புதன், 21 செப்டம்பர், 2016

இன்னாசெய்தாரை...........


                                   இன்னாசெய்தாரை............
                                   --------------------------------


”செல்வி வேலை செய்யத் தொடங்கும்  முன்   இந்தக் காப்பியைக் குடி”

”அம்மா இன்று நான்விரதம்  மாசி செவ்வாய்”

”அதென்னடி விரதம் நான் கேள்விப்படாதது”

”எங்கள் ஐயாவும்  அம்மாவும் சொன்னார்கள் நானும்  இருக்கிறேன் எதையும்  சாப்பிட மாட்டேன்”

பத்து பனிரெண்டு வயதுக்குள் இருக்கும் செல்வி விரதம் இருக்கிறாள் அம்மா அப்பா சொல்லிக் கொடுத்தது என்கிறாள் என்ன விரதம்  ஏன் என்று கேள்வி கேட்கமாட்டாள் பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புபவள் இவள் மட்டுமா அப்படி நம் நாட்டில் அநேகம் பேர் இப்படித்தான் பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் கேட்கமாட்டார்கள் அவ்வளவு பணிவு நம்பிக்கை இந்தப்பெரியவர்களுக்குத் தெரிந்ததைதானே அவர்களும் சொல்லிக் கொடுப்பார்கள் அவர்கள் வளர்ந்தவிதம்  அப்படி

இந்த செல்வி என் வீட்டில் வேலைக்கு வந்ததே எதேச்சையாகத்தான் மூன்று சகோதரிகளுடன்  பிறந்தவள்  இவளுடைய அக்கா அடுத்த வீட்டில் வேலை செய்பவள் வீடு கூட்டி பாத்திரம்  தேய்ப்பது வேலை  எனக்கும்  வேலைக்கு ஆள் வேண்டித் தேடிக் கொண்டிருந்தபோது ராணி அதுதான்  செல்வியின் அக்கா சொன்னாள்
 ”என் தங்கையை வேலைக்கு அனுப்பட்டுமா வீட்டில் சும்மாத்தான் இருக்குது சொன்னவேலைகளைச்  செய்வாள் உங்களுக்கு தோன்றியதைச் சம்பளமாகக் கொடுங்கள்”

செல்வியும் வந்தாள் மிகவும் சின்னப் பெண் என்ன வேலை செய்ய முடியும் இருந்தாலும் வீடு கூட்டி துடைக்க முடியும் என்று தோன்றியது  செல்வி சூட்டிகையானபெண். நாளாவட்டத்தில் பாத்திரம்  கழுவும் வேலையையும்  கேட்டு வாங்கிக் கொண்டாள் முதல் மாச சம்பளமாக  ரூபாய் பத்து கொடுத்தபோது முகம் சந்தோஷத்தில் மின்னியது
      எனக்குப் பெண்குழந்தைகள் இல்லாத குறையை செல்வி போக்கினாள் வீட்டில் அவளுக்கு எந்த ரெஸ்ட்ரிக்‌ஷனும் இல்லை எனக்கு எந்த பொருளையும்  அதற்கான இடத்தில் வைக்கும்  பழக்கம் இல்லை. எதையும்  எங்காவது வைத்து விட்டுத் தேடுவேன் இது மாதிரி சில ரூபாய்களையும்  சில்லறைகளையும் எங்காவது வைத்து விட்டுத் தேடும் சுபாவமும்  உண்டு  சில நேரங்களில் வைத்த சில்லறைகளை எடுத்தாயா என்று என் மகனிடம்கேட்டு அவன்  வருத்தப்பட்டதும் உண்டு. ஒரு முறை அப்படித்தான்  கால் கொலுசுகளை எங்கோ கழற்றி வைத்துக் கிடைக்காமல் மறந்து போய் விட்டேன்  எங்காவது இருக்கும் என்னும்  நம்பிக்கை.
பல நாட்கள் கழித்து செல்வியின் கால்களில் கொலுசுகளைக் கண்டேன்  அது என்னுடையதுபோல் இருந்தது. இருந்தாலும்  விசேஷ அடையாளங்கள் ஏது மிருக்க வில்லை. செல்வியிடம்  பேச்சுக் கொடுப்பது போல் கொலுசு பற்றிக் கேட்டேன்  அவளது அக்காள் கொடுத்ததாகக் கூறினாள் செல்வி மேல் சந்தேகப் படுகிறேனோ. பாவம் சின்னப் பெண் தவறாக எதையும்  கேட்டு விடக் கூடாது
 இருந்தாலும் மனசில் உறுத்திக் கொண்டிருந்ததுஒரு நாள் அவளக்கா ராணியிடம்  செல்வியின் கொலுசு பற்றிக்கேட்டேன் என்ன விலை கொடுத்து எங்கு வாங்கினாள் என்று கேட்டேன்
”அம்மா அது நீங்கள் கொடுத்தது என்றல்லவா செல்வி சொன்னாள்  அது நீங்கள் கொடுத்ததில்லையா”

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது  அதைப் பெரிசு பண்ண வேண்டாம்  என்று அவள் அக்காவிடம் கூறினேன்
ஓரிரு நாளைக்குச் செல்வி வேலைக்கு வரவில்லை பிறகு வந்தவள் அந்தக் கொலுசை என்னிடம்  கொடுத்து விட்டு  அழுது கொண்டே சொன்னாள் செல்வியின் அக்கா அவர்களது அப்பாவிடம் சொல்லப்[ போக அவர் செல்வியை நையப் புடைத்து விட்டு செல்வியிடம் அதைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி யிருக்கிறார்
 செல்வி அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பெரிய மனுஷி போல் என்னிடம் சொன்னாள்

”அம்மா இருந்தாலும் உங்களுக்கு கவனக் குறைவு அதிகம் நானும் எத்தனையோ முறை அங்குமிங்கும்  இருக்கும் சில்லறையை எடுத்திருக்கிறேன்   நீங்கள் வீட்டு அண்ணாவிடம்  கேட்டதையும் பார்த்திருக்கிறேன் எது  காணாமல் போனாலும் உங்களுக்குத் தெரியாது .  கொஞ்சம்  கவனமாகவே இருங்கள் நாளையிலிருந்து  வேலைக்குப் போக வேண்டாம் என்று அப்பா சொன்னார்”  என்றாள்

 ”செல்வி வழக்கம் போல நீ வேலைக்கு வா நிற்க வேண்டாம் பிறரது பொருளுக்கு ஆசைப்படாதே  நானே நீ கொலுசுகளை எடுத்தது பற்றிப் பெரிதாக நினைக வில்லை. கவனக் குறைவாக இருப்பதும் என்  தப்புதானே” 
 என்று சொல்லி அவளுக்கு அன்று ஏதும்  விரத மில்லையே என்று கேட்டு விட்டு காப்பி பலகாரம் கொடுத்தேன் 
  என் நண்பிகள்  மீண்டும் செல்வியை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றார்கள் கண்ட இடத்தில் பொருளை வைப்பதுதானே ஏதும் அறியாச் சிறுமியை அந்தப் பொருள் என்னை எட்டு என்னை எடு என்று ஆசையைக் கிளப்பி விட்டது. நம் தவறுக்கு  நாமும் பொறுப்பல்லவா  மேலும் சின்னப் பெண் திருந்த ஒரு வாய்ப்பும் கொடுக்க வேண்டுமல்லவா



36 கருத்துகள்:

  1. என்ன சொல்ல வரீங்கனு புரியலை. விரதம் இருப்பவர்கள் தான் திருடுவார்கள் என்றா? காரண, காரியம் தெரியாமல் விரதம் இருக்கிறாள் என்று சொல்ல வருகிறீர்களா? கதையின் உட்கருத்து என்னவென்று என் மூளைக்கு எட்டவில்லை. திருடுவதற்கான சந்தர்ப்பத்தை வலிந்து அளித்தது அந்த வீட்டு யஜமானி அம்மா! ஆகவே பிறரைத் திருடத் தூண்டுவதும் ஒரு குற்றமே! :)

    பதிலளிநீக்கு
  2. மாசி மாதம் செவ்வாய்க்கிழமை கன்னிப் பெண்கள் விரதம் இருப்பார்கள், வீட்டிலுள்ள பெரியவர்களும் விரதம் இருக்கலாம். கன்னிப் பெண்களுக்கு அன்று மிகச் சிறப்பாக வழிபாடுகள் செய்து அவர்களுக்குப் பிடித்த உணவை உண்ணக் கொடுத்துக் கடைசிச் செவ்வாயில் விரதம் பூர்த்தி செய்வார்கள். கன்னிப் பெண்களை வழிபாடு செய்வது என்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் ஓர் வழக்கம் மேலதிகத் தகவல்கள் கிடைத்ததும் பகிர்கிறேன். கன்னிப் பெண்கள் என்பது இங்கே ஐந்திலிருந்து பனிரண்டு வயதுக்குள்ளான பெண்களை மட்டுமே!

    பதிலளிநீக்கு

  3. @ கீதா சாம்பசிவம்
    இல்லாத கருப்புப் பூனையை அமாவாசை இருட்டில் தேட வேண்டாம் கதையின் தலைப்பு இன்னா செய்தாரை என்று இருக்கிறது எஜமானியின் கவனக் குறைவும் சொல்லப் பட்டிருக்கிறது எல்லோருக்கும் விரதங்கள் இருப்பதன் தாத்பரியம் புரிவதில்லை. எஜமானியும் செல்வியும் அப்படிப்பட்டவர்களே

    பதிலளிநீக்கு

  4. @ கீதா சாம்பசிவம்
    மாசி செவ்வாய் விரதம் பற்றிய தகவல்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. இனிமேலும் திருடுவதை அந்த சின்னப் பெண் நிறுத்தவில்லை என்றால் ,நீங்கள் அந்தப் பெண்ணை வேளையில் இருந்து நிறுத்தி விடலாம் :)

    பதிலளிநீக்கு
  6. தலைப்பும் கதை சொல்லிச் சென்று
    முடித்த விதமும் மனம் கவர்ந்தது
    (பகவான்ஜியின் பின்னூட்டம்
    கொஞ்சம் குழப்பியது )

    பதிலளிநீக்கு
  7. மன்னிக்க வேண்டும் ஐயா! இது சிறுகதைக்குண்டான வடிவத்தில் இல்லை. பெண்மணி ஒருவர் தன் வாழ்வில் நடந்த சிறு நிகழ்வை விளக்குவது போல இருக்கிறது.

    சிறுகதை என்றால் எடுப்பு - தொடுப்பு - முடிப்பு என ஒரு வரிசைப்படி இருக்க வேண்டும். (அப்படியெல்லாம் இல்லாமலே அசத்தும் வகையிலான கதைகள் ஏராளமாக உள்ளன என்பது வேறு விதயம். ஆனால், அவை எழுதுபவர்களின் ஆளுமையைப் பொறுத்தது.) நிறையச் சிறுகதைகளைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் சிறுகதை என்றால் எப்படி இருக்க வேண்டும் எனபதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். தொடர்ந்து எழுதுங்கள்! என் பணிவன்பான நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. ரசித்தேன் ஐயா
    திருந்துவதற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் அல்லவா

    பதிலளிநீக்கு
  9. கதை அருமை. இப்படியும் சிலர் இருக்கிறார்கள். எஜமானியும் வேலைக்காரச் சிறுமியும்.

    பதிலளிநீக்கு
  10. வேலைகாரப் பெண் தப்பு செய்தாலும் அதை மன்னிக்கற மாதிரி வீட்டம்மாவின் ஆளுமையை பெரிசு படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முயற்சி கதையைக் கதையில்லாமல் செய்து விட்டது.

    தலைப்புக்கேற்ப கதை எழுதாமல் கற்பனை போகிற போக்கில் கதை எழுதிவிட்டு, எழுதினதற்கு ஏற்ப தலைப்பு வைத்துப் பாருங்கள். இந்தக் குறைபாடு நீங்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. கிளெப்டோமேனியா! நாளடைவில் இது மாறக்கூடும். அந்தச் சிறுமி இதற்குப்பின் இந்தக் குறைபாட்டை நீக்கிக் கொண்டால் சரிதான்!

    பதிலளிநீக்கு
  12. எங்கோ நடந்ததைப் போல - இருக்கின்றது...

    எப்படியோ மாற்றம் நேர்ந்தால் சரி!..

    பதிலளிநீக்கு

  13. @ கோமதி அரசு
    வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  14. @ பகவான் ஜி
    திருந்தி விடுவாள் என்னும் நம்பிக்கையே இருந்தது வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  15. @ ரமணி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு

  16. @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  17. @ இ. பு ஞானப்பிரகாசம்
    வருகைக்கு நன்றி . விமரிசனத்துக்கும் நன்றி. ஆமாம் நீங்கள் சிறுகதையின் இலக்கணங்கள் பற்றி ஏன் ஒரு பதிவு எழுதக்கூடாது எல்லோருக்கும் உபயோகமாக இருக்குமே

    பதிலளிநீக்கு

  18. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் கருதுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  19. @ தேனம்மை லக்ஷ்மணன்
    கதையானாலும் நடக்கும் வாய்ப்பும் இருக்க வேண்டும் அல்லவா வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  20. @ ஜீவி

    உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன்
    கதை எழுதியபின் தான் தலைப்பு தேர்ந்தெடுத்தேன் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  21. @ ஸ்ரீராம்
    இப்படி சிறார்கள் செய்யத் தூண்டுதலும் இருந்ததே வருகைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  22. @ துரை செல்வராஜு
    கற்பனையானாலும் உண்மைத்தனம் இருக்க வேண்டும் அல்லவா வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  23. கதைக் கரு அருமை! கதையை நகர்த்தியவிதமும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு

  24. @ தளிர் சுரேஷ்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  25. நல்ல சிறுகதை! ஆரம்பத்திலேயே சிறுமியின் பணிவு வீட்டு எஜமானியைக் கவர்ந்து விட்டதை சொல்லி விட்டீர்கள். சிறுமியின் மற்ற‌ குணங்களும் அவளுடைய சூட்டிகைத்தனமும் மிகவும் பிடித்து விட்டதாலேயே தன் பெண்ணாகவே நினைத்து விட்டதில் ஆச்சரியமில்லை. அதனாலேயே அந்த சிறுமி தவறு செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையில் கவனக் குறைவாயிருந்ததிலும் ஆச்சரியமில்லை. இது நிறைய பேர் வீட்டில் நடப்பது தான். அதனாலேயே அவளின் பொய்யும் திருட்டுத்தனமும் தெரிந்ததும் தப்பு செய்யும்படி தூண்டுதல்கூட ஒரு வகையில் குற்ற‌ம் என்று நினைத்து அந்த சிறுமியை மன்னித்து விடுகிறார் அந்த எஜமானி! இங்கே அவரின் பிரியம் ஜெயித்து விடுகிறது!

    பதிலளிநீக்கு

  26. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    எல்லோரும் தவறுகள் செய்கிறோம் மன்னிப்பு என்பதை வலியுறுத்திச் சொல்லப்பட்டது வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  27. @ மனோ சாமிநாதன்
    கதையை உள்வாங்கிக் கருத்து எழுதிய விதம் மகிழ்ச்சி தருகிறது அபூர்வ வருகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கு கிறது மேடம்

    பதிலளிநீக்கு
  28. வீட்டு எஜமானி மேல்தான் தவறு....
    அந்தக் குழந்தை பணத்தை எடுக்கும் போது மகனிடம் கேட்டவள் வேலைக்காரப் பெண்ணிடம் கேட்காதது ஏனோ...

    இருந்தாலும் முடிவில் அன்பு நிறைகிறது.

    பதிலளிநீக்கு
  29. தவறு செய்பவர்கள் திருந்த வாய்ப்புத் தர வேண்டும் என்பதை சொல்லும் கதை.

    வீட்டம்மாவும் பொருட்களை கண்ட இடத்தில் வைக்கும் தவறைத் திருத்திக் கொண்டால் நல்லது!

    பதிலளிநீக்கு

  30. @ பரிவை சே குமார்
    வேலைக்காரப் பெண்ணிடம் ஏன் கேட்கவில்லை. நம்பிக்கைதான் காரணம் எந்த முகாந்திரமும் இல்லாமல் சந்தேகப்படக் கூடாது என்பதால்தான்தவறாக இருந்தால் அப்பெண்மனம் நோகலாம் என்பதும் காரணமாயிருக்கலாம் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  31. @ வெங்கட் நாகராஜ்
    வீட்டம்மா அதை உணர்ந்திருக்கிறார்கள் என்று சொல்ல வில்லையா வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  32. படைப்பு அருமை.....கவனக்குறைவு வேண்டுமானால் தவறாக இருக்கலாம்...ஆனால் மனம் தங்கம். அந்த பெண் இறுதி வரை மன்னிப்பும் கேட்காமல், இலவச அறிவுரை வேறு வழங்கியிருக்கிறாரே......

    வீட்டுப் பெண்மணியின் குணம், நல்ல குணம். தங்க குணம்.

    பதிலளிநீக்கு

  33. @ ஷக்தி பிரபா
    /அந்த பெண் இறுதி வரை மன்னிப்பும் கேட்காமல், இலவச அறிவுரை வேறு வழங்கியிருக்கிறாரே....../ சிறு பெண்தானே வீட்டம்மாதான் மன்னித்து விட்டாரே வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு