இப்பூவுலகே எனக்கன்றோ
-------------------------------------------------
இப்பூவுலகே எனக்கன்றோ
------------------------------------
பேரூந்து ஒன்றில் பயணம் செய்தேன்.
பேரழகி ஒருத்தியைப் பக்கத்தில் பார்த்தேன்.
என்ன அழகு இவள்,நானேன் இல்லை அவள் போல்,
எண்ணி மருகிய என் கவனம் சிதறியது.
நிறுத்தத்தில் அவள் இறங்க எழுந்தவள்
தடுமாறி கீழே விழப் போனவளைக்
கை தூக்கிப்பிடித்து நிறுத்தினேன்.
புன்னகைத்து நன்றி சொன்னவள் செல்கையில்
கவனித்தேன் அவளுக்குக் கால் ஒன்று கட்டை என்று.
ஆண்டவனே, நான் குறைப் படுகையில்
என்னை மன்னித்து விடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கால்கள்.
மென்று சுவைக்க மிட்டாய் வாங்க
பெட்டிக்கடைப் பக்கம் சென்றேன்.
மலர்ந்து சிரித்த சிறுவனுடன் சிறிது நேரம்,
பேசிச்செல்ல மனம் மிக விழைந்தது.
தாமதமானாலும் பாதகமில்லை, பேச்சுக்கொடுத்தேன்.
காசு கொடுத்துப் போகையிலே, அதனைத்
தடவிப் பார்த்த பையன் நன்றி சொன்னான்;
கண்ணில்லா அவனிடம் அன்பாய்ப் பேசியதற்கு.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்து விடு.
எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.
தெரு ஓரத்தில் ஆடிக்கொண்டிருந்த
சிறுவர்கள் மத்தியில் ,பார்த்துப் பரவசமாகி
நிற்கும் நானறிந்த சிறுவனிடம் அவன் ஏன்
ஆடப் போகவில்லை என்றே கேட்டேன்
மலங்க விழித்த அவனுக்கு, காதிரண்டும்
கேளாது என்பதனை மறந்து விட்ட நான்.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்துவிடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கேட்கும் காதுகள்.
எ ங்கும் என்னை நடத்திச் செல்ல நல்ல
இரு கால்களும்,
அழகான அஸ்தமனத்தில் ஆதவனை ரசிக்க
இரு கண்களும்,
என்னைச் சுற்றி நடப்பதைக் கிரகிக்க நல்ல
இரு காதுகளும்
இருக்கையிலே குறைப்படுதல் தவறன்றோ...
இந்த உலகையே ரசிக்க வைக்க,
எல்லாப் புலன்களும் எனக்கிருக்க
இந்தப் பூவுலகே எனக்கன்றோ.!
============================================
------------------------------------
பேரூந்து ஒன்றில் பயணம் செய்தேன்.
பேரழகி ஒருத்தியைப் பக்கத்தில் பார்த்தேன்.
என்ன அழகு இவள்,நானேன் இல்லை அவள் போல்,
எண்ணி மருகிய என் கவனம் சிதறியது.
நிறுத்தத்தில் அவள் இறங்க எழுந்தவள்
தடுமாறி கீழே விழப் போனவளைக்
கை தூக்கிப்பிடித்து நிறுத்தினேன்.
புன்னகைத்து நன்றி சொன்னவள் செல்கையில்
கவனித்தேன் அவளுக்குக் கால் ஒன்று கட்டை என்று.
ஆண்டவனே, நான் குறைப் படுகையில்
என்னை மன்னித்து விடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கால்கள்.
மென்று சுவைக்க மிட்டாய் வாங்க
பெட்டிக்கடைப் பக்கம் சென்றேன்.
மலர்ந்து சிரித்த சிறுவனுடன் சிறிது நேரம்,
பேசிச்செல்ல மனம் மிக விழைந்தது.
தாமதமானாலும் பாதகமில்லை, பேச்சுக்கொடுத்தேன்.
