர் விழா- என் சில எண்ணங்கள்
                                       ----------------------------------------------------------------------------------



வலைப் பதிவர் விழா புதுகையில் களை கட்டிக் கொண்டிருக்கிறது. விழாவுக்குப் போனோமா வந்தோமா என்றில்லாமல்  எதையும் செய்ய இயலாத நிலையில் இது அப்படி இருக்கலாம் அது இப்படி இருக்கலாம் என்று கருத்tதுக் கூறுவது முறையா தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்தபின் சொல்வதை விட முன்பே சொல்வது தவறாகாது என்று நினைக்கிறேன்
ஏறத்தாழ 200 பதிவர்கள் வருகை எதிர்பார்க்கப் படுகிறது. எண்ணிக்கை மாறலாம் பலர் முதல் நாள் வரலாம் பலர் அன்று காலை வரலாம் இம்மாதிரியான நிகழ்ச்சியை சரிவர இயக்காவிட்டால் குழப்பமே மிஞ்சும் இதைக் கருத்தில் கொண்டே வலைப் பதிவர் குழுவுக்கு  முதலிலேயே நேர விவரணங்களுடன்  நிகழ்ச்சி நிரல் தயார் செய்து பதிவர்களுக்குத் தெரியப் படுத்தக் கோரி இருந்தேன் எல்லோர் வருகையும் பதிவு செய்யப் படவேண்டும்  அறி முகப் படுத்தப் பட வேண்டும் கையேட்டுப் புத்தகங்கள் வழங்கப் படவேண்டும்  நேரம் சரியாக பின் பற்றப் படாவிட்டால்  குழப்பம் உண்டாகும்.  தமிழ் மின் இலக்கிய குழுவோடு கைக் கோர்த்து போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.  சிறப்பு விருந்தினர் என்று சிலர் ( பலர்?) அழைக்கப்பட இருக்கின்றனர்.  அவர்களும் அவர்கள் பங்குக்குப் பேசாமல் இருக்கப் போவதில்லை. இதல்லாமல் புத்தக வெளியீடு என்றும் இருக்கிறது. சிலர் விசேஷமாகக் கௌரவப் படுத்தப் போவதாகவும் நினைக்கிறேன் கால இயந்திரத்தின் துணையோடு கற்பனைகளில் சிலர் மிதக்கிறார்கள்.  காலை உணவு மதிய உணவு மாலை தேனீர் போன்றவை பற்றிய விவரங்கள் ஏதும் கொடுக்கப் பட்டிருக்கிறதா.  வலைப்பதிவர் போட்டிக்கு நடுவர்கள் யார் ? யாராயிருந்தாலும் அவர்களுக்கு வலைப் பதிவர்களின் அறிமுகம் இருக்கக் கூடாது என்று எண்ணுகிறேன்  முடிவு சொல்லும்போது அறியாமலேயே  bias  இருக்கக் கூடாது.  இதை எல்லாம் சொல்லாமல் போய்க் கொண்டிருக்கலாம்  இருந்தாலும் கூடப் பிறந்த சுபாவம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இக்கருத்துகள் யார் பணியையும் குறை கூற அல்ல. பதிவர் விழா சிறக்கவே என்று கூற விரும்புகிறேன்  without any prejudice மதுரையில் நடந்ததைவிட சிறப்பாக இருக்கவேண்டும் என்பதே நோக்கம்