வீர ஆஞ்சநேயர் கோவில் மஹா லக்ஷ்மி லேஅவுட்
---------------------------------------------------------------------------
இந்த மாதம்
17ம் தேதி தமிழில் கார்த்திகை மாத முதல் தேதியாம் பல ஆண்டுகளுக்குப் பின் என் மனைவி மஹாலக்ஷ்மி லேஅவுட்டில் இருக்கும்
வீர ஆஞ்சநேயஸ்வாமி கோவிலில் வடை மாலை
சார்த்துவதாக பிரார்த்தனைசெய்து அதற்கான பணமும்கட்டி ரசீதும்வாங்கி இருந்தாள் என் வீட்டில் இருந்து சுமார் பத்து கிமீ தூரத்திலிருப்பது
ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது
பெங்களூரில் பிரசித்தி பெற்ற ஹனுமான் கோவில்களில் ஒன்று முன்பெல்லாம் அடிக்கடி செல்வது வழக்கம் காலை சுமார் 11 மணி அளவில் மங்கள் ஆரத்தி நடை பெறும் நான்கு வேதங்களாலும் போற்றுவார்கள் அங்கு சுமார்
22 அடி உயரமும் 16 அடி அகலமும் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு பக்தர்களே அபிஷேகம்செய்யலாம்
முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்வெண்ணை அலங்காரம் ஷ்ரவண மாதம் (புரட்டாசி )செய்வார்கள் அத்தனை பெரிய சிலைக்கு
வெண்ணை அலங்காரம்பக்தர்களின் பங்களிப்போடு
நடைபெறும் ஒரு பக்தர் மறக்காமல் எங்களிடம்
அன்பளிப்பு வாங்கி பின் பிரசாதமும் ஒவ்வொரு முறையும் தருவார் ஒரு முறை தம்பதிகள் சமேதராக விளக்கு பூஜை
செய்தோம் அங்கேயே உணவும் உண்டு என் இளையமகன் ஒரு ஆஞ்சநேய பக்தன் திருச்சி குடி இருப்பில் இருந்தபோது முதல் மாடியிலிருந்து எதற்கோ எட்டிப்பார்த்த போது கீழே விழுந்து விட்டான் ஆனால் எந்தகாயமும் இல்லாமல் எழுந்து வந்தான் அவன் கழுத்தில் இருந்த ஆஞ்ச்நேயர் டாலரே அவனைக் காப்பாற்றியது என்றுநம்பினான்
இந்த கோவில்
1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகசெய்தி
முன்பு பொட்டல் காடாக
இருந்தகுன்றில் இருந்தபெரிய கருங்கல்லை ஒரு
கான்வாசாக உபயோகப்படுத்தி ஹனுமான்
படம்வரைந்தாராம் பின் பக்தர்கள் துணையோடு
கற் சிலையாக வடிக்கப் பட்டதாம் அழகானகுன்றில் இருக்கும் இந்தக் கோவில் அமைதி தவழ்வதுஒரு பெரிய
மஹாலக்ஷ்மி சிலையும் உண்டு கோவிலின் கோபுரம்
இப்போது தங்கத்தால் வேயப்பட்டு இருக்கிறது காலை ஆறு மணியில் இருந்து
இரவு எட்டு மணிவரை கோவில் திறந்திருக்கும் 17 ம் தேதி கோவில் சென்று வடை மாலை சார்த்தப்பட்டதற்கான அடையாளமாக
வடைகளைபிரசாதமாகக் கொடுத்தார்கள் பெங்களூரில் மஹாலழ்மி லேஅவுட்தவிர ராகி குட்டா என்னும் இடத்திலும் பான்ஸ்வாடியிலும் ஆஞ்ச்நேயர் அருள் பாலிக்கிறார் இன்னும் சில இடங்களும் இருக்கலாம் இவை நான் போய்ப் பார்த்துவந்த இடங்கள். பலருக்கும் நினைவு இருக்கலாம் பல ஆண்டுகளுக்கு முன் பான்ஸ்வாடி ஆஞ்ச்நேயர் கண்களிலிருந்து நீர் வழிந்ததாக செய்தி
பத்திரிகைகளில் வந்ததுகுன்றேற படிக்கட்டுகள் |
விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்த இடம் |
மேல் தளத்தில் ஆஞ்ச நேயர் படம் |
மஹாலக்ஷ்மி சிலை |
விநாயகர் |
ராம லக்ஷ்மண சீதா |
லக்ஷ்மி |
வீர ஆஞ்சநேயர் சிலை |