மழை விட்டும் தூவானம் ...........
-----------------------------------------
சில நாட்களுக்கு முன் ஒரு பதிவு எழுதி இருந்தேன். தலைப்பு “கடவுள் என்பது அறிவா உணர்வா”( பதிவைப் படிக்க கடவுள் என்பது அறிவா இடத்தைச் சுட்டவும்) அப்பதிவுக்கு பல விதமான கருத்துக்கள் தாங்கிய
பின்னூட்டங்கள் வந்தன நான் ஒரு முறை சென்னை சென்றிருந்தபோது சுப்புத்தாத்தா
அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன். எங்கள் பேச்சின் ஊடே இந்தப் பதிவு பற்றியும்
விவாதங்கள் நடந்தது. எனக்கென்னவோ இந்தப் பதிவு என்னைப் பற்றிய ஒரு தவறான கருத்தை
அவர் மனதில் விதைத்து விட்டதோ என்று தோன்றியது. அவருக்கு நான் நாத்திக வாதம்
பேசுகிறேன் என்று தோன்றியதோ என்னவோ. நான் திரும்பி பெங்களூரு போகும்போதும் போய்ச்
சேர்ந்ததும் இது பற்றி நன்கு சிந்திக்கச் சொல்லி இருந்தார். அதாவது அந்தப் பதிவை
மீண்டும் அசைபோட்டுப்பார்க்கச் சொல்லி இருந்தார். நான் ஆத்திகனா நாத்திகனா
என்பதல்ல வாதம். என் எழுத்துக்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லையோ என்பதே
என் சந்தேகம்.என் பதிவு எளிய தமிழில் எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் அனைவரும்
புரிந்து கொள்ளும்படி இருந்தது என்றே
எண்ணினேன்
Any belief sustained over a
fairly long period of one's life when integrated into one's intellect, is known
as faith.சுப்புத்தாத்தா சொல்லி இருந்தார்இந்த
நம்பிக்கைகள் எந்த அளவுக்கு அறிவோடு ஒத்துப்போகிறது என்பதே கேள்விக்குறி
அறிவுக்கும் உணர்வுக்கும் மோதல் ஏற்பட்டால் அறிவு தோற்று உணர்வே வெற்றி பெரும்
என்பதும் வாழ்வில் கண்கூடு. .
அறிவு நிறையக் கேள்விகள் கேட்கிறதுஉணர்வு நம்பினால்
நலம் பயக்கும் என்கிறது.அறிந்ததும் உணர்ந்ததும் எழுதப் பட்டது. எல்லோருக்கும் உடன்
பாடு இருக்கும் என்று தோன்றவில்லை. உண்ர்வும் அறிவும் ஒன்றா வேறு வேறா என்னும்
அடிப்படைக் கேள்விக்கே வித்திட்டது.இனி எழுதுவதைக் கேள்விபதிலாய் எழுதினால் ஒரு
சமயம் பலன் விளையலாம்.
கே;-பதிவின் நொக்கம் எது ?
பதில் :- கடவுள் பற்றிப் பேசப்படுவதை சரியாய்ப் புரிந்து
கொள்ளவேண்டும் என்பதே
கே:- சரி கடவுள் பற்றி புரிய வைக்க முடிந்ததா?
பதில்:- நானே புரிந்து கொண்டால்தானே புரிய வைக்க முடியும். ”கடவுள் என்பதே ஒரு concept. என்பவருக்கு இந்த கேள்வி தேவையில்லை! கடவுள் என்பது கருத்தியல்! கருத்து உங்கள் நினப்பு ! இவை மூளையின் நடவடிக்கை ! function of brain ! a few
micro miilli of protein,nuron,electric charge etc ! pure matter ! matter is
primary ! பொருள் முதல் வாதம் !
பொருள் இல்லையேல் எதுவும் இல்லை ! கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே ! அறிவு உணர்வு என்பதெல்லாம் அதற்குப் பின்தானே” என்றது ஒரு பின்னூட்டம் ஆக
முதலில் கடவுள் பற்றி நான் நினைப்பதையும் கூறிவிட வேண்டும்.
கே:- சரி கடவுள் என்பது யார் அல்லது என்ன.?
பதில்:- தெரியாது
கே:- கடவுள் என்பவர் இருக்கிறாரா?
பதில்:- தெரியாது
கே:- இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாதபோது அது பற்றி
எழுதியோ விவாதித்தோ என்ன கிடைக்கப் போகிறது.?
பதில் பெரும்பாலானோர்கள் புரிந்து கொள்வதில் புரிதல் சரி
இல்லை என்று தோன்றியதால் வந்த விளைவே இப்பதிவு.
”மனதும் அறிவும் உணர்வும்
புத்தியும்
வினவிடும் எவர்க்கும் வந்திடும் தொல்லையே
அனைத்தும் விடுத்து அகத்துள் நிறைந்து
வினைப்பயன் அறுக்கும் வழியினைத் தெரிந்து
சொல்லும் செயலும் எல்லாம் அறுத்து
சும்மா இருப்பதே சுகமிங் கெனக்கு”
வினவிடும் எவர்க்கும் வந்திடும் தொல்லையே
அனைத்தும் விடுத்து அகத்துள் நிறைந்து
வினைப்பயன் அறுக்கும் வழியினைத் தெரிந்து
சொல்லும் செயலும் எல்லாம் அறுத்து
சும்மா இருப்பதே சுகமிங் கெனக்கு”
என்றொரு பின்னூட்டமும் இருந்தது! எனக்கு இந்த வினைப்பயன் போன்றசொற்றொடர்கள்
தெரியாதஒன்றை தெரிந்தமாதிரிக் காட்டும் உபாயமே என்று தோன்றியது.
கே.:- இன்னும் சற்று விளக்கமாகவே கூற முயற்சி செய்யேன்
பதில்:-நான் சில நாட்களுக்கு முன் கீதையின் 18
அத்தியாயங்களையும் தமிழ்ப் பதவுரையாக வெளியிட்டேன்.ஒரு தலைப்பு பற்றிக் கருத்து
கூறும் முன் அது பற்றிய ஓரளவாவது working knowledge ஆவது இருக்க வேண்டும் என்று
எண்ணுபவன் நான். பதவுரைகளில் என் கருத்து என்று ஏதும் எழுதவில்லை. ஆனால் பதிவுகளை
முடித்தபின் என் கருத்துக்கள் சிலவற்றை வெளியிட்டேன். கீதை பெரும்பாலும் ஆத்மா
என்றும் அது பற்றிய புரிதலை ஞானம் என்றும் கூறுகிறது. அது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால்
பகரப் பட்டதாக நம்ப்பப்படுவதால் அதற்கு கூடுதல் sanctityகொடுக்கப் பட்டிருக்கிறது.
அதில் கூறப்பட்டவை எல்லாம் ஒரு CONCEPTஐ தழுவியே இருந்தது. உயிர்
பற்றியும் ஆத்மா பற்றியும் நிறையவே சொல்கிறது. அத்தனையும் ஊர்ஜிதப்படுத்தப்படாத
கூற்றுகளே. “இருண்ட அறையில் . ஒரு அமாவாசை இரவில் இல்லாத ஒரு கறுப்புப் பூனையைத்
தேடுவதுபோல்” எனக்குப் பட்டது. நீ யார்
என்னும் கேள்விக்கு நான் இன்னாருக்குப்பிறந்தவன் பெயர் இன்னது என்றுதான் கூறுகிறோம்
கூறமுடியும். அதை விட்டு நீ நீயல்ல உன் ஆத்மா அது அழியாதது என்றெல்லாம் சொல்லிச்
சொல்லியே பயமுறுத்தி வேண்டாத நம்பிக்கைகளை விளைத்து விட்டிருக்கின்றனர்.ஆத்மா
பிறப்பது மில்லை இறப்பதுமில்லை என்றெல்லாம் கூறுகிறவர்கள் அதை எப்பொழுதாவது
உணர்ந்து இருக்கிறார்களா?உடலுக்கு உபாதை என்று வந்து விட்டால் அதனால் ஆத்மாவுக்கு
பாதிப்பிலை என்று சமாதானப்படுத்தி ஒதுக்க முடிகிறதாஒரு சிறுகதை நினைவுக்கு
வருகிறது.ஒரு சிறுவன் ஒரு வண்ணத்துப் பூச்சியைப்பிடித்து விளையாடிக்
கொண்டிருந்தானாம் அங்கே வந்த ஒரு பெரியவர் ‘வண்ணத்துப் பூச்சியைத் தொந்தரவு
செய்யாதே .உன் அடுத்தபிறவியில் நீ வண்ணத்துப் பூச்சியாகவும் இந்தப் பூச்சி
நீயாகவும் மாறி அதன் கையால் நீ அவதிப் படுவாய் ’ என்றாராம். அதற்கு அச்சிறுவன் ‘உங்களுக்குத்
தெரியவில்லை; போனபிறவியில் நான் வண்ணத்துப் பூச்சியாகவும் இது நானாகவும்
இருந்திருக வேண்டும். அதனால்தான் இப்போது இது என் கையில் என்றானாம் joke
apart நீ
நீயல்ல என்று சொல்வது அபத்தமாகப்படுகிறது.
கே: - அப்போது இந்தக் கதைகள் எல்லாம் பொய்யா?
பதில் :- பொய் என்று சொல்வதைவிட புனைவு என்று சொல்லலாம்.
இம்மாதிரிப் புனைவுகளால் வாழும் வரை ஒருவனை நல்லவனாக இருக்கக் கூறப்பயன்படும்
அச்சுறுத்தல்களே இவை என்று தோன்றுகிறது.
கே: -இவற்றுக்கும் உன் பதிவுக்கும் என்ன சம்பந்தம். ?
பதில்:-இந்த மாதிரியான ஆதார எண்ணங்களைக் கொண்டே நான்சொல்ல
வந்ததைச் சொல்லும் யுக்தி அது.
கே:- சொல்ல முடிந்ததா?
பதில் :- சொல்ல முடிந்ததா என்று கேட்பதைவிட இலக்கு நோக்கிச்
சென்றதா என்று கேட்டிருக்கவேண்டும் நான் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் தேடல்
என்னும் பதத்தை உபயோகிக்கக் காண்கிறேன் தேடும் பொருளுக்கோ விஷயத்துக்கோ ஏதாவது
உருவகம் இருக்கிறதா?வெறுமே abstract ஆகத் தேடுவது பல நேரங்களில் விளங்குவதில்லை.
எனக்கு நாம் தேடுவது நம்முள் இருப்பதைக் கண்டறியவும் வெளிக் கொணரவும் இருக்க
வேண்டுமே தவிர இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போல் இருக்கக்
கூடாது.என் பதிவில் தேடலாக என் கேள்விகளும் என்னிலிருந்தே வந்த பதில்களும் எழுதி
இருந்தேன். அனைவரையும் நேசிக்கவேண்டுவதே தேடலின் ஆதாரம் என்று என் பாணியில்
முடித்திருந்தேன்
மற்றபடி நான் ஆத்திகனா நாத்திகனா இல்லை ஒரு bundle of contradictions ஆ என்பதை அவரவர்
யூகத்துக்கும் கணிப்புக்கும் விட்டு விடுகிறேன்