போராட்டம் அதன் அனாடொமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் அதன் அனாடொமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

போராட்டங்கள் ஏன் எதற்கு ஒரு ஆய்வு


  போராடங்கள் ஏன் எதற்கு ஒரு ஆய்வு
---------------------------------------------------------------
இன்று சனிக்கிழமை ஜூலை மாதம் 30-ஆம் நாள். கரநாடகாவில் பந்த் எனப்படும் வாழ்க்கை முடங்கல் கோவாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான  மஹாதாயி நதிப்பிரச்சனை  கர்நாடகாவின் இடைக்கால உத்தரவு வேண்டிய கோரிக்கையை ட்ரைப்யூனல் நிராகரித்தது உடனே எங்கும் போராட்டம் கடையடைப்பு  வாழ்க்கை முடங்கல். வடகர்நாடகாவில் பஸ் எரிப்பு, அரசு அலுவலகங்கள் சூரையாடல் என்பதெல்லாம் நியாயம் கோரி நடத்தப்படும்  வன்முறைப் போராட்டம்

 சில நாட்களுக்கு முன் ப்ராவிடெண்ட் நிதி எடுக்க சில தடைகள் விதித்த அரசாணைக்கு  எதிராக கார்மெண்ட் தொழிலாளர்கள் போராட்டம்  அந்த ஆணை பணம் எடுக்க வேண்டும் எல்லோருக்கும்  பொதுவானது ஆனால் பெங்களூரில்  கார்மெண்ட் தொழிலாளர்கள் திடீரெனப் போராட்டம் நடத்தி அதிலும் பஸ் எரிப்பு போன்ற  வன்முறைகள்


நடிகர் ராஜ்குமார் இறந்த போதும் போராட்டம் வன்முறை போன்ற சம்பவங்கள்நடந்தேறியது நடிகர் மேல் அளவற்ற பக்தி கொண்டவர்கள் அவர்களது துக்கத்தை திசை திருப்பிக் காண்பித்தனர் 

காவிரி நீர்ப்பிரச்சனையில் கர்நாடகத்துக்கு ஒப்பாத ஒரு ஆணையால் இங்கிருக்கும் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட அராஜகப் போராட்டம்

 இதையெல்லாம் காணும்போது  இம்மாதிரிப் போராட்டங்களின் ANATOMY  பற்றின சிந்தனை எழுகிறது

ஒவ்வொரு செயலுக்கும் சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கும் கட்சித் தலைவர்களோ அல்லது யாராவது முக்கியஸ்தர்களோ கடை அடைப்புக்கு அறைகூவல் விடுக்கின்றனர் என்றால் அதை முடித்துக் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கிறதே. இந்தக் கூட்டத்தின் அடிப்படைக் குணங்களை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் இந்த மக்கள் ஜனநாயக நாட்டில் எந்த இரு தலைவருமே கொள்கைகளில் ஒத்துப் போவதில்லை. ஆனால் ஒவ்வொரு தலைவனுக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வேலை இல்லாதவர்களும் பொறுப்பு என்பது ஏதும் இல்லாதவர்களுமே இந்தக் கூட்டத்தில் அங்கத்தினர்கள் இவர்களில் பெரும்பாலோனோர்  கூலிக்கு மாரடிப்பவர்களே ஒரு அரசியல் தலைவன் பேசுகிறான் என்றால் அதற்குக்கூட்டம் சேர்ப்பது முதல் கோஷம் போடுவதுவரை ஏற்பாடு செய்ய அல்லக் கைகள் இருக்கிறார்கள் மீறி இவர்களின் அறைகூவலுக்கு செவி சாய்க்காவிட்டால் அங்கு வன் முறை வெடிக்கும் பெரும்பாலும் இம்மாதிரி வன்முறைகளுக்குப்பயந்தே முழுநேர அடைப்புகள் நடக்கின்றன இவர்கள் நாடுவது அல்லது குறி வைப்பது யாரை மற்றும் எப்படி என்பதை யோசித்துப் பார்த்ததில் எழுந்த எண்ணங்களே இந்தப் பதிவின் சாராம்சம்
காலையில்  எழுந்ததும்   பத்திரிகைகளைப்  பார்த்ததும்  தெரிவது ,தொலைக்காட்சியை  இயக்கினால்  செய்திகளில்  தெரிவது , எங்கோ எதற்கோ  யாரோ  போராட்டம்  நடத்துவதுதான் . இத்தகைய போராட்டங்கள்  நடக்க   பல்வேறு   காரணங்கள்   இருக்கலாம்.

நான் பயிற்சிப் பள்ளியில்  இருந்தபோது எங்களுக்கு அளிக்கப் பட்ட உணவு வட இந்திய உணவான  சப்பாத்தி மற்றும் சப்ஜியே ஹாஸ்டலில் அப்போதிருந்தவர்களில் பெரும்பாலோர் வட இந்தியர்கள் . எங்களுக்கு தென் இந்திய உணவு கோரி நாங்கள் போராடினோம்நாங்கள் கூட்டமாகக் கூடி யார் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கும்  நிலையில் இல்லை  இதை mob mentality  என்று கூறலாமா பேசி தீர்வு காணலாம் என்று சொன்னதைக் கேட்கக் கூட நாங்கள் தயாராய் இல்லை. இரண்டு நாட்கள்  உணவைப் புறக்கணித்தோம் அங்கிருந்த ஹாஸ்டல் சமையல்காரருக்கு  தென் இந்திய உணவு சமைக்கத் தெரியாது  என்னும்காரணம் கூறப்பட்டது அவருக்கு  சமையல் கற்றுக் கொடுக்க நாங்கள் தயார் என்றதும் போராட்டங்கள் முடிவுக்கு வர உதவியது
 
இப்போது அந்த   காரண  காரியங்களை   ஆராய்வது அல்ல   இந்தப்  பதிவின்  நோக்கம் போராட்டம்  என்றாலேயே ஏதோ மனக் கசப்பை திருப்தி இன்மையை.
,கையாலாகாத்தனத்தை   வெளிப்படுத்த  ஒரு   உத்தியாகும் . அது சரியா இல்லையா  என்று  ஆராய்வதும்   நம் நோக்கம்  அல்ல .
  
வாழ்க்கையில்   உண்ண   உணவு , உடுக்க உடை , இருக்க இடம்   என்று   மட்டும்   கிடைத்தால்   போதவில்லை . நம் வாழ்க்கையின்   நிலை    மற்றவரைவிட கீழான   நிலையில்   இருந்தால் ,ஒப்பிட்டு  நோக்கி  அதிருப்தி  ஏற்படுகிறது .மற்றவர்  நிலையை விட  தாழ்ந்து   இருப்பதற்கான   காரண காரியங்கள்   ஆராயப்படுகின்றன .
ஏற்ற  தாழ்வுகள்  கண்முன்னே   காரணங்களாக  விரிகின்றன
. " நானும்  இந்த  நாட்டுக்  குடிமகன் . எனக்கும்  அவனுக்கும்  ஒரே வயது .என்ன   வித்தியாசம்  ? நான் ஏழை , வசதியற்றவன் --அவன் பணக்காரன் ,வசதி  மிகுந்தவன் . கல்வியில்   நான்  முன்னேற வாய்ப்புகள்   குறைவு --அவனுக்கு  அதிகம் .--நான் கிராமத்து   இளைஞன், அவன் பட்டணத்து வசதிகளுடன்  வாழ்பவன் ---- நான் வாழ்க்கையில்  முன்னேற  தாண்ட வேண்டிய   தடங்கல்கள்   அதிகம் . அவனுக்குக் குறைவு ---எனக்கு   இரண்டு  வேளை  உணவு   கிடைப்பதே  மிகவும்  கஷ்டம் .அவன்  எல்லா வித   போஷாக்கு களுடன்  கூடிய  உணவு வகைகளில்  மிதக்கிறான் ----பசி  என்பது எனக்கு  சாதாரணமாக  நிகழ்வது .பசி என்னவென்றே  அறியாதவன்  அவன் ---- மானத்தை  மறைக்க   உடை உடுத்துவதே  எனக்கு   சாதனை    படாடோப உடை வகைகளில் பலவற்றை   வைத்திருப்பவன்  அவன் "
              இந்த  மாதிரி  மனசின்  அடிப்பகுதியில்   ஒருவனுக்குத் தெரியாமலேயே   ஏற்ற  தாழ்வுகள் பாதிப்பை  ஏற்ப்படுத்துகின்றன .வாழ்க்கையின்  மேல்நிலையில்  இருப்பவன் வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான். பணக்காரன் மேலும் பெரிய பணக்காரனாகிறான் .வாழ்க்கையின்  கீழ்நிலையில்   இருப்பவன்முன்னேறத்  துடிக்கிறான் ,.இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு  காரணம்  என்ன ?
 ஒருவன்  ஏழையாகப்  பிறப்பது  அவன் தவறா ? வாழ்க்கையில் உயர  வாய்ப்புகள்  சமமாக  இருக்கிறதா ? கீழே  உள்ளவன்  அடக்கப்பட்டு  இருப்பவனாகவும்  மேலே  உள்ளவன் அடக்குபவனாகவும் இருப்பது சமூக  நிலையா  ?
காந்தி   பெரியார்   அம்பேத்கர்  போன்றவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கும்   ஒடுக்கப் பட்டவர்களுக்கும்  குரல்  கொடுத்து ஓரளவு விழிப்புணர்வை  ஏற்ப்படுத்தினார்கள் . விழிப்புணர்வின் அடிப்படையில்  வாய்ப்புகள்  வேண்டி போராட  வேண்டும்  என்ற நிலை  உருவானது .இத்தகைய  போராட்டங்களை  நடத்தி செல்ல வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா  என்ற கேள்வி  எழும்போது   பதில் வல்லவர்களாக  இருக்கிறார்கள்  என்பதுதான் நிதர்சனம் . தலைவர்கள் வசதிகளுடனும்   வாய்ப்புகளுடனும்  முன்னேறுகிறார்கள் 
தலைவர்களுக்கு  தெரியும்  எங்கே  தட்டினால் பலன்  கிடைக்கும் ,எந்த நிலை  நீடித்தால்  தாங்கள்  மேலும் முன்னேறலாம்  என்று ..இனம் மொழி மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அவலங்களை வெளிச்சம்   போட்டுக் காட்டி  அதன்  மூலம் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு  வழி வகுத்துக்கொள்கிறார்கள் .இதனால்ஏற்பட்டிருக்கும்  ஏற்ற தாழ்வுகள்  குறைவதில்  அவர்களுக்கு  லாபம் இல்லை .STATUS  QUO  தொடர வேண்டும் .ஆனால் , மக்களுக்காக அவர்கள் சேவை  செய்வது போன்ற மாயத் தோற்றம்  தொடரவேண்டும்
இந்தமாதிரி கடை அடைப்புகளும்  வன்முறைகளும் அடிப்படைக் காரணங்களை நீக்குகிறதா. பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதுதான் மிச்சம் அரசாங்கத்தின் மீது குறைகள் இருந்தால் அவற்றை முன்னிலைப் படுத்திப் போராடுவதில் அர்த்தம் இருக்கிறது ஆனால் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத பொதுமக்களுக்கு துன்பம் தருவது எந்த விதத்தில் நியாயம்  அல்லது லாபம்
அடிமனதில் இருக்கும் சில கையாலாகத்தனங்களுக்கு வடிகாலாய் இருப்பதே இந்தப் போராட்டங்களும்  கடை அடைப்புகளும்  இவற்றில் யாரும் மனமுவந்து கலந்து கொள்வது கிடையாது அப்பேர்ப்பட்டவர்களை வன்முறையால் ஈடுபடச் செய்வதே அடிப்படை நோக்கம்
கூலிக்கு மாரடிக்க மக்கள் இருக்கிறார்கள் அவர்களை முன் நிறுத்தி ஆதாயம் பெறத் தலைவர்கள் இருக்கிறார்கள் இதுவே நான் அறியும் உண்மை.   

    
ந்த்  ( பம் இணையத்ிலிரந்து)
    




.