பதிவு பழையது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவு பழையது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 டிசம்பர், 2020

பழைய கள் புது மொந்தையில்

பழைய கள் புது மொந்தையில்

அது என்னவோ தெரியவில்லைமுன்பெல்லாம் பெண்கள்பற்றி நிறையவே எழுதி வந்தேன் இப்போது எதை எழுதலாம் என்றால் முன்பு எழுதியதே இன்று  ரெலெவண்ட் ஆக இருப்பது [போல் இருக்கிறது ஆகவே அதுவே  மீள்பதிவாக

 

பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும், முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்.நிறைய எழுதியும் எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன். உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.?

 

 

 அழுகை என்பது ஒரு இழப்பின் வெளிப்பாடு;

கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.,

ஆனந்தத்திலும் வரலாம், துக்கத்திலும் வரலாம்.

எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்

பிரயோகப்படுத்தப்படும் கண்ணீரின் பொருள்

தெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்.

 

பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,

ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.

அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்

படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..

திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..

மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது

பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்

போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.

ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வழ்வில்

தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்

அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்

எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்

காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை

அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.

 

ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்

அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.

கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.

அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.

அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது.

 

உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.

ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்

பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.

ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;

இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்

பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.

தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்

படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது

இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்

எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம்பரோல்.”

                                 :      .               .                                  .