புதன், 17 மே, 2023

நம்பிக்கை

 

நம்பிக்கை...

                                   நம்பிக்கை...
                                  ----------------

நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்
கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.
 
      மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில்
      உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை.

பயணச் சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறிச் சேருமிடம்
சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை.

        பாலூட்டிச் சீராட்டிப் பெற்றெடுத்த பிள்ளைகள் பிற்காலத்தில்
        நம்மைப் பேணுவர் என்பது நம்பிக்கை.

நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர்
பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை.

         நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி
         பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
.
         வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.
         நம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்

தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
தலையாய நம்பிக்கை.
-----------------------------------------------------------------



THURSDAY, OCTOBER 27, 2011


8 கருத்துகள்:

  1. இந்திய சின்னம் சிங்க ஸ்தூபியில் "சத்யமேவ ஜெயதே" என்று எழுதி இருப்பதும் ஒரு நம்பிகையில்தான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தியம் நிச்சயம் ஜெயிக்கும். ஆனால் அதை நம்பினவர்கள் நொந்து நூடுல்ஸான பிறகுதான் கடைசியில் வெற்றியைக் காண்பிக்கும்

      நீக்கு
    2. ஹாஹாஹா ஸ்ரீராம், செம பாயின்ட்!!!

      கீதா

      நீக்கு
  2. வாழ்வில் எல்லாமே நம்பிக்கையின்பாற் பட்டதுதான்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. //தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
    தலையாய நம்பிக்கை.​//​ சம்மட்டி அடி. ஏன், தாய் என்று நம்புவதும் நம்பிக்கையில் தானே? .
    ​DNA பரிசோதனை என்பதெல்லாம் தற்போது தானே. அதிலும் ​மூன்று DNA கலப்படம் என்ற செய்திகள் தற்போது வந்துள்ளன. அப்பா, அம்மா, கருவைச்சுமந்த வாடகைத் தாய் என்று மூன்று.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. நம்பிக்கையில்தானே சார் வாழ்க்கையே ஓடுகிறது. நம்பிக்கை இல்லை என்றால் தளர்ந்துவிடுவொம் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு