ஞாயிறு, 23 டிசம்பர், 2012

துருவங்கள்


                                     துருவங்கள்.
                                   -------------------
                            ( ஆணும் பெண்ணும்)

அவளது டைரி.
------------------------

இன்று மாலையிலிருந்தே அவன் அவனாயில்லை
மாலையில் காஃபி க்ளப்பில் சந்திக்க ஏற்பாடு.
தோழிகளுடன் ஷாப்பிங் செய்ததில் தாமத மாயிற்று
பார்த்தவன் ஒரு ஹாய் கூடச் சொல்லவில்லை
கடுகடு என இல்லாவிட்டாலும் ஒரு சுரத்து இல்லை.
என்ன பிணக்கமோ காரணம் தெரியவில்லை
என் மேல் கோபமா எனக் கேட்டேன்.இல்லையென்றான்
நான் அவனை மிகவும் நேசிப்பதாகக் கூறினேன்.
பதிலாய் வந்தது ஒரு வரண்ட சிரிப்பு.
என்னைப் பார்த்து அவனும் நேசிப்பதாய் ஏன்
சொல்லவில்லை ஏதும் பேசாமல் கார் ஓட்டினான்
எனக்கு அழுகை அழுகையாய் வந்தது.
வீட்டுக்கு வந்தவன் தொலைக்காட்சிப்
பெட்டியை முடுக்கினான். எந்த சானலும்
பார்க்காமல் மாற்றிக் கொண்டே இருந்தான்
படுக்கையில் வீழ முடிவு செய்தேன் வந்ததும்
அவனிடம் கேட்க எண்ணியிருந்தேன் வந்தவன்
வந்தவேகத்தில் உறங்கியும் போனான்
அவனுக்கு வேறு யாரிடமோ லயிப்பா.
நினைக்கவே அச்சமாயிருந்தது. கண்ணீர்
வடித்தவள் அழுகையிலேயே உறங்கிப் போனேன்


அவனது டைரி

இன்று இந்தியா கிரிக்கட் டெஸ்டில்
இங்கிலாந்திடம் தோற்றது. சே  டாம் இட்..!
         --------------------
ஆணின் simplicity vs பெண்ணின் complicity...?
       ------------------------ 

உலகமே நீ வாழ வந்தவன்..!
---------------------------
காலையில் கண் விழிப்புக் கொடுத்தது. இது காலையா.?இன்னும் வெளிச்சம் வரவில்லை. தோட்டத்து மாமரத்துக் குயில் கூவவில்லை.புள்ளினங்களின் இரைச்சல் இல்லை.ஓ.! இன்று உலகம் அழியும் தினமல்லவா. ? எங்கும் கும்மிருட்டு. லைட்டைப் போட்டால் எரியவில்லை. மின் தடையா இல்லை எதுவுமே இயங்கவில்லையா. அருகில் படுக்கும் மனைவியையும் காணோம். இருந்தாற்போல் இருந்து தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறது. நான் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் நடக்காமல் ஓடாமல் ஏன் எந்த இயக்கமுமில்லாமல் எங்கேயோ இழுக்கப் படுகிறேன்.உலகம் எந்த அறிகுறியும் காட்டாமல் அழியுமா.? பூகம்பம் இலலை, புயல் இல்லை. இடி இல்லை மழை இல்லை. எந்த சப்தமும் இல்லாமல் எல்லாம் போய்விட்டது. இருட்டின் அந்தரங்கத்துக்கே இழுக்கப் படுகிறேன்  என்னதான் நடக்கிறது பார்த்துவிடலாமே. அந்தகாரத்தில் ஒரு குதிரை அதன் மேல் ஒருவன். ஓ...! இவன் தான் கலி புருஷனோ.? எல்லாவற்றையும் அழித்துவிட்டு மனித குலம் தழைக்க என்னை மட்டும் விட்டு விட்டானோ. என் ஒருவனால் மனித குலம் எப்படித் தழைக்க முடியும். எனக்கு மனைவி வேண்டுமே. ... மெள்ள மெள்ள இருள் விலகுகிறது.ஒளி சிறிது சிறிதாய் அதிகரிக்கிறது. மெல்ல யாரோ நடந்துவரும் சப்தம் கேட்கிறது. அருகில் வந்தவளைப் பார்த்தால்.... என் மனைவி. “ இந்த உலகம் தழைக்க நம் இருவரை மட்டும் வாழ விட்டிருக்கிறான் அந்தக் கலி புருஷன் “என்ற என்னைப் பார்த்து
” ஏதாவது கனா கண்டீர்களா.?” என்றாள் என் மனைவி. 
----------------------------------------------- 




 .


6 கருத்துகள்:

  1. ஆணின் simplicity vs பெண்ணின் complicity...? = "துருவங்கள்"

    பதிலளிநீக்கு

  2. அவ‌னுக்கு அவ‌ளின் எதிர்பார்ப்பை விட கிரிக்கெட்டில் அதிக‌ எதிர்பார்ப்பு + ஈடுபாடு!!

    21.12.12 எப்ஃக்டா பாலு சார்?

    பதிலளிநீக்கு
  3. துருவங்கள் அருமை அய்யா. ஒருவரை ஒருவர் அறிந்தால, உணர்ந்தால் துருவங்கள் இணையலாம்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

    பதிலளிநீக்கு