ரீங்கரிக்கும் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரீங்கரிக்கும் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஏப்ரல், 2019

பழைய பாடல்கள்


                               பழைய பாடல்கள்
                               ----------------------------
 சில பாடல்க;ள்  மனசில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும் அதுவும்  பழைய பாடல்கள்  வரிகள் மறந்து போனதால் வலையில் தேடினேன்  ஹுர்ராஹ் கிடைத்தது பகிர்கிறேன்  ஏன் இப்பாடல்கள்  என்று யோசித்தபோது இவை என் அப்பா முணு முணுக்கும் பாடல்கள் என்று தெரிந்தது நானே வயதானவன்  என்  தந்தையார் பாடிய பாடல்கள் பலரும்  கேட்டிருக்க வாய்ப்பு குறைவே
மனமே நீ ஈசன் நாமத்தை 
மனமே நீ ஈசன் நாமத்தை
மனமே நீ ஈசன் நாமத்தை 
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய் 

மனமே நீ ஈசன் நாமத்தை 
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய் 

மனமே ...ஆ.ஆ.ஆ

கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே 
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே 

காம மோஹமத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
காம மோஹமத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
தடுமாறும் மனமோடு துயறுராமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம் பெறவும் 

மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்
தினம் வாழ்த்துவாய் 

விளங்கும் தூய ஸர்ஜன சங்கம்
விளங்கும் தூய ஸர்ஜன சங்கம்
விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விட்டிலாகாதே சஞ்சல மெங்கும்
விட்டிலாகாதே சஞ்சல மெங்கும்

மனமே நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்....ஆ 










வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் 
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே

மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும் 
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே 

மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
 எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்   
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே

கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே 

விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி ||

கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம் 
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி