பொழுது போக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொழுது போக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூன், 2021

அனாக்ராம் விளையாட்டு

 அனாக்ராம்  விளையாட்டு

 DILIP  VENGSARKAR. . எழுத்துக்களை இடம் மாற்றினால்  A SPARKLING DRIVE

 

PRINCESS DIANA------------- END IN A CAR SPIN

 

MONICA LEWINSKY-------- NICE SILKY WOMAN

 

DORMITORY-------------------DIRTY ROOM

 

ASTRONOMER-----------------MOON STARER

 

DESPERATION-----------------A ROPE ENDS IT

 

THE EYES---------------------THEY SEE

 

A DECIMAL POINT---------I’M A DOT IN PLACE

 

AND FINALLY

 

MOTHER IN LAW-----------WOMAN HITLER

 


ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

பொழுது போக்கும் விதங்கள்


                                 பொழுது போக்கும் விதங்கள்
                                  -----------------------------------------


எனக்கு எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் an idle mind is a devil”s den என்பார்கள்  எதையாவது செய்ய வேண்டு மென்றால் எதைச் செய்வது எழுதுவது ஒன்றே இப்போது செய்ய முடிகிற ஒன்று  இருந்தாலும்  அது பூரண திருப்தி தருவதில்லை.  தஞ்சாவூர் ஓவியங்களும்  கண்ணாடி ஓவியங்களும் முன் போல்தீட்ட முடிவதில்லை. கண்களும் கையும்   ஒருமித்து வேலை செய்வது சிரமமாய் இருக்கிறது புதிதாக க்வில்லிங் கற்றுக் கொண்டு  சில காதணிகள் செய்தேன்  ஆனால் என் வீட்டில் பெண்குழந்தைகள் இல்லாததால் அவற்றை அணிவதற்கு  யாரைத் தேடுவது. அதையும் விருப்பமாக யார் அணிந்து கொள்வார்கள்  இருந்தும்  இந்த டெரகோட்டா அணிகலன் செய்ய வேண்டும்  என்று நினைத்தேன்   நினைத்ததைச் செய்து முடிப்பவன்  அல்லவா. ஒரு பதக்கத்துடன்  கூடிய மாலையும்  ஜிமிக்கியும் செய்தேன்  அதை என் மனைவி இத்தனை வயதுக்கு மேல் ஜிமிக்கியா என்று மறுக்கிறார்  என் ஆசையைப் பூர்த்தி செய்ய செய்ததை ஒரு முறை அணியச் சொன்னேன்  . அணிந்து காண்பித்தாள்  ஆனால்  பதிவில் போடக்கூடாது என்றும்  தடை விதித்து விட்டாள்  செய்ததை ஒரு படத்துக்கு அணிவித்துப் பார்த்திருக்கிறேன் 

டெரகோட்டா அணிகலன் படத்துக்கு


சில நேரங்கள் பழைய புகைப்படங்களைப் பார்த்து அவற்றின் நினைவில் மகிழ்வதும்  உண்டு என் மறைந்த அக்காவின்  மகனுக்கு  சஷ்டியப்த பூர்த்தி வர அழைப்பு இருந்தது. இவனுக்கு அனுபவங்கள் சற்றுக் கூடுதலே ஆர்மியில் காப்டனாக இருந்தான் பல தொழிற்சாலைகளில்  பணி புரிந்திருக்கிறான் கடைசியாக பி இ எம் எல் லில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றான் இத்தனை வயதுக்கு மேல் அவன் படித்து முனைவர்  பட்டம்  பெற்று இப்போது  ஒரு கல்லூரியில் ப்ரொஃபெசராக இருக்கிறான் அவனதுஅறுபதாம்  ஆண்டு நிறைவின்  போது எடுத்தபடம்

அறுபதாம் ஆண்டு நிறைவு விழா


என்னிடம் ஒரு சாம்சங் ஹாண்டி காம் இருக்கிறது அது இப்போது பழுதாய் விட்டது. அதில் வீடியோக்களை டேப்பில் பதிவு செய்வோம் அப்படிப் பதிவு செய்த டேப்களை இப்போது பார்க்க முடிவதில்லை. நாங்கள் துபாய் சென்றிருந்தபோது  மற்றும் பல இடங்களுக்குச் சென்றபோது எடுத்த காணொளிகள் முதலிய வற்றை டிவிடி யாக அண்மையில் மாற்றினேன் ஆனால் டிவிடியிலிருந்து படங்களைச் சிறிது சிறிதாகப் பதிய முடியுமா தெரியவில்லை. அவற்றை கணினியில் ஓட விட்டு  அதில் பிடித்ததைக் காமிராவில்  எடுத்திருக்கிறேன்  சில காட்சிகள் மனதுக்கு நிறைவைத் தருகிறது என் சின்ன பேரன் ஆடிய ஆட்டங்களில் ஒன்றை இத்துடன் பதிகிறேன்


எனக்குப் பயணம் செய்யப் பிடிக்கும் . வித்தியாசமான மனிதர்கள் கலாச்சாரம் இத்யாதி இத்யாதி  விஷயங்கள் பயணத்தால் புரியவரும் இப்போது நினைத்த மாதிரி பயணப்பட முடிவதில்லை. ஆனால் என் மகன்களின் பணியே அவர்களைப் பயணம் செய்ய வைக்கிறது பெரிய  மகன் இந்தியாவின் நீள அகலங்களில் பயணிக்கிறான் அவனால் தவிர்க்க முடியாத பயணங்கள் வேலை நிமித்தமான பயணங்கள். அவனுக்கு எப்படா வீடு வந்து சேருவோம் என்று இருக்கும்  இளையமகனுக்கும் பயணங்கள் உண்டு. இப்போதெல்லாம் கிழக்காசிய நாடுகளுக்குப் பயணிக்கிறான் அவனை உலகம் சுற்றும் வாலிபன்  என்று தமாஷாக அழைக்கிறேன் அடுத்து சீனா , அதன் பின்  அமெரிக்கா  என்று ஒரு நீண்ட பயணத்திட்டம் வைத்திருக்கிறான்  இவர்கள் பயணிக்குமிடங்களுக்கு என்னையும்கூட்டிப்போக முடியாத நிலை. அண்மையில் என் இளைய மகன் பாங்காக்கிலிருந்து ஒரு படமும்  மலேசியாவில் இருந்து ஒரு படமும்  அனுப்பி இருந்தான்  அங்கும்  இந்தியாவின்   தொன்மையான கலாச்சாரங்களின்  பாதிப்பு தெரிகிறது பாங்காக் விமான நிலையத்து  புகைப்படத்தில் தேவாசுரர்கள்  அமுதம் கடையும் காட்சி போல் தெரிகிறது ஆனால் பாம்பின் மேல் இருப்பது யார் புரியவில்லை.

பாங்காக் விமான நிலையத்தில் என்  இளைய மகன்  
மலேசியா முருகன் கோவில்
கடைசியாக என் மூத்தமகன்  எனக்கு அனுப்பியது
ஒரு பிசினஸ் புள்ளி ஒரு ஜூ தொடங்கினார்  வருகைக்கு தலைக்கு ரூ100-/ கட்டணம் என்று அறிவித்தார் கூட்டமே வரவில்லை. கட்டணத்தை ரூ 50-/ என்று குறைத்தார். அப்போதும் கூட்டம் வரவில்லை. கட்டணத்தை ரூ 10-/ என்று குறைத்தும்  எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. கடைசியாக கட்டணமேதும் இல்லை. இலவச அனுமதி என்று அறிவித்தார்  கூட்டம் பிய்த்துக்கொண்டு போயிற்று அவர் பிசினஸ் புள்ளி அல்லவா  அடைத்து வைத்திருக்கும்  சிங்கத்தை வெளியில் விடப்போவதாக அறிவித்தார் வந்திருந்த கூட்டம் வாயிலில் அலை மோதிற்று திற்று . வாயிலைத்திறக்க ஆளுக்கு  ரூ200-/ கட்டணம் என்று அறிவித்தார்
 அந்த ஜூதான்  ஜியோ ஜூ....! 

எழுத்துகள் உரு மாறி இருப்பது கூகிள் க்ரோம் உபயோகப்படுத்தும்போதுதான் மொஜில்லா ஃபைர் ஃபாக்சில் சரியாக வருகிறது