விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
--------------------------------------------
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே
வக்ர துண்ட மஹாகாய
சூர்ய கோடி சமப்ரபா
அவிக்னம் குருவே தேவ
சர்வகார்யேஷு சர்வதா
கஜானனம் பூதகணாதி
சேவிதம்
கபித்த ஜம்பூ பலசார
பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச
காரணம்
நமாமி விக்நேஸ்வர பாத
பங்கஜம்
அகஜானன பத்மார்க்கம்
கஜானன மஹர்நிசம்
அநேக தந்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத
நமஸ்தே.
ஔவையாரின் அகவல்
சீதக்களப
செந்தாமரைப்பூம்
பாதச்
சிலம்பு பல இசை பாட
பொன்
அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன
மருங்கில் வளர்ந்தழகெறிப்ப
பேழை
வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழமுகமும்
விளங்கு சிந்தூரமும்
அஞ்சு
கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில்
குடிகொண்ட நீலமேனியும்
நான்ற
வாயும் நாலிறு புயமும்
மூன்று
கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு
செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட
முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதங்
கடந்த துரிய மெய்ஞான
அற்புதம்
நின்ற கற்பகக் களிறே
முப்பழம்
நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது
எனை ஆட்கொள வேண்டி
தாயாயெனக்கு
தானெழுந்தருளி
மாயாப்
பிறவி மயக்கம் அறுத்து
திருந்திய
முதல் ஐந்தெழுத்துத் தெளிவாய்
பொருந்தவே
எந்தன் உளன்ந்தற்புகுந்து
குருவடிவாகிக்
குவலயம் தன்னில்
திருவடி
வைத்துத் திறமிது பொருளென
வாடாவகைத்தான்
மகிழ்ந்தெனக்கருளி
கோடாயுதத்தால்
கொடுவினைக் களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து.
”......தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
“மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே.
” ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
. ”இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்த்றிவித்து
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
என் முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்படஎனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி,
இருத்திமுத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்து அருள்வழி காட்டி,
சத்ததினுள்ளே சதாசிவம் காட்டி,
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி,
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,
அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே.
தலமொரு நான்கு, , மலமொரு மூன்று, ஆறாதாரம் , இட பிங்கலை, கழுமுனை , மூன்று மண்டலம், நான்றெழு பாம்பு,,குண்டலிதனிற் கூடிய அசபை, உடற்சக்கரம், சண்முக தூலம் சதுர்முக சூக்கம் .....இன்னபிற வார்த்தைகளுக்கு பொருள் முழுவதும் தெரிந்து இதை நாம் ஓதுவதில்லை .ஆனால் இதைச் சொல்லும் நமக்கு இதில் ஏதாவது கை கூடி வருகிறதாஎன்று சிந்திக்கவும் செய்வதில்லை கோவிலுக்குச் சென்று அனிச்சையாக
வணங்குவதுபோல் தான் நம் வாய் முணு முணுக்க நாம் அகவலை ஓதுகிறொம் ஆனால் முன்பொரு பதிவில்
என் எண்ணங்களோடு பதிவு எழுதின போது பொருள் தெரிந்து ஓதவேண்டும் என்னும்
அவசியமில்லை என்னும் விதத்தில்
கருத்துகள் வந்தன ஒன்றுமட்டும் புரிகிறது. ஔவையாருக்கும் இவை கை கூடி வரவில்லை. அதனால்தானோ என்னவோ வேண்டுதல்கள்
வைக்கிறார்எது நம்மிடம் இல்லையோ அதை வேண்டுவது இயல்புதானே இச்சையாகவோ அனிச்சையாகவோ .
பலரும் பொருள் புரியாமல்தான் கூறுகிறார்கள்
என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை/ சராசரியாகத்
தமிழ் தெரிந்த எனக்கு பொருள் விளங்கவில்லை
பொருள் தெரிந்து அது வேண்டி ஓதுபவருக்கு
ஒரு ராயல் சல்யூட் .
இந்தியாவின் பல பகுதிகளிலும் விமரிசையாகக் கொண்டாடப் படும் பண்டிகை விநாயகச் சதுர்த்தி/ இந்நாளில் வாசகர்களுக்கு வாழ்த்துக்கள்
...
“
உண்மையில் விநாயகர் அகவல் நம்மை மேல்நிலைக்குச் செலுத்துவது..
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதைப் போல நாற்பதாண்டுகளுக்கு முன் அதைப் பாராயணம் செய்த போது பொருள் தெரியாது தான்..
அகவலின் பொருள் எப்போது தெரிய வேண்டுமோ - அப்போது தானாகவே அதனை உள்மனம் உணர்ந்தது.. மேலும் மேலும் பல விளக்கங்கள் நான் தேடாமலேயே எனக்குக் கிடைத்தன..
ஆன்மீகப் பயணத்தில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு அதுவே நம்மை ஏற்றி விடுகின்றது..
தவமும் தவமுடையோர்க்குத் தான் ஆகும் என்கின்றார்கள்..
அகவலைப் பாராயணம் செய்து நான் எய்திய விஷயங்களை இங்கே பகிர்வதற்கு இயலாது..
மனம் கை வசமாகி விட்டது.. அதன் பின் இன்பமென்ன.. துன்பமென்ன!..
தங்களின் அன்பான வாழ்த்துரையில் மனம் மகிழ்கின்றது..
வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குவாழத்துக்கள்.
பதிலளிநீக்குபாடல் பகிர்வுக்கு நன்றி.
திரு துரை செல்வராஜ் சொல்வது முற்றிலும் சரியே. புரியும்போது தானே புரியவரும். விநாயகர் அகவலைப் பொருள் தெரிந்து சொல்பவர் பலர் இருந்தாலும் எல்லோரும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். குண்டலினி யோகத்தைக் குறித்து என்பது புரிந்தாலும் இதெல்லாம் உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது. அப்படித் தெரிந்து கொண்டதால் தான் ஔவையால் எழுத முடிந்தது.
பதிலளிநீக்குகடவுள் நம்பிக்கை இல்லை என்று நீங்கள் சொன்னாலும் ஒவ்வொரு பண்டிகைக்கும் அதன் தாத்பரியம் குறித்தோ அல்லது மற்றவற்றைக் குறித்தோ எழுதும் உங்கள் ஒவ்வொரு பதிவும் வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஉங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநானும் நேற்றே குறிப்பிடவேண்டும் என்று நினைத்தேன்..
பதிலளிநீக்குதிருமிகு கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வதைப் போலவே என்னுள்ளும் வியப்பு மேலிடும்!..
ஐயாவின் பன்முக ஆளுமைக்கு இந்தப் பதிவும் ஒரு எடுத்துக்காட்டு..
வாழ்க நலம்..
இதனைப் படித்தபோது (முதலில் இருப்பவைகளை), "வி'நாயக பாத நமஸ்தே' என்று முடித்தபோது, automaticஆக, 'சரணு சரணையா சரணு பெனகா' என்ற பாட்டு மனதில் ஆரம்பித்துவிட்டது. உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎதைப் பாராயணம் செய்யும்போதும் மனம் முழுவதுமாக அதில் ஈடுபடவேண்டும். இது மிகவும் கஷ்டம். 10 வரிகளுக்குள்ளேயே மனது தன் வாக்கில் எங்கேயோ சென்றுவிடும். அதைக் கொண்டுவருவதற்கு ஒரு வழி, அர்த்தம் புரிந்து சொல்வது. அப்போது மனது ஓரளவுக்கு பாராயணத்தில் நிற்கும். 'ஐயா... சாமி' என்று பிச்சைக்காரர்கள் சொல்லும்போதே, நம் மனது எதையாவது கொடுக்க விழைவதுபோல (அவர்கள் பணம், சாப்பாடு போன்றவை கேட்காமலேயே), அர்த்தம் புரியவில்லையானாலும் உள்ளார்ந்து பாராயணம் செய்யும்போது நமக்கு மந்திரங்கள் அதன் பலனைக் கொடுக்க வல்லது.
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
ஐயா கோவில்களில் சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லப் படும்போது அதன் வீச்சு நமக்குக் கிடைப்பதில்லை என்றே பொருள் புரியக் கூடிய தமிழில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் சில தமிழ் வார்த்தைகளே புரியாமல் இருக்கும் போது அதில் மனம் லயிப்பதுகடினம் என்று தோன்றுகிறது உங்கள் அனுபவம் சொல்வது எல்லாம் போகப்போகப் புரியும் என்பது எனக்கு விளங்கக் கஷ்டமாயிருக்கிறது சொல்வதுபலன் தரும் புரிந்தோ புரியாமலோ என்பதும் கஷ்டமாயிருக்கிறது இதனால்தான் இணையத்தில் தேடி பொருள் காண முயன்றேன் அப்போதும் அதுவும் புரிய முடியாமலேயே இருக்கிறது முன்பொரு பதிவில் பொருளுடன் எழுதினேன் பொருளில் சொல்லி இருப்பதும் comprehend செய்ய முடியவில்லை. ஏதோ நம்பிக்கையுடன் அனிச்சையாகச் சொல்வதுதான் இப்போது வழக்கத்தில் இருக்கிறது வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ ஜெயக்குமார்
வாழ்த்துகளுக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ஔவைக்கும் என்னை மாதிரிப் புரியாமல்தான் இருந்திருக்க வேண்டும் புரியாத விஷயங்கள் இது என்று சொல்லாவிட்டாலும் வேண்டுவதால் புரிந்திருக்க நியாயமில்லை.நமக்குக் கைவராததில் ஒரு ஈர்ப்பு சகஜம் வருகைக்கு நன்றி
@ கீதா சாம்பசிவம்
/கடவுள் நம்பிக்கை இல்லை என்று நீங்கள் சொன்னாலும் ஒவ்வொரு பண்டிகைக்கும் அதன் தாத்பரியம் குறித்தோ அல்லது மற்றவற்றைக் குறித்தோ எழுதும் உங்கள் ஒவ்வொரு பதிவும் வியக்க வைக்கிறது./ இதுவே ஒரு தவறான புரிதல் எந்த இடத்திலாவது நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று கூறி இருக்கிறேனா. கடவுளின் பெயரால் பல தவறான எண்ணங்களைச் சாடி எழுதி இருப்பேன் என்னைப் பொறுத்தவரை கடவுள் என்றுஒருவர் இருந்தால் அவர் என்னிலும் இருக்கவேண்டும் நான் என்னை நம்புகிறேன் அன்பை நம்புகிறேன் மூடநம்பிக்கைகளைக் காணும்போது எதிர்ப்பு காட்டிவருகிறேன் பதிவு எழுத நிறையவே விஷயங்கள் நம் இறை இலக்கியங்களில் இருப்பதால் அவற்றை தேடிப்பிடித்து எழுதுகிறேன் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
என்னைப் பற்றிய கருத்துக்கு நன்றி ஆங்கிலத்தில் சொல்வது போல் jack of all trades but good at none
பதிலளிநீக்கு@ நெல்லைத் தமிழன்
எனக்கு உறக்கம் வராமல் தவிக்கும்போது என் மனைவி அகவலோ கந்த சஷ்டி கவசமோ சொல்லச் சொல்வாள் நானும் சொல்ல ஆரம்பித்த சில நொடிகளில் என்னை அறியாமல் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவேன் அது துதிகளைச் சொல்வதால் அல்ல. ஒரு மோனோடனஸ் வேலையைச் செய்யும்போது மனம் ஈடுபடாததால் உறக்கம் வ்வருகிறது என்று நினைக்கிறேன் கோவிலுக்குச் செல்லும் போது நாம் பெரும்பாலும் அனிச்சையாகவே சிரம் தாழ்த்துகிறோம் வருகைக்கு நன்றி சார்
மேலே ` துதிகளைச் சொல்வதால் அல்ல. ஒரு மோனோடனஸ் வேலையைச் செய்யும்போது மனம் ஈடுபடாததால் உறக்கம் வருகிறது என்று நினைக்கிறேன்` என்று சொல்லியிருக்கிறீர்கள். சரி.அப்படியென்றால் Friedrich Nietzsche -யின் தத்துவம் போன்ற சிக்கலான, மனம் ஈடுபடாத ஒன்றை, உறக்கம் வராமலிருக்கும்போது சொல்லிப் பாருங்களேன். அகவலோ, சஷ்டியோ எதற்கு?
பதிலளிநீக்குHats Off Aekaanthan! :D
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஏகாந்தன்
இது நல்லாயிருக்கே. தெரிந்ததைத்தானே கூற முடியும் யாரந்த ஃப்ரெடிரிட்ச் நீட்ஷே? என் மனைவிக்கு அகவலும் சஷ்டியும்தான் தெரியும் . அதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். ஏன் ஓம் ஓம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் சிறிது நேரத்தில் உறக்கம் வரலாம் வருகைக்கும் கருத்ட்க்ஹுப் பதிவுக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@கீதா சாம்பசிவம்
அப்பா...... என்ன குஷி. இதற்காகவாவதுயாராவது இவ்வாறு பின்னூட்டமிட வேண்டுகிறேன் நன்றி மேம்
@GM Balasubramaniam, @Geetha Sambasivam: கமெண்ட்டிற்கு மேல் கமெண்ட் அடித்ததற்கு நன்றி!
பதிலளிநீக்குநீட்ஷே: ஜெர்மானிய தத்துவஞானி. கவிஞர். லத்தீன் மற்றும் கிரேக்க அறிஞர்-இப்படிப் பன்முகங்கள் அவருக்கு.அவர் உதித்த முத்துக்கள் சில:
There are no facts. Only interpretations
**
There is always madness in love. But there is also always some reason in madness.
**
You have your way. I have my way. As for the right way, the correct way and the only way, it does not exist.
**
Is man merely a mistake of God? Or God, merely a mistake of man?
**
One has to pay dearly for immortality. One has to die several times, while one is still alive.
பதிலளிநீக்கு@ ஏகாந்தன்
அந்த ஜ்ர்மானிய அறிஞரின் வார்த்தைகளைப் பகிர்ந்ததற்கு நன்றி. இப்படி பல பொன் மொழிகளைத் தினமும் எங்கோ கேட்கிறோம் ஆனால் சொல்பவர்கள் எல்லாம் தத்துவ ஞானிகளாய் அறியப்படுவதில்லை. மீண்டும் நன்றி
ஏகாந்தன், நீட்ஷே என்ற பெயர் குறித்தும் தத்துவ ஞானி என்றும் அறிந்திருந்தேனே தவிர அவரின் எழுத்தைப் படித்ததில்லை. அவ்வளவெல்லாம் புரியுமே என்ற சந்தேகம் தான் முக்கியக் காரணம். இங்கே நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்துமே அருமை. அதிலும் இரண்டாவது உனக்கென ஒரு வழி, எனக்கென வழி, ஆனால் சரியான வழி அதுவும் அது தான் ஒரே வழி என்கையில் அதன் இருப்பு என்பது இல்லை. என்பது எத்தனை உண்மை! இதை எத்தனை பேர் ஒத்துப்போம்!
பதிலளிநீக்குசார் சில விஷயங்களை அறிய முடிந்தது இந்தப் பதிவிலிருந்து..
பதிலளிநீக்குபின்னூட்டங்கள் வாசித்த போது ஏகாந்தன் அவர்கள் சொல்லியிருக்கும் நீட்ஷே பற்றி முன்பு அறிந்ததுண்டு.எல்லாம் இந்தக் கட்டுரை, பேச்சுப் போக்கிகளுக்கு வேண்டி சில மேற்கோள்கள் காட்ட வேண்டி தேடிய சமயம். அவரது தத்துவங்கள் எல்லாமே மிகவும் யதார்த்த ரீதியில் இருப்பதாகத்தான் இருக்கும்...
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
பல சமயங்களில் சாதாரணமாக இருப்பவர்கள் சொல்வதே மேற்கோள் காட்ட உதவும் இருந்தாலும் புகழ் பெற்றவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடுகிறது வருகைக்கு நன்றி
விநாயகர் அகவல் தினமும் சொல்கிறேன் பொருள் தெரிந்து தான். சிறு வயதில் என் தந்தை மனப்பாடம் செய்யச் சொன்னபோது பொருள் தெரியாததால் செய்யவில்லை.
பதிலளிநீக்குஏகாந்தன் சார் சொல்வது உண்மையே.
பதிலளிநீக்கு@ சிவகுமாரன்
முன்பொரு பதிவில் விநாயகர் அகவலின் பொருளைத் தேடி எடுத்து எழுதி இருந்தேன் சொல்வது என்ன என்று நமக்கே தெரிய வேண்டும் அல்லவா. நீங்கள் பொருள் தெரிந்து சொல்வது அறிய மகிழ்ச்சி. ஏகாந்தன் சொல்வது என்ன எது உண்மை. வருகைக்கு நன்றி சிவகுமாரா.