செவ்வாய், 4 டிசம்பர், 2012

உடலும் உணவும்....


                                         உடலும் உணவும்....
                                         -------------------------


எனக்கு வெகு நாட்களாகவே இருக்கும் சந்தேகம். உண்ணும் உணவுக்கும் உருவத்துக்கும் சம்பந்தம் உண்டா. ? எனக்குத் தெரிந்தவர்களில் சிலர் அதிக அளவிலும் அடிக்கடியும் உண்டாலும் ஒல்லிப்பிச்சான்களாகவே இருக்கிறார்கள். சிலர் குறைந்த அளவே உண்டாலும் பருமனாக இருக்கிறார்கள். .ஒருவரது எடை உயரத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் ஒருவரது உயரத்தை செ. மீ. கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது எடை பொதுவாக உயரம்   in செ.மீ-லிருந்து 100-ஐ கழித்தால் வருவது என்பது THUMB RULE ஆக எடுத்துக் கொள்ளலாம். உயரத்துக்கும் எடைக்கும் சம்பந்தம் இல்லாமல் தொந்தியும் தொப்பையுமாக , காலில் இருக்கும் செருப்பைக் கூட காணமுடியாதபடி இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல. உடல் நலத்தில் அக்கரை செலுத்த வேண்டும்.


சிலர் உயிர் வாழ உண்கிறார்கள். சிலர் உண்பதற்காக உயிர் வாழ்கிறார்கள். பொதுவாக உடல் பருமன் அதிகமுள்ளவர்கள் உடல் உழைப்பில் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். உட்கொள்ளும் உணவையும் செலவுசெய்யும் சக்தியையும் கலோரி என்னும் கணக்கில் சொல்கிறார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம் நாவடக்கம். பேச்சைக் குறைப்பதல்ல. இது வேறு நாவடக்கம். உணவு உட்கொள்ளும்போது இன்னும் சிறிது சாப்பிடலாம் என்று தோன்றும்போதே உண்பதை நிறுத்திவிட வேண்டும். எழுபது சதவீதம் உணவும் இருபது சதவீதம் நீரும் உட்கொண்டபிறகு மீதி இடம் காலியாக இருப்பது முக்கியம். அதை விட்டு தொண்டைவரை உணவை நிரப்பினால் ஆரோக்கியம் உத்தரவாதம் இல்லை. 
எனக்கு உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிடுபவர்களைக் கண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என் உறவினர் ஒருவர் போஜனப் பிரியர். நன்றாகச் சாப்பிடுவார். அவருக்கு அந்தக் காலத்தில் குடலில் அல்சர் வந்து ஆப்பரேஷன் செய்து   இரைப்பையின் நீளத்தைக் கணிசமாக குறைத்திருந்தார்கள்.
அவர் சாப்பிடுவதைப் பார்த்து நண்பன் ஒருவன், பாதி குடலை அறுத்தெறிந்தும் இவ்வளவு சாப்பிடுபவன் , முழுக் குடலும் இருந்தால் எவ்வளவு சாப்பிடுவானோ “என்று காமெண்ட் அடிப்பான். இன்னொரு உறவினர் தோசையோ இட்லியோ சாப்பிடும்போது இன்னும் வேண்டும் என்பதை “ நாட் அவுட் “ என்று சொல்லித் தெரியப் படுத்துவார். அவரை அவுட் செய்வதற்குள் போதும் என்றாகிவிடும். ஒரு இண்டெரெஸ்டிங் விஷயம். வீட்டில் நிறைய சாப்பிடுபவர்கள் பொதுவாக ஓட்டலில் சாப்பிடும்போது அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். உணவுக்குப் பதில் பணத்தை உண்பதுபோல் நினைக்கிறார்களோ என்னவோ. அது டிபன் வகையறாக்களில் மட்டும்தான் இருக்கும். ஓட்டலில் அன்லிமிடெட் சாப்பாடு என்று வரும்போது ஒரு கை பிடிப்பார்கள்.

நான் பார்த்து புரிந்து கொண்ட வரை ( இது ஒரு அனுமானம்தான். தவறு இருக்கலாம் )நன்றாக உண்டு கொழுகொழுவென்று இருப்பவர்கள். மனதளவில் இரக்க சிந்தனை உடையவர்களாகவும் கோபம் குறைந்தவராகவும் இருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக ஒல்லியாய் இருப்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும் முன் கோபம் உள்ளவராகவும் இருக்கிறார்கள்.உணவு பற்றிய சில விஷயங்கள் பாட புத்தகங்களில் இருப்பது கண்டு சில நாட்கள் பத்திரிகைகளில் பெரிய விவாதமே இருந்தது. வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன் உணவுகளில் எது சிறந்ததுஎன்னும் விவாதம் சர்ச்சையைக் கிளப்பும். ஆனால் மனித்னின் வாயும் பற்களும் வெஜிடேரியன் உணவுக்குத்தான் சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. 

வெஜிடேரியன் நான்-வெஜிடேரியன் உணவு என்று எண்ணும்போது எனக்காக நான்வெஜிடேரியன் உணவைத் துறந்த என் மனைவியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. திருமணம் ஆன புதிதில் அவளை சென்னையில் புஹாரி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவள் பிரியப்பட்ட நான்வெஜிடேரியன் உணவைச் சாப்பிடச் சொன்னேன். அந்த என் so called நல்ல குணம் கண்டு அவள் புலால் உண்பதைத் தவிர்த்து விட்டாள். நான் உணவில் எந்த  taboo வையும் கொண்டு வரப் பிரியப் படவில்லை. என் மக்களில் பலரும் புலால் உண்பது தடுக்கப் படவில்லை

உணவு உடலுக்கு முக்கியம். ஆனால் அதுவே உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்றால் அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. நேரத்துக்கு அளவாக உண்டு உடலைப் பேணுவது மிக முக்கியம். கூடுதல் இனிப்பு வகைகளும் எண்ணையில் பொறித்த உணவு வகைகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். உண்ட உணவு செரிக்க வேண்டும். உண்ணும் உணவின் அளவு சக்தியும் உடற் பயிற்சியின் மூலம் எரிக்கப் பட வேண்டும். உட்கொள்ளும் உணவின் கலோரி அளவும் நம் உடல் சம்பந்தப் பட்ட நடவடிக்கைகளின் மூலம் செலவாகும் கலோரி அளவும் சரியாக இருந்தால் நம் உடல் கட்டுக்குள் இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.நோயற்ற வாழ்வின் சரியான பாதையில்தான் நாம் இருக்கிறோம் என்று நாம் அறிய BODY MASS INDEX   என்னும் முறையை உபயோகிக்கிறார்கள். உயரத்துக்கும் எடைக்கும் உள்ள சரியான கொழுப்பின் அளவை கண்டுபிடிக்கும் ஒரு விகிதாச்சாரம்  எனக் கொள்ளலாம்.



Body mass index


From Wikipedia, the free encyclopedia

The body mass index (BMI), or Quetelet index, is aheuristic proxy for human body fat based on an individual's weight and height. BMI does not actually measure thepercentage of body fat. It was devised between 1830 and 1850 by the Belgian polymath Adolphe Quetelet during the course of developing "social physics".[2] Body mass index is defined as the individual's body mass divided by the square of his or her height. The formulae universally used in medicine produce a unit of measure of kg/m2. BMI can also be determined using a BMI chart,[3] which displays BMI as a function of weight (horizontal axis) and height (vertical axis) using contour lines for different values of BMI or colors for different BMI categories.


விக்கிபீடியாவில் இருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட மேற்கண்ட தவல்கள் உபயோகமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

தேவைப்பட்ட உடற்பயிற்சி மூலம் உடலைக் கட்டுக்குள்  கொண்டு வரமுடியாதவர்கள்  மருத்துவ உதவியை நாடி உடலின் அதிக கொழுப்பை அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி எடுத்துச் சரிசெய்வதாகக் கேள்விப்படுகிறேன். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் உணவைக் கட்டுப் படுத்தியே உடலைப் பேண வேண்டும். சாதாரண நிலையில் உடற்பயிற்சி இல்லாதவர் நாளொன்றுக்கு 2000 முதல் 2500 கலோரி சக்தியுள்ள உணவு உட்கொள்கிறார்கள் என்றால் அதைச் சற்றுக் குறைத்துக் கொண்டால் எடையைக் குறைக்கலாம். எந்த ஒரு வேலையும் செய்யாமல்  உடல் உறுப்புகள் இயங்க மட்டும் சுமார் 1200 கலோரி சக்தி தேவைப் படுகிறதாம், செலவாகிறதாம். மற்றபடி இயக்கதுக்குத் தக்கவாறு உண்டு வந்தால் உடல் இருக்கும் நிலையிலேயே இருக்கும். எடையைக் கூட்டவோ குறைக்கவோ ஏற்றபடி விகிதாச்சார உணவு உட்கொள்ளலாம

NOW A LITTLE LIGHTER SUBJECT. 

ரோபோ விற்பனைக்கு
---------------------.
பொய்  சொன்னால் கண்டுபிடிக்கும் ஒரு ரோபோவை அப்பா வாங்கி வந்தார். அது பொய் சொன்னால் கன்னத்தில் அடிக்கும். அதை சோதனை செய்ய அன்றிரவு உணவு மேசையில் தன் மகனிடம் அவன் என்ன செய்தான் என்று கேட்டார். மகன் தன் வீட்டுப் பாடங்களைச் செய்ததாகக் கூறினான். ரோபோ அவன் கன்னத்தில் அடித்தது. மகன் “ சரி, சரி என் நண்பனுடன் அவன் வீட்டில் படம் பார்த்தேன் : என்றான். அப்பா “ என்ன படம் பார்த்தாய்.?
மகன்,கார்ட்டூன் படம் பார்த்தேன்”  ரோபோ அவன் கன்னத்தில் அடித்தது.
மகன்,சரி, சரி, நாங்கள் பலான படம் பார்த்தோம்என்றான்.
அப்பா, “ உன் வயதில் எனக்கு பலான படங்கள் இருப்பதே தெரியாது “ என்றார். ரோபோ அவர் கன்னத்தில் அடித்தது.
அம்மா, சிரித்துக் கொண்டே “ என்னதான் இருந்தாலும் அவன் உங்கள் மகன்தானே“ என்றாள்.
ரோபோ அவள் கன்னத்தில் அடித்தது. !    
-------------------------------------------   .     :      





.


  
















10 கருத்துகள்:

  1. செம ஜோக். இதை யூஸ் பண்ணிக்கிறேனே?

    ஒல்லியா இருக்குறவங்க ப்ரோடீன் கம்மிங்கறதனால உணர்ச்சிவசப்படலாம். ஆனா இந்திய வெஜிடேரியன் உணவுல ப்ரோடீன் பொதுவாவே கம்மி தான். அதனால் தான் எல்லாரும் எதுக்கெடுத்தாலும் கோவம் வந்து கத்தறாங்களோ என்னவோ?

    வெஜிடேரியன் கட்சிக்காரங்க எதுக்கெடுத்தாலும் யானையை உதாரணம் காட்டுவாங்க.. நானும் என்னவோ யானை சுத்த சைவம்னு நெனச்சிட்டிருந்தேன்.. ஒரு நாள் உண்மை தெரிஞ்சு போச்சு.

    உங்களுக்காக உணவுப் பழக்கத்தை விட்டுக்கொடுத்த உங்கள் மனைவி வணக்கத்துக்குரியவரே. நீங்க அவங்களுக்காக ஏதாவது விட்டுக்கொடுத்தீங்களா பதிலுக்கு? :)

    பதிலளிநீக்கு

  2. @ அப்பாதுரை/ செம ஜோக். இதை யூஸ் பண்ணிக்கிறேனே/ இது ஒன்றும் காப்பி ரைட் ஜோக் இல்லையே. நாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம். அப்ப யானை சைவம் இல்லையா.?என் மனைவிக்காக எதை விட்டுக் கொடுக்க. என்னையே கொடுத்தபிறகு..?!

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. இராஜராஜேஸ்வரி said...
    சவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அருமையான ஆரோக்கிய மொழிகள் !1

    ரோபோவை வைத்துக்கொண்டு ஒன்றும் பேசமுடியாது போல இருக்கிறதே !

    பதிலளிநீக்கு
  5. உணவுக்கும் மூளைக்கும் சம்பந்தம் இருக்குதான்னு தான் எனக்குக் கவலை! (எனக்கு உடம்புதான் பெரிசாயில்லை; மூளையாவது இருக்காதான்னு ஒரு சந்தேகம்தான்!) :-))

    பதிலளிநீக்கு
  6. உடலைப்பேணி ஆரோக்கியமாக வைத்திருப்பது பற்றி நன்றாகக் கூறியுள்ளீர்கள்.

    பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
  7. //என் மனைவிக்காக எதை விட்டுக் கொடுக்க. என்னையே கொடுத்தபிறகு..?!

    என்ன சார் சப்பை கட்டுறீங்க? அவங்களும் தான் அதைச் செஞ்சாங்க.

    பதிலளிநீக்கு
  8. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நல்ல கருத்துக்களை சொன்னீர்கள்.
    திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது இன்னும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பு வரும் போது உணவை முடித்து விட சொல்வார்கள் அது தான் சரியான உணவு பழக்கம் என்பார். நீங்கள் சொன்ன மாதிரி.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. ஐயா, இந்த நகைச்சுவைத் துணுக்கை என் நட்பு வட்டத்திற்கு அனுப்பினேன். நன்றி.

    பதிலளிநீக்கு