வியாழன், 1 செப்டம்பர், 2016

பெங்களூரு நினைவுகள் அன்றும் இன்றும்


                                              பெங்களூரு நினைவுகள் அன்றும் இன்றும்
                                               ------------------------------------------------------------


Huttidare Kannada Naadal Huttabeku..
Mettidare Kannada Manna Mettabeku..
Badukidu Jataka Bandi.. Idu Vidhiyodisuva Bandi..
Badukidu Jataka Bandi.. Vidhi Aledaadisuva Bandi..
Huttidare Kannada Naadal Huttabeku..
Mettidare Kannada Manna Mettabeku.

ுட்டிே கன்ன  நாடல்லுட்டேக
ெட்டிே கன்னண்ணெட்டேக
ுகிடு ஜட்கா பண்டி  இு விியோடிசுவண்டி  

இந்தப்பாட்டை அவ்வப்போது கேட்பதுண்டு  “பிறந்தால் கன்னட நாட்டில் பிறக்க வேண்டும் “. மிதித்தால் கன்னட மண்ணை மிதிக்கவேண்டும்  வாழ்க்கை ஒரு ஜட்கா வண்டி அதுவே விதியை நகர்த்தும் வண்டி” எனக்குத் தெரிந்த அளவு  மொழியாக்கம்செய்திருக்கிறேன் டாக்டர் ராஜ்குமார் ஆகாஸ்மிகா என்னும்  படத்துக்காகப் பாடியது கன்னடியர்கள் மிகவும் விரும்பும் பாடல்
  நான்  பிறந்தது கன்னட நாடான பெங்களூரில்தான்  முதல் ஒழுங்கான பணி கிடைத்ததும் பெங்களூரில் தான்
 வாழ்வின்  அந்திமகாலங்களைக் கழித்துக் கொண்டிருப்பதும்  பெங்களூரில்தான் இப்படியான  நினைவுகள்  இப்பாட்டைக் கேட்கும்போது வரும்
நான் பிறந்தது 1938-ம் ஆண்டு நவம்பர் மாதம்  11-ம் தேதி பிறந்த இடம் அலசூர் என்று சொல்லிக் கேள்வி. நான் மூன்றாண்டுகள் சுமாராய் இருக்கும் போது நிகழ்ந்த நினைவுகள் மசமசவென்று அவ்வப்போது தோன்றும் என் மாமாவின் காரில் , என் தாத்தாவின் மடியில் அமர்ந்து செல்லும் போது  கார்க்கதவை நோண்டிக்கொண்டிருந்த நான்  ஒரு வளைவில் கார் கதவு திறக்க கிழே விழுந்தேன்  என்னைப் பிடிக்கப் போன என் தாத்தாவும் விழுந்தார்  இருவருக்கும்நல்ல அடி. வீடு வந்தபோது எல்லோரும் அழுதது லேசாக நினைவில்
பள்ளிவிடுமுறையின் போது  பெங்களூர் வருவதுண்டு அப்போதைய பெங்களூரும் இப்போதைய பெங்களூரும்  நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களில்  தெரிகிறது 1955-ல் பெங்களூர் விதான சௌதா கட்டிக் கொண்டிருந்தகாலம்  நான் முதன் முதலில் அங்கு கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது  வேலை செய்ததையும்(பார்க்க)  பூர்வஜென்ம கடன்  என்னும் பதிவில் பகிர்ந்திருக்கிறேன் அப்போது இன்றிருக்கும் சிவாஜி நகர் பேரூந்து நிலையம் கிடையாது. ஒரு திறந்த வெட்ட வெளி திடல் மட்டுமே இருந்தது. அங்கு கழைக்கூத்தாடிகள்  வித்தை காட்டுவதைக் கண்டிருக்கிறேன்  சுவாமி சின்மயாநந்தாவின்  கீதை உபன்யாசம் 18 நாட்கள் கேட்டிருக்கிறேன் நான் சைக்கிள் ஓட்டப்பழகியதும் அங்குதான்
பெங்களூரின்  டோப்போக்ராஃபி பற்றியும் கூற வேண்டும் இப்போதிருக்கும்  மெஜஸ்டிக் பேரூந்து நிலையம் கிடையாது சுபாஷ் நகர்த் திடல்தான்  அரசியல் கூட்டங்கள் நடக்கும்  அங்கே மாஸ்டர் ஹிரணையா “ லஞ்சாவதார” என்னும் நாடகத்தை  மேடையேற்றி இருக்கிறார். ஒரு முறை அவர் அவர்களின் வாழ்வாதாரம் டிக்கெட் வாங்கி நாடகம் பார்க்கும்  மக்களிடம்தான் இருக்கிறது என்றும் முன் இருக்கைகளில் அழைப்பின் பேரில் வந்திருக்கும் பெரியவர்களிடமில்லை என்றும் கூற  பிரதம அழைப்பாளியாக வந்திருந்த  மல்லராத்யா  என்பவர் கவுண்டருக்குப் போய் டிக்கட் வாங்கிவந்து பின் நாடகம் பார்த்ததாகவும்  சொல்லக் கேள்வி
 எனக்கு நன்றாக நினைவில் இருப்பது அந்தக்காலத்தில் இருந்த ஜட்கா  வண்டிகளும் டாக்சிகளும் தான்  பேரூந்துகள்கூட அதிகம் இல்லை.  எச் ஏ எல்   ஐ டி ஐ,  எச் எம் டி   பி இ எல் போன்ற நிறுவனங்கள் தங்களது தொழிலாளிகளுக்காக  இயக்கிக் கொண்டிருந்த பேரூந்துகளே அதிகம்
 நான் முதன்  முதலில் எச் ஏ எல் லில் பணிக்குச் சேர வந்தபோது  கண்டோன்மெண்ட்  ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ஜட்கா வண்டியில் ஏறி என்னை ஒரு தங்குமிடமுள்ள ஓட்டலுக்கு அழைத்துப்போகக் கேட்டேன் எனக்கு இந்த இடம் ஓரளவு விடுமுறைக்கு வந்து போய் இருந்ததால் ஓரளவு பரிச்சயம் கையில் பதினைந்து ரூபாயுடன் பெங்களூர் வந்த எனக்கு அவர் கூட்டிச் சென்ற  இடம் ஒத்து வரவில்லை. மாதவாடகைக்கு அறை இல்லை என்றும்  ஒரு நாளைக்கு வாடகை அறைக்கு ரூ 40/ -என்று கூறியது தலை சுற்றாத குறை. பிறகு அவர் எனக்குத் தோதான இடத்துக்கு  அழைத்துப்போய் நான் என் பெங்களூர் வாழ்க்கையைத் துவங்கியதும் சரித்திரம்  ஆங்காங்கே பகிர்ந்திருக்கிறேன்
ஆட்டோ ரிக்‌ஷாக்கள் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும்காலம் அது
 பென்ஷனர்களின்  சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட பெங்களூரில் தான்  என் வாழ்க்கையின் துவக்கம் இருந்தது வெயில்35டிகிரியைத் தொட்டால் மழை பெய்யும் 
 பெங்களூர் பற்றிஎழுத வந்த நான் ஆங்காங்கே என்னைப் பற்றியும்  கூறுவதைத் தவிர்க்க இயலவில்லை.
அந்தக் காலத்தில் பெங்களூர்  இரு பகுதிகளாக அறியப்பட்டது சிடி ஏரியா என்றும் கண்டோன்மெண்ட்  என்றும் இரு பிரிவுகள். அப்போதெல்லாம்  இந்திராநகர் கோரமங்கலா  போன்ற இடங்கள் இல்லை மஹாத்மாகாந்தி ரோட் சௌத் பரேட்  என்று அழைக்கப் பட்டது  சிடியில் இருப்பவர்களுக்கு கண்டோன்மெண்ட்  ஏரியா என்பது ஏதோ வேறு  உலகம் போலத் தெரிந்தது.  அப்போதெல்லாம்  பசவங்குடி  மல்லேஸ்வரம் போன்ற் இடங்களே முக்கிய வசிப்பிடங்களாக இருந்தது ஜெயநகர் போன்ற இடங்கள் அப்போது இருந்ததாக நினைவில்லை  சிடி ஏரியாவில் கன்னடம்  பேசுபவர்கள் அதிகமும்  கண்டோன்மெண்ட் பகுதிகளில்  தமிழ்  தெலுங்கு, உருதுபேசுபவர்கள் அதிகமாயும் இருந்தனர் இந்திராநகரில் வீடுகள் கட்டி  கன்னடியர்கள் குடி புகுந்ததில் மொழிவாரியாக சமன் பெற்றனர்  
சிடி ஏரியா என்பது பல பேட்டைகளாக இருந்ததுசிக்பெட் பலேபெட், தரகுபெட்,அக்கிபெட்  காட்டன் பெட் போன்ற இடங்கள் கொண்டது.பெரும்பாலும் பிசினஸ் செய்பவர்களே அதிகம்  இருந்தனர்
 BANGALORE  TRANSPORT SERVICE சுருக்கமாக BTS  என்றழைக்கப்பட்ட பஸ் செர்வீஸ் இருந்தது.  அன்று இருந்த வழித்தடங்களில்  பேரூந்து ஏறிப் பயணம் செய்வதே ஒரு அனுபவம் BTS  ஐ பிட்ர திருக சிக்கோதில்லா ( விட்டால் மறுபடியும் கிடைக்காது) என்று செல்லமாகக் கூறுவார்கள்
