தரம் முற்றிலும் இலவசம்
100% பரிசீலனை
------------------------
கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படிக்கும்போதே அதில் வரும் f என்ற எழுத்தை எண்ணிக்கொள்ளுங்கள் .இரண்டாம் முறை எண்ணாதீர்கள். அது 200% பரிசீலனை ஆகும். 100% ஆகாது.
The necessity of training farm hands for first class farms in the fatherly handling of farm livestock is
foremost in the minds of farm owners. Since the forefathers of the farm owners trained the farm hands for first class farms in the fatherly handling of farm livestock, the farm owners feel they should carry on with the family tradition of training farm hands of first class farms in the fatherly handling of farm livestock because they believe it is the basis of good fundamental farm management.
ஒரு பொருளை உற்பத்தி செய்பவர் அது தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்கு என்னென்ன வகைகளில் முயற்சி எடுத்துக்கொள்கிறார் (அல்லது )எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம். இது உற்பத்தி செய்யப்படும் எல்லா பொருள்களுக்கும் பொருந்தும் .
1) வாடிக்கையாளரின் தேவையைப் புரிந்து கொள்ளல்.
2) Design என்று சொல்லப்படும் வடிவமைப்பு.
3) உற்பத்தி செய்யப்படவேண்டிய பொருளுக்கேற்ற மூலப்பொருள். (Raw material)
4) வடிவமைப்பிற்கு ஏற்றபடி உருமாற்றம் செய்யத் தேவையான மெஷின்
5) வடிவ மாற்றம் செய்ய வழிமுறைகள் (Operation Process)
6) மூலப்பொருளை வடிவ மாற்றம் செய்ய நல்ல வேலை தெரிந்த பணியாளர்கள்
7) உற்பத்தியான பொருட்களின் தரம் பற்றிக் கணிக்க உதவும் சோதனை நிலையம்
8) உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சீரான முறையில் பாக் செய்யும் வழிமுறைகளும் தொழிலாளிகளும் .
9) உற்பத்தியான பொருட்கள் பாதுகாப்பான முறையில் டிரான்ஸ்போர்ட் செய்தல்.
இப்படி வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற முறையில் செயல் படும்போது, தரமானதாக இருப்பதற்காக செய்யும் செலவு , அப்பொருளை பரிசீலனை செய்ய எடுத்துக்கொள்ளும நேரத்திற்கானது மட்டுமே. செய்யப்படும் வழி முறையிலேயே தரத்தை உட்புகுத்தி விட்டால் தரத்துக்காக எந்த விலையும் செலவும் இல்லை. .
பிறகு தரத்தின் விலை என்பதுதான் என்ன.?
நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லாமலிருக்கும்போது அதை சரி செய்ய அல்லது அந்தப் பொருளையே மாற்றத் தேவையான செலவே தரத்தின் விலையாகும். எந்த மறு வேலையும், அல்லது மாற்று வேலையும் தேவைப்படாத விதத்தில் பொருள் உற்பத்தி செய்யப்பட்டால் தரத்திற்கென்று தனி விலை கிடையாது. இது உற்பத்தி செய்பவருக்கும் , வாடிக்கையாளருக்கும் கூடவே பொருந்தும்.
சில உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நூறு சதவீதம் பரிசீலனை செய்து தரம் பிரித்து நல்ல பொருட்களையே தேர்ந்தெடுத்து அனுப்புவதாக நம்புகிறார்கள். ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட சிறு சோதனை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விடையை கொடுத்திருக்கும் ..இந்த சோதனை மூலம் நூறு சதவீதம் பரிசீலனை மூலம் தரம் பிரிப்பதென்பது உத்தரவாதமானது அல்ல என்று அறியலாம். பரிசீலனையில் பிரிக்க வேண்டிய எழுத்து தரமற்றது என்று
வைத்துக்கொள்வோம்.
தரத்துக்கென்று தனி செலவோ விலையோ கிடையாது .எதிர்பார்ப்புகளும் அதை நிறைவேற்ற வேண்டி செய்யப்படும் செலவே ஒரு பொருளின் விலையை நிர்ணயிக்கும். தரம் என்பதற்கு தனி செலவு கிடையாது. அது முற்றிலும் இலவசம்.
------------------------------------------------------------------------------
.
//எதிர்பார்ப்புகளும் அதை நிறைவேற்ற வேண்டி செய்யப்படும் செலவே ஒரு பொருளின் விலையை நிர்ணயிக்கும்
பதிலளிநீக்குமுற்றிலும் சரி!
செலவு செய்தல் - சிலருக்கு கஷ்டமானது(என்னைப்போல!), சிலருக்கு சுலபமானது!
சுலபமாக செலவிடுபவர்கள் சொல்லக்கூடிய பொதுவான வாக்கு - “சம்பாதிப்பதே செலவழிப்பதற்காகத்தானே”
அன்புடன்
காரணம் ஆயிரத்துக்கு,
பதிலளிநீக்குதரம் பற்றிய சில தவறான கருத்துகள் உலவுவதை
மாற்ற எண்ணி எழுதிய கட்டுரை. வருகைக்கு நன்றி.
தரம் பற்றிய தரமான விளக்கம் ..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி. திரு. காளிதாஸ் அவர்களே.
பதிலளிநீக்கு