வியாழன், 6 டிசம்பர், 2012

ஏனென்று சொல்லு நீ தென்றலே...


                                 ஏனென்று சொல்லு நீ தென்றலே...
                                 ---------------------------------------------


ஏனென்று சொல்லு நீ தென்றலே
மனசை என்னமோ பண்ணுது  புரியலே
புதுப் புது எண்ணங்கள் தோன்றுது-அதை
இடுகையில் பதிக்கவே மனம் நாடுது.

எண்ணங்கள் எழுத்துருக் கொள்ளுது
படிக்கையில் இதழிலே புன்னகை விரியுது
புரிந்து படிக்க தெளிவான மனம் வேண்டுமே
ஆனால் படிப்பவர் முகம் கோணுது ஏனோ புரியலெ

ஆயிரம் உண்டிங்கு சாதி எனினும்
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர்
இழிகுலத்தோர் என்றாள் அவ்வை மூதாட்டி.
ஒருவர் இட்டு ஒருவர் வாழல் என்ன நீதி.
இதனை நான் கேட்டால் ஏன் இந்த சுணக்கம்?
ஆணென்றும் பெண்ணென்றும் இருசாதி
அதிலும் இருப்போர் இல்லாதோர் என்னும் பேதம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றே ஏதுமிலை படைப்பில்
இதனை அறிந்திடஅறிவுக்கண் திறந்திடல் வேண்டும்
அனைவருக்கும் தேவை சுய சிந்தனை
அன்றே சொன்னான் சாக்ரடீஸ் தேவை அறிவாயுதம்
அதனை அடையவே கேட்கிறேன் அனைவருக்கும்
அகக் கண் திறக்கும் சமச்சீர் கல்வி.
அறிவு என்பது அனைவருக்கும் இருப்பது
பட்டை தீட்டி ஜொலிக்க வேண்டுவதே அறிவாயுதம்
நரைகூடிக் கிழப் பருவம் எய்தி வேடிக்கை மனிதர்போல்
வீழ்வேனென்று நினைத்தாயோஎன்று கேட்கும்
நாம் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்

ஏனென்று சொல்லு நீ தென்றலே
மனசை என்னவோ பண்ணுது புரியலே. .  .     :      



10 கருத்துகள்:

  1. //ஒருவர் இட்டு ஒருவர் வாழல் என்ன நீதி.
    இதனை நான் கேட்டால் ஏன் இந்த சுணக்கம்?//

    சம்மட்டி கேள்வி... விடை தருவார் யாரோ...?!
    "சாதி சிலருக்கு வரம். சிலருக்கு அதுவே சாபம்". நல்லதொரு கவிதை ஐயா !

    பதிலளிநீக்கு
  2. ஏனன்று நீ சொல்லு தென்றலே. தென்றல் எதுக்குனு பதில் சொல்லும்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் தொடுத்த ஒவ்வொரு வரியும்
    ஒவ்வொரு கட்டுரையாய் விரியும்.
    அருமையான ஆக்கம்.
    வணங்குகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு

  4. @ எஸ். சுரேஷ்.
    @தோழன் மபா.தமிழன் வீதி,
    @ லக்ஷ்மி,
    @ அருணா செல்வம். வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி.
    சொல்ல நினைப்பது ஏராளம் சொல்ல முடிவது மிகவும் குறைவே. கருத்து வேறுபாடாயிருந்தால் பதிவைத் தாண்டிப் போவார்களாம். இதிலிருந்து கருத்து வேறு பாடுள்ளோர் அதிகம் எனத் தெரிகிறது. இருந்தாலும் நினைத்ததைச் சொல்வேன். மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. தாங்கள் எழுப்பிச் செல்லும் கேள்வி
    இன்றைய சூழலில் மிக மிக அவசியமானதே
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அறிவு என்பது அனைவருக்கும் இருப்பது
    பட்டை தீட்டி ஜொலிக்க வேண்டுவதே அறிவாயுதம்

    சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. //ஆனால் படிப்பவர் முகம் கோணுது ஏனோ புரியலெ

    ம்ம்ம்.. எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள் புரியலே.

    பதிலளிநீக்கு
  9. அறிவு என்பது அனைவருக்கும் இருப்பது
    பட்டை தீட்டி ஜொலிக்க வேண்டுவதே அறிவாயுதம்//

    அறிவாயுதம் அருமையான சொல்.
    ஆயுதத்தை பயன் படுத்தாவிட்டால் துருபிடித்து விடும், அறிவை பயன் படுத்தாவிட்டால் மூளை மழுங்கி போகும் .

    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு என்ற பாடல் நினைவுக்கு வருது.
    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு