கவிதை எழுதலாமே
------------------------------
சில மாதங்களுக்கு முன் சில படங்களை வெளியிட்டுக் கவிதை எழுதலாமே என்று அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் படங்கள் தெரிய வில்லை என்று பலரும் பின்னூட்டமிட்டிருந்தார்கள். அப்போது படங்களை வெளியிடும் நுணுக்கம் எனக்குத் தெரியவில்லை. இப்போது அதே படங்களை வெளியிடுகிறேன். மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இது போட்டி ஏதுமில்லை. பொருள் கிடைத்து படமும் இருக்க எழுதுவது சிரமமிருக்காது. கவிதைப் பதிவுகளை எதிர்நோக்கி. எழுதுகிறவர்கள் என் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தினால் நலமாயிருக்கும்.
![]() |
மரத்தில் மயில் |
![]() |
தோகைவிரித்த மயில் |
![]() |
பறக்கும்மயில்-1 |
![]() |
பறக்கும் மயில்-2 |
![]() |
பறக்கும் மயில்-3 |
![]() |
பறக்கும் மயில்-4 |
சூரா உன் சதியா.?
--------------------------
தோகை
விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன்
சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண
கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர்
இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா
ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !
மரமாய் மாறி
அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா
உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன்
உன்னை ஒரு
பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.
முருகன்
என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய்
நீயும் அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள்
அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம்
வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம்
வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத்
துணிந்தாயோ சூரா பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ
சற்றே பறந்து காட்டி அவனை ஏமாற்றிக்
காலை வாரி
கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .
.