J⁸
ஊழல் லஞ்சம்
ஊழல் லஞ்சம் குறித்து எழுத வேண்டும் என்றுநெடுநாளாக யோசனை இருந்தது
ஆனால் எழுதி [பிரயோசனம் இல்லை என்றே தோன்றியது ஊழல் லஞ்சம் என்றால் உயர் மட்டத்தில்தான் இருக்க வேண்டுமா நம்மிடையே இருக்கும் பொதுவான குணம்தானே லஞ்சம் என்பது நம்கலாச்சாரத்திலேயே ஊறிய ஒன்றுதானே கையூட்டு என்பது
கடவுளுக்கு கொடுத்தால் அது வேண்டுதல் மனிதனுக்குக்
கொடுத்தால்அது லஞ்சம் நம்மில் யார்தான்லஞ்சம் கொடுக்காதவர் எந்த அரசு அலுவலகத்தில்எந்த
வேலையாக வேண்டுமானால் லஞ்சம்கொடுத்துதான் ஆகவேண்டும்
கொடுக்க வேண்டிய கட்டாயமில்லைநான்கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் நம் வேலை நடைபெறாது வெறுமனே
அலைகழிக்கப்படுவோம் இதற்கு பதில் கொஞ்சம் தண்டம் அழவெ நாம் தயாராய் இருக்கிறோம் பைக்
அல்லது கார் ஓட்ட உரிமம் பெறுபவர்கள் எல்லோருக்கும்
தெரிந்தது தான்
என்பேரனின்
திருமணம்நடந்தது அதற்கு மேரேஜ் சர்டிஃபிகேட் பெற கட்டணம் ரூ 300 / ஆனால் அது கிடைக்கப்பெற கையுட்டு
ரூ 500/ எனக்கு காவேரி தண்ணீர் வர கனெக்ஷன்பெற பலஅண்டுகளுக்கு முன் ரூ 8000/கொடுக்கவேண்டும் என்றனர் நானும்
அந்தப்பணத்தோடு அது சார்ந்த அலுவலகத்துக்கு
இரண்டு மூன்று முறை அலைந்தேன் ஒரு வழியாக
பணம் பெற ஒப்புக்கொண்டனர் கையூட்டு வாங்க ஒரு
நூதன வழி அறிந்தேன் கைபேசியில் எவ்வளவு பணம் தரர வேண்டும் என்று குற்ப்பிடுகின்றனர்
ரூ 8000 உடன் அவர்களுக்கான பண்மும் சேர்த்து கைபேசியில் காட்டுகின்றனர் அதை செலுத்த நான் ஒப்புக்கொண்டபிறகே
நமக்கு ரசீதுக்கான வழிகள்பிறக்கின்றன
2011 ம் ஆண்டு அன்னா ஹசாரே ஒரு மாபெரும் உண்ணா விரதப்
போராட்டம்நடத்தினார் லோக் ஆயுக்த மற்றும் லோக்பால் போன்ற அமைப்புகள் கோரி யது அந்தப் போராட்டம் அந்தப் போராட்டம்குறித்து அறிந்த
பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர் உயர்மட்டத்து
ல்ஞ்ச லாவண்யங்கள் மட்டுமே முன் நிறுத்தப்பட்டன
ஆனால் தினசரி கண்முன்னே நடந்தேறும் கைய்யூட்டுகளை
விசாரிக்க யாராவது புகார் கொடுக்க வேண்டுமாம் கடவுளுக்கே லஞ்சம்கொடுக்கும் நாம் இம்மாதிரி சிறிய குற்றங்களுக்கா புகார்கொடுப்போம்நம்காரியம்
நடக்க நாம்கொடுத்துதான் தீரவேண்டும் வாழ்கையில் இதெல்லாம் சகஜம் என்று ஏற்றுக்
கொள்வோம்
பெரிய அளவில் பணம்
பெறுபவர்களையே நாம் குறி வைக்கிறோம் அதுதான்
நம்கண்களுக்கு குற்றமாகத் தெரிந்தது
நாம் தினப்படி காணும்லஞ்சங்கள் பெரிதாய் தெரிவதில்லை உயர் அதிகாரிகளே ஊழல் செய்கிறார்களென்று சமாதானமடைவோம் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ நடந்தாலும் திருட்டு என்பது திருட்டுதான் அதேபோல் எந்த அளவில் ஆனாலும்லஞ்சம் லஞ்சமே
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
🔵உலகத்திலேயே சிறந்த ஜோடி
செருப்புதான்
ஒன்றை பிரிந்தால் மற்றொன்று
வாழவே வாழாது
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
🔴மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!
🔵எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
🔴இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்..
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’