காசு கொடுத்துப் போகையிலே, அதனைத்
தடவிப் பார்த்த பையன் நன்றி சொன்னான்;
கண்ணில்லா அவனிடம் அன்பாய்ப் பேசியதற்கு.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்து விடு.
எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.
தெரு ஓரத்தில் ஆடிக்கொண்டிருந்த
சிறுவர்கள் மத்தியில் ,பார்த்துப் பரவசமாகி
நிற்கும் நானறிந்த சிறுவனிடம் அவன் ஏன்
ஆடப் போகவில்லை என்றே கேட்டேன்
மலங்க விழித்த அவனுக்கு, காதிரண்டும்
கேளாது என்பதனை மறந்து விட்ட நான்.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்துவிடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கேட்கும் காதுகள்.
எ ங்கும் என்னை நடத்திச் செல்ல நல்ல
இரு கால்களும்,
அழகான அஸ்தமனத்தில் ஆதவனை ரசிக்க
இரு கண்களும்,
என்னைச் சுற்றி நடப்பதைக் கிரகிக்க நல்ல
இரு காதுகளும்
இருக்கையிலே குறைப்படுதல் தவறன்றோ...
இந்த உலகையே ரசிக்க வைக்க,
எல்லாப் புலன்களும் எனக்கிருக்க
இந்தப் பூவுலகே எனக்கன்றோ.!
============================================
(ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுதியது)
இந்தப் பாட்டும் என் நினைவில் ஓடும் நல்ல வேளை பாட்டும்காணொளியும் கிடைத்தது யாருக்காவது இப்ப்பாடல் கேட்ட நினைவிருக்கிறதா
பாடல் வரிகள்
--------------------------------------------
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு
பாடல் வரிகள்
பல்லவி: சிந்தை அறிந்து வாடி செல்வக் குமரன்
செந்தூர் இடம் தங்கும் பொன் தாள் மலர் கந்தன் (சிந்தை)
அப : அந்தோ என் ஆசை எல்லாம் கொள்ளை கொண்டானே
ஆறுமுக வடிவேலன் ஸிவபாலன் (சிந்தை)
ஹரிகாம்போஜி
ச 1: அன்று வந்து போனது அவர்க்கு நினைவில்லையோ
ஆரிட்ட போதனையோ அன்புமனம் வல்லையோ
ஒன்றுபட்டிருந்த உறுதி மனம் இல்லையோ
உத்தேசம் தான் என்ன சித்தன் மகன் குஹன் (சிந்தை)
ஸுரடி
ச 2: சின்னஞ் சிறு வயதில் என்னை மாலை இட்டானே
சிரிக்கச் சிரிக்கப் பேசி என் கைவளை தொட்டானே
அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அடிமைப் பெண்டீரென்றே முடிய மறந்திட்டானே (சிந்தை)
காபி
ச3: கட்டி தொட்டுமே இதழ்க் கனி அமுதம் பொழிந்தான்
கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்
எட்டுக்குடி வேலவன் இசை அமுதம் படித்தான்
என்றும் பிரியேன் என்று என் கைமேல் அடித்தான் (சிந்தை)
தந்தையர் தினநினைவுகள் --------------------------------------------
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு
ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும்
கவனம் கவனம் என்றே பதறினாள்
ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த தாய்.
இன்று நான் பள்ளியில் பந்தயத்தில்
வென்ற நாள் நானே முதல்வன், நானே முதல்வன்
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பா, உன்னையும் நான் வெல்வேன்
பந்தயத்தில் என்னோடு ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்
ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன்
உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன்
என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு
என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு
என்றே அப்பனும் மழுப்பிடஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.
மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.
ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை.
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன்.
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில்
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை.
என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது,
நானே முதல்வன், நானே முதல்வன் என்றே
முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை
தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான்.
இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில்
விரிகிறது ஒரு முறுவல், .