அரசு அலுவலகங்கள் அட்டாரா கச்சேரி என்று அழைக்கப்படும்  இப்போதிருக்கும் விதானசௌதாவுக்கு எதிர்ப்புறம் இருந்தது
   என் மாமா ஒரு மருத்துவராக இருந்தார் ஞாயிறு மதியம் நிச்சயமாக ஒரு ஆங்கிலப் படம் சௌத் பரேடில் பார்ப்பார் இன்னின்ன தியேட்டரில் இன்னின்ன மொழிப் படங்களே வரும் இந்தியாவிலேயே ஒரே வரிசையில்  அல்லது இடத்தில் இவ்வளவு தியேட்டர்கள் இருந்திருக்காது மெஜெஸ்டிக் ஏரியாவில் ப்ரபாத், சாகர், ஸ்டேட்ஸ் ,கெம்பகௌடா மெஜெஸ்டிக் , ஜெய்ஹிண்ட், அலங்கார் , கீதா கல்பனா எனக்கு நினைவில் இருப்பவை இவை.  இது தவிர கண்டோன்மெண்ட் ஏரியாவில் . ஸ்ரீ, லக்ஷ்மி. ரூப்மஹால் , எல்ஜின் . ரெக்ஸ்  ஆப்பெரா  போன்ற தியேட்டர்கள் உண்டு. கன்னடப் படங்கள் சொற்பமாகவே தயாராகும்  ஹிந்தி படங்களும் தமிழ் படங்களும்  சக்கை போடு போடும் அப்போதெல்லாம் சௌத் பரேடில் கோட் சூட் அணிந்த பலரும் பாக்கெட்டில் கடலைக்காய் வைத்து உரித்து தின்று  கொண்டே  வருவது சகஜமான காட்சியாகும்
எச் ஏ எல் லில்  பயிற்சிக்காகச் சேர்ந்தபோது முதல் ஆறுமாதம்  ஜெயச் சாமராஜேந்திரா பாலிடெக்னிக்கில்  மதியம்  பனிரெண்டு மணியில் இருந்து இரவு எட்டுமணிவரை இருக்கும் நான் தங்கி இருந்த இடத்திலிருந்து மதிய உணவு முடித்துஓல்ட் புவர் ஹௌஸ் வழியே கப்பன்  ரோடுக்கு வந்து அங்கிருந்து ஜெனரல் போஸ்ட்  ஆஃபீஸ் வழியே வந்து  இப்போது இருக்கும்  விதான சவுதா அருகே ருக்கும் பாலிடெக்னிக்குக்கு  நடந்தே வருவோம் ஔமார் மூன்று கிலோ மீட்டருக்கும் மேல் இருக்கும்  நான் மதியம் அறையில் இருக்க வாய்ப்பில்லாததால் எனக்கு வர வேண்டிய  ரெஜிஸ்தர் கடிதங்களையோ  தபால்களையோ பெற முடியாது ஆகவே அங்கிருந்த ஜெனரல் தபால் நிலையத்தில்  போஸ்ட் மாஸ்டரிடம்  சென்று எனக்கு வரும் தபால்களை  கேர் ஆஃப் போஸ்ட் மாஸ்டர்  என்னும்  முகவரிக்கு வந்தால் அதை நான் வந்து பெற்றுக் கொள்ள முடியும்  என்று கூறினேன்  மனிதாபிமானம் மிக்கவர்  அவர் ஒப்புதல் தந்தார் அப்போது குரியர் செர்வீஸ் இல்லை காலம் மாறி விட்டதுஞாயிற்றுக் கிழமைகளில் கப்பன் பார்க்கில்  இசை நிகழ்ச்சிகள் இருக்கும்    அது அந்தக் காலம் 
எப்படி இருந்தாலும் சில கட்டிடங்கள் மாறாமல் அப்படியே இருக்கிறது உதாரணத்துக்கு சௌத் பரேடில் இருக்கும் எல் ஐ சி கட்டிடம்  மேயோ ஹால். ப்ரிகேட் ரோடில் இருக்கும்  ஆப்பெரா ஹவுஸ்( அப்போது திரைபடங்கள் திரையிடப்படும். இப்போது இல்லை)டௌன் ஹால்
கலாக்ஷேத்திர கட்டிடம்  அப்போது இல்லை இந்த டௌன் ஹாலில் 1961ம் ஆண்டு  நான்  வாழ்ந்தே தீருவேன் என்னும் நாடகத்தை எழுதி இயக்கி நடித்தும்  இருக்கிறேன் காந்திநகரில் இருந்த குப்பி தியேட்டரிலும்  நாடகம் மேடை யேற்றிருக்கிறேன்
அலசூரில் சோமேஸ்வரன்  கோவில் எதிரே இருந்த சாலையில்  சில வீடுகளுக்கடியில் கோவிலின் குளமிருப்பதாக அறியப்பட்டு அங்கிருந்த வீடுகளை அகற்றி  குளத்தை  மீட்டிருக்கிறார்கள்
 பெங்களூரை விட்டுப் போய்  சென்னையிலும்  திருச்சியிலும்  பணிக்குப் போய் வந்தபின்  நாங்கள்  வசித்த இடங்களைக் காணச் சென்றிருந்தேன்  அடையாளமே தெரியாமல் மாறிப் போய் இருந்தது 

சோமேஸ்வரன் கோவில் முன்னால் மீட்டெடுக்கப்பட்ட  குளம்
                       
ஒரு அறிவிப்பு



             பெங்களூரு அன்றும் இன்றும்  ஒரு காணொளி
 ( இணையத்தில் இருந்து)







 















49 கருத்துகள்:

  1. அருமை, அறியாத பல விஷயங்கள் பெண்களூரைப் பற்றி. நான் முதல் முதல் 1980 ஆம் ஆண்டில் ஊர் சுற்றிப் பார்க்கவென்று என் கணவர், குழந்தைகளோடு வந்தேன். :) அதுக்கப்புறம் பல முறை வந்தாலும் என்னை என்னவோ இந்த ஊர் அவ்வளவாய்க் கவர்ந்தது இல்லை. :)

    பதிலளிநீக்கு
  2. பெங்களூருவுக்கு அவ்வப்போது இரண்டு மூன்று முறை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளதோடு சரி! அவரவர்களுக்கு அவரவர் மொழியும் ஊரும் அருமைதான். தமிழில் கூட, தங்கச்சுரங்கம் படத்தில் "நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது? இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது" என்று தமிழ்நாட்டைப் பற்றி பாடும் பாடல் உள்ளதே.. அது தவிர, டி ஆர் மகாலிங்கம் பாடும் "எங்கள் திராவிடப் பொன் நாடே.." பாடலும் உள்ளது!

    ஆனாலும் மொழியை வைத்து நிறையவே உருகுகிறார். உங்கள் வாழ்க்கை நகர்ந்த முறையையும் நினைவு கூர்ந்திருப்பது சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  3. மூத்த பெண்ணை பெங்களூரில்
    கொடுத்திருப்பதால் ஆறு மாதங்களுக்கு
    ஒருமுறை எப்படியும் வந்து போவேன்
    பெங்களூரில் அனைவரும் குறைந்தபட்சம்
    மூன்று மொழி பேசுபவர்களாக இருப்பதால்
    வேறு மாநிலம் என்ற நினைவு வராமலேயே
    பெங்களூரில் வசிக்கச் சாத்தியம்

    பெங்களூர் குறித்த நினைவுகளால்
    நாங்களும் பெங்களூர் குறித்து
    அறிந்துக் கொள்ள முடிந்தது

    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
  4. முப்பது வருசத்துக்கு முன்பு நான் பார்த்த பெங்களூருக்கும் .இன்றைய பெங்களூருக்கும் மடுவுக்கும்மலைக்கும் உள்ள வித்தியாசம் !முக்கியமாக ,மலைக்க வைக்கும் உயரமான கட்டிடங்கள் ,அகலமான சாலைகள்:)

    பதிலளிநீக்கு
  5. பழமையான பெங்களூரைப் பற்றி பகிர்ந்த விதம் அருமை. ரசித்தேன் அய்யா!

    பதிலளிநீக்கு
  6. சுவையான பெங்களூரு மலரும் நினைவுகள். நீங்கள் சொல்லிச் சென்றவிதம் படிக்க அலுப்பு தட்டவில்லை. நீங்கள் சுட்டிய உங்கள் பழைய பதிவும் சென்று வந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. அல்சூரில் எனது மூத்த சகோதரி இருந்த சமயத்தில் சில முறை வந்திருக்கிறேன். பிறகும் அலுவல் சம்பந்தமாக வந்ததுண்டு.

    உங்கள் பதிவு மூலம் பெங்களூர் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. முதன் முதலில் பள்ளியில் படிக்கும் போது பள்ளிசுற்றுலாவில் பெங்களூரை கண்டு இருக்கிறேன். அப்புறம் கணவர் குழந்தைகளுடன். உறவினர்கள் வீட்டுக்கு என்று நிறைய தடவை வந்து இருக்கிறேன்.

    உங்கள் சிறுவயது அனுபவங்கள் , மற்றும் பழைய பெங்களூரின் காணொளியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. நிறைய புதிய தகவலகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது.

    1. நீங்கள் கர்நாடகாவில் பிறந்தவர். திராவிட மொழிகளில் மலையாளமும், கன்னடமும் உங்களுக்கு அறிமுகமாகியிருப்பது பெரும் செல்வம்.

    2. கேரளம், தமிழகம் இங்கெல்லாம் செட்டில் ஆகியிருக்கலாம். அனால் உங்களுக்கு முதன் முதலாக வேலை கிடைத்த இடத்தில் செட்டில் ஆகியிருப்பது அந்த நகரத்துடனான உங்கள் பிணைப்பைச் சொல்கிறது.

    3. அவ்வலவு தெரிந்திராத ஒரு இந்திய நகர் பற்றிய பழைய தகவல்கள் நிரைய.

    4. சோமேஸ்வரன் கோயில் அருகேயான அந்த அறிவிப்புப் பலகை. அதில் 'MANDAYA MAHA KSHETHRA' என்ற வரிகளில், 'ஷேத்ரா' என்ற வார்த்தை மனசைக் கவர்ந்தது.

    5. 1938ம் நவம்பர் 11-- என்றால், பிறந்த தேதியும் மாத எண்ணும் ஒன்றே. 11-11-1938.
    'ABOUT ME'-ல் சின்ன ஒரு மாறுதலை விரும்பினால் செய்யலாம்..

    விவரமான ஒரு பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  10. @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கு நன்றி மேம் . பெங்களூரு ஒரு காஸ்மோபலிடன் நகரம் இந்த நகர் உங்களை அவ்வளவு ஈர்க்கவில்லை என்பது ஆச்சரியம்

    பதிலளிநீக்கு

  11. @ நாகேந்திர பாரதி. வருகைக்கு நன்றி சார் . மறந்தால்தானே ஞாபகம் வருவதற்கு.

    பதிலளிநீக்கு

  12. @ கரந்தை ஜெயக்குமார்
    நினைவுகளே வாழ்க்கையாய் விட்டதற்கு என்ன சொல்ல ? வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  13. எனக்குப் பெரிய நகரங்களே பிடிப்பதில்லை. நரகங்களாக இருப்பதால் தானோ என்னமோ! சென்னை எப்போதுமே பிடிக்காது! :) ஒரு காலத்தில் தில்லி அழகாக இருந்தது. இப்போது தில்லியும் பிடிக்கவில்லை! :)

    பதிலளிநீக்கு

  14. @ ஸ்ரீராம்
    பிறந்த இடம் இது. முதல் பணி செய்த இடமிது காதலித்தது இங்கு/ மணந்ததும் இங்கு வாழ்வின் அந்திம காலமும் இங்கு எதை எழுதினாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  15. @ ரமணி
    அடுத்தமுறை பெங்களூர் வரும்போது என் வீட்டுக்கும் அவசியம் வர வேண்டும் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  16. @ பகவான் ஜி
    பெங்களூர் நிறையவே மாறி வருகிறது. நான் 2008-ல் துபாய் போயிர்ருந்தபோது கட்டிடங்கள் கட்ட க்ரேனை உபயோகிப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதுபெங்களூரிலும் அவை சகஜமாகி விட்டது இங்கு ஒரு சில சாலைகளே அகலம் பெங்களூர் has become notorious for traffic jam வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  17. @ எஸ்பி செந்தில்குமார்
    பழைய பெங்களூரை பார்த்த என் போன்றவர்களுக்கு இப்போதைய வளர்ச்சி ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சி ரசிப்புக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  18. @ தி தமிழ் இளங்கோ
    பெங்களூர் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் வாழ்வின் பல முக்கிய நிகழ்வுகள் நடந்த இடம் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  19. @ வெங்கட் நாகராஜ்
    பெங்களூர் வரும்ப்போது சந்திக்கிறேன் என்று நீங்கள் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  20. @ கோமதி அரசு
    இப்போதைய பெங்களூர் உங்கள் நினைவிலாடும் ஊருக்கு முற்றிலும் மாறு பட்டிருக்கும் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  21. @ ஜீவி
    ஆம் சார் பெங்களூர் என் வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டது கன்னடம் மலையாளம் அறிமுகம் ஆன மாதிரி தெலுங்கும் ஹிந்தியும் கூட அறிமுகம்தான்அறிவிப்பிப் பலகையில் கூறப்படும் க்ஷேத்ர என்னும் வார்த்தை கோவிலைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன் கோவில் குளத்தை கல்யாணி என்கிறார்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு

  22. @ கீதா சாம்பசிவம்
    மீள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  23. SUPER BENGALURUVIL IRUKKUM ENNAI PONRAVAR YARVASITHTHALUM SANTHOSATHTHIRKKU ALAVILLAI SIR

    பதிலளிநீக்கு

  24. @ ரவி
    வாருங்கள் சார் பெங்களூருவில் இருப்பவரானால் முடிந்தால் என்னை சந்திக்க வரலாமே . என்னால்தான் எங்கும் தனியே பயணிக்க முடிவதில்லை. வருகைக்கு (முதல்) நன்றி சார்

    பதிலளிநீக்கு
  25. NAN MAGADI ROAD TOLLGATE NEEKA ENTHA IDAM SOLUNKA SIR NAN SANTHIKIRA UNKALUDAYA ASIRVADAM ENNAKKU KODUNKA SIR.

    பதிலளிநீக்கு

  26. @ குணாநிதி ரவி
    ஐயா ஒரு சந்தேகம் மேல் கண்ட எஸ் ரவியும் நீங்களும் ஒருவரா. ப்ரொஃபைலில் தேடினால்மின் அஞ்சல் முகவரி இல்லை நான் இருப்பது டி தாசரஹள்ளி பைப் லைன் ரோடில் என் மின் அஞ்சல் முகவரி gmbat1649@gmail.com மெயில் அனுப்புங்கள் டிடெயில்ட் விலாசமும் வரும் வழியும் தெரிவிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  27. பாடங்கள் , காணொளியுடன் பகிர்வு அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  28. நீங்கள் பெங்களூர் ராஜா என்று சரியாகத் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே..
    பெங்களூர் கதை படிக்க நன்றாயுள்ளது. அந்தக்கால பெங்களூரை நினைவிலிருந்து மீட்டு, நிறைய எழுதுங்கள்.

    என்னது! நாடகத்தை இயற்றி, இயக்கி, நடித்தும் இருக்கிறீர்களா? உங்களிடம் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும்போலிருக்கிறதே!

    பதிலளிநீக்கு

  29. @ பரிவை சே குமார்
    வருகைக்குக் ரசிப்புக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  30. @ ஏகாந்தன்
    என் பல பதிவுகளுக்குநிலைக்களன் பெங்களூருவே எழுதி இயக்கிய நாடகங்களைப் பதிவிலும் வெளி யிட்டிருக்கிறேனே வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  31. எனக்கும் பெங்களூர்தான் ரிடையர் ஆனபின்பு அனேகமாக வசிக்கும் இடமாக இருக்கும். தமிழ்'நாடு சாம்பார் போன்ற உணவுவகைகளை அங்கு செல்லும்போதெல்லாம் நாம் miss பண்ணுகிறேன். தில்பசந்த், தில்குஷ் தவிர அந்த ஊர் எனக்கு செட் ஆகும்னு தோணலை. பெங்களூரில்தான் வசிப்பேன் என்பதை நினைத்தால் எனக்கு வயத்தக் கலக்குகிறது.

    பதிலளிநீக்கு

  32. !@ நெல்லைத் தமிழன்
    பெங்களூருவில் விருப்பமில்லாமல் ஏன் செட்டில் ஆகவேண்டும் சாம்பார் போன்ற உணவு வகைகளை நம் விருப்பத்துக்கு தக்கபடி வீட்டிலேயே சமைத்துக் கொள்ளலாமே ஆனால் ஒன்று இப்போதெல்லாம் பெங்களூரு பென்ஷனர்களின் சுவர்க்கம் அல்ல It is bursting at its seams . சொந்த வாகனம் அவசியம் தேவை. போக்குவரத்தை நினைத்தாலேயே பகீரென்கிறது முடிவு எடுக்க வேண்டியவர் நீங்கள் எல்லா சாதக பாதகங்களையும் சிந்திக்க வேண்டும் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  33. சாதாரண நிகழ்வுகள் உங்கள் எழுத்தில் அமையும்போது சிறப்பாக இருக்கும். அதுவும் கடந்த கால நினைவுகளை நீங்கள் பகிரும்போது இன்னும் சிறப்பு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  34. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    பாராட்டுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  35. பெங்களூர் என் உயிரில் கலந்துவிட்ட இடம். எத்தனை வருடங்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் பெங்களூரின் நேசம் கலந்த நினைவுகள் எனக்கு என்றும் இருக்கும். அந்தக் கால பெங்களூர் பற்றிய சில செய்திக்கு நன்றி.

    பிறந்தால் கன்னட மண்ணில் என்ற பாடல் மிகப் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூர் என் வாழ்வின்பெரிய அத்தியாயம் மறக்க முடியாத நிகழ்வுகள் பல நேர்ந்த இடம்

      நீக்கு
  36. நிறைய செய்திகள்.. பெங்களூர் வளர்ச்சி (?) பற்றி நினைவுகள்.. ஏறக்குறைய பெங்களூர் மண்வாசனை உங்களில் கலந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைருந்தாலும் நான் பிறந்த மண் அல்லவா ஓ... அது அந்தக்காலம் என்று நினைக்க வைக்கும்

      நீக்கு
  37. அருமையான பகிர்வு. அந்த கன்னடப் பாடலை ராஜ்யோத்ஸவா தினக் கொண்டாட்டங்களில் சத்தமாக ஒலிக்க விடக் கேட்டிருக்கிறேன். நான் பகிர்ந்த படங்கள் நீங்கள் பார்த்த காலத்தினுடையது. விதான் செளதாவைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே பார்த்திருக்கிறீர்கள்.

    ஜி.பி போஸ்ட் மாஸ்டர் போல இப்போதைய அரசு அலுவலகர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

    காணொளியும் சுவாரஸ்யம். மேயோ ஹாலைச் சுற்றி எதுவுமில்லை அப்போது.

    நன்றி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதானசௌதாவைகட்டிக் கொண்டிருக்கும்போது பார்த்தது மட்டுமல்ல அதைக் கட்டினதிலும் என்பங்கு சிறிது இருக்கிறது இதை பூர்வஜன்மக் கடன் என்னும் பதிவில் எழுதி இருக்கிறேன் அப்போதைய மனிதர்களில் புரிதலும் ஈரமும் இருந்திருக்கிறது பனிக்குச் சேர நான் பெங்களூர் வந்தபோது ஜட்காவில்தான் பயணித்தேன் சுட்டி பார்த்ததற்கும் வருகைக்கும் நன்றி மேம்

      நீக்கு
  38. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜட்கா வண்டிகளை பால் ஃபெர்னாண்டஸ் ஓவியங்களில்தான் பார்க்கிறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் ஆங்காங்கே ஜட்கா வண்டிகளைப் பார்க்கிறேன்

      நீக்கு
  39. வாசித்துக் கருத்தும் பகிர்ந்திருக்கிறேன். மீண்டுமொருமுறை வாசிக்க சுவாரஸ்யம். 90_களின் தொடக்கத்தில் நான் கண்ட பெங்களூர் இப்போது எவ்வளவோ மாறி விட்டுள்ளது. அதற்கும் முந்தைய காலத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு