புதன், 23 ஆகஸ்ட், 2017

பழைய கதை புது வடிவில்


                                   பழையகதை புது வடிவில்
                                    ---------------------------------------
வெட்டுக்கிளி எறும்பு கதை பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்  நான்  பதிவெழுத வந்த புதிதில்  அதேகதையை சற்றே பகடி செய்து  ஒரு பதிவு எழுதி இருந்தேன்   அந்தக்காலத்து நிகழ்வுகளைச் சேர்த்து  எழுதியது இன்று படிக்கும்போது ரசனையாக இருக்கிறது  அதையே மீள் பதிவாக இப்போது

வளரும்  நாடு. ( ஒரு  சிறுகதை. )
------------------------------------------------
            
பாடுபட்டுக்  கோடையில்,  பாந்தமாக  உழைத்து,
            
வீடு  கட்டி,  சேர்க்கும்  உணவினை,
            
களிப்போடு   உண்டு  மகிழும்  எளியோன்
            
சிறியோன்   எறும்பினைக்   கண்டு

உள்ளம்  வெதும்பி  வேகும்  வெட்டுக்கிளியும்,
தான்  உழைக்காதது  மறைத்து  பொறாமையால்
கூட்டியது   ஒரு  பத்திரிகைப்  பேட்டியினை.

           
அடுக்கியது   குற்றச்சாட்டுகளை
           
சாடியது  ஏற்றத்தாழ்வு  விளைவுகளை.
          "
குடியிருக்க   ஏற்ற  புற்று
           
தேவைக்கும்  மீறிய   உணவு,
           
காண்பீர்  இந்த  அநியாயம்
           
கேட்பீர்  சிறுபான்மையோர்   அவதிகளை"
           
என்றே  ஒப்பாரி  ஓலமிட்டு
           
கண்ணீர்  விட்டே  கதறியது.
தொலைக்காட்சி   சானல்கள்
கூடிவந்து   கேட்டன,
நாளெல்லாம்   பேசின
வெட்டுக்கிளி  படும்  பாட்டை.
ஒருபக்கம்  வெட்டுக்கிளி  அழுகை,
மறுபக்கம்  எறும்பின்  ஏறுமுகம்,
புட்டுப்புட்டுக்  காட்டின,
ஏராளமான  படங்களுடன்.

           
பிறகென்ன  ஒரே சேதிதான்  எங்கும்  எதிலும்.
           
வெட்டுக்கிளி  வேதனை  போக்க
          
அருந்ததிராய்    ஆர்பாட்டம்,
           
எறும்பின்   ஏற்றம்   குறைக்க
           
மேதா   பட்கர்   போராட்டம்,
           
துவங்கியதங்கே  ஓர்  அரசியல்  ஆரவாரம்.
           
வேதனையில்  வாடும்   வெட்டுக்கிளிக்கு
          
வேண்டும்  உணவும்  இருப்பிடமும்
           
சமூக  அநீதி  அது இது என மாயாவதி  கூற,
           
மேற்கு  வங்கம்  அறிவித்தது  ஒரு நாள்  பந்த்,
           
கேரளமும்  கேட்டதொரு  நீதிக்  கமிஷன்.
           
நிலைமை    கை  மீறிப்போக
           
வாளாவிருக்குமா   மத்திய    அரசு.?
           
கொண்டு  வந்தது   ஒரு சட்டம்
           
போடா   போலொரு   போடாக்   
            (PREVENTION  OF TERRORIST ACT  AGAINST GRASS HOPPERS.)
 வெற்றி  என்றே  கூவியே
ஆர்பாட்டம்  போராட்டம்
எல்லாம்  கைவிட்டனர்
ராயும்  பட்கரும்.

          
விட்டு  வைக்குமா  தொலைக்காட்சிகள் 
          
படம்    பிடித்தே   காட்டின  
          
பாவம்    எறும்பின்   பறிகொடுப்பை  
         
பார்த்தே   மகிழ்ந்தனர்   பாவி   மக்கள்

வெற்றி   பெற்ற   வெட்டுக்கிளி
செத்தே   மடிய    அன்றே  போல்
விரட்டப்பட்ட    எறும்புகளும்
தஞ்சம்   புகுந்தன   அயல்நாட்டில்
மீண்டும்   உழைத்தே   முன்னேறி
தேடிப்பெற்றன   பெயரும்   புகழும்
கணக்கில்   அடங்கா   கம்பனிகளை
வாங்கிக்  குவிக்க, கோடிகளை
உழைத்தே  பெற்றன  சீராக.

            
ஊருக்கிளைத்தவன்   என்றாலும்
            
உழைத்தால்   பிழைக்கலாம் -  இது   நீதி.
            
நீதிகள்   அறியா  இந்தியாவோ
            
என்றும்  வளரும்  நாடேதான் 




 

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

இந்திய வாழ்வியல்


                                           இந்திய வாழ்வியல்
                                          ---------------------------------

எனக்கு ஒன்று தெளிவாகப் புரிகிறது  என் ஆரம்பப் பதிவுகளில் இருந்த வீச்சு இப்போதுஇல்லை. பழைய பதிவுகளில் எழுதி இருந்த விஷயங்கள் மனதில் தோன்றிய  வலியிலிருந்து எழுந்தவை ஒரு பதிவு எழுத நிறையவே மெனக்கெடுவேன் அவற்றுக்கு வந்துகொண்டிருந்த பின்னூட்டங்களும் பதிவின்  வீச்சை தெரிவித்தது  அப்படி இருக்க நான்  ஏன் இப்போதெல்லாம் அதுமாதிரி எழுத முடிவதில்லை என்னதான் எழுதினாலும்  என்னால் எந்த ஒரு மன மாற்றத்தையும்  வாசகர்களிடம் கொண்டு வர முடிவதில்லை ஒரு வேளைப் பலரும்  முகநூல் பக்கம்  போக சீரியஸ் விஷயங்களுக்கு மதிப்பில்லாததாலும்  முக நூலில் எழுத மெனக்கெட வேண்டாமென்பதாலும்  இருக்கலாம் ஆனால் என்னால் ஏனோ தானோ என்று எழுத முடியவில்லை எந்தஒரு விஷயமும் என்னில் ஒரு சலனத்தை ஏற்படுத்தினால் மட்டுமே என்னால் எழுத முடிகிறது  அண்மையில் பதிவுகள் எழுத மிகவும் சிரமப்படுகிறேன்  மொக்கையாகவோ என்னைப் பற்றியோ எழுதி சமாளிக்கிறேன்  இது ஒரு பழைய பதிவின் சாராம்சம்  மீள் பதிவு என்று சொல்லப் பிரியப்படவில்லை.  சிலவிஷயங்கள் மீண்டும்  மீண்டும் சொல்வதனால் மதிப்பிழக்குமா.  என்னை பற்றி நான் ஆராய்வது போலவே இந்தசமூகம் பற்றியும் எண்ணுகிறென்  இந்த சமூகத்தை திருத்த என்னால் முடியாது ஆனால் அடிமேல் அடி வைத்தால் எங்காவது ஒரு சிறிய மாற்றமாவதுவராதா என்னும்  நப்பாசை எறும்பூரக் கல்லும்  தேயுமாமே    

 
லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, என்று நாளொரு வண்ணம் ,பொழுதொருகதையுமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன இந்த அளவுக்குப் பேசப்படும்  விஷயத்துக்கு அடிப்படைக் காரணம் குறித்து சிந்தித்த போது  சில எண்ணங்கள் தோன்றின அதுவே பதிவாகிறது  வழக்கம் போல் என்  கருத்துகள் பலராலும் ஏற்கப்படாமல் போகலாம் இருந்தாலும் அது பற்றிக் கவலை இல்லை. எதிர்மறைக் கருத்துகள் ஒரு ஆரோக்கிய சிந்தனைக்கு வழிவகுக்கும்   என்னும்  நம்பிக்கையே இதை எழுதச் செய்கிறது

 இந்தியாவில் லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, எல்லாமே நம் கலாச்சாரத்தின்  பரிணாமமே. நாம் லஞ்சத்தையும்   ஊழலையும் சர்வ சாதாரணமாக  அணுகுகிறோம்   எந்த ஒரு வேலையும்  இலவசமாக வராதுஎன்றும்  நினைக்கிறோம்அரசு ஊழியர்கள் செய்ய வேண்டிய அவர்கள் வேலைகளைச் செய்யவும்  லஞ்சம் கொடுக்கிறோம்   இல்லையென்றால் அதற்காக அலைய வேண்டும், இந்த அலைச்சலைத் தவிர்க்கக் கொடுக்கும்  பணம் லஞ்சமல்ல என்றும் சப்பைகட்டுகிறோம்   எந்த இனமும்  ஊழல் இனமாக இருக்க முடியாது ஆனால் கலாச்சாரமே ஊழலுக்கு வித்தாக இருக்கமுடியுமாஇருக்கும் போல்தான்   தோன்றுகிறது  

.            முதலில் இந்தியாவில் மதமே பேரம் பேசுதலை ஒப்புக்
கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நாம், இந்தியர்கள்
கடவுளிடமே பேரம் பேசி ( TRANSACT  BUSINESS.) கடவுளுக்குப்
பணம் கொடுக்கிறோம். அதற்குப் பலனை எதிர்பார்க்கிறோம்.
இந்த முறையில் தகுதி இல்லாதவரும் பலன் பெருவதை
சாதாரணமாக நினைக்கிறோம். பணம் படைத்தவன் கடவுளுக்கு
பணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்.பலனை
எதிர்பார்க்காமலா.?இந்தக் காரியம் கோயில் சுவர்களுக்கு
வெளியில் நடந்தால் லஞ்சம் என்ற பெயரில்தானே அழைக்கப்
படுகிறது. கடவுளின் உண்டியலில் வாரிக் கொட்டுபவன் பசித்
திருக்கும் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதை, வீண் என்றும் பலன் இல்லாதது என்றும் எண்ணுகிறான் 
        2009/-ல் ஒரு செய்தி பத்திரிகைகளில் இரண்டு மூன்று  நாட்கள் வந்து கொண்டிருந்தது.கர்நாடக மந்திரி ஒருவர்திருப்பதி ஏழுமலையானுக்கு ரூபாய் 45 கோடி செலவில் தங்கத்தில் வைரத்தால் இழைக்கப்பட்ட கிரீடம் ஒன்று  சாத்தினார் சிக்கினாலும் மீண்டு விடுவோம்  என்னும்  நம்பிக்கை போல் இருக்கிறது கடவுளுக்கே கையூட்டு கொடுத்தவர் தான் செய்த முறை கேடுகளில்  இருந்து தப்ப என்னதான் செய்ய மாட்டார்
கடவுளே அருளைத்தர, பணம் பெற்றுக்கொள்ளும்போது, சாதா
மனிதர்கள் காரியங்களை நடத்திக் கொடுக்க, லஞ்சம் வாங்குவது, 
தவறில்லை என்ற மனோபாவம் வளர்ந்து விட்டது. லஞ்சம் 
வாங்குவதோ கொடுப்பதோ தவறில்லை என்றும், அது அவமானப்
பட வேண்டிய விஷயம் அல்ல என்றும் சாதாரணமாகக் கருதப் 
படுகிறது. Ther is no stigma attached to being corrupt. இது வாழ்வின் இன்றி 
யமையாத அம்சம் என்ற எண்ணம் அநேகமாக எல்லோருக்கும் இருக்கிறது. Corruption has become a way of life. இல்லையென்றால் ஊழல் 
குற்றங்களுக்குப் பெயர் போய், பல குற்றச்சாட்டுகள்  நீதி 
மன்றங்களில் நிலுவையில் இருந்தும், எதுவுமே நடக்காதது
போலும், நாட்டையே ரட்சிக்க  வந்தவர் போலும்  வேடமிடும் 
ஒருவர், மக்களின் பெரு மதிப்போடு ஒரு மாநிலத்துக்கு முதல்வர் 
ஆக முடியுமா.? 

        இந்தக் கலாச்சாரக்கேடு நம் இந்திய சரித்திரத்தை புரட்டினாலேபுரியும்  நகரங்களும் நாடும் மாற்றானுக்கு அடிமைப்பட , தேவைப்பட்டதெல்லாம் கையூட்டுதான்  கோட்டையின் கதவுகள் திறந்து விடப்படும்  சேனாதிபதிகள் சரணடைவார்கள் இந்தியாவில் நடந்தபோர்களெல்லாம் ஐரோப்பா மற்றும் பழைய கிரேக்கப் போர்களோடு ஒப்பிடும்போது எப்படிப் பிசுபிசுத்ததுஎன்றுபுரியும் துருக்கியின் நாதிர்ஷாவுடன் ஆன போரின் உக்கிரம்  கடைசி மனிதன் இருக்கும் வரை நடந்ததாக சரித்திரம் கூறுகிறது இந்தியாவில் ஆயிரக்கணக்கான போர் வீரர் இருந்தாலும் அவர்களைவெல்ல  சில நூறு பேர்களே போதுமானதாக இருந்தது ஏன்  என்றால் இந்திய படைகளில் கருப்பு ஆடுகள் லஞ்ச லாவண்யதுக்கு மயங்கி மாற்றானின்  வெற்றிக்கு வழிவகுத்தனர் இந்திய சரித்திரப்புகழ் பெற்ற ப்ளாசி யுத்தம் , ராபர்ட் க்ளைவ், மீர் ஜாஃபரை தன் கைக்குள்போட்டுக் கொண்டதால் வெறும் 3000வீரர்களை வைத்துக் கொண்டு வங்காளத்தை வளைத்துப்போட்டுப் பிசுபிசுத்துப் போனது
1687-ல் கோல்கொண்டா கோட்டை ரகசியப்பின் வாசல்  திறக்கப்பட்டதால் வீழ்ந்தது முகலாயர்கள் மராத்தியரையும் ராஜ புத்திரர்களையும்  வெறும்வஞ்சத்தாலும் லஞ்சத்தாலும்   வென்ற கதைகள் நிறைய உண்டு இந்தப்  பேரக் கலாச்சாரங்கள் ஏன்  கேள்வி கேட்கப்படாமலேயே  தழைத்து வருகிறது
இந்தியர்கள் அனைவரும்  சமம் என்று எண்ணுவதில்லை எல்லோரும் முன்னேற முடியும்  என்று நம்புவதில்லை ஏன் என்றால் வாழையடி வாழையாக  அவர்கள் அப்படிப் போதிக்கப்படவில்லை  இதனாலேயே ஹிந்து மதமே பிளவுபட்டு சீக்கியம்  ஜைனம்புத்தம் என்று பிரிந்ததுசாதிமத இன வேறுபாடுகளால் நாம் ஒருவரை ஒருவர்  நம்புவதில்லை  இந்தியாவில் இந்தியர்களில்லை  ஹிந்துக்களும்  கிருத்துவர்களும்  முஸ்லிம் களும் இன்னும் பலபிரிவு சார்ந்தோரே இருக்கின்றனர் இதில் வருத்தப்படக் கூடிய விஷயம்  என்ன வென்றால் இந்த ஏற்ற தாழ்வுகளெல்லாமே சமூக மத அங்கீகாரம் பெற்றவை
இதையெல்லாம் எண்ணிப்பார்த்து ஆராயக்கூடிய கல்வி அறிவு பெரும்பாலோருக்கு மறுக்கப்பட்டுவந்திருக்கிறது இன்னவனுக்கு இன்ன வேலை என்றுவரையறுத்து அவர்களை கிணற்றுத் தவளைகளாகவே மாற்றிவிட்ட சமுதாயமிது  நிலைமை மாறி தற்போது எல்லோருக்கும்  கல்வி என்ற நிலைவரும்போது தாழ்ந்திருந்தவர்கள்  முதன்  முதலில் கற்றுக் கொள்வது இந்த சமுதாயத்தின் எல்லா சீர்கேடுகளையும்தான் மன்னன்  எப்படி மக்களப்படி  தற்காலத்துக்கு தலைவன் எப்படி தொண்டன்  அப்படி . கடந்த சமுதாயம் தற்கால சமுதாயம்  எல்லாமே  நல்லதை விட்டு  அல்லாத வற்றைப் பின் பற்றுகிறது   EXCEPTION CAN NOT BE A RULE இந்தியாவில் ஒவ்வொருவனும்  மற்றவனுக்கு எதிரி ஆண்டவனைத் தவிர என்று எடுத்துக் கொள்ளலாமா    


 



புதன், 16 ஆகஸ்ட், 2017

பயண நினைவுகள்


                                            பயண நினைவுகள்
                                          ----------------------------------

பயணங்கள் பல மேற்கொண்டிருக்கிறேன் அப்போதே நான்  வலையுலகுக்கு வருவேன்  என்றோ பதிவெழுத எதுவும்  தோன்றாமல் திணறுவேன் என்றோ  நினைத்ததில்லை  அப்படி நினைத்திருந்தால் குறிப்புகள் பல எடுத்துக் கொண்டிருப்பேன் சிலர் பயணக் கட்டுரைகள் எழுதும்போது  எனக்கு ஆச்சரியமாய்  இருக்கிறதுநானும் பயணித்திருக்கிறேன்  இருந்தாலும் தகவல்களுடன்  எழுத முடிவதில்லை  ஒரு வேளை நான் என் நினைவின்  துணை கொண்டு மட்டும் எழுதுவதால் இந்தப்  பிரச்சனையோ
மந்த்ராலயாவில்
பெல்லாரியில் என்  மச்சினன் இருந்தபோது அங்கு 2005-ல்  சென்றிருக்கிறேன்  அங்கிருந்து மந்த்ராலயாவுக்கு அவன்  எங்களைக் கூட்டிச் சென்றான்  அந்த நினைவுகளின் எச்சமாக  சில புகைப்படங்கள் இருக்கிறது இருந்தாலும்  பதிவு எழுத அது போதுமா  முயற்சிசெய் என்கிறது மனம்
மந்த்ராலயாவுக்குப் போகும் வழி ஒரு வேளை ராமாயண கிஷ்கிந்தாவாக இருக்குமோ என்று ஐயம்வருமாறு  இருக்கிறது பஞ்சமுகி என்று அழைக்கப் படும்  இடம் எங்கும்  கருங்கல் மலைப் பாதைகுகைக் கோவில் 
பஞ்சமுகி கோவில்
பஞ்சமுகியிலொரு குகைக் கோவில் 
பஞ்சமுகியில்  விமான தோற்றத்துடன் ஒரு கல்

திருப்பதிக்கு பல முறை சென்றிருக்கிறோம் ஒவ்வொரு முறையும்  வரிசையில் நின்று தரிசனம்  காண்பதோ இல்லை வேண்டுதல்களை நிறைவேற்றுவதிலோதான்  நேரம்  சரியாகிறது ஒரு முறை அருகே இருந்த பாபவினாசம் என்னுமிடத்துக்கும்சென்றிருக்கிறோம் எங்களைப் போல்தான் பலரும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் ஒரு முறை அகில இந்திய விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலிகள்சேர்ந்திசைக்கும் பாராயணம்  திருப்பதியில் நிகழ்ந்தபோது  என் மனைவிக்குத் துணையாக  உறவினர் சிலரும் வந்திருந்தனர் நிகழ்ச்சி இரண்டு நாட்கள் என்பதால் பொழுது போக்காக திருப்பதி மலையில் இருந்த சில இடங்களுக்குச் சென்றோம் அந்த அனுபவம் மகிழ்ச்சி அளித்தது  திருமலைமிகவும் தொன்மை வாய்ந்தது . பல்லாயிரக்கணக்கான பாறைகள் நிறைந்த இடம் என் உறவினர் பலரும்  பார்த்திருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை  ஒரு சில புகைப் படங்கள் ஒரு வேளை அதை விளக்கலாம் 








இந்த இடங்களை ROCK GARDENS என்கிறார்கள்  கோவிலிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில்  இருக்கிறது ராக் கார்டன் அருகே விஷ்ணுபாதம் என்னும்  இடமொன்றிருக்கிறது
---------------------------------------------------------------

இன்னொரு பயண நினைவு  நாங்கள் நஞ்சங்கோடுக்குச் சென்றதும்  பின்  நிமிஷாம்பாள்   கோவிலுக்குச் சென்றதும்தான் நஞ்சங்கோடு கபினி நதி (?) தீரத்தில் இருக்கிறது  அங்கு ஒரு காளையின் ( நந்தி) சிலை இருக்கிறது  அதுவே பிரார்த்தனைகள்செய்யும் இடம் நிமிஷாம்பாள் கோவில் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே இருக்கிறது அங்கே யார் பெயருக்கு அர்ச்சனை என்று கேட்டபோது ஸ்வாமி பெயருக்கே  செய்யச் சொன்னோம்  நாங்கள்பலர் யாரைச் சொல்லி யாரைவிடுவது  அர்ச்சகர்  அம்மாதிரி சொல்லக் கூடாது கடவுளுக்காக அர்ச்சனை செய்ய நாம் யார் என்று கேட்டு மறுத்துவிட்டார்  அவர் அம்மாதிரி சொல்லி கொண்டுவரும்போது  கை கட்டி பவ்யமாய்க் கேட்டுக் கொண்டோம்  அப்போதுஅவர் கோவிலில் கை கட்டி நிற்கக் க்கூடாது  என்றார் பல இடங்களில் பல  வழக்கங்கள் .......!