லலிதாம்பிகா கோவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லலிதாம்பிகா கோவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 நவம்பர், 2020

லலிதா சஹஸ்ர நாமம்



அண்மை காலமாக சில தோத்திரப்பாடல்களை  தமிழில்பதிவிட்டு வருகிறேன்   அந்தவரிசையில்ஸ்ரீ  லலிதா சஹஸ்ர நாமப் பாடல்
இதோ 
லலிதா சஹஸ்ர நாமம்பற்றி எழுதும் போது நாங்கள் திரு மியச்சூர்  சென்றது நினைவுக்கு வருகிற து  இப்போதெல்லாம் நினைவை நம்புவது சரி அல்ல என்றே நினைக்கிறேன் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலுக்கு வழி கேட்டபோது  பலருக்கும்  தெரியவில்லைபேரளம் சென்று  சிறிது தூரம் நடந்ததாக  நினைவு  நாங்கள் சென்ற்போது கோவில் சாத்தி இருந்தது கோவில் நேராக அக்கிரகாரம்   ஒ ரு வயதான அர்ச்சகர்எங்களை அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து காத்திருக்கச் சொன்னார் கோவில் பற்றி பலவிஷயங்கள் கூறினார் நாங்கள் பெங்களூரில் இருந்துவருகிறோம் என்று சொன்னபோது அந்தக்கோவிலை பெங்களூர் காரர்  ஒருவர் சம்ரக்ஷிப்பதாக கூறினார் என்மனைவியிடம் ஒரு துண்டு சீட்டில்  ஓம் யஹ  சக்தி ஓம்  சாந்தநாயகி அபயம் என்று எழுதிகொடுத்து தினம் சொன்னால் நல்லது என்று கூறினார்  என்மனைவியும்  எல்லாஉறவுகளுக்கும் கொடுத்துசொல்லச் சொன்னார்  
திரு மீயச்சூரி ல் பெண்குழந்தைகள்சைக்கிளில் பள்ளிசெல்வது காண மகிழ்ச்சி தருவதாகும் அரசின் நலதிட்டங்கள்  அவர்களூக்கு தெரியுமாகிடைக்கிறதா என்கெட்டபோது கிராமத்து ஜனங்ளை குறைவாகஎடை போடவேண்டாம் என்றும் எப்படி அவற்றை பெருவது என்று அவர்களுக்கு  தெரியும் என்றும்சிலர் வாதாடினர்