Sunday, September 25, 2016

பொழுது போக்கும் விதங்கள்


                                 பொழுது போக்கும் விதங்கள்
                                  -----------------------------------------


எனக்கு எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் an idle mind is a devil”s den என்பார்கள்  எதையாவது செய்ய வேண்டு மென்றால் எதைச் செய்வது எழுதுவது ஒன்றே இப்போது செய்ய முடிகிற ஒன்று  இருந்தாலும்  அது பூரண திருப்தி தருவதில்லை.  தஞ்சாவூர் ஓவியங்களும்  கண்ணாடி ஓவியங்களும் முன் போல்தீட்ட முடிவதில்லை. கண்களும் கையும்   ஒருமித் வேலை செய்வது சிரமமாய் இருக்கிறது புதிதாக க்வில்லிங் கற்றுக் கொண்டு  சில காதணிகள் செய்தேன்  ஆனால் என் வீட்டில் பெண்குழந்தைகள் இல்லாததால் அவற்றை அணிவதற்கு  யாரைத் தேடுவது. அதையும் விருப்பமாக யார் அணிந்து கொள்வார்கள்  இருந்தும்  இந்த டெரகோட்டா அணிகலன் செய்ய வேண்டும்  என்று நினைத்தேன்   நினைத்ததைச் செய்து முடிப்பவன்  அல்லவா. ஒரு பதக்கத்துடன்  கூடிய மாலையும்  ஜிமிக்கியும் செய்தேன்  அதை என் மனைவி இத்தனை வயதுக்கு மேல் ஜிமிக்கியா என்று மறுக்கிறார்  என் ஆசையைப் பூர்த்தி செய்ய செய்ததை ஒரு முறை அணியச் சொன்னேன்  . அணிந்து காண்பித்தாள்  ஆனால்  பதிவில் போடக்கூடாது என்றும்  தடை விதித்து விட்டாள்  செய்ததை ஒரு படத்துக்கு அணிவித்துப் பார்த்திருக்கிறேன் 

டெரகோட்டா அணிகலன் படத்துக்கு


சில நேரங்கள் பழைய புகைப்படங்களைப் பார்த்து அவற்றின் நினைவில் மகிழ்வதும்  உண்டு என் மறைந்த அக்காவின்  மகனுக்கு  சஷ்டியப்த பூர்த்தி வர அழைப்பு இருந்தது. இவனுக்கு அனுபவங்கள் சற்றுக் கூடுதலே ஆர்மியில் காப்டனாக இருந்தான் பல தொழிற்சாலைகளில்  பணி புரிந்திருக்கிறான் கடைசியாக பி இ எம் எல் லில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றான் இத்தனை வயதுக்கு மேல் அவன்ித்ு முனைவர்  பட்டம்  பெற்று இப்போது  ஒரு கல்லூரியில் ப்ரொஃபெசராக இருக்கிறான் அவனதுஅறுபதாம்  ஆண்டு நிறைவின்  போது எடுத்தபடம்

அறுபதாம் ஆண்டு நிறைவு விழா


என்னிடம் ஒரு சாம்சங் ஹாண்டி காம் இருக்கிறது அது இப்போது பழுதாய் விட்டது. அில் வீடியோக்களை டேப்பில் பதிவு செய்வோம் அப்படிப் பதிவு செய்த டேப்களை இப்போது பார்க்க முடிவதில்லை. நாங்கள் துபாய் சென்றிருந்தபோது  மற்றும் பல இடங்களுக்குச் சென்றபோது எடுத்த காணொளிகள் முதலிய வற்றை டிவிடி யாக அண்மையில் மாற்றினேன் ஆனால் டிவிடியிலிருந்து படங்களைச் சிறிது சிறிதாகப் பதிய முடியுமா தெரியவில்லை. அவற்றை கணினியில் ஓட விட்டு  அதில் பிடித்ததைக் காமிராவில்  எடுத்திருக்கிறேன்  சில காட்சிகள் மனதுக்கு நிறைவைத் தருகிறது என் சின்ன பேரன் ஆடிய ஆட்டங்களில் ஒன்றை இத்துடன் பதிகிறேன்


எனக்குப் பயணம் செய்யப் பிடிக்கும் . வித்தியாசமான மனிதர்கள் கலாச்சாரம் இத்யாதி இத்யாதி  விஷயங்கள் பயணத்தால் புரியவரும் இப்போது நினைத்த மாதிரி பயணப்பட முடிவதில்லை. ஆனால் என் மகன்களின் பணியே அவர்களைப் பயணம் செய்ய வைக்கிறது பெரிய  மகன் இந்தியாவின் நீள அகலங்களில் பயணிக்கிறான் அவனால் தவிர்க்க முடியாத பயணங்கள் வேலை நிமித்தமான பயணங்கள். அவனுக்கு எப்படா வீடு வந்து சேருவோம் என்று இருக்கும்  இளையமகனுக்கும் பயணங்கள் உண்டு. இப்போதெல்லாம் கிழக்காசிய நாடுகளுக்குப் பயணிக்கிறான் அவனை உலகம் சுற்றும் வாலிபன்  என்று தமாஷாக அழைக்கிறேன் அடுத்து சீனா , அதன் பின்  அமெரிக்கா  என்று ஒரு நீண்ட பயணத்திட்டம் வைத்திருக்கிறான்  இவர்கள் பயணிக்குமிடங்களுக்கு என்னையும்கூட்டிப்போக முடியாத நிலை. அண்மையில் என் இளைய மகன் பாங்காக்கிலிருந்து ஒரு படமும்  மலேசியாவில் இருந்து ஒரு படமும்  அனுப்பி இருந்தான்  அங்கும்  இந்தியாவின்   தொன்மையான கலாச்சாரங்களின்  பாதிப்பு தெரிகிறது பாங்காக் விமான நிலையத்து  புகைப்படத்தில் தேவாசுரர்கள்  அமுதம் கடையும் காட்சி போல் தெரிகிறது ஆனால் பாம்பின் மேல் இருப்பது யார் புரியவில்லை.

பாங்காக் விமான நிலையத்தில் என்  இளைய மகன்  
மலேசியா முருகன் கோவில்
கடைசியாக என் மூத்தமகன்  எனக்கு அனுப்பியது
ஒரு பிசினஸ் புள்ளி ஒரு ஜூ தொடங்கினார்  வருகைக்கு தலைக்கு ரூ100-/ கட்டணம் என்று அறிவித்தார் கூட்டமே வரவில்லை. கட்டணத்தை ரூ 50-/ என்று குறைத்தார். அப்போதும் கூட்டம் வரவில்லை. கட்டணத்தை ரூ 10-/ என்று குறைத்தும்  எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. கடைசியாக கட்டணமேதும் இல்லை. இலவச அனுமதி என்று அறிவித்தார்  கூட்டம் பிய்த்துக்கொண்டு போயிற்று அவர் பிசினஸ் புள்ளி அல்லவா  அடைத்து வைத்திருக்கும்  சிங்கத்தை வெளியில் விடப்போவதாக அறிவித்தார் வந்திருந்த கூட்டம் வாயிலில் அலை மோதிற்று திற்று . வாயிலைத்திறக்க ஆளுக்கு  ரூ200-/ கட்டணம் என்று அறிவித்தார்
 அந்த ஜூதான்  ஜியோ ஜூ....! 

எழுத்துகள் உரு மாறி இருப்பது கூகிள் க்ரோம் உபயோகப்படுத்தும்போதுதான் மொஜில்லா ஃபைர் ஃபாக்சில் சரியாக வருகிறது     
   
           40 comments:

 1. கதம்பம் போல கலந்துகட்டி எழுதி இருக்கிறீர்கள். என்னுடைய பொழுதுபோக்கு பாட்டும், புத்தகங்களும். இரண்டுமே இப்போது தூக்கத்தைத் தருகின்றன!! உங்கள் வயதில் எப்படி இருப்பேனோ!

  ReplyDelete
 2. டெரகோட்டா மாலையும் பதக்கமும் பிரமாதம்!

  ReplyDelete
 3. புகைப்பட நினைவுகளில் பழமையைப் நினைவுகூர்ந்து புதுப்பிக்கும் தருணங்கள் எப்பொழுதும் இனிமையானவை.

  கைவினைப்பொருட்கள் செய்ய நீண்ட பொறுமையும் கூர்ந்த கவனமும் செய்நேர்த்தியும் அவசியம்.

  தங்களின் கைவினை அருமை.

  இளையவரைச் சந்தித்திருக்கிறேன்.

  நினைவு கூர்ந்தேன்.

  நன்றி

  ReplyDelete
 4. பொழுது போக்க செய்த மாலை, பதக்கம் மற்றும் தோடு அழகு. என் மகளும் மனைவியும் இப்படிச் சில செய்ததுண்டு.

  சில சமயங்களில் பொழுதைப் போக்க வேண்டியிருக்கிறது - குறிப்பாக விடுமுறை நாட்களில்....


  ReplyDelete
 5. மாலை அழகாக இருக்கிறது சார். பழைய புகைப்படங்கள் நல்ல நினைவுகளை எழுப்புவதுண்டு..எனக்குப் பொழுது வீட்டில் எப்படியோ கழிந்து விடும். வீட்டுப் பணிகளே நிறைய இருக்கும். இடையில் செய்தித்தாள் வாசிப்பது...சிறு தூக்கம், ரப்பர்த் தோட்டத்தில் சென்று மேற்பார்வை இடுவது என்று போய்விடும்.

  கீதா: நானும் க்வில்லிங்க், டெரகோட்டா என்று செய்ததுண்டு. நீங்கள் செய்திருக்கும் மாலை அழகாக இருக்கிறது.

  ReplyDelete

 6. @ ஸ்ரீராம்
  நானும் ஒரு காலத்தில் வொரேஷியஸ் ரீடர். இப்போது ஆர்வம் இருந்தாலும் முடிவதில்லை எழுதுவதற்கு விஷயங்கள் கிடைக்கவில்லையாதலால் இப்படி ஒப்பேற்றி இருக்கிறென் வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 7. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
  பாராட்டுக்கு நன்றி மேம்

  ReplyDelete

 8. @ ஊமைக் கனவுகள்
  நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியைத் தருகிறது பழைய புகைப்படங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பிக்கும் கைவினைப் பொருட்கள் செய்ய பொறுமையும் செய் நேர்த்தியும் கூர்ந்த கவனமும் தேவைதான் இப்போதெல்லாம் கைகளும் கண்களும் ஒரு சேர ஒத்துழைப்பதில்லை. மகனை நினைவு கூர்ந்தது நல்லது என் கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்ல வில்லை. பாங்காக் விமான நிலையத்து சிற்பத்தில் மலை மீது ஆடுவது யார் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 9. @ வெங்கட் நாகராஜ்
  உங்களுக்குப் பொழுதே போதாது என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன் கைவினைப் பொருட்களை பெண்கள் ஈசியாக செய்வதுண்டு வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 10. @ துளசிதரன் தில்லையகத்து
  பழைய புகைப்படங்களும் காணொளிகளும்வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க உதவும் வருகைக்கு நன்றி சார் கீதா முன்பே ஒரு முறை க்வில்லிங் செய்ததுண்டு என்று படித்தநினைவு.

  ReplyDelete
 11. தங்கள் திறமைகளை அறிந்தேன் வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. டெரகோட்டா மாலையும் பதக்கமும் அழகாக இருக்கிறது. நீங்க கலைஞர் GMB சார்!

  ReplyDelete
 13. நானும் இப்படித்தான் ஐயா எனக்கு சும்மா இருப்பது பிடிக்காது

  ReplyDelete

 14. @ புலவர் இராமாநுசம்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

  ReplyDelete

 15. @ மோகன் ஜி
  ஆங்கிலத்தில் சொல்வார்களே ஜாக் அஃப் ஆல் பட் குட் அட் நன். பாராட்டுக்கு நன்றி சார்

  ReplyDelete

 16. @ கில்லர் ஜி
  இப்பொழுது அபு தாபிக்குப் போய் ஆயிற்றா , வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete
 17. பலவித அனுபவங்கள். தங்கள் ரசனையை நாங்கள் ஏற்கனவே அறிவோம். அந்நிலையில் இதனையும் ரசித்தேன். மாலை அழகு. திருப்பாற்கடலில் நிற்கும் உருவம் சற்றே வித்தியாசமாக இதுவரை பார்த்திராததாக உள்ளது.

  ReplyDelete
 18. பல வண்ண மணிகளைக் கொண்டு மாலைகளும் தோரணங்களும் தொடுக்கவும்
  சிறு மண் கலசங்களில் மினுமினுக்கும் ஜம்கி வேலை செய்யத் தெரியும்..

  பனையோலைகள் மற்றும் வைக்கோல் இவற்றைப் பதப்படுத்தி நறுக்கி சித்திரங்கள் வடிக்கத் தெரியும்..

  ஆனால், செய்ததோடு சரி.. அவற்றை படங்களாக்கிக் கொள்ள அப்போதைக்கு இயலவில்லை..

  இனி வரும் காலங்களில் இயலுமா.. தெரியவில்லை..

  பதிவு - அழகு.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 19. ஜியோ வியாபாரி ,ஜெயித்தாரா இல்லையா :)

  ReplyDelete

 20. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  வருகைக்கு நன்றி ஐயா புராணக் கதைகள் அறிந்தோரில் யாராவது இதற்கு பதில் சொல்வார்கள் என்று நினைத்தேன் / நினைக்கிறேன்

  ReplyDelete

 21. @ துரை செல்வராஜு
  வருகைக்கு நன்றி சார் நான் அரைக்குடம் நிறைகுடம் தளும்பாது.

  ReplyDelete

 22. @ பகவான் ஜி
  ஜியோ வியாபாரி ஜெயித்தாரா, காலம் பதில் சொல்லும் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 23. பாம்பின் மேல் இருப்பது யார்?

  உங்களுக்குத் தெரிடாததா? காளிங்க நர்த்தனன்.

  ReplyDelete
 24. அருமையாகச் செய்திருக்கிறீர்கள். நானும், ஓய்வு பெற்றதும் ஓவியங்கள் வரையும் வகுப்புகளுக்கும், சமையல் வகுப்புகளுக்கும் செல்லலாம் என்று நினைத்துள்ளேன். ஓவியம் வரைய ஆரம்பித்தால் அமைதியாக இருக்கலாம். சமையல் பண்ண ஆரம்பித்தால், நம்ம ஹஸ்பண்டுதான் டேஸ்டர் (மற்றும் கஷ்டப்படுபவர்..சமையல் நல்லா இல்லாட்டா)

  ReplyDelete
 25. மாலையும் ஜிமிக்கியும் நன்றாக இருக்கிறது. எனக்கும் கற்றுக்கொள்ளும் ஆவல் நிறையவே உண்டு. ஆனால் என் கணவர், பிள்ளை, மருமகள் ஆகியோர் வேண்டாம்னு சொல்றாங்க! :( படிப்பதும் இப்போது குறைந்து தான் வருகிறது. உங்கள் வயதில் இருப்பேனோ, மாட்டேனோ! தெரியலை. இவ்வளவு ஆர்வமுடன் நீங்கள் செய்வது மகிழ்வைத் தருகிறது.

  பாம்பின் மேல் நர்த்தனமாடுவது சாக்ஷாத் கண்ணன் தான்! வேறே யார்! :)

  ReplyDelete

 26. @ஜீவி
  முதலில் அந்தப்பாம்பு காளிங்கன் என்று தோன்றவில்லை காளிங்கன் நீரில் விஷம்கலந்தவன் என்று படித்த நினைவு இரண்டாவது அமுதம் கடைய உபயோகித்த மந்தார மலை மீது கிருஷ்ணன் ஆடியதாகப் படிக்கவும் இல்லை. அதனால்தான் சந்தேகமே வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 27. @ நெல்லைத் தமிழன்
  என் கைவேலைகளை நான் எங்கும் சென்று கற்றுக் கொள்ளவில்லை செல்ஃப் டாட். எங்கள் ப்ளாகில் உங்கள் சமையல் குறிப்புகள் உங்களை ஒரு தேர்ந்த சமையல் கலை வித்தகர் என்று காண்பிக்கிறது வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

  ReplyDelete
 28. அருமையான பதிவு
  பொழுதுபோக்கு வேண்டும்
  உளநோய் நெருங்காமைக்கு

  ReplyDelete

 29. @ கீத சாம்பசிவம்
  என் வயதைத்தாண்டியும் இருப்பீர்கள். நமக்கு ஆர்வம் இருந்தால் யார் தடுக்க முடியும் . ஆனாலும் சில உடற்குறைகள் கை வேலைகளில் ஈடுபடுவதற்குத் தடையாக இருக்கிறது வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

  ReplyDelete

 30. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசி ராஜலிங்கம்
  அதைத்தான் நானும் குறிப்பிட்டிருக்கிறேன் நம் உடல் மற்றும் உள்ளத்தை சீராக இயங்கச் செய்ய கை வேலைகள் உதவுகின்றன.வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 31. //அதனால்தான் சந்தேகமே.. //

  ஓவியனின் முழுத்திறமையும் பளிச்சிடும் ஓவியங்கள் இவை.

  மந்தர மலையைக் கடைவதில், அவன் காளிங்க நர்த்தத்தைக் கலந்து ரசிக்கிறான் அந்த ஓவியன். இது ஒரு கலப்புக் கற்பனை ஓவியம். (Mixed imagination)மந்தார மலைக்கு மேல் கண்ணனை நர்த்தனமிடுபவன் போல நிறுத்தி ஓவியன் கற்பனை செய்த அற்புதம்.
  கடல் வயிறு கலக்கியதின் தத்ரூபமான ஓவியம்.

  வடவரையை மத்தாக்கி
  வாசுகியை நாணாக்கி
  கடல் வண்ணன்
  பண்டொரு நாள்
  கடல் வயிறு கலக்கினையே...

  -- சிலப்பதிகாரம்

  நம் ரசனைக்கு இதெல்லாம் புதுசு. புராண கதை நிகழ்வுகள் அதற்கான படங்கள் அச்சு அசலாக அப்படியே இருந்தால் தான் ஏற்றுக்கொள்ளும் பழைமையில் ஊறிப்போன மனசு. அதனால் தான் இந்த நவீன கற்பனைகள் புரியாத குழப்பங்கள்.


  ReplyDelete

 32. @ ஜீவி
  தெளிய வைக்க முயன்றதற்கு நன்றி கலைஞனுக்கு இல்லாத சுதந்திரமா பாரதியின் குதிரைக்கு கொம்பு கதையை வாசித்தீர்களா என் தளத்தில் பாரதியின் ராமாயணம் என்னும் தலைப்பில்

  ReplyDelete
 33. உங்கள் ஆர்வம் என்றுமே அலாதியான ஒன்றுதான்.

  ReplyDelete
 34. பல துறைகளில் உங்கள் ஆர்வம் ஆச்சர்யப் படுத்துகிறது. மாலை அருமை

  ReplyDelete

 35. @ தி தமிழ் இளங்கோ
  ஆர்வம் இருப்பது என்னவோ உண்மைதான் ஆனால் ஆர்வதுக்கு இட்டு கொடுக்கும் அள்வுக்கு உடல் ஒத்துழைப்பதில்லை வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 36. @ டி என் முரளிதரன்
  வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றி சார்

  ReplyDelete
 37. ஆபரணங்கள் அழகு. மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறீர்கள்.

  பேரனின் நடனம் அருமை.

  அக்கா மகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 38. @ ராமலக்ஷ்மி
  உங்களிடம் இருந்து பாராட்டு மகிழ்ச்சி தருகிறது வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 39. அழகோ அழகு.... உங்கள் ஆபரணம் நேர்த்தி. உங்கள் இளைய மகனை ரொம்ப நாட்களுக்குப் பிறகு புகைப்படத்தில் பார்க்கிறேன்.

  ReplyDelete
 40. @ ஷக்தி பிரபா
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்
  இப்போதெல்லாம் நானும் கூட என் இளைய மகனைப் புகைபடத்தில்தான் பார்க்க முடிகிறது

  ReplyDelete