வெள்ளி, 23 ஜூன், 2023

நிர்வாகியும் பொ யாளரும்,

       பொறியாளரும் நிர்வாகியும்.

                        ---------------------------------------
                         ( எங்கோ கேட்டது. பதிவாகிறது )


காற்றடைத்த பலூனில் மாதொருத்தி
ககனமார்க்கமாகப் பறக்கையில்
போகுமிடம் அறிந்தும், இருக்குமிடம்
அறியாமல்,சிறிதே காற்றிறக்கிக் கீழே
பறந்தவள் பார்த்தாள் ஆங்கொரு மனிதனை.
இன்னும் சற்றே கீழே பறந்துச் சத்தமாகக்
கேட்டாள்,” ஐயா, நான் எங்குள்ளேன்.?
ஒரு மணிநேரம் முன்பே ஒருவரை நான்
சந்தித்திருக்க வேண்டும். போகும் திசை
புரியாமல் நானும் விழிக்கிறேன்.”

“நீங்கள் காற்றடைத்த பலூனில் தரையிலிருந்து
சுமார் முப்பது அடி உயரத்தில் ,நாற்பது டிகிரி
வடக்கு லாடிட்யூடிலும் அறுபது டிகிரி
கிழக்கு லாஞ்சிட்யூடிலும் பற்ந்து கொண்டு
இருக்கிறீர்கள்”பட்டென்று பதில் வந்தது.

“ நீங்கள் ஒரு பொறியாளரோ.?”

“ ஆம். எப்படிப் புரிந்து கொண்டீர்கள்.?”

“ நீங்கள் கூறியதெல்லாம் சரியான குறியீடுகள்.
 ஏதும் புரியாத புதிராய்,எனக்குதவாத பதில்கள்.
 நான் இன்னும் காணாமல்தான் போகிறேன்.
 போதாக்குறைக்கு உங்களால் இன்னும் தாமதம்.
 இது போதாதா புரிந்து கொள்ள. “

“ நீங்கள் ஒரு உயர்மட்ட நிர்வாகியோ.?”

“ ஆம். எப்படிக் கண்டு பிடித்தீர்கள்.?”

“எங்கிருக்கிறோம் எங்கு போகிறோம் என்று
 புரியாமல் இருக்கிறீர்கள்.கொடுத்த வாக்கைக்
 காப்பாற்ற எந்த சிந்தனையும் இல்லாமல்
 கீழிருப்பவர் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல
 எதிர்பார்க்கிறீர்கள் .இதற்கு மேலும் என்ன
 வேண்டும் உங்களைக் கண்டுகொள்ள.”
--------------------------------------------------------

செவ்வாய், 13 ஜூன், 2023

த னிம பறவை

தனிமைப் பறவை.

(  மாதங்கி மாலி அவர்கள் ஃபேஸ் புக்கில் ஆங்கிலத்தில் The Lonely Bird 
என்று ஒரு பத்தி எழுதியிருந்தார். அக்கருத்தை எடுத்தாண்டு நானும் 
தமிழில் “தனிமைப் பறவை “ என்றொரு பத்தி ஃபேஸ் புக்கில் எழுதியிருந்தேன். 
அதனை இங்கே பதிவாக இடுகிறேன். மாதங்கிக்கு நன்றி )  


                                                 தனிமைப் பறவை
                                   ----------------------------
மஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை
ஆதவன் மேற்கே மறைய மறைய
செக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்
களைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க
மென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.

அகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்
ஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,
எல்லாம் சென்றதைக் கண்ட நான்
தூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை
ஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.

“புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.?
சிறகில் வலிமை குறைந்ததோ ?
உன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ
வெகுவாகப் பாடுபட்டாயோ.?
தானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.?
புழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ?
இரையின்றி நீ சென்றால் அவற்றின்
ஏமாற்றம் தாங்க முடியாததோ.?

இருந்தாலும் சின்னப் பறவையே
உன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது
எனக்கு என்னவோ போல் தோன்றுகிறது
இருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.?
விரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே
தனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.

நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
சென்று வா என் சின்னப் பறவையே.”
-------------------------------------------------
  

21

செவ்வாய், 6 ஜூன், 2023

,கற்றதும் பெற்றதும்

 


                                  கற்றதும் பெற்றதும்......
                                 -----------------------------


 கடந்த பதிவொன்றின் பின்னூட்டத்தில் திரு. அப்பாதுரை நானே கேள்விகேட்டு பதிலும் சொல்கிறேன் என்று எழுதி இருந்தார். இப்போதெல்லாம் அவரது பின்னூட்டத்திலிருந்து பதிவிடக் கரு கிடைத்து விடுகிறது. அவருக்கு நன்றி. உனக்கு என்ன தெரியும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பதிவு எனக்கு என்ன தெரியும் என்பதை கேள்வி பதிலாக எழுதி நான் கற்றதும் பெற்றதும் என்ன என்று தெரிவிக்கிறேன் இந்தக் கேள்விகளும் பதில்களும் சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம்..ஆனால் என்ன செய்ய. ? இது என் வழி... தனி வழி...!

கேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். ?
பதில்:-   எனக்கு எல்லாக் கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.
கேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.?
பதில்:-   கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும்  பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயு, தங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும்  நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.
கேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.?
பதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின் வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையே manifestation, establishment and withdrawal  ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்
கேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே .உதாரணமாக ஏதும் கூற முடியுமா. ?
பதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக் கூறுகிறேன் இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் “தோன்ற” ஆரம்பித்து விடுகின்றன. “உரு”வாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் ‘தோன்றி’ய எண்ணங்கள் நம் மனதில் ‘நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் “போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்தது, ஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது

கேள்வி:- நாம் கேள்விப்படும் ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.?

பதில் :- பொய் என்று ஏன் எண்ண வேண்டும்.?இந்தமாதிரி அவதாரக் கதைகள் மூலம் மக்கள் நல் வழிப்படுவார்களானால் அந்த நம்பிக்கைகள். இருந்து விட்டுப் போகட்டுமே. நான் கற்றதும் பெற்றதும் இதனால் என்னவென்றால் வாழ்க்கை முறை என்று எண்ணப்படும் நமது சனாதன மதத்தின் அடி நாதமாக இருக்கும் வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.?

பதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்

கேள்வி. :- வேதங்களில் இந்திரன் ,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் , கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.?

பதில்.:- நான் வேதம் படித்ததில்லை. மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என் கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா.? நான் இவை எல்லாம் சரியில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன
.
கேள்வி:- பட்டும் படாமலும் பதில் சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையா.?

பதில்:-  நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷயங்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத் தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம் கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப் பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. . செய்யும் தொழில்முறைக்கேற்ப  பிரிக்கப்பட்ட நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம் என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.
எந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால் உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.?
கேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம். உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.?
பதில்:- தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home  என்பார்கள். நாம் நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .
------------------------------------------------------------------------------------------------------------------           






புதன், 17 மே, 2023

நம்பிக்கை

 

நம்பிக்கை...

                                   நம்பிக்கை...
                                  ----------------

நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்
கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.
 
      மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில்
      உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை.

பயணச் சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறிச் சேருமிடம்
சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை.

        பாலூட்டிச் சீராட்டிப் பெற்றெடுத்த பிள்ளைகள் பிற்காலத்தில்
        நம்மைப் பேணுவர் என்பது நம்பிக்கை.

நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர்
பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை.

         நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி
         பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
.
         வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.
         நம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்

தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
தலையாய நம்பிக்கை.
-----------------------------------------------------------------



THURSDAY, OCTOBER 27, 2011


சனி, 29 ஏப்ரல், 2023

வாழ்வியலில் தமிழ் சினிமா பாடலகள்;

 

வாழ்வியலில் சினிமாப் பாடல்கள்

                                     வாழ்வியலில் சினிமாப் பாடல்கள்.
                                    -------------------------------------------------


ஆண்:- ப்ரேமை எனதே பாரின் மீதே பாக்யம் வேறேதே
பெண்:-ப்ரேமா ரூபனே என்றனைப் புகழ்ந்தால் பதியே நானுந்தன் இன்பரூபமே
ஆண்:- சந்திர பிம்பமே. ! சரசாங்கியே நீ.! சாரச நயனீ எனதாருயிரே
பெண்.: ப்ராண நாயகா நீயன்றோ. !
ஆண்:- மங்கை நீயென் மானச தேவி.!
பெண்:-மங்களாகர  மன்மத ரூபா.?

வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் என்று எழுதத் துவங்கிய எனக்கு அந்த காலத்து டூயட் பாட்டு மனதில் ஓடியது. வரிகள் முன்னே பின்னே இருக்கலாம்.
ஆனால் சங்கதி அது அல்ல. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் சினிமாப் பாடல்களில் பதிவாகி இருக்கிறது என்பதுதான். காதல், கலியாணம், மகப் பேறு என்று எழுதி வாழ்வின் எல்லா சுவைகளும் பாடல்களிலேயே தெரிய வரும்.

ஆண்:-வாடிக்கை மறந்ததும் ஏனோ
      என்னை வாட்டிடும் ஆசை தானோ
      பல கோடி மலர் அழகை மூடி வைத்து
      மனதைக் கொள்ளை அடிப்பதும் ஏனோ
பெண்:- வாடிக்கை மறந்திடுவேனோ
        எனை வாட்டிடும் கேள்விகள் ஏனோ
        இளமங்கை எந்தன் மனதில் பொங்கி
        வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ.

ஊடல் கலந்த ஆசை பறிமாற்றங்கள் எழுத்தில் வந்துஇசையில் பரிமளிப்பது மேலே காணலாம். .

கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ
காதலிசை பாடியதும் நீயேயன்றோபெண்மனதில் ஏற்றி வைத்த தீபமல்லவோ
ஒளி பரவும் முன்னே அணைத்தல் பாபமல்லவா....

வேறூன்றி வளரும் என்று விதை விதைத்தேன்
இரு விழியாலே காத்திருந்து நீருமிறைத்தேன்
பூமுடிக்கும் ஆசைகொண்டு சோலை அடைந்தேன்
அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்


காதல் தோல்வி எதிர்கொள்வதை மிக அழகாகப் பதிவு செய்யும் பாட்டு. 

காதல் வெற்றி கல்யாணத்தில் முடிய வேண்டியதுதானே.ஒரு கல்யாணம் பாட்டில் விமரிசையாக நடை பெறுவதை இந்தப் பாட்டை விட அழகாக எழுத முடியுமா என்ன,? 

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.

 
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட


பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி, கண்ணில் நீரெழுதி.

திருமணம் நடந்துவிட்டால் போதுமா.? மணமான பெண்ணை எப்படி வரவேற்கிறார்கள் பார்ப்போம்.

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா.

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில்
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன்மணமும் பொருள்மண்மும் உங்கள் வாசலில்
புதுப் பூமணமும் பா மணமும் எங்கள் வாசலில்

கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலை வணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல்

தங்க நகை வைரநகை நிறைந்திருக்காது இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி இருக்காது.

வரவேற்புக்கு ஏதும் குறைவில்லை. இருந்தாலும் வந்த இடத்தையும் இருந்த இடத்தையும் ஒப்பு நோக்குவது குறித்துக் கொள்ள வேண்டும். .

திருமணம் முடிந்து மணமகள் வந்தாயிற்று.இனி என்ன.? முதலிரவுதானே.? 

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம்கொண்டு சேரும் நன் நேரம்

சப்ர மஞ்சத்தில் ஆட சொப்ன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்கள் பாட சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாகம்
புலரி வரையில் நம்முடே யோகம்.
ஆஆ  அ அ ஆ ஆ..........

இருவரும் ஒருவராக இணைய மூன்றாமவர் வருவதுதானே நியதி. வரவேற்பு எப்படி என்று பார்ப்போமா. ?

 
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
இச் இச் இச் இச்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்

காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்

கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ
(
காது கொடுத்து கேட்டேன் )

ஓராம் மாசம் உடல் அது தளரும்
ஈராம் மாசம் இடை அது மெலியும்
மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்
மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...
(
காது கொடுத்து கேட்டேன்
  
விருப்பப்படி குழந்தை பிறந்து விட்டால் தாலாட்டும் பாட்டும் பிரமாதம் ..
வளர வேண்டிய சூழல் எப்படியெல்லாம் பாட்டில் வருகிறது .பார்ப்போம். .

 இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட

( என்றெல்லாம் தாலாட்டுப் பாடி,முத்தாய்ப்பாக அறிவுரையுடன் முடிக்கும் பாடல்)
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே

தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுரைகள்

நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்

ஆறு கரை அடங்கி நடந்ததில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
நாடும் நலம் பெறலாம்


( என்றெல்லாம் தாலாட்டுப் பாடி,முத்தாய்ப்பாக அறிவுரையுடன் முடிக்கும் பாடல்)
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே

தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுரைகள்

நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்

ஆறு கரை அடங்கி நடந்ததில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
நாடும் நலம் பெறலாம்

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
(
பாதை..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(
இந்த..)

வித்தியாசமான சூழல் தரும் பாட்டு இது..

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன்பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

நான் பிறந்த காரணத்தை நானே அறியு முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

கொஞ்சம் வளர்ந்ததும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் கொண்டுவிடும்போது பிள்ளைகளுடன் மனப்போராட்டம் எஆதாரணமாய் நிகழ்வதுதானே. 

கண்ணா…… 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா… NEVER 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம் 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம் 
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம் 
நடந்தது அந்த நாள் 
முடிந்ததா பாரதம் 
நாளைய பாரதம் யாரதன் காரணம் 
ஹே… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 

உள்ளப் போராட்டத்தின் விளைவாய் உதிக்கும் எண்ணங்கள் தேடல்களில் கொண்டு போய் விடுகிறது.விளைவு.? அருமையான தத்துவப் பாடல்கள். ,


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
இன்னும் ஒன்று.


போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது



வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா

கடைசியாக ஒன்று

ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன.

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ

ஆடும்வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடும்வரைக் கூட்டம்
கொள்ளி வரை வருமா.?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்டபின்பு ஞானி

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்றுவிடு என்பான்

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு.

வீடு வரை உறவு..............

வாழ்வியலில் தமிழ் சினிமாப் பாடல்கள் நவ ரசங்களிலும் இருக்கிறது. ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஏதோ அங்கும் இங்குமாகக் கோடி காட்டியிருக்கிறேன். இதுவே மிகவும் நீ.........ளமாகிவிட்டது.  
--------------------------------------------------------------------..