சனி, 8 டிசம்பர், 2012

எண்ண அலைகள்.


                                              எண்ண அலைகள்.
                                              -------------------------


பதிவுலகில் நான் ஆரம்பத்தில் எழுதிய ஆங்கிலப் பதிவு இது. இதில் எழுதியக் கருத்துக்களில் இன்றும் எனக்கு ஏதும் மாற்றம் இல்லை. அப்போது அது திரட்டிகளில் சேர்க்கப் படவில்லை. நானும் அறியப் படாதவனாக இருந்தேன். பதிவுகளில் முன்னூறு என்னும் இலக்கை தொட இருக்கிற இன்னேரம் இதை மீள் பதிவாக்குகிறேன்.


The country is undergoing a sea change. New economic policies are announced, and many are on the anvil. Lots of talks go on about how the country has prospered and how it aims to become a super power.
            For senior citizens like me ,the progress seen is visible. A few days back the improvements  had been listed in a newspaper , like the average age and life expectancy, reduction in infant mortality rate, higher percentage of literates.better life styles etc etc .Also listed  was the higher population  growth, which seems to nullify  the better effects. A poor man remains a poor man even though  comparitively he might be enjoying a little better  life style, than his forefathers. The gap between the affluent and the poor is increasing. This gap is so much that it results in  a lot of disenchantment in the minds of the majority poor.This is getting manifested  in the behaviour pattern of the youth.
           Let us try to reason it out. All human beings are born same.The differences are they are born in different families ( very poor, poor,middle class,-there also lower middle and upper- and rich.) A child is born in a poor family or a child is born ina rich family and the child is not responsible for it. You may satisfy yourself by saying it is the PRARABDHA KARMA.of the child. But that does not hold water in the minds of the children born.Their upbringing is entirely different and for that also the children are not responsible. A poor child does not get proper food ,clothes, education and other facilities  which the children of the rich enjoy. But one common factor is that both the types of children grow up in age and face life in totally different ways. But this anamoly  is faced by the poor children more.For no fault of him/her the poor has to face life grimly, trying to make both ends meet , whereas the rich and affluent grow up in an entirely different atmosphere.
    This leads the suppressed emotions of the poor being given vent in their violent and unruly  behaviour,at the slightest opportunity to show discontent. And there are any number of opportunities  presented in a platter to show  discontent. There are any number of people riding on the discontent of the poor, for their own benefits, and these poor gullible people are not able to distinguish and understand the machinations of the netas.
  
         Buses are burnt, shops are damaged ,stones are pelted ,resulting in lots of damage to property  and lives. The pent up emotions  of the already disgruntled youth  are further fuelled by the netas with delicate subjects like the caste ,creed , language ,religion etc where passions can be easily roused.
         Where does the remedy lie? We hear a lot about right to food ,right to health ,right to education ,right to information  etc,But the resources for all these are being channelled through netas ,political netas because of which the means do not meet the ends. There is too much interference of the political bosses in effecting what good legislations promise..Accountability of the beaureouacrats is next to nothing, as they are pliable to the political bosses.
          The rich young should empathise with his not so fortunate poor.The young should realise they are being manipulated and should not fall preyto the machinations of the netas. They should believe  only hard work will pay , and they should start aiming at the stars and they will surely reach at least the tree top. 
-----------------------------------------------------------------------------

வியாழன், 6 டிசம்பர், 2012

ஏனென்று சொல்லு நீ தென்றலே...


                                 ஏனென்று சொல்லு நீ தென்றலே...
                                 ---------------------------------------------


ஏனென்று சொல்லு நீ தென்றலே
மனசை என்னமோ பண்ணுது  புரியலே
புதுப் புது எண்ணங்கள் தோன்றுது-அதை
இடுகையில் பதிக்கவே மனம் நாடுது.

எண்ணங்கள் எழுத்துருக் கொள்ளுது
படிக்கையில் இதழிலே புன்னகை விரியுது
புரிந்து படிக்க தெளிவான மனம் வேண்டுமே
ஆனால் படிப்பவர் முகம் கோணுது ஏனோ புரியலெ

ஆயிரம் உண்டிங்கு சாதி எனினும்
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர்
இழிகுலத்தோர் என்றாள் அவ்வை மூதாட்டி.
ஒருவர் இட்டு ஒருவர் வாழல் என்ன நீதி.
இதனை நான் கேட்டால் ஏன் இந்த சுணக்கம்?
ஆணென்றும் பெண்ணென்றும் இருசாதி
அதிலும் இருப்போர் இல்லாதோர் என்னும் பேதம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றே ஏதுமிலை படைப்பில்
இதனை அறிந்திடஅறிவுக்கண் திறந்திடல் வேண்டும்
அனைவருக்கும் தேவை சுய சிந்தனை
அன்றே சொன்னான் சாக்ரடீஸ் தேவை அறிவாயுதம்
அதனை அடையவே கேட்கிறேன் அனைவருக்கும்
அகக் கண் திறக்கும் சமச்சீர் கல்வி.
அறிவு என்பது அனைவருக்கும் இருப்பது
பட்டை தீட்டி ஜொலிக்க வேண்டுவதே அறிவாயுதம்
நரைகூடிக் கிழப் பருவம் எய்தி வேடிக்கை மனிதர்போல்
வீழ்வேனென்று நினைத்தாயோஎன்று கேட்கும்
நாம் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்

ஏனென்று சொல்லு நீ தென்றலே
மனசை என்னவோ பண்ணுது புரியலே. .  .     :      



செவ்வாய், 4 டிசம்பர், 2012

உடலும் உணவும்....


                                         உடலும் உணவும்....
                                         -------------------------


எனக்கு வெகு நாட்களாகவே இருக்கும் சந்தேகம். உண்ணும் உணவுக்கும் உருவத்துக்கும் சம்பந்தம் உண்டா. ? எனக்குத் தெரிந்தவர்களில் சிலர் அதிக அளவிலும் அடிக்கடியும் உண்டாலும் ஒல்லிப்பிச்சான்களாகவே இருக்கிறார்கள். சிலர் குறைந்த அளவே உண்டாலும் பருமனாக இருக்கிறார்கள். .ஒருவரது எடை உயரத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் ஒருவரது உயரத்தை செ. மீ. கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது எடை பொதுவாக உயரம்   in செ.மீ-லிருந்து 100-ஐ கழித்தால் வருவது என்பது THUMB RULE ஆக எடுத்துக் கொள்ளலாம். உயரத்துக்கும் எடைக்கும் சம்பந்தம் இல்லாமல் தொந்தியும் தொப்பையுமாக , காலில் இருக்கும் செருப்பைக் கூட காணமுடியாதபடி இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல. உடல் நலத்தில் அக்கரை செலுத்த வேண்டும்.


சிலர் உயிர் வாழ உண்கிறார்கள். சிலர் உண்பதற்காக உயிர் வாழ்கிறார்கள். பொதுவாக உடல் பருமன் அதிகமுள்ளவர்கள் உடல் உழைப்பில் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். உட்கொள்ளும் உணவையும் செலவுசெய்யும் சக்தியையும் கலோரி என்னும் கணக்கில் சொல்கிறார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம் நாவடக்கம். பேச்சைக் குறைப்பதல்ல. இது வேறு நாவடக்கம். உணவு உட்கொள்ளும்போது இன்னும் சிறிது சாப்பிடலாம் என்று தோன்றும்போதே உண்பதை நிறுத்திவிட வேண்டும். எழுபது சதவீதம் உணவும் இருபது சதவீதம் நீரும் உட்கொண்டபிறகு மீதி இடம் காலியாக இருப்பது முக்கியம். அதை விட்டு தொண்டைவரை உணவை நிரப்பினால் ஆரோக்கியம் உத்தரவாதம் இல்லை. 
எனக்கு உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிடுபவர்களைக் கண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என் உறவினர் ஒருவர் போஜனப் பிரியர். நன்றாகச் சாப்பிடுவார். அவருக்கு அந்தக் காலத்தில் குடலில் அல்சர் வந்து ஆப்பரேஷன் செய்து   இரைப்பையின் நீளத்தைக் கணிசமாக குறைத்திருந்தார்கள்.
அவர் சாப்பிடுவதைப் பார்த்து நண்பன் ஒருவன்,” பாதி குடலை அறுத்தெறிந்தும் இவ்வளவு சாப்பிடுபவன் , முழுக் குடலும் இருந்தால் எவ்வளவு சாப்பிடுவானோ “என்று காமெண்ட் அடிப்பான். இன்னொரு உறவினர் தோசையோ இட்லியோ சாப்பிடும்போது இன்னும் வேண்டும் என்பதை “ நாட் அவுட் “ என்று சொல்லித் தெரியப் படுத்துவார். அவரை அவுட் செய்வதற்குள் போதும் என்றாகிவிடும். ஒரு இண்டெரெஸ்டிங் விஷயம். வீட்டில் நிறைய சாப்பிடுபவர்கள் பொதுவாக ஓட்டலில் சாப்பிடும்போது அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். உணவுக்குப் பதில் பணத்தை உண்பதுபோல் நினைக்கிறார்களோ என்னவோ. அது டிபன் வகையறாக்களில் மட்டும்தான் இருக்கும். ஓட்டலில் அன்லிமிடெட் சாப்பாடு என்று வரும்போது ஒரு கை பிடிப்பார்கள்.

நான் பார்த்து புரிந்து கொண்ட வரை ( இது ஒரு அனுமானம்தான். தவறு இருக்கலாம் )நன்றாக உண்டு கொழுகொழுவென்று இருப்பவர்கள். மனதளவில் இரக்க சிந்தனை உடையவர்களாகவும் கோபம் குறைந்தவராகவும் இருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக ஒல்லியாய் இருப்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும் முன் கோபம் உள்ளவராகவும் இருக்கிறார்கள்.உணவு பற்றிய சில விஷயங்கள் பாட புத்தகங்களில் இருப்பது கண்டு சில நாட்கள் பத்திரிகைகளில் பெரிய விவாதமே இருந்தது. வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன் உணவுகளில் எது சிறந்ததுஎன்னும் விவாதம் சர்ச்சையைக் கிளப்பும். ஆனால் மனித்னின் வாயும் பற்களும் வெஜிடேரியன் உணவுக்குத்தான் சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. 

வெஜிடேரியன் நான்-வெஜிடேரியன் உணவு என்று எண்ணும்போது எனக்காக நான்வெஜிடேரியன் உணவைத் துறந்த என் மனைவியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. திருமணம் ஆன புதிதில் அவளை சென்னையில் புஹாரி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவள் பிரியப்பட்ட நான்வெஜிடேரியன் உணவைச் சாப்பிடச் சொன்னேன். அந்த என் so called நல்ல குணம் கண்டு அவள் புலால் உண்பதைத் தவிர்த்து விட்டாள். நான் உணவில் எந்த  taboo வையும் கொண்டு வரப் பிரியப் படவில்லை. என் மக்களில் பலரும் புலால் உண்பது தடுக்கப் படவில்லை

உணவு உடலுக்கு முக்கியம். ஆனால் அதுவே உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்றால் அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. நேரத்துக்கு அளவாக உண்டு உடலைப் பேணுவது மிக முக்கியம். கூடுதல் இனிப்பு வகைகளும் எண்ணையில் பொறித்த உணவு வகைகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். உண்ட உணவு செரிக்க வேண்டும். உண்ணும் உணவின் அளவு சக்தியும் உடற் பயிற்சியின் மூலம் எரிக்கப் பட வேண்டும். உட்கொள்ளும் உணவின் கலோரி அளவும் நம் உடல் சம்பந்தப் பட்ட நடவடிக்கைகளின் மூலம் செலவாகும் கலோரி அளவும் சரியாக இருந்தால் நம் உடல் கட்டுக்குள் இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.நோயற்ற வாழ்வின் சரியான பாதையில்தான் நாம் இருக்கிறோம் என்று நாம் அறிய BODY MASS INDEX   என்னும் முறையை உபயோகிக்கிறார்கள். உயரத்துக்கும் எடைக்கும் உள்ள சரியான கொழுப்பின் அளவை கண்டுபிடிக்கும் ஒரு விகிதாச்சாரம்  எனக் கொள்ளலாம்.



Body mass index


From Wikipedia, the free encyclopedia

The body mass index (BMI), or Quetelet index, is aheuristic proxy for human body fat based on an individual's weight and height. BMI does not actually measure thepercentage of body fat. It was devised between 1830 and 1850 by the Belgian polymath Adolphe Quetelet during the course of developing "social physics".[2] Body mass index is defined as the individual's body mass divided by the square of his or her height. The formulae universally used in medicine produce a unit of measure of kg/m2. BMI can also be determined using a BMI chart,[3] which displays BMI as a function of weight (horizontal axis) and height (vertical axis) using contour lines for different values of BMI or colors for different BMI categories.


விக்கிபீடியாவில் இருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட மேற்கண்ட தவல்கள் உபயோகமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

தேவைப்பட்ட உடற்பயிற்சி மூலம் உடலைக் கட்டுக்குள்  கொண்டு வரமுடியாதவர்கள்  மருத்துவ உதவியை நாடி உடலின் அதிக கொழுப்பை அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி எடுத்துச் சரிசெய்வதாகக் கேள்விப்படுகிறேன். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் உணவைக் கட்டுப் படுத்தியே உடலைப் பேண வேண்டும். சாதாரண நிலையில் உடற்பயிற்சி இல்லாதவர் நாளொன்றுக்கு 2000 முதல் 2500 கலோரி சக்தியுள்ள உணவு உட்கொள்கிறார்கள் என்றால் அதைச் சற்றுக் குறைத்துக் கொண்டால் எடையைக் குறைக்கலாம். எந்த ஒரு வேலையும் செய்யாமல்  உடல் உறுப்புகள் இயங்க மட்டும் சுமார் 1200 கலோரி சக்தி தேவைப் படுகிறதாம், செலவாகிறதாம். மற்றபடி இயக்கதுக்குத் தக்கவாறு உண்டு வந்தால் உடல் இருக்கும் நிலையிலேயே இருக்கும். எடையைக் கூட்டவோ குறைக்கவோ ஏற்றபடி விகிதாச்சார உணவு உட்கொள்ளலாம

NOW A LITTLE LIGHTER SUBJECT. 

ரோபோ விற்பனைக்கு
---------------------.
பொய்  சொன்னால் கண்டுபிடிக்கும் ஒரு ரோபோவை அப்பா வாங்கி வந்தார். அது பொய் சொன்னால் கன்னத்தில் அடிக்கும். அதை சோதனை செய்ய அன்றிரவு உணவு மேசையில் தன் மகனிடம் அவன் என்ன செய்தான் என்று கேட்டார். மகன் தன் வீட்டுப் பாடங்களைச் செய்ததாகக் கூறினான். ரோபோ அவன் கன்னத்தில் அடித்தது. மகன் “ சரி, சரி என் நண்பனுடன் அவன் வீட்டில் படம் பார்த்தேன்” : என்றான். அப்பா “ என்ன படம் பார்த்தாய்.?”
மகன்,” கார்ட்டூன் படம் பார்த்தேன்”  ரோபோ அவன் கன்னத்தில் அடித்தது.
மகன்,” சரி, சரி, நாங்கள் பலான படம் பார்த்தோம்” என்றான்.
அப்பா, “ உன் வயதில் எனக்கு பலான படங்கள் இருப்பதே தெரியாது “ என்றார். ரோபோ அவர் கன்னத்தில் அடித்தது.
அம்மா, சிரித்துக் கொண்டே “ என்னதான் இருந்தாலும் அவன் உங்கள் மகன்தானே“ என்றாள்.
ரோபோ அவள் கன்னத்தில் அடித்தது. !    
-------------------------------------------   .     :      





.


  
















ஞாயிறு, 2 டிசம்பர், 2012

UTOPIAN DREAM...?


                   உத்தோப்பியக் கனவா,.?
                   -----------------------------------


திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் பிறப்பும் இறப்பும் என்ற பதிவினைப் படித்தேன். மிக அழகாகச் சில கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அதைப் படித்து முடித்த பிறகு என்னுள் இருப்பவர்களைப் பற்றிய சிந்தனை ஓடியது. வலைப்பூவில் எழுதுபவன் என்ற முறையில் நானும் ஒரு எழுத்தாளன்தானே.எழுத்தின்மூலம் எங்காவது ஒரு நல்ல , சிறிய மாற்றத்துக்கு விதை விதைத்தால் நல்லதுதானே. . ஒருமுறை திரு அப்பாதுரை,.’எழுத்தின் வெளிப்பாடு பலசமயம் பலவித புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதால், படிப்பவரும் திறந்த மனத்தோடு அடிப்படை நம்பிக்கையோடு படித்தால், இணையத்தில் அருமையான கலந்தெழுத்தாடல்களில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்” என்று எழுதியிருந்தார் நானும் என் கருத்துகளை எடுத்துச் சொல்ல என்றும் தயங்கியது இல்லை.

இருப்பவர் பற்றிய எண்ணங்களில் எப்பொழுதும் என்னை வருத்தும் மனிதரில் ஏற்ற தாழ்வின் காரண காரியங்கள் பற்றியே இப்போதும் எழுதுகிறேன் அனைவருக்கும் சம வாய்ப்பு இருந்தும் ஏற்ற தாழ்வுகள் நீடித்தால் யாரும் யாரையும் குறை கூற முடியாது. ஆனால் உண்மை அப்படி இல்லையே. போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் பந்தயத்தில் பங்கேற்கும் அனைவரும் , ஓட்டப் பந்தயமானால் ஒரே கோட்டிலிருந்தோ, , மல்யுத்தமாகவோ, குத்துச் சண்டையாகவோ இருந்தால் அதே எடை எதிராளியுடனோ மோதுவதுதானே நியாயம். ,? ஆனால் நம் சமூகத்தில் போட்டி மிகுந்த HANDICAP –உடன் அல்லவா நடக்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானென்றாலும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதா என்பது சந்தேகத்துக்குரியதே.பிறப்பொக்கும் என்று வாய்கிழியப் பேசுவோர் உண்மையில் அதில் நம்பிக்கை கொண்டுள்ளனரா, ? சிந்தித்துப் பார்க்க வேண்டும். SURVIVAL OF THE FITTEST- எனும் தேற்றம் மனிதனைப் பொறுத்தவரையில் ஒரு மாற்றுக் குறைந்தே உண்மையாகி இருக்கிறது. இல்லையென்றால் பலம் மிகுந்த யானையையே அதன் பலம் தெரியாதபடி அடக்கி இருக்க முடியுமா. ? ஆதியில் உடல் பலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவன் நாளாவட்டத்தில் புத்தியை உபயோகித்து செய்யும் தொழில் மூலம் பேதம் உண்டாக்கினான். கடவுள் என்றும் சாதி என்றும் மதம் என்றும் பாகுபாடுகள் ஏற்படுத்தி ஆண்டை என்றும் அடிமை என்றும் வகைப் படுத்தி அடுத்தவன் நிமிர முடியாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்தான். செய்யும் தொழிலால் அடையாளப் படுத்தப்பட்டு இன்னாருக்கு இன்ன வேலை என்று கூறி மற்றவன் வேறு எந்த தொழிலுக்கும் போகமுடியாதபடி அடிமைப் படுத்த மதம் என்றும் சாதி என்றும் , மனுதர்மம் என்றும் சாஸ்திரம் என்றும் கூறி சிந்திக்க வைக்கும் கல்விஅவர்களுக்கு தேவை இல்லை என்று நியாயப் படுத்தினான். ஆண்டாண்டுகாலம் அடிமையாய் இருந்து பழகி விட்ட மக்கள் மாக்களாகவே நடத்தப் பட்டனர். ஆங்கிலேயன் ஆட்சிக்கு வந்தபோது அவனது ஆட்சிக்குத் துணைபோனது அப்போது ஆண்டையாகஇருந்தவர்கள்தான். அப்போது படித்தவர்கள் அவனது ஆட்சிக்கு தேவைப் பட்டனர். நம்மிடம் இருந்த மனோபாவத்தை நன்கு பயன்படுத்தி அவனது ஆட்சி விருட்சமாக வளர நம்மிடையே இருந்த பிரிவுகளைப் பயன்படுத்திக் கொண்டான். கல்வி பெற்றவர்கள் சிந்திக்கத் துவங்கியபோது அவனது ஆட்சி அசையத் தொடங்கியது.


கல்வி என்பது சிந்தனையைத் தூண்டுவது. சுதந்திரம் பெற்றபோது, சமூகத்தின் அடியில் இருந்த மக்களுக்கு கல்வி தேவை என்று உணரப் பட்டு 25 ஆண்டுகாலத்தில் ஒதுக்கீடு முறையில் அவர்களை மேலே கொண்டு வரலாம் என்று எண்ணப் பட்டது. ஆனால் 25 ஆண்டுகாலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப் பட்டவர்களும் பின் தங்கியவர்களும் கல்வியிலும் HANDICAP  பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்பு இல்லாமலேயே இருந்தனர்.

இம்மாதிரியான ஒதுக்கீடுகள் தேவையா என்னும் கேள்வி எழுகிறது. படித்த குடும்பப் பின்னணியில் இருப்பவன் படித்து முன்னுக்கு வருவது இயல்பே. ஆனால் ஆண்டாண்டுகாலமாக கல்வியறிவே இல்லாத குடும்பப் பின்னணியில் இருப்பவன் பந்தயத்தில் ஓடுவதே சிரமம் . அப்படி இருப்பவருக்கு சலுகை அவசியம்தானே. ஆனால்... எத்தனை ஆண்டுகள்.?ச்லுகை பெற்று முன்னுக்கு வருபவன் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள இவன் ஆண்டை மனோபாவத்தை வளர்த்துக் கொள்கிறான். இப்போதெல்லாம் முன்பு உயர் சாதி என்று கருதப் பட்டவர்கள் முகவரி காணாமல் போய் அவர்களது இடத்தை சாதி இந்துக்கள் எடுத்துக் கொண்டு விட்டார்களோ என்றே தோன்றுகிறது. கிராமங்களில் மதில் சுவர்களும் தேனீர் குடிக்கத் தனி குப்பிகளும் யார் கடை பிடிக்கிறார்கள் ? சிந்திக்க வேண்டும். .

அரசு கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர முயல்வது தெரிகிறது. இலவச மதிய உணவு, சீருடை, பேரூந்துகளில் சலுகை, இலவச சைக்கிள், என்றெல்லாம் கொண்டு வந்தாலும் அளிக்கப் படும் கல்வி தரமாயில்லை என்று உணர்ந்து சமச்சீர் கல்வி என்று கொண்டுவந்தாலும் கல்வியின் தரம் போதுமானதாக இல்லை. இப்போது கல்வி ஒரு வியாபாரமாகி விட்டது. ஆங்கிலக்கல்வி, கான்வெண்ட் கல்வி என்று புற்றீசல்போலக் கல்விக் கடைகள் எங்கும் வியாபித்து இருக்கிறது. நான் கல்வி கற்றது தமிழ்வழியில்தான் ஏறத்தாழ எல்லா பள்ளிக்கூடங்களிலும் தமிழ் வழியில்தான் கற்பித்தனர். கல்வி வியாபாரமாகக் கருதப் படவில்லை. இந்த மாற்றத்துக்கு ஈடு கொடுக்கவே ஏழைகளுக்கு 25 % இட ஒதுக்கீடு எல்லாப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும் என்று சட்டம் வந்திருக்கிறது. அதை அமல் படுத்துவதில் ஏகப்பட்ட தடங்கல்கள்.

இப்போதெல்லாம் நாம் எந்த விஷயத்தையும் நடுத்தர வர்க்க மனப் பான்மையுடனே அணுகுகிறோம் கல்வியில் மூன்று வயதுக் குழைந்தையைப் பள்ளியில் சேர்க்க அதிகாலை நான்கு மணிக்கே வரிசையில் நின்று ஆண்டொன்றுக்கு ரூ.50,000/ தருவதை பெருமையாய் நினைக்கிறோம். கேட்டால் தரமான கல்விக்கு அவ்வளவு செலவு செய்யத்தான் வேண்டி இருக்கிறது என்று மூக்கைச் சிந்துகிறோம். அதிகப் பணம் கொடுத்துப் பெறுவது எல்லாம் தரமானது என்னும் தவறான எண்ணம் நம்மை ஆட்கொண்டு விட்டது. இந்த மனோபாவம் சிறிது சிறிதாக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பரவி வருவது வருந்தத்தக்க விஷயம் நகர வசதிகள் கொண்ட கிராமப்புறங்கள் எதிர்மறை விளைவுகளைக் கொண்டு வருகிறதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது.

மனிதரில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மறைய வேண்டுமென்றால்  நூறு சதவீதக் கல்வி அவசியம். அதுவும் எல்லோருக்கும் சம மாயிருக்க வேண்டும். இதை அமல் படுத்த வேண்டுமானால் கல்வி அரசுடமை ஆக்கப் பட வேண்டும். கல்வி வியாபாரம் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும் இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லாமல் கல்வி இலவசமாக அனைவருக்கும் வழங்கப் பட வேண்டும். சமச்சீர் கல்வி சமச்சீர் உடை, சமச்சீர் உணவு என்று எல்லோருக்கும் கட்டாயமாக்கப் பட வேண்டும்.அந்த விதத்தில் பிஞ்சு உள்ளங்களில் உயர்ந்தவன் ,தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்ற என்னாண்ங்கள் எழாமல் அனைவரும் சமம் என்னும் எண்ணம் வளரும். வாய்ப்புகள் சமமாயிருக்கும்போது வாழ்க்கையில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கும்.   

 தேவைப் பட்டால் தனி மனித உரிமை இவற்றில் மறுக்கப் பட வேண்டும் இதை நிறைவேற்ற ஒரு BENEVOLENT  சர்வாதிகார ஆட்சி வந்தாலும் நல்லதே. இது நடந்தால் நமது வருங்காலத் தலை முறையில் ஏற்ற தாழ்வு இருக்காமல் இருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால் மனசின் இன்னொரு மூலையில் நான் நினைப்பது ஒரு UTOPIAN  தேசத்தில்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.      
           
. 



   



  

                   

வெள்ளி, 30 நவம்பர், 2012

சூரா அது உன் சதியா. ?


                                 சூரா அது உன் சதியா...?
                                 --------------------------------

( அதிகம் பறந்து பார்த்து  அறியாத  மயிலின் பறக்கும் படங்கள் பதிவிட்டிருந்தேன். அதையொட்டிக் கவிதை புனையவும்  வேண்டி இருந்தேன். என் துரதிர்ஷ்டம் வாசகர்களின் வலைத் தளங்களில் படங்கள் தெரிவதில்லை எனக் குறைபட்டு பின்னூட்டங்கள். . நானே என் கற்பனையைத் தட்டிவிட்டு ஒரு கவிதை (? ) எழுதியிருக்கிறேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது  ஒரு கற்பனையே.) 



தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன் 
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.

முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .           
.





புதன், 28 நவம்பர், 2012

மயில் ( கவிதை எழுத வாருங்கள் ).

மயில்
கவிதை எழுத வாருங்கள் 

மயில் என்றதும் அழகும் கம்பீரமும் நினைவுக்கு வருகிறது. சில அற்புதமான படங்கள் கிடைத்ததும் மயில்வாகனனின் நினைப்பும், சூரனின் நினைப்பும் வந்தது கூடவே ஏதாவது பாடல் புனையலாமா  என்று நினைக்கவும் தோன்றியது. நான் எழுதுவதை விட தமிழில் புலமை கொண்ட நம் பதிவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் ஓடியது. 





















 மயிலின் தோகை அழகு விரிந்து இருப்பதில் கண்டிருக்கிறோம். ஞாலம் வலம் வந்த ஷண்முகன் பறக்கும் மயிலில்தானே ஆரோகணித்து இருக்க வேண்டும்.? பற்க்கும் மயிலின் படங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடட்டும். பதிவர்களுக்கு நல்ல கவிதை கிடைக்கட்டும். சரிதானே நண்பர்களே. போட்டி என்று சொல்ல மாட்டேன். படைப்பு என்று கூறி ஆவலுடன் எதிர்பார்ப்போம்.   

( தமிழ் மணத்தில் இணைத்திருக்கிறேன். அதன் மூலம் பார்த்தால் படங்கள் தெரிகிறது.)