ஒரு சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 ஜனவரி, 2022

எங்கே தவறு

                 எங்கே  தவறு.....?

                                             -----------------
                                         ( ஒரு சிறு கதை )

தப தப “ என்று கதவு தட்டப் பட்டது.
“ இதோ வருகிறேன். அதற்குள் இப்படியா கதவைத் தட்டுவது” என்று கூறிக் கொண்டே வந்த ஜயந்தி சற்றும் எதிர்பார்க்காத முறையில் , கதவை திறந்ததும் தள்ளப் பட்டாள் அவளுக்கு பரிச்சயமே இல்லாத மூன்று நான்கு பேர் அவளைக் கீழே தள்ளி மிதித்து , அவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து மாறி மாறி அறைந்தார்கள். அவளுடைய பதின்ம வயதுப் பெண்: ஐயோ, ஐயோ அம்மாவை அடிக்கிறார்களே என்று சத்தம் போட ஆரம்பித்தாள்.. ‘ உடனே இந்த ஊரைவிட்டு ஓடிடு. இன்னும் இங்கேயே இருக்கலாம்னு நெனச்சா, உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஜாக்கிரதை” வந்தவர்கள் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட பணி முடித்துக் கிளம்பினார்கள்.

ஜயந்திக்கு முதலில் ஒன்றுமே விளங்க வில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் விளங்க ஆரம்பித்ததும் நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவது புரிந்தது. கையில் ஒரு பையில் அத்தியாவசியமான சில துணி மணிகளை எடுத்துக் கொண்டு மகளையும் அழைத்துக் கொண்டு அவள் குடியிருந்த மாடி வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளி யேறினாள்.

அன்றிரவு சுமார் பதினோரு மணி அளவில் ஜயந்தி குடியிருந்த வீட்டின் காம்பௌண்ட் கேட்டைத் தாண்டி வந்த சிலர் கீழ்வீட்டின் கதவைத் தட்டினார்கள்.” அந்தத் தேவடியாள் ஜயந்தி எங்கே.? ஒளித்து வைத்திருக்கிறீர்களா.?”  வீட்டின் சொந்தக்காரருக்கு ஒன்றும் விளங்க வில்லை. “ ஜயந்தி மாடியில் குடியிருக்கிறாள். அங்கு போய் பாருங்கள். இந்த அகால நேரத்தில் தொந்தரவு செய்தால் பொலீசுக்கு போன் பண்ணுவோம்.” என்று சத்தம் போட்டார். “ தாராளமாகப் போன் செய்யுங்கள். இந்த வீட்டில் விபச்சாரம் நடக்கிறது என்று நாங்களும் புகார் கொடுப்போம்” என்று அவர்களும் பதிலுக்கு மிரட்டினார்கள். ஜயந்தி அங்கில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்னர் அந்த ரௌடிக் கும்பல் வெளியேறியது.

அவர்கள் சென்ற பிறகு மாடிக்குச் சென்று பார்த்தபோது கதவு பூட்டப் பட்டிருந்தது தெரிந்தது. இந்த நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவளை கை பேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர். சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்தது.

வீட்டைவிட்டு வெளியே வந்த ஜயந்தி முதலில் அவள் கணவனுக்கு( ? ) ஃபோன் செய்தாள். “ இந்த இடமும் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இனி அங்கு இருப்பது முடியாத காரியம். என்ன செய்யச் சொல்கிறீர்கள்” என்று கேட்டாள்.


“ நீ நேராக மைசூருக்குப் போ. நானும் அங்கு வந்து சேருகிறேன்/ பிறகு உசிதம் போல் செய்யலாம் “ என்று பதிலளித்தான்.
இப்படி எவ்வளவு நாட்கள் ஓடி ஓடி ஒளிந்து வாழமுடியும் . இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவள் நினைவுகள் இதற்கான காரணங்களை மேய ஆரம்பித்தது
ஜயந்தி அழகானவள்தான். எல்லோரையும் போல் வாழ்க்கைக் கனவுகள் அவளுக்கும் நிறையவே இருந்தது. டிகிரி படிப்பு முடித்ததும் திருமணப் பேச்சும் எழுந்தது. ஜயந்திக்கு பட்டம் பெற்றதால் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆசை ஏதுமிருக்க வில்லை. ஆகவே திருமண பேச்சு எழுந்ததும் அவள் மறுப்பு ஏதும் சொல்லாமல் கல்யாணம் செய்ய இசைந்தாள். இவர்கள் சுமாரான வசதி படைத்த குடும்பம் ஒரு அண்ணன் . பார்த்துப் பார்த்துதான் திருமணம் செய்தார்கள். ஜயந்திக்கு அவளது திருமண நாளின் முதல் இரவை மறக்கவே முடியாது.
மணமக்கள் இருவரும் ஏகப் பட்ட எதிர்பார்ப்புகளுடன் முதல் இரவை எதிர் நோக்கி இருந்தனர். ஆரம்ப சம்பாஷணைகளுக்குப் பிறகு விளக்கு அணைக்கப் பட்டது. மணமகன் முதலிரவின் போது இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டவன் போல் மெதுவாக அவளை அணைத்தான். இவளும் இணைந்து கொடுக்க மெல்ல மெல்ல உதடோடு உதடிணைய கைகளும் மேலெல்லாம் படர தாம்பத்தியத்தின் முதல் படியில் இறங்கினான். ஓரிரு நிமிடங்களில் அவனுடைய இச்சை தணிக்கப் பட்டதும் சோர்வுடன் சரிந்தான். அதுவரை அவனுடைய இச்சைக்கு தன்னை உட்படுத்திக் கொண்ட ஜயந்தி மெதுவாக உடல் கிளர்ச்சியால் ஆட்படுத்தப் பட்டு அவனை இறுக்கிக் கட்டி அணைத்தாள். இதனை சற்றும் எதிர்பாராத அவள் கணவன் முதலில் கொஞ்சம் பயந்தான். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட அவன் மீண்டும் கலவியில் மூழ்கி அயர்ந்தான். ஜயந்தி அப்போதுதான் மெதுவாக இச்சையின் உச்சத்துக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் கலவியின் இன்பத்தை அடையும் முன்பாக அவள் கணவன்  துவண்டு விட்டான். அவனால் முடியவில்லை ஜயந்திக்கு அவன் மேல் கோபம் எழுந்தது. இப்படியாக முதல் இரவு இருவருக்கும் வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது. அதன் பின் வந்த நாட்களிலும் இதே அனுபவம் தொடர இருவரும் இரவு நேரத்தை வெறுக்க ஆரம்பித்தனர்.இளமைப் பருவத்தின் உடல் இச்சைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கணவனின் கையாலாகாத்தை வெறுத்து இவளும் , இவள் இச்சையைப் பூர்த்திசெய்ய ஒரு ” பொலி எருது” தான் வரவேண்டும் என்று அவனும் நினைக்கத் தொடங்கினர்.
எது எப்படி இருந்தாலும் ஜயந்தி முழுகாமல் இருந்து ஒரு பெண் மகவை ஈன்றாள். சிறிது காலத்துக்காவது நிம்மதியாக இருக்கலாம் என்று அவள் கணவன் நினைத்துக் கொண்டான். தாம்பத்திய வாழ்வில் எவ்வளவு நாட்கள் இப்படியே தாக்கு பிடிக்க முடியும்.? சண்டையும் பூசலுமாக நாட்கள் ஓடின. ஒரு நாள் இவளையும் குழந்தையையும் விட்டு விட்டு அவன் ஓடியே போய் விட்டான். ஜயந்திக்கு காரணம் தெரிந்திருந்தாலும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் செய்வதறியாது நடமாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு இட மாற்றம் தேவை என்று நினைத்து அவளை அவளது அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இடமாற்றம் கொஞ்சம் தெளிவு கொடுத்தாலும் ஜயந்தியின் இளமையின் இச்சைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இருந்தது. துணைக்கு ஏங்க ஆரம்பித்தது மனசு. காலையில் எழுவது பள்ளிக்குப் போகத்துவங்கிய பெண்ணின் தேவைகளைக் கவனிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என்று ஒரே சீரில் வாழ்க்கை நடந்தாலும் மனதின் வெறுமை அவளை ஆக்கிரமிக்கத் துவங்கியது. மெள்ள மெள்ள தன் அண்ணனுக்கும் அவன் குடும்பத்துக்கும் தான் பாரமாய் இருப்பதாய் எண்ணத் துவங்கினாள்
ஜயந்தியின் அண்ணனுக்கு நிறைய நண்பர்கள். அவனது வீட்டுக்கு வந்து போகும் பலரையும் ஜயந்தி கவனித்து வந்தாள். அவர்களில் சிவகுமார் இவளைக் கவர்ந்தான். நிதானமாக அவனைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டாள் . சிபகுமாரனுக்கு ஏறத்தாழ இவள் வயதிருக்கும். பெரிய பணக்காரன். மணமானவன், மனசுக்குப் பிடித்தவனாய் இருந்தான். சிவகுமாரனுக்குக் குழந்தை பாக்கியம் இருக்கவில்லை. அவன் மனைவி வீட்டில் அது ஒரு பெரிய குறையாகத் தெரிந்தது. வசதி இருந்தும் குழந்தை பெறும் அருகதை இல்லாதவன் என்பதால் உதாசீனப்படுத்தப் பட்டான். சிவகுமாரன் வீட்டில் குழந்தை இல்லாக் குறைக்கு அவன் மனைவியே காரணம் என்று எண்ணினர். அவனுக்கு மறுமணம் செய்யவும் தயாராயிருந்தனர். குழந்தை இல்லை என்னும் ஒரே காரணத்துக்காக விவாக ரத்து கிடைக்குமா.?மேலும் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டவன் அதன் பலன்களை இழக்க விரும்பவில்லை. ஜயந்தியைக் கண்டவன் அவளது மையலில் மயங்கினான். ஜயந்தியின் அண்ணனுக்கு இது பிடிக்கவில்லை. ஜயந்தியை மணமுடித்து தனியாகக் குடித்தனம் வைக்கச் சொன்னான். சிவகுமாரனின் தாய்க்கு இதில் உடன்பாடே. சிவகுமாரன் சட்டப்படி ஜயந்தியை மணக்க முடியாவிட்டாலும் கோவிலில் ஆண்டவன் சந்நதியில் ஜயந்தியின் க்ழுத்தில் தாலி கட்டி அங்கே அருகிலேயே வீடு பார்த்துக் குடித்தனம் வைத்தான்.
அதில்தான் வினையே ஆரம்பித்தது. சிவகுமாரனின் மனைவியின் சகோதரர்கள் அடியாட்களுடன் வந்து ஜயந்தியை சிவகுமாரன் இல்லாத நேரத்தில் வந்து மிரட்டியும் அச்சுறுத்தியும் வரத் துவங்கினர். அடிக்கடி ஜாகை மாற்றி பயத்தில் ஜடந்தியும் அவள் மகளும் வசித்தனர். சிவகுமாரனைத் தொடர்ந்து வந்து அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து கலாட்டா செய்ததால், சிவகுமாரன் அவனது காரை எங்காவது தூரத்தில் நிறுத்தி நடந்து வரத்தொடங்கினான்.  ஜயந்தி தனக்காக வாடகைக்கு வீடு தேடினால் அவளை விசாரித்து கணவனோடு வரும்படி வீட்டு உடமையாளர்கள் கேட்டனர். கணவருக்கு அடிக்கடி பயணம் செய்யும் பணி என்று பொய் பேசிப் பார்த்தும் வீடு வாடகைக்கு கிடைக்காததால் சிவகுமாரனுடன் வந்து வாடகைக்கு வீடு பிடிக்கலானாள். இப்படி ஓடி ஒளிந்து வாழ்கையில் சிவகுமாரன் மனைவி கர்ப்பம் தரித்து ஒரு ஆண்மகவை ஈன்றாள். ஜயந்தியின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிவகுமாரனின் உறவினர்கள் வன்முறையில் இறங்க நடந்ததுதான் அவள் கடைசியாக வீட்டை விட்டு வெளியேறியது.
ஜயந்தியை மைசூருக்குப் போகச் சொன்ன சிவகுமாரன் அங்கு சென்று அவளுடன் காரில் அவளது சொந்த ஊருக்கு கூட்டிச் சென்று அவளை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்து அவளை கைவிட மாட்டேன் என்று உறுதி அளித்து வந்து விட்டான்.
ஜயந்தியின் கதை கேட்கும்போது எங்கோ  ஏதோ தவறு என்பது புரிகிறது.  எங்கே என்று தெரிகிறதா.?.   
(  விமரிசனம்  வரவேற்கப்படுகிறது ) 

புதன், 11 நவம்பர், 2020

old is gold

 

Old is  gold


                                          
பார்வையும் மௌனமும்.
                                           -----------------------------------
                                                      ( 
ஒரு சிறு கதை.)


” ஹரே ராம, ஹரே ராம, ராமராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ணகிருஷ்ண ஹரே ஹரே”  வாய் ஓயாமல் ஈசுவரன் நாமத்தை ஜெபித்துக் கொண்டு இருக்கட்டும். மனம் அலைபாயாமல் ஒரு நிலைப் படும். உன் துன்பங்களை மறக்க இதுதான் சிறந்த வழி என்று , அன்று யாரோ சொல்லிச் சென்றதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாழ்ந்தாள் காமுப்பாட்டி.வாய் ஓயாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கலாம். மனம் ஓயாமல் சிந்திப்பதை தடுக்க முடியுமா.? பாட்டி என்று எல்லோரும் அழைக்கின்றனரே. அப்படி அவளுக்கு என்னதான் வயதாகிவிட்டது.ஒரு முப்பத்தைந்து இருக்குமா. ? முப்பத்தைந்து வயதில் பாட்டியா.? திருமணமே ஆகாதவள் எப்படிப் பாட்டியாக முடியும்.?

 

சிறு வயதில் வைசூரி வந்து பார்வை போனவளை அவளது தமையன் சுந்தா எனும் சுந்தரேசன்தான் பராமரித்து வந்தார். ஒரு கப்பல் கம்பனியில் ஸ்டூவர்ட் ஆகப் பணியாற்றி அப்போதைய ரங்கூனில் பணியாற்றி வந்தவர் நல்ல நிலையில்தான் இருந்தார். எப்போதும்போல் ஒரே மாதிரியாக வாழ்க்கை அமைவதில்லையே. இரண்டாம் உலகப் போர் பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. அவரவர் உயிர் தப்பிப் பிழைக்க இடம் பெயர்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆங்கிலேயரதும் ஜப்பானியரதும் குண்டு மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போயிற்று. ஆயிரக் கணக்கானோர் உழைத்து சேர்த்த பொருளைத் துறந்து உடல் ஆவி  காக்க நடந்தே தூரத்தைக் கடக்கச் செய்த முயற்சியில் மனம் உடைந்தவர் பலர் .பல சமயங்களில் எடுக்கும் முடிவு சரியா தவறா என்று சிந்திக்கக் கூட முடியாத நேரத்தில் எடுக்கப் படுகிறது.கட்டிய மனைவி,பெற்ற பிள்ளைகள் இருவர் கண்

தெரியாத சகோதரி; மணமாகாதவள்  யௌவனம் குன்றாதவள் . உயிருக்குப் பயந்து ஓடும்போது அவளைச் சேதமில்லாமல் ஊர் கொண்டு போய்ச் சேர்க்க அவளது தலை மழிக்கப் பட்டது. மணமேயாகாதவளுக்கு விதவைக் கோலம் போடப் பட்டது. உயிர் பிழைக்க மெய் வருந்தி வந்து சேர்ந்தபோது அவளுக்குச் சற்றே மனம் பிறழ்ந்திருந்தது.,சிறிது சப்தம் கேட்டாலும் நிலை குலைந்து போய்விடுவாள் ஆகாய விமானங்கள் குண்டு மாரி பொழிகின்றன என்றே பயந்து அலறுவாள்.

 

”‘ராம ராம ராம ராமசுந்தா, பேப்பர் பையன் பேப்பர் போட்டுட்டு போய் விட்டான். மதிலோரத்தில் விழுந்திருக்கு பார்கண் தெரியாதவ.ள்தான். ஆனாலும் வந்தது பேப்பர் பையன், வீசி எறிந்த பேப்பர் மதிலோரத்தில் வீழ்ந்திருக்கிறது என்று துல்லியமாகச் சொல்லுவாள், காமுப் பாட்டி. அவளைப் போய் பாட்டி என்று சொல்ல மனம் வருவதில்லை. ஆகவே இனி அவள் வெறும் காமுதான். கண்புலன் இல்லாதிருந்தாலும் காமுவுக்கு, மீதி எல்லாப் புலன்களும் மும்மடங்கு கூர்மையானவை. அவளது எல்லா வேலைகளையும் அவளே செய்து கொள்வாள். அடுப்பு மூட்டி வென்னீர்போட்டு குளித்து, துணி துவைத்து என்று எல்லாப் பணிகளும் செய்வாள். அவளுக்கு சப்தம் சிறிது அதிகமானாலும் துடித்து விடுவாள். ‘ என் ஆயுசை எடுத்துக் கொள். குண்டு போடாதேஎன்று வானம் பார்த்து ( ? ) அலறுவாள்அந்த நேரம் மாத்திரம் மட்டுமே அவள் வித்தியாசமாய் நடந்து கொள்வாள். அதனால் அந்த வீட்டில் ஒருவர் பேசுவது அடுத்தவருக்குக் கேட்பதே கடினம் என்றவகையில் மெதுவாகவே உரையாடுவார்கள்

 

.

காமு அந்த வீட்டில் இன்னொரு பொருள் என்ற நிலையிலேயே கருதப் பட்டு வந்தாள். என்ன இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா.?உடலும் மனதும் துணைக்காக ஏங்காதா.?. சுந்தரேசன் மனைவிக்கு இந்த எண்ணம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. தன் கணவனிடம் அன்பாகப் பேசவே தயங்குவாள். காமுவுக்குத்தான் பாம்புச் செவியாயிற்றே. சிறிது சலனம் ஏற்பட்டாலும் ‘ என்ன’ என்று கேட்டுவிடுவாள். அந்த வீட்டுக்கு வந்து போகிறவர் யார் யார் என்று காமுவுக்கு நன்றாகத் தெரியும் காலடி ஓசையிலேயே வித்தியாசம் கண்டு கேள்விகள் கேட்கத் துவங்கி விடுவாள்.

 

சுந்தரேசனின் மனைவியின் குடும்பத்து உறவினர்கள் அடிக்கடி வந்து போவார்கள் பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் வருவார். இவர்கள் எல்லோரையும் காமுவுக்கு அடையாளம் ( ? ) தெரியும். காமுவுக்கு நல்ல குரல் வளம். அவளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்தால். இசையில் மனம் லயித்து அவளைப் பற்றிய சிந்தனைகள் அவளை அதிகம் வாட்டாது என்று எண்ணி காமுவுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க ஏற்பாடாயிற்று. மதியம் பாட்டு சொல்லிக் கொடுக்க ஆசிரியர் வரும் சமயம் அநேகமாக வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்.உச்சஸ்தாயியில் வரும் பாட்டை தவிர்க்க ஆசிரியரிடம் வேண்டுகோள் வைக்கப் பட்டது. ஒரு விதத்தில் அது சுந்தரேசனின் மனைவிக்கு அனுகூலமாக இருந்தது. அவருடைய மதிய உறக்கம் கெடாது அல்லவா.

 

வீட்டில் போதிய மனிதர்கள் இருந்தும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்வதில்லை. என்னதான் பேச முனைந்தாலும் ஒரு இறுக்கச் சூழல் இருந்து கொண்டே இருந்தது. மனதில் தோன்றும் எண்ணங்கள் வெளிப்படுத்தப் படாமல் அநேகமாக சருகாகவே உதிர்ந்து விடுவதுண்டு. காமுவுக்கு சில நேரங்களில் எல்லாவற்றின் மீதும் ஆத்திரம் வரும். அப்போதெல்லாம் அவள் ஏதாவது சொல்ல வரும் போது ” கிருஷ்ணா, ராமா “ என்று ஜபித்துக் கொண்டிரு. மனசை அலைய விடாதே என்று அடக்கி விடுவார் சுந்தரேசன். அவருக்குப் பதில் தெரியாக் கேள்விகள் கேட்டுவிடுவாளோ என்னும் பயம்.. ஒன்றுமே தெரியாமல் பார்வையே இல்லாமல் வெறும் வார்த்தைகளைக் கொண்டு மனதை எதில் லயிக்கச் செய்யமுடியும். ?கிருஷ்ணனையும் ராமனையும் வெறும் வார்த்தைகளால் தெரிந்து கொள்ளச் சொல்கிறார்களே என்று கோபம் வரும் அந்த உணர்ச்சியையும் யாரிடமும் காட்ட முடியாது.

 

ஒரு முறைபாட்டுப் படித்துக் கொண்டிருந்தபோது எங்கோ ஒரு பட்டாசுச் சத்தம் கேட்டு அல்றினாள். ” என் ஆயுசை எடுத்துக் கொள்; குண்டு போடாதே” என்று துடித்தவளை அனிச்சையாக பாட்டு வாத்தியார் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் காமுவுக்குள்  என்னவோ சலனங்களை ஏற்படுத்தியது. எதுவோ தனக்கு மறுக்கப்பட்டு இப்போது அறியாமல் பெறப் படும்போது சற்றே மனமும் உடலும் குறு குறுத்தது. என்னவோ தவறு செய்கிறோமோ என்று தோன்றினாலும் அந்தத் தவறை செய்வதில் அலாதி இன்பம் இருப்பதை உணர்ந்தாள்..பாட்டு ஆசிரியரும் சற்றும் யோசிக்காமல் ஆறுதலாக அணைத்தவர், யாராவது பார்த்து விடுவார்களோ என்றுதான் பயந்தார். கண் தெரியாவிட்டால்தான் என்ன. ?அவளது உடலில் ஓடிய உணர்ச்சிகள் அவரால் உணரப் பட்டதே. ” வெறும் வெடிச்சத்தம்தான். யாரும் குண்டு போடவில்லை “என்று ஆறுதலாகக் கூறியவர் அவளுடைய இந்த பயம் போக்கும் மருந்து தன்னிடம் இருப்பதை உணர்ந்தார். 

 

அடுத்த சில நாட்களில் காமுவிடம் சற்று மாற்றம் இருப்பதை சுந்தரேசன் உணர்ந்து கொண்டார் .ராம ராமாவுக்குப் பதில் சில பாட்டுக்கள் முணுமுணுக்கப் பட்டன.” ஆசை முகம் மறந்து போச்சே “ என்றும் கண்ணில் தெரியுதொரு தோற்றம் “ என்றும் அவளது பாட்டு சத்தம் இயல்புக்கு முரணாக ஒலிக்கக் கேட்க சுந்தரேசன் தன் மனைவியிடம் இது பற்றிக் கேட்டார். ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத் தெரியலாம் அல்லவா.

 

“காமுவின் சுபாவத்தில் என்னவோ மாற்றம் தெரிகிறதே ,கவனித்தாயா.

 

“ அவள் முன்னைப் போல் இல்லை. நானும் கவனித்தேன்..அவகிட்ட இது பற்றி எப்படிக் கேட்பது “

 

“ நீ எதையும் கேட்டு வைக்காதே. ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் தானாத் தெரியறது.” என்று மனைவிக்கு கடிவாளம் போட்டார். சுந்தரேசன்.

 

அந்த நாள் சீக்கிரமே வந்தது. காமு ஒரு நாள் “வெண்ணிலவு நீ எனக்கு;

மேவுகடல் நான் உனக்கு; பண்ணின் சுதி நீ எனக்கு; பாட்டினிமை நான் உனக்கு “ என்று பாடிக் கொண்டிருந்தாள்.

 

“ ஹாய் ! அத்தைப் பாட்டி நல்லாப் பாடறாங்களே” என்று குழந்தைகள் பாராட்ட வந்ததே கோபம் காமுவுக்கு

 

.

“ நான் என்ன பாட்டியா உங்களுக்கு. கிருஷ்ணா ராமா ன்னு இருந்தா பாட்டியாகி விடுவேனா. காலா காலத்துல எனக்கும் கலியாணம் கார்த்தின்னு இருந்தா இப்படிக் கூப்பிடுவேளா..எல்லாம் ஒங்கப்பாவச் சொல்லணும் “ என்று பிலு பிலுக்க துவங்கி விட்டாள். யாருமே கொஞ்சமும் எதிர்பார்க்காத பிரச்சனையாகி விட்டது. காமுவை பாட்டி என்று நம்பச் செய்தது.

 

அதன் பின் எல்லோரிடமும் காமு சிடுசிடுவெனவே இருந்தாள் சுந்தரேசனும் அவன் மனைவியும் கலந்தாலோசித்தனர். காமுவின் மனம் முன்னைப் போல் ஈஸ்வர நாமத்தில் லயிக்கவில்லை. எப்போதும் பாடிக்கொண்டே இருந்தாள். காமுவை எப்படியாவது பாட்டுப் பாடுவதை நிறுத்தச் செய்ய வேண்டும்.பாடும் பாட்டு வேறு எண்ணங்களுக்கு வித்திடலாம் அதனை நிறைவேற்றும் உத்தியாக பாட்டு ஆசிரியரை வர வேண்டாம் என்று சொன்னார்கள். பாட்டுவாத்தியாருக்கு கொஞ்சம் புரிந்தது போலவும் , கொஞ்சம் புரியாதது போலவும் இருந்தது. எதையாவது கேட்கப் போய் எங்காவது கொண்டு விட்டால் என்ன செய்வது.? ஏதும் கேட்காமல் அவரும் நின்றுவிட்டார். பாட்டு நிறுத்தினது காமுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் கேட்டாள். லௌகீகப் பாடல்கள் கற்றுக் கொள்வதால் மனம் 

கட்டுக்கடங்காமல் போய்விடும்.. அதனால் அவளுக்கும் மற்றவர்களுக்கும் மன அமைதி குறையும் என்றும் கூறி அவளை அடக்கப் பார்த்தனர். பாட்டு வாத்தியாரால்தான் எல்லாம் கெட்டுப் போவதாகவும் அதனால்தான் அவரை நிறுத்திவிட்டதாகவும் கூறினர். காமுவுக்கு எதையும் ஜீரணிக்க முடியவில்லை. என்னவென்று சொல்ல முடியாத ஒரு வைராக்கியம் அவளது உள்ளத்தில் எழுந்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விடாமல் பாடத் துவங்கி விட்டாள். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியும் கதையாய் தோன்றியது சுந்தரேசனுக்கும் அவர் மனைவிக்கும்.

 

இவ்வளவு நாள் இல்லாத பிரச்சனை இப்போது தலை தூக்குவது தெரிந்தது.

” கண் தெரியாதவள், வேண்டாத எண்ண்ங்களுக்கு அடிமையாய் கெட்டுத் தொலந்தால் என்ன செய்வது. எதையாவது சொன்னால் எதிர்த்தல்லவா பேசுகிறாள். கண் தெரியாதது போல் வாயும் ஊமையாய் இருந்தால் எவ்வளவு நல்லதாயிருக்கும்.” கணவன் மனைவி பேசிக்கொண்டதைக் காமு கேட்டு விட்டாள். என்னவென்று சொல்ல முடியாத பாரம் அவளை அழுத்திற்று. குருட்டுக் கண்களானாலும் கண்ணீருக்குப் பஞ்சமா என்ன.?ஒரு இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். ‘ கண் தெரியாமல் இருப்பது போல் பேச்சும் இல்லாதிருக்க வேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புகிறார்கள். இனி என் வாயிலிருந்து ஒரு அட்சரமும் வெளிவராது. இனி என்றும் மௌனம்தான்’ என்று முடிவெடுத்துவிட்டாள் காமு.

 

ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இருண்ட உலகில் பல்வேறு  சப்தங்களுக்கிடையில் நிரந்தர மௌனத்தின் ஓசையிலேயே காலம் கடத்திய காமுவின் நினைவுகள் சுந்தரேசனுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.

“ மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும் “எங்கோ ஒலிக்கும் பாடலும் அதன் முரணும் வலியை இன்னும் அதிகரிக்கச் செய்தது

-----------------------

 

 

 

 

 

 

 

 

புதன், 30 செப்டம்பர், 2020

கேட்காமல் ஒரு காதல் கதை

 

கேட்காமல் ஒரு காதல் கதை

 

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

 

நிலவைப் பழிக்கும் முகம்

     நினைவைப் பதிக்கும் கண்கள்

     நிலமடந்தை நாணும் எழில்-முத்துச்

     சரம் விரித்த முல்லைச் சிரிப்பு-சிந்தக்

     கமலமலர் செவ்விதழ் விரிப்பு-கொண்டு

     படர்கொடிவெல்லும் துடியிடைஎன்

     இடர் சேர்க்க இடையிடையாட மென்னடை

     நடந்தென் முன் நின்றாள்-இன்பக்

     கனவினை நனவாக்க எண்ணி-வந்த

     கற்பனைக் கண் கண்ட கன்னி.

திரைப்பாடலுடன்   நானெழுதிய  பாடலும்  மனதில் 

 

என்கற்பனைகண்கண்ட கன்னி உன்னைத்தவிர வேறு யார் இருக்கமுடியும் என் மனத்திரையிலிருந்து என்றுமே அழிக்க இயலாத சித்திரம் அல்லவா  நீ.இதை நீ அறிவாய் என்று எனக்கும்  தெரியும்  ஏன் என்றால் இதை நான்  எழுதி இருப்பதே உன் புகைப்படத்தின் பின்புறம்தானே எத்தனை கடிதங்கள் எழுதினாலும் பார்த்துக் கொண்டாலும்  சந்திப்பது போல் ஆகுமா? நாம் ஒரு முறை சந்திக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் வருகிற ஞாயிற்றுக் கிழமை  டபிள் ரோடில் சுமார் நான்கு மணி அ;ளவில் சந்திக்க வேண்டுகிறேன்

      ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்றரை மணிக்கே இவன்  டபிள் ரோடில் காத்துக் கொண்டிருந்தான் அவள்  வருகைக்காக.வருகிற பஸ் ஒவ்வொன்றிலும் ஏறித் தேடாத குறைதான். அவள் வருவாளா, வர மாட்டாளா என்ற சந்தேகம் வேறு அடிக்கடி எழ ஆரம்பித்தது. அவள் வரக் கூடாது, வருவது தவறு என்றுதான் அவள் எண்ணுவாள்,;இருந்தாலும் என்மீது அவளுக்கு அன்பிருக்குமானால் என்னை ஏமாற்ற மாட்டாள், தவறு என்று சுட்டிக் காட்டும் மனதையும் மீறி வருவாள். வராவிட்டால்......? அவளுக்கு என்மீது அன்பில்லை என்று நினைக்கலாமா.?சேச்சே... அதெப்படி.?அவளுடைய நிலையையும்தான் யோசிக்க வெண்டுமே. ! அவளோ பாவம் பெண்..! எதற்காக இப்படி மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் தெரிந்துவிடும். ---என்றெல்லாம் எண்ணிக் கொண்டும், தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டும், விடையளித்துக் கொண்டும் அரை மணி நேரத்தைப் போக்கி இருப்பான். இதன் கூடவே இவனுக்கு இன்னொரு சங்கடமும் ஏற்பட்டது.” வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாயிற்று. வந்தால் என்ன பேசுவது.? வந்தவுடன் “ நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன்.நீயும் என்னை நேசிக்கிறாயா.?” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கேட்கலாமா? அப்படி ஒரேயடியாக விஷயத்துக்கு வர முடியுமா.?அப்படியே கேட்டால் அவள் என்னைப் பற்றி ஒரு சமயம் தவறாக எடை போட்டு விட்டால்... எண்ண எண்ண குழப்பம்தான் அதிகரிக்கிறது.வரும்போது வரட்டும் பேசுவது பற்றி பிற்கு யோசிக்கலாம். நான் காத்திருப்பதே அவளுக்குத் தெரியாமல் இருக்க இந்த காஃபி பார் உள்ளிருப்பது. வந்து அவள் என்னைத் தேடட்டும். என்னைக் காணாமல் அவள் சந்தோஷப் பட்டால், அவளைப் பார்க்காமலேயே திரும்பிப் போய் விடுவது. ஏமாற்றமடைந்து வருத்தப் படுவதுபோல் தோன்றினால் அவளைப் போய்ப் பார்ப்பது”. இந்த முடிவுக்கு வந்ததும் அதை செயல் படுத்த அருகில் இருந்த காஃபி பாருக்குள் இவன்  நுழைந்தான். தன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள ஒரு காஃபியும் வாங்கி அருந்தினான். பத்து நிமிடங்கள் கழிந்து விட்டன. இரண்டு பஸ்களும் வ்ந்து போய் விட்டது. அவள்  வரவில்லை. இவனுக்கு  கோபம் பற்றிக் கொண்டு வந்தது. அவனை அறியாமலேயே அடுத்திருந்த கடைக்குள் நுழைந்தான்.உயர்ரக சாக்லெட்டுகளும் மிட்டாய்களுமாக கொஞ்சம் வாங்கிக் கொண்டான். ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான். இரண்டு முறை புகையை இழுத்துவிட்டிருப்பான். பிறகுதான் அவனுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது. சிகரெட் புகைப்பதில்லை என்ற தன்னுடைய தீர்மானம் தன்னை அறியாமலேயே மறந்து சிகரெட் புகைத்து விட்டோம் என்ற எண்ணம் வந்ததும் அதை நசுக்கி எறிந்தான். 16-ம் நம்பர் பஸ் வந்தது. அவள்  அதிலும் இருக்க மாட்டாள் என்று நினைத்தான் என்றாலும் கண்கள் அதிலிருந்து இறங்குபவர்களைக் காணத் துடித்தது. இம்முறையும் ஏமாற்றம்தான் என்று நினைக்கும்போது இவனுக்கு நிதானமிழந்து வெட வெடக்க ஆரம்பித்தது. காரணம் அவனுக்குப் புரியவில்லை. இவன் அவள்  பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ,அவளைக் கண்டதும் தன் நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு விட்டதைப் போன்ற உணர்ச்சி யடையப் பெற்றதும் ,நினைவு கூர்ந்தது, அவன் எங்கோ எப்போதோ படித்த ” ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் காணும்போதெல்லாம் முகம் வெளிறி நிற்பான்” என்ற வரிகள்தான். எனக்கே இப்படி என்றால் அவளுக்கு.......என்ற எண்ணம் வந்ததும் அவன் அவனைச் சுதாரித்துக் கொண்டான்.மீண்டும் ஒரு சிகரெட் வாங்க கடைக்குத் திரும்பினான்.

    பஸ்ஸிலிருந்து இறங்கியவள் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். பாபுவைக் காணவில்லை. அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஒரு சமயம் நான் எப்பேர்ப்பட்டவள் என்று சோதிக்க வேண்டி இங்கு வரச் சொல்லி இருப்பாரோ.? நான் வந்ததால் ஒரு சமயம் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டால்......சே.! நான் வந்திருக்கவே கூடாது. என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் போக பஸ் வருகிறதா என்று நோட்ட மிட்டவளின் கண்களுக்கு இவன்  தென் பட்டான். இருந்தாலும் தான் அவனைக் கண்டு விட்டதாகக் காட்டிக் கொள்ளாமலிருக்க வேறு திசையை நோக்கினாள். தன்னைப் பார்த்துப்பேச தன்னிடம் தேடி வரட்டும் என்று எண்ணினாள்

             இவனும்   அவளைக்  கண்டதும் ம அவளே அவனை நோக்கி வருவாள் என்று எண்ணிக் கொண்டு அங்கேயே நின்றான்.ஒருவர் அருகே ஒருவர் செல்லாததால் இருவருக்குமே கொஞ்சம் கோபமேற்பட்டது. ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.  இவனை இவன் மறந்து அவள் அருகே  போய்க் கொண்டிருந்தான். அருகே சென்றவன் ஏதும் பேசவில்லை. பஸ்ஸுக்குக் காத்திருப்பது போல் அவனும் நின்றான். உண்மையில் அவன் அப்போது பஸ்ஸைவிட ஆட்டோ ரிக்‌ஷாவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் அருகிலிருக்கும் லால்பாக் போய் அங்கே ஆற அமரப் பேசிக் கொள்ளலாம் என திடீர் திட்டம் வகுத்து விட்டான். அதை நிறைவேற்ற ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவைக் கூப்பிட்டான். அவள்  இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. இவனுடன்  ஆட்டோவில் செல்வதைக் கூட அவளால் நினைக்க முடியவில்லை. ஆட்டோ வந்ததும் வேண்டாம் பஸ்ஸிலேயே போகிறோம் என்று இவனுக்கும்  ட்ரைவருக்கும் பொதுவாகவே சொன்னாள். ஆட்டோ ட்ரைவர் ஏதோ முணு முணுத்துக் கொண்டே சென்று விட்டான்.

.. அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்.? நாமிருக்கும் நிலையும் பழகும் விதமும் ,எல்லோருக்கும் நம் மீது சந்தேகப் படத் தூண்டும். சகஜமாக இருந்தால் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்பேசப் பேச அது போகும் விதம் திருப்தி அளிப்பதாகத் தோன்றவே தனக்குத்தானே ஒரு ஷொட்டுப் போட்டுக் கொண்டான். மனதிற்குள்ளாக அந்த சந்தோஷத்தில் ஒரு வசீகரமான புன்னகையும் வெளிப்பட்டது.

     இவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்  அவனுடைய அந்த தன்னம்பிக்கை நிறைந்த புன்சிரிப்பில் மயங்கினாள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவள் போல் அதை மறைக்கவே “ எதற்காக என்னை இங்கு வரச் சொன்னீர்கள்? வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறேன். நேரமானால் தேடுவார்கள்.” என்றாள்.

   “ ஆஹா..! வந்ததும் வராததுமாக விஷயத்தைப் புட்டு வைடா என்கிறாய்.  உன்னிடம் எனக்கு நிறையப் பேசவேண்டும். இங்கேயே நின்று பேசுவதென்றால் முடியாத காரியம். லால் பாக் வரை போய் விஷயத்தை நன்றாகப் பேசுவோம். ஆட்டோவைக் கூப்பிடட்டுமா.?

       ” வேண்டாம் ,வேண்டாம், பஸ்ஸிலேயே போகலாம் அங்குபோய்ப் பேசவேண்டியதைப் பேசலாம்  சொல்லிக் கொண்டிருந்தவள் அப்போது ஒரு பஸ் வர அதில் ஏறியும் விட்டாள்

பெண்கள் இருக்கையில் ஜன்னலோர சீட் கிடைத்ததுஇருக்கை  காலியாக இருந்ததுஅதில் உட்கார்ந்தும் விட்டாள் அவள் அருகில் சீட் காலியாக இருந்தது அங்கு உட்கார்ந்தால்  நடத்துனர் எழுந்திருக்கச் சொல்லலாம்அவளுக்கு நேர் எதிர்பக்கம் ஆண்கள் இருக்கையில்இவன்   அமர்ந்தான்அடிக்கடி அவளைப் பார்ப்பதும்புன்னகைப்பதுமாக ஓரிரு நிறுத்தங்கள் கடந்தனதிடீரென்று நாலைந்து வாலிபர்கள் சிரிப்பும் கும்மாளமுமாக பஸ்ஸில் ஏறினார்கள்அவர்களில் ஒருவன் அடுத்தவனிடம் சியாமளாவைப் பார்த்தபடி, “ சோக்ரி அச்சி ஹை “ என்று சொல்லிக் கொண்டே அவளது   பக்கத்தில் அமர்ந்தான்.

இவன்  உடலில் திடீரென்று உஷ்ணம் பாய்ந்ததுகாலியாயிருக்கும் பெண்கள் இருக்கையில் அமர்வது அநாகரிகம் என்றுதானே இவன் அவளை விட்டு வேறு இருக்கையில் அமர்ந்தான்அப்படி இருக்க வேறொருவன் தன்  காதலியின்  பக்கத்தில் உட்காருவதை இவனால்  சகித்துக் கொள்ள முடியவில்லை.

“ மிஸ்டர்அது பெண்கள் சீட்அங்கே உட்காராதீர்கள்.”

“ இவங்களே ஏதும் பேசாமல் இருக்க , இவரப் பாருடா.”.என்று ஒருவன் சொல்ல எல்லோரும் சிரிக்க இவனுக்கு   அவமானமாய்ப் போய்விட்டது.

“ ஏய்,மிஸ்டர் உனக்கு உட்கார இடம் வேண்டும்  அவ்வளவுதானே. இங்கே என் இருக்கையில் உட்கார். அந்த இடத்தைக் காலி செய்

 நான் இங்க உட்கார்ந்தா உனக்கென்ன போச்சு. உன் வேலையைப் பார்ப்பியா....

“ எனக்கென்ன போச்சா... அவள் என் வுட்பீ டா. கண்டவனெல்லாம் அவள் பக்கத்தில் உட்கார சம்மதிக்க மாட்டேன்” என்று கூறி அவனைப் பிடித்திழுத்து அந்த இடத்தில் இவன் அமர்ந்து கொண்டான். இவன் இழுத்ததனால் கோபம் கொண்ட அவனும் அவன் நண்பர்களும் பாபு மேல் பாய ஒரு சிறிய கைகலப்பு நடந்தது. நல்ல வேளை பஸ்ஸில் இருந்தவர்கள் தடுத்து,சண்டை இட்டவர்களைப் பிரித்து விட்டார்கள்.

“ அந்தப் பெண்ணுக்கே அப்ஜெக்‌ஷன் இல்லாதவரை இவனுக்கு என்னாயிற்று” என்று அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டதும் இவனுக்கு  கோபம் அவள் மேல் பாய்ந்தது.

“ உன் வாயில என்ன கொழுக்கட்டையா....பக்கத்தில் வேறொருவன் உட்காரும்போதே எழுந்திருக்கச் சொல்லி இருக்க வேண்டாம்...?” என்று அவளைக் கடிந்து கொண்டான். அவள் கண்களில் நீர் துளித்தது. குளிரில் நடுங்கும் கோழி போல் பயத்தில் உறைந்திருந்தாள். சந்தோஷமாய்ப் பொழுதை கழிக்க திட்டமிட்டவர்களுக்கு இந்த நிகழ்வுகள் சிறிது சலனத்தை ஏற்படுத்தி விட்டது.

 

“ இது பரவாயில்லைநான் கூட இருந்தேன்.நீ தனியாக எங்காவது போகும்போது இம்மாதிரி நடந்தாலென்ன செய்வாய்...?”

“ அவன் அருகில் உட்காருவதில் எனக்கு என்ன நஷ்டம்... என் அண்ணன் என்றோ தம்பி என்றோ நினைத்துப் போவேன் ”

“ அடிப்பாவி....நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் என்று பாரதி பாடிய பெண்மாதிரி இருப்பாய் என்றால் ஒரேயடியாக சாத்வீகப் பறவையாக இருக்கிறாயே ....ரௌத்திரம் பழக வேண்டும்..நீ.....”

“ அதுவே நானில்லாமல் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் ....?”

“ என்ன செய்திருப்பேன்..?தெரியலியே ஹூம்..! பேசாமல் இருந்திருப்பேன்எல்லோரும் என்காதலிகளா என்ன...?YOU ARE MINE. I HAVE TO TAKE CARE OF YOU.”

இருந்தாலும் நீங்க ரொம்பப் பொசசிவ்.. அப்பா... என்ன கோபம் .அவர்கள் எல்லோரும் சேர்ந்து அடித்து விடுவார்களோ என்று பயந்தே போனேன். “

“ அட அசடே...!இந்த மாதிரிப் பொது இடத்தில் அதையெல்லாம் தடுத்து விடுவார்கள்நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் எனும்போதே எனக்கு அசுர பலம் வந்து விடும். “

பஸ்ஸை விட்டு இறங்கி இருவரும் லால்பாக் நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.. நல்ல காற்று வாங்கவும் பொழுது போகவும் வேடிக்கைப் பார்க்கவும்காசு பணம் அதிகம் செலவு செய்யாமல்ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டே கடலை போட லால்பாக் பூங்காவைவிட பெங்களூரில்  சிறந்த இடம் ஏதுமில்லைதென்றல்  வந்து தழுவிச் செல்ல மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே  இருக்க பெங்களூரில் லால்பாக் சிறந்த இடம்தான்

என்னதான் தென்றலில்  மகிழ்ந்தாலும்  பஸ்ஸில் பயணித்ததால் உடம்பு கசகச வென்று இருந்தது   ஒருவரை ஒருவர் தொட்டாலும் ஒட்டும் ஐ மீன் நாம் ஒருவரை ஒருவர் தொட்டாலும்  ஒட்டும் மணமானபின்னால் என்றால் பரவாயில்லை .

 “ ச்சீ  போ. “

 இத இதத்தான் எதிர்பார்த்தேன்எங்கே இன்னொரு முறை சொல்லு. ‘ச்சீ போ’ என்று நீ சொல்லும்போது உன் கண்களையும் வாயையும் பார்த்துக் கொண்டிருக்கும்போது உடம்பெல்லாம் சிலிர்க்கு.......தடி

 அவள் இவனைப் பார்த்து முறைப்பதுபோல் பாவனை செய்தாள்

.” கடலை போட்டது போதும் வாங்க உட்கார்ந்து ஏதோ பேசவேண்டும் என்றீர்களே”

“ என்னத்தப் பேச.. ...உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு.”

ச் சீபோ. “

     ” நடந்து கொண்டு பேசும்போது பேசுவதில் கோர்வை இருக்காது. மனசும் செல்லாது. எங்காவது ஓரிடத்தில் இருந்துதான் பேச முடியும்.

        “ அப்படியானால் இங்கேயே இப்படியே நின்று சொல்லுங்கள் “

        “இங்கேயேவா.? ப்ரைவஸி கொஞ்சம் கூட இல்லையே ஹூம்.! சரி நடந்து கொண்டே பேசலாம். முக்கிய விஷயம் பேசும்போது அங்கேயே நின்று விடுவேன். சரிதானே?

       “ எனக்கு சரிதான், பேசுங்கள்..கேட்கிறேன். “

 

       ” என்ன பேசுவது ,எப்படிப் பேசுவது என்றே மறந்துபோச்சு .உன்னிடம் ஆயிரமாயிரம் பேச வேண்டும் என்று மனசு துடிக்குது. கண் உன்னையே பார்த்துக் கொண்டு இருப்பேன் என்கிறது. வாய் சத்தியாக்கிரகம் செய்கிறது. “

        “ சத்தியாக்கிரகத்திலும் சண்டித்தனமான சத்தியாக்கிரகம் போலிருக்கு. “

இவனுக்கும்   அவளுக்கும் ம் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதற்கு தைரியம் வந்தது. பேச்சும் வளர்ந்தது.

        “ என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறா

        ” என்ன நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை நினைக் கிறேன்.

” விளையாட்டுக்குச் சொல்ல வில்லையே. ?

          ” இல்லை.

        ” நிச்சயமாக...? :

        ” நிச்சயமாக.

        “ , எனக்குத் தாயாக, தாதியாக, துணையாக,நண்பனாக, சேயாக எல்லாம் நீ இருக்க வேண்டும் என்று நான் மனதார ஆசைப் படுகிறேன். சுருங்கச் சொன்னால், என்னில் உன்னையும் , உன்னில் என்னையும் காணத் துடிக்கிறேன். அந்த எண்ணம் உனக்குண்டா,

  பேசிக் கொண்டே நடந்து சென்றவன் உணர்ச்சிவசப்பட்டு நின்று விட்டான். அவன் கண்களில் நீர் பனித்திருந்தது.

       பதில் பேச .அவளால் முடியவில்லை.. இவன் தன்னை அழைத்ததன் காரணம். அவள் ஓரளவுக்கு யூகித்திருந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு சஞ்சலம் இருந்தது. உணர்த்தப் பட்ட பின்போ, அதன் இன்பச் சுமையில் இயந்திரியங்கள் எல்லாமே செயலிழந்து நின்றன.

     பூங்காவில் சென்று கொண்டிருந்த சிலர் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போவதைக் கவனித்த இவன் ,உடனே தன்னிலை வரப் பெற்றான்.

       “ ஐ ஆம் சாரி,  உன் மனதை என் பேச்சாலும் செய்கையாலும் புண் படுத்தி விட்டேன். உண்மையாகவே நான் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடு. அன்பே என்று சொல்லட்டுமா. “

       “ஏன் இப்படி என்னென்னவோ மாதிரிப் பேசறீங்க.?நான் என்னதான் அப்படி தவறு செய்தேன். ?

       “ என் பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை என்று உன் மௌனத்திலேயே தெரிஞ்சு போச்சே.! அதுவே என் தவறுதானே.

       “ மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பார்களே.. அது மாதிரி இருக்கக்கூடாதா.?

       ” வாட்.?  நான் கேட்பது, பொய்யில்லையே “

      எளிதில் உணர்ச்சி வசப் படும் இவனுக்கு கு, அதை எளிதில் அடக்க மட்டும் தெரிய வில்லை. சந்தோஷத்தின் எல்லைக் கோட்டுக்கே சென்றவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சற்று முன்பு வாங்கிய சாக்கலெட்டுகளை சியாமளாவிடம் அள்ளிக் கொடுத்தான். அவனுடைய செய்கைகளை எல்லாம் அவளால் அனுமானிக்க முடியவில்லை. சில சமயம் குழந்தைத் தனமாகப் பட்டது. சில சமயம் உணர்ச்சி வசப் படுத்தியது

     "உங்கள் மேல் எனக்கு ஒரே கோபம். தாயாக, தாதியாக, துணையாக, நண்பனாக, சேயாக என்றெல்லாம் நினைக்க விரும்பும் நீங்கள் முக்கியமாக ஒரு பெண் விரும்பும் ஸ்தானத்தை எனக்குத் தர விரும்ப வில்லை. உங்களுக்கு மனைவியாக என்று மட்டும் கேட்க வில்லை. அதற்கு எனக்கு அருகதை இல்லை என்று உணர்த்தி விட்டீர்கள். “ சியாமளாவுக்கு சொல்லும்போது அழுகையே வந்து விட்டது.

     “ என்னை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். உன்னை மனைவியாக அடைய நான் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். நான் அப்படிக் கேட்க வில்லை என்றால்  ஒரு வேளை அதில் உன்க்கு  உடன்பட  முடிய வில்லை என்றால்  என்ன செய்வது அது எனக்கே விளங்காத புதிர் போன்ற உணர்ச்சியால்தான் . எல்லாம் நல்ல படியாக ஆண்டவன் அருளால் நடக்கும் என்றால்   உரிமையொடு உன்னை உன்வீட்டில் பெண் கேட்பேன்..நீதான் என் மனைவி என்று பெருமையாகப் பேச உன்  பெற்றொர்  சம்மதம்  தேவை.அது கிடைக்காவிட்டல்.....  என் முடிவு எதுவாக  இருந்தாலும்   அதுபொல் செய்வாயா

    ” உங்களைப் புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது. எதற்கு  உங்களை  என் வீட்டில் மறுக்க  வேண்டும்  ஏன் என்று நான் தெரிந்து கொள்வதில் தவறு இருக்காதே.?ஒரு வேளை  சம்மதிக்கா விட்டால் என்னுடன் வருவாயா ரெஜிஸ்தர் கல்யாண செய்யலாமா

முக்கிய முடிவு எடுக்ககாலம் தேவை அவகாசம்  தேவை அதுவரை  அவர்கள்  காதலித்துக் கொண்டேஇருக்கட்டுமே 

 



 

 

 

    

 

 

   

